Author Archives: weshine

  • 0

Daily Current Affairs 13 July 2021

Daily Current Affairs in Tamil

ஜீலை 13

தமிழ் செய்திகள்

உலக செய்திகள்

  • வெப்பம் அதிகரிப்பால் டெல்டா வகை கொரோனா உலகம் முழுவதும் பரவுகிறது: உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கை
    • டெல்டா வகை கொரோனா காரணமாக எதிர்பாராதவிதமாக பேரழிவு ஏற்படும் சூழல் ஏற்பட்டுள்ளது. கடந்த வாரத்துடன் நான்காவது வாரமாக உலகம் முழுவதும் கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது.
    • பத்து வாரங்களாக குறைந்திருந்த கொரோனா தொற்று உயிரிழப்பு மீண்டும் அதிகரித்து வருகிறது. புதிய வகை கொரோனா தொற்று கடந்த ஆண்டு அக்டோபரில் இந்தியாவில் கண்டுபிடிக்கப்பட்டது. உலகம் முழுவதும் பரவியது. இப்போது இந்த வகை கொரோனா உலகம் முழுவதும் 104 நாடுகளில் பரவியிருக்கிறது.

  • நட்புறவை வலுப்படுத்த சீனா-வடகொரியா முடிவு
    • 1961ஆம் ஆண்டு கொரியப் போருக்குப் பிறகு சீனாவும், வடகொரியாவும் நட்பு நாடாகளாயின. அதன் 60 ஆண்டு தினத்தை குறிக்கும் வகையில் இருநாடுகளும் தங்கள் உறவுகளை புதியகட்டத்திற்கு எடுத்துச் செல்ல உறுதியேற்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

தேசிய செய்திகள்

  • தெலங்கானாவில்ரூ. 1,000 கோடி முதலீடு செய்கிறது கிடெக்ஸ் (Kitex)
    • உலகிலேயே குழந்தைகளுக்கான ஆடை தயாரிப்பில் 2-வது இடம்வகிப்பது கிடெக்ஸ் கார்மென்ட்ஸ். இந்நிறுவனத்தின் நிறுவனராக சாபுஜேக்கப் உள்ளார். கேரளாவைச் சேர்ந்த இவர், அம்மாநிலத்தில் ரூ.3,500 கோடி முதலீடு செய்ய திட்டமிட்டிருந்தார். ஆனால் அந்த முடிவை அவர் கைவிட்டுள்ளார். முhறாக பிறமாநிலங்களில் முதலீடு செய்ய திட்டமிட்டுள்ளார்.
    • இந்நிறுவனம் வாரங்கலில் ரூ.1,000 கோடி முதலீட்டில் ஆலை அமைக்கப்போவதாக அறிவித்துள்ளது. இதன்மூலம் 30 ஆயிரம்Read More…

All Month Current Affairs PDF  Here


  • 0

Daily Current Affairs 12 July 2021

Daily Current Affairs in Tamil

ஜீலை 12

தமிழ் செய்திகள்

உலக செய்திகள்

  • உலகின் மிக உயரமான மணற்கோட்டை
    • டென்மார்க்கில் அமைக்கப்பட்டுள்ள மணற்கோட்டையானது உலகின் மிக உயரமான மணற்கோட்டையாக புதிய கின்னஸ் உலக சாதனைப் புத்தகத்தில் இடம் பெற்று உள்ளது.
    • உலகின் மிகவும் உயரமான இந்த மணற்கோட்டை டென்மார்க்கின்ப் ளொக்குஸ் நகரில் அமைக்கப்பட்டுள்ளது.
    • இதன்உயரம் 21 மீற்றர்களாகும்.
    • 2019 ஆம் ஆண்டு ஜேர்மனில் நிர்மாணிக்கப்பட்ட மணற்கோபுரத்தையும் விட இது உயரமானது.

தேசிய செய்திகள்

  • பத்ம விருதுகளுக்கு மக்களே பரிந்துரைக்கலாம் பிரதமர் மோடி முக்கிய அறிவிப்பு
    • நாட்டின் உயரிய விருதுகளான, பத்மவிபூஷன், பத்மபூஷன், பதிமஸ் ஆகிய பத்ம விருதுகள் ஒவ்வொரு ஆண்டும் குடியரசு நினத்தை யொட்டி அறிவிக்கப்பட்டு வருகின்றன. கடந்த 1954-ம் ஆண்டு முதல் குடியரசு தினத்தன்று இவ்விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன
    • கலை, இலக்கியம், கல்வி, விளையாட்டு,மருத்துவம், சமூகசேவை, அறிவியல் மற்றும் பொறியியல், பொதுநலம், சிவில் சேவை, வர்த்தகம் மற்றும் தொழில் போன்ற அனைத்துதுறைகளிலும், சிறப்பாக செயலாற்றியவர்கள், மகத்தான சாதனை படைத்தவர்கள் ஆகியோருக்கு அவர்களது தொண்டைப்பாராட்டி இந்த விருதுகள் வழங்கப்படுகின்றன.
    • இனம், தொழில், பதவி, பாலினம் ஆகிய வேறுபாடின்றி அனைவரும் இந்த விருதுகளைப் பெறுவதற்கு தகுதியானவர்கள் மருத்துவர்கள், விஞ்ஞானிகள் தவிர பொதுத்துறை நிறுவனங்களில் பணிபுரிபவர்கள் இந்தவிருதுகளைப் பெறதகுதி இல்லை என்ற நிலை இருந்தது.
    • ஆனால் பத்ம விருதுகளை மக்கள் பத்மவிருதுகளாக மாற்ற அரசு உறுதிபூண்டுள்ளது. எனவே, அனைத்து குடிமக்களும், இந்தவிருதுகளுக்காக சுயநியமனம் உள்பட நியமனங்கள்/பரிந்துரைகளை அளிக்குமாறு மத்திய அரசு அறிவித்துள்ளது.
    • செப்டம்பர் 15-ஆம் தேதிவரை பரிந்துரைகள் ஏற்றுக் கொள்ளப்படும். padmaawards.gov.in என்ற இணையதளத்தில் பரிந்துரைக்கலாம்.

  • சிறப்பு மலை ரயில்களை இயக்கி வருவதோடு மட்டுமல்லாமல், மலைப் பிரதேசங்களில் ரயில்பயணிக்கும் போதுபயணிகள் இயற்கையைரசிக்கும் நோக்கில் ரயிலை மெதுவாக இயக்குவது உள்ளிட்டவற்றை ரயில்வே மேற்கொண்டு வருகிறது.
    • சுற்றுலாவுக்காக சிறப்பு வழித்தடங்களையும் அறிவித்து ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில், சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் நோக்கில் விஸ்டாடோம் பெட்டிகளை தென் மேற்கு ரயில்வே வடிவமைத்துள்ளது. இந்தப்பெட்டிகளின் பக்கவாட்டிலும் கூரைப்பகுதிகளிலும் கண்ணாடி ஜன்னல்கள் பொருத்தப்பட்டுள்ளன. அதன்மூலமாக, பயணிகள் இயற்கையை வெகுவாகரசிக்க முடியும்.
    • பயணிகளின் வசதிக்கேற்ப இருக்கைகள் 360 டிகிரி சுழலும்வகையில் அமைக்கப்பட்டுள்ளன. பயணிகள் உணவருந்துவதற்கு வசதியாக மடக்கிவைக்கும் வகையிலான சிறிய எஃகு மேஜைகள் இருக்கைகளுடன் பொருத்தப்பட்டுள்ளன. இந்த விஸ்டாடோம் பெட்டிகள் பெங்களூரு- மங்களூரு இணைக்கப்பட்டுள்ளன.
    • The South Western Railway (SWR) is one of the 18 railway zones in India, headquartered at Hubballi inRead More…

All Month Current Affairs PDF  Here


  • 0

Daily Current Affairs 11 July 2021

Daily Current Affairs in Tamil

ஜீலை 11

தமிழ் செய்திகள்

உலக செய்திகள்

  • தால் எரிமலை
    • மணிலாவிற்குத் தெற்கேயுள்ளதால் எளிமையானது. எப்போது வேண்டுமானாலும் வெடிக்க கூடுமென பிலிப்பைன்ஸ் நாட்டு அறிவியலாளர்கள் எச்சரித்து உள்ளனர்
    • இந்த எரிமலை ஆனது கடந்த ஒரு வாரமாக சல்பர்டை ஆக்சைடும் உமிழ்ந்து வருகிறது. இதற்கு முன்பு இந்தத் எரிமலை 2020 ஆம் ஆண்டில் வெடித்தது.

தேசிய செய்திகள்

  • இந்தியாவின் முதல் டிஜிட்டல் பல்கலைக் கழகம் கேரளாவில் தொடக்கம் : மாணவர் சேர்க்கைக்கு அதிக வரவேற்பு
    • இந்தியாவின் முதல் டிஜிட்டல் பல்கலைக் கழகம் கேரளாவில் தொடங்கப்பட்டுள்ளது. கரோனா காலத்திலும் அங்கே உயர் கல்வி படிக்க மாணவர்கள் இடையே அதிக ஆர்வம் ஏற்பட்டுள்ளது.
    • கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில், நாட்டின் முதல் டிஜிட்டல் பல்கலைக்கழகம் தொடங்கப்பட்டுள்ளது.கேரளாவில் இருந்த இந்தியத் தகவல் தொழில்நுட்பம் மற்றும் நிர்வாக மையம் (IIITM-K) தற்போது கேரள டிஜிட்டல் பல்கலைக் கழகமாக (IIITM-K) மாற்றப்பட்டுள்ளது.
    • அங்கு மொத்தமுள்ள 30 இடங்களுக்கு, சுமார் 500 மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர்.
    • கேரள டிஜிட்டல் பல்கலைக் கழகத்தின் துணைவேந்தர் முனைவர் : சாஜிகோபிநாத்
    • வழக்கமான ஆராய்ச்சிப் படிப்புடன் வேலை பார்த்துக் கொண்டேஆராய்ச்சிப் படிப்பை (Industry Regular PhD) மேற்கொள்ளும் வாய்ப்பும் இங்கு வழங்கப்படுகிறது

  • இந்தியாவுக்கு புதிய தூதர் அமெரிக்க அதிபர் பரிந்துரை
    இந்தியாவுக்கான அமெரிக்கா தூதராக லாஸ் ஏஞ்செல்ஸ் நகரின் மேயர் எரிக்கார் சேட்டியின் பெயரை அமெரிக்க அதிபர் ஜோபைடன் பரிந்துரை செய்துள்ளார்.
    இந்தியாவுக்கான அமெரிக்க தூதராக கென்னத்ஜஸ்தர், முன்னாள் அதிபர் டிரம்ப் ஆட்சி நிர்வாகத்தில் நியமிக்கப்பட்டிருந்தார். இவர் கடந்தவாரம் முதல் வெளியுறவுதுறை அதிகாரியாகRead More…

All Month Current Affairs PDF  Here


  • 0

Daily Current Affairs 10 July 2021

Daily Current Affairs in Tamil

ஜீலை 10

தமிழ் செய்திகள்

உலக செய்திகள்

  • பணியாளர் நிர்வாகம் மற்றும் அளுகை சீர்திருத்தங்களில் இந்தியா மற்றும் காம்பியா இருநாடுகள் இடையேகையெழுத்தானது
    • Refurbishing personnel administration and governance reforms

  • இந்தியா ஜப்பான் தொழில் போட்டி ஒப்பந்தம், இந்தியாவின் தொழில் போட்டி ஆணையமும் ஜப்பானின் நியாயவர்த்தகமும் ஒப்பந்தம் செய்ய மத்திய அரசாங்கம் ஒப்புதல் அளித்துள்ளது.

  • முதலாவது இந்தியா-இங்கிலாந்து நிதிசந்தை பேச்சுவார்த்தையின் கூட்டறிக்கை துரடல 8
    • இந்தியாவும், இங்கிலாந்தும் நிதிசந்தை பேச்சுவார்த்தையின் தொடக்ககூட்டத்தை காணொலி காட்சி மூலம் நடத்தின. நிதித்துறையில் இருதரப்பு உறவுகளை வலுப்படுத்த, இந்த பேச்சுவார்த்தையை நடத்தவேண்டும்என, கடந்தாண்டு அக்டோபர் மாதம் நடந்த 10வது பொருளாதார மற்றும் நிதி பேச்சு வார்த்தையில் (EFD) முடிவுசெய்யப்பட்டது.
    • இந்தப் பேச்சுவார்த்தைக்கு, இந்திய நிதித்துறை அமைச்சகத்தின் மூத்த அதிகாரிகள் மற்றும் இங்கிலாந்து நிதித்துறை அதிகாரிகள் தலைமை தாங்கினர். ரிசர்வ்வங்கி, இந்திய பங்கு பரிமாற்ற வாரியம், இங்கிலாந்து ஒழுங்குமறை முகமைகள், சர்வதேச நிதிச்சேவைமைய ஆணையம், இந்திய காப்பீடு ஒழுங்கு முறை மற்றும் வளர்ச்சி ஆணையம், இங்கிலாந்து வங்கி மற்றும் நிதிநடத்தை ஆணையம் ஆகியவையும் இதில் பங்கேற்றன. இந்தியா மற்றும் இங்கிலாந்து சார்பில் பங்கேற்றவர்கள், அந்தந்த பொறுப்புகளில் உள்ள பிரச்சினைகள் குறித்தகருத்துகளைப்Read More…

All Month Current Affairs PDF  Here


  • 0

Daily Current Affairs 09 July 2021

Daily Current Affairs in Tamil

ஜீலை 09

தமிழ் செய்திகள்

உலக செய்திகள்

  • இத்தாலிய கடற்படை கப்பலுடன் இணைந்து ஐஎன்எஸ் தபார் கப்பல் பயிற்சி மேற்கொண்டது.
    • மத்திய தரைக்கடலில் நடைபெற்று வரும் பயிற்சியில் கலந்து கொள்வதற்காக ஐஎன்எஸ் தபார் கப்பல், இத்தாலியின் நேபிள்ஸ் துறைமுகத்துக்கு சென்றது.
    • இந்திய கப்பலுக்கு இத்தாலிய கடற்படை உற்சாக வரவேற்பளித்தது. துறைமுகத்தில் தங்கியிருந்த போது, கமாண்டிங் அதிகாரி கேப்டன் மகேஷ் மங்கிபுடி, நேப்பிள்ஸ் ஆணையகத்தில் மண்டல இத்தாலிய கடற்படை தலைமையகம் மற்றும் நேபிள்ஸில் உள்ள கடலோர காவல்படை தலைமையகத்தின் மூத்த அதிகாரிகளை சந்தித்துப் பேசினார்.

  • கரீபியன் பெருங்கடல் நாடான ஹைட்டியின் அதிபர் ஜோவனேல் மாய்ஸ{ம் அவரது மனைவியும் அவர்களது இல்லத்தில் மர்மநபர்களால் படுகொலை செய்யப்பட்டனர். (Haitian President JovenelMoïse assassinated)
    • இதுகுறித்து இடைக்கால பிரதமர் கிளாட் ஜோசப் புதன்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
    • அதிபர் ஜோவனேல்மாய்ஸ் (53) இல்லத்தில் நள்ளிரவு நடத்தப்பட்ட தாக்குதலில் அவர் உயிரிழந்தார்
    • நாட்டின் பாதுகாப்பு நிலவரத்தை மத்திய காவல்துறையும் முப்படைகளும் தங்களது கட்டுப்பாட்டுக்குள் வைத்துள்ளன.

 

  • பிரிட்டனில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ராணுவ தலைமை தளபதி எம்.எம்.நரவணே அந்நாட்டு முப்படைத் தளபதி நிகோலஸ் கார்ட்டரை சந்தித்துப்பேசினார். இந்தியாவுக்கும் பிரிட்டனுக்கும் இடையே பாதுகாப்புத்துறையில் நிலவி வரும் ஒத்துழைப்பு குறித்தும் அதை மேலும் வலுப்படுத்துவது தொடர்பாகவும் அவர்கள் பேச்சுவார்த்தை நடத்தியதாக இந்தியராணுவம் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட சுட்டுரைப் பதிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
    • முன்னதாக பிரிட்டன் ராணுவம் தரப்பில் அளிக்கப்பட்ட அணிவகுப்பு மரியாதையை தலைமை தளபதி எம்.எம்.நரவணே ஏற்றுக் கொண்டார். பிரிட்டன் ராணுவத்தின் முக்கிய அதிகாரிகளையும் அவர் சந்தித்துப்பேசவுள்ளார்.
    • இத்தாலியில் அவர் 2 நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளதாக இந்திய ராணுவம்Read More…

All Month Current Affairs PDF  Here


  • 0

Daily Current Affairs 08 July 2021

Daily Current Affairs in Tamil

ஜீலை 08

தமிழ் செய்திகள்

தேசிய செய்திகள்

  • மோடியின் புதிய அமைச்சரவை
    • அதில் 12 தலித்துகள், 27 ஒபிசி பிரிவைச் சேர்ந்தவர்கள், 11 பெண்கள் இடம் பெற்றுள்ளனர். மேலும் 50 வயதுக்குக் குறைவான 14 பேரும்அமைச்சர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்
    • புதியதாக மாற்றம் செய்யப்பட்டுள்ள மத்திய அமைச்சரவையில் கர்நாடகாவை சேர்ந்த 4 எம்பிக்கள் அமைச்சர்களாக பொறுப்பேற்றுள்ளனர்.
    • அதைத்தொடர்ந்து புதிதாக அமைச்சர்களாகப் பதவியேற்கும் 43 பேரின் பட்டியல் வெளியானது. அதில் தமிழ்நாடு பாஜக தலைவர் எல் முருகன் பெயரும் இடம் பெற்றுள்ளது
    • இதில் தமிழ்நாடு, மத்தியப்பிரதேசம், மேற்குவங்கம், உத்தரப்பிரதேசம், கர்நாடகா, ராஜஸ்தான், பீகார், மகாராஷ்டிராஆகிய 8 மாநிலங்களின் 12 தலித்துகளுக்கு மத்திய அமைச்சர் பதவி வழங்கப்பட்டுள்ளது.
    • அவர்களில் இரண்டு பேருக்கு கேபினேட் அமைச்சர் பதவி வழங்கப்பட்டுள்ளது.
    • மத்திய அமைச்சரவையில் மொத்தம் 11 பெண்கள் இடம்பெற்றுள்ளன. 50 வயதுக்குக் குறைவான 14 பேருக்கும் அமைச்சர் பதவி அளிக்கப்பட்டுள்ளது.

 

  • இமாச்சலப்பிரதேசத்தில் 6 முறைமுதல்வர்: காங். மூத்ததலைவர் வீரபத்ர சிங் காலமானார்.
    • காங்கிரஸ் மூத்ததலைவரும், இமாச்சலப்பிரதேச முன்னாள் முதல்வருமான வீரபத்ரசிங் உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் இன்று அதிகாலை காலமானார். அவருக்கு வயது 87.
    • இமாச்சலப்பிரதேச மாநிலத்தில் 9 முறை எம்எல்ஏவாகவும், 5 முறை பாராளுமன்ற உறுப்பினராகவும் இருந்தவர் வீரபத்ரசிங். மாநிலத்தில் 1983 ஏப்ரல் 8 முதல் 1990 மார்ச் 5-ம் தேதி வரை முதல்வராகவும், 1993 முதல் 1998, 2003 முதல் 2007 வரை, 2012 முதல் 2017ம் ஆண்டு வரை வீரபத்ரசிங் முதல்வராக இருந்துள்ளார்.

  • தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி வருமான வரிதுறை முதன்மை தலைமை ஆணையராக சுபாஸ்ரீ அனந்தகிருஷ்ணன் பொறுப்பேற்றுக் கொண்டார்.
    • இவர் 1987-ம் ஆண்டு இந்திய வருவாய் பணி அதிகாரி ஆவார். மும்பை, ஹைதராபாத், கொச்சி மற்றும் பெங்களூருவில் உள்ள வருமான வரித்துறை அலுவலகங்களில் இவர் பல்வேறு பதவிகளில்Read More…

All Month Current Affairs PDF  Here


  • 0

Daily Current Affairs 07 July 2021

Daily Current Affairs in Tamil

ஜீலை 07

தமிழ் செய்திகள்

தேசிய செய்திகள்

tnpsc portal current affairs

  • நடிகர் திலீப் குமார் மறைவு
    • பழம்பெரும் பாலிவுட் நடிகர் திலீப்குமார் (வயது 98) உடல்நலக்குறைவு காரணமாக இன்று (ஜூலை 07) காலை காலமானார்.

current affairs tamil

  • “ஒன்றிய கூட்டுறவு அமைச்சகம்” புதிய அமைச்சகத்தை உருவாக்கிய பிரதமர் மோடி.
    • ஒன்றிய கூட்டுறவு அமைச்சகம் என்ற புதிய அமைச்சகத்தை பிரதமர் மோடி உருவாக்கி உள்ளார்
      இந்த நிலையில்தான் ஒன்றிய கூட்டுறவு அமைச்சகம் என்ற புதிய அமைச்சகத்தை தொடங்குவதாக பிரதமர்மோடி அறிவித்துள்ளார். நாடு முழுக்க கூட்டுறவுதுறையை கவனிப்பதற்காக, கூட்டுறவு துறையை பலப்படுத்த, புதிய திட்டங்களை கொண்டுவர, கூட்டுறவு துறைக்கான விதிமுறைகளை உருவாக்க, நாடு முழுக்க ஒரே மாதிரியான கூட்டுறவு கொள்கையை உருவாக்க இந்த துறை உருவாக்கப்பட்டுள்ளது.
    • மத்திய அமைச்சரவையின் எண்ணிக்கை 53-ஆக இருக்கிறது.

tnpsc current affairs

  • ஜூன் மாத ஜிஎஸ்டி வசூல் ரூ.92,849 கோடி
    • ஜூன் மாதத்தில் சரக்கு மற்றும் சேவை வரியின் மொத்த வசூல் ரூ.92,849 கோடியாக உள்ளது.
    • இதில், மத்திய சரக்கு மற்றும் சேவை வரி ரூ.6,424 கோடி, மாநில சரக்கு மற்றும் சேவை வரி ரூ.20,397 கோடி ஒருங்கிணைந்த சரக்கு மற்றும் சேவை வரி ரூ.49,079 கோடி (சரக்கு இறக்குமதிகளின் மூலம் வசூலான ரூ.25,762 கோடியையும் சேர்த்து) மற்றும் செஸ் வரி ரூ.6,949 கோடி (சரக்கு இறக்குமதிகளின் மூலம் வசூலான ரூ.809 கோடி உட்பட) ஆகும்.
    • கடந்த வருடத்தின் இதே மாதத்துடன் ஒப்பிடுகையில், சரக்கு மற்றும் சேவை வரியின் வருவாய் 2 சதவீதம் அதிகம் ஆகும். தொடர்ந்து எட்டு மாதங்களாக ரூ1 லட்சம் கோடிக்கும் அதிகமான வருவாயில் ஈட்டப்பட்ட நிலையில், 2021 ஜூன் மாதத்தில் ரூ.1 லட்சம் கோடிக்கும்Read More…

All Month Current Affairs PDF  Here


  • 0

Daily Current Affairs 06 July 2021

Daily Current Affairs in Tamil

ஜீலை 06

தமிழ் செய்திகள்

உலக செய்திகள்

  • உலகின் முதல் வானிலை செயற்கை கோள் ஏவியது சீனா
    வானிலை தொடர்பான அறிவிப்பு, தகவல் பரிமாற்றங்கள் துல்லியமாக இருப்பதை உறுதி செய்ய, உலகின் முதல் வானிலை செயற்கை கோளை சீனா வெற்றிகரமாக விண்ணில் ஏவியது. 8 ஆண்டுகள் செயல்படும் வகையில் உருவாக்கப்பட்ட இந்த செயற்கைகோள் 11 தானியங்கிபேலோடுகளுடன் ஜியுகுவான் செயற்கைகோள் ஏவுதளத்தில் இருந்து நேற்று செலுத்தப்பட்டது.

    • இதன் மூலம் சுற்றுச்சூழல் வெப்பம், ஈரப்பதம் உள்ளிட்ட வானிலை தகவல்கள், கனமழை, வெள்ளம், புயல், சூறாவளி போன்றவற்றால் ஏற்படும் பேரிடர், பனிமூடல், கடல் மட்டதட்ப வெப்பம், இயற்கை பேரிடர், சுற்றுச்சூழலியல் ஆகியவற்றால் ஏற்படும் பருவநிலை மாற்றம் ஆகியவற்றை கண்காணிக்கமுடியும். இதுதவிர, விண்வெளி தட்பவெப்பம் மற்றும் அது தொடர்பான சேவைகளை பெற தேவையான அயன் மண்டலத்துக் குரியதரவுகள், விண்வெளி சுற்றுச்சூழல், சூரியன் ஆகியவற்றை கண்காணிக்கலாம்.

தேசிய செய்திகள்

  • விண்வெளி செல்லும் இந்திய வம்சாவளி பெண் சிரிஷாபண்ட்லா
    பிரிட்டன் கோடீசுவரர்ரிச்சர்டு பிரான்சன் அமெரிக்காவில் விர்ஜின்கேலக்டிக் என்னும் பெயரில் விண்வெளி முகமை நடத்தி வருகிறார். இந்த நிறுவனம் சோதனை முயற்சியின் ஒரு பகுதியாக அடுத்த வார இறுதியில் யூனிட்டி 22 என்கிற விண்கலத்தை அறிமுகப்படுத்துகிறது.

    • இதன் மூலம் நிறுவனத்தின் தலைவரான ரிச்சர்ட்பிரான்சன் உள்ளிட்ட 5 பேர் கொண்ட குழு வரும் 11-ம் தேதி விண்வெளிப் பயணம் மேற்கொள்ளவுள்ளது. பிரான்சனுடன் சிரிஷாபண்ட்லா, பெத்மோசஸ் மற்றும் கொலின் பென்னட் ஆகியோர் விண்வெளிக்கு பயணம் மேற்கொள்ள உள்ளனர்.
    • விர்ஜின் கேலடிக் நிறுவனத்தில் அரசு விவகாரங்கள் மற்றும் ஆராய்ச்சி நடவடிக்கைகளின் துணைத்தலைவராக சிரிஷாபண்ட்லா இருக்கிறார்.
    • விண்வெளி பயணம் மேற்கொள்ளவுள்ள 2-வது இந்திய வம்சாவளி பெண் என்ற பெருமையை ஆந்திராவை பூர்வீகமாகக் கொண்ட சிரிஷாபண்டாலா பெற்றுள்ளார். இந்தியாவில் பிறந்த 2-வது நபராகவும், தெலுங்கு வம்சாவளியைச் சேர்ந்த முதல் நபராகவும் இருப்பார்.

 

  • ‘கோ-வின்’ டிஜிட்டல் தளத்தை பயன்படுத்த 50 நாடுகள் ஆர்வம்; இந்தியாவின் தொழில்நுட்பத்தை உலக நாடுகளுடன் பகிர்வோம்: சர்வதேச மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி உறுதி
    • ‘கோ-வின்’ டிஜிட்டல்தளம், ஆரோக்கிய சேது செயலி தொடர்பான இந்தியாவின் தொழில்நுட்பத்தை அனைத்து நாடுகளுடனும் பகிர்ந்து கொள்வோம் என்றும் பிரதமர் நரேந்திரமோடி உறுதி அளித்துள்ளார்.
    • கரோனா வைரஸ{க்கு எதிராக எந்த நாடும் தனித்துப் போரிட முடியாது.
    • இதே போன்ற டிஜிட்டல் தளங்களை உருவாக்கித் தருமாறுகனடா, மெக்ஸிகோ, பனாமா, நைஜீரியா, உகாண்டா உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்ட நாடுகள் இந்தியாவிடம் உதவிகோரியுள்ளன.
    • இந்நிலையில், மத்திய சுகாதாரத்துறை மற்றும் வெளியுறவுத்துறை சார்பில ;‘கோ-வின் சர்வதேச மாநாடு’ காணொலி வாயிலாக நேற்று நடந்தது
    • இந்தியாவில் கடந்த ஜனவரி 16-ம் தேதி உலகின் மிகப் பெரிய தடுப்பூசி போடும் திட்டத்தை தொடங்கினோம். இந்ததிட்டத்தை முழுவதுமாக டிஜிட்டல் மயமாக்கி உள்ளோம்.
      142 நாடுகளைச் சேர்ந்த Read More…

All Month Current Affairs PDF  Here


  • 0

Daily Current Affairs 05 July 2021

Daily Current Affairs in Tamil

ஜீலை 05

தமிழ் செய்திகள்

தேசிய செய்திகள்

  • 2021 ஆம் ஆண்டிற்கான உலகளாவிய தொடக்க நிறுவனங்கள் சூழல் குறியீடு பட்டியல் இந்தியா 20 வது இடத்தில் இருக்கிறது
    • Global startup ecosystem index 2021
    • Start up Blink வெளியீடு
    • 1-US, 2-UK, 3- இஸ்ரேல்
    • இந்திய நகரங்கள் பெங்களூர் 10வது இடத்திலும் புதுடெல்லி 14வது இடத்தில் மும்பை 16 வது இடத்திலும் உள்ளது.
    • கடந்த வருடம் 23 இடத்தில் இந்தியா இருந்தது

  • ஆசியாவின் மிக நீளமான அதிவேக Automotive test track இந்தியாவில் அமைக்கப்பட்டுள்ளது.
    மத்திய பிரதேசத்தில் இந்தூரில் அமைந்துள்ளது. இதனை மத்தியஅமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் திறந்து வைத்தார்.

    • உலகின் 5 வது மிக நீளமான அதிவேக தடம் 11.3cm

  • நிதி ஆயோக் அமைப்பின் தலைமை செயல் அதிகாரி அமிதாப் கான்டின் பதவிக்காலம் நீட்டிப்பு
    கடந்த 2016 ஆம் ஆண்டில் பொது கொள்கை சிந்தனைக் குழுவின் தலைமை நிர்வாக அதிகாரியாக அமிதாப் கான்ட் இரண்டு ஆண்டுகாலத்திற்கு நியமிக்கப்பட்டார். இதனையடுத்து, இந்த பதவிக்காலம் 2019 ஜூன் 30 வரை நீட்டிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து மீண்டும் நடப்பு ஆண்டு ஜூன் 30 வரை பதவிக்காலம் இரண்டு ஆண்டு நீட்டிக்கப்பட்டது.

    • இந்நிலையில், 30.06.2021 முதல் 30.06.2022 வரை மேலும் ஒரு வருடத்திற்கு நிதி (என்ஐடிஐ) ஆயோக் தலைமை நிர்வாக அதிகாரியாக கான்டின் பதவிக்காலத்தை நீட்டிக்க மத்திய அமைச்சரவையின் நியமனக் குழு ஒப்புதல்Read More…

All Month Current Affairs PDF  Here


  • 0

Daily Current Affairs 04 July 2021

Daily Current Affairs in Tamil

ஜீலை 04

தமிழ் செய்திகள்

தேசிய செய்திகள்

  • எல்ஐசி தலைவரின் ஓய்வு பெறும்வயதை 62 – ஆக நீட்டித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
    • இது தொடர்பாக மத்திய அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில், ‘இந்திய ஸ்டேட் வங்கி உள்பட பல்வேறு பொதுத்துறை நிறுவனங்களின் தலைவர்களின் ஓய்வு பெறும் வயது 60-ஆக உள்ளது. எல்ஐசி தலைவரின் ஓய்வு பெறும் வயது 62-ஆக நீட்டிக்கப்பட்டுள்ளது.
    • இதற்காக இந்திய ஆயுள்காப்பீட்டு நிறுவனம் சட்டத்திருத்தத்தில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
    • எல்ஐசி நிறுவனத்தின் பங்குகளை 2021-22-ஆம் ஆண்டில் இந்திய பங்குச்சந்தையில் வெளியிட்டு ரூ.1.75 லட்சம் கோடி திரட்டப்படும் என்றும் நிகழாண்டு பட்ஜெட் உரையில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்திருந்தார்.
    • இதற்கு ஏதுவாக, தற்போது எல்ஐசி தலைவராக உள்ள எம். ஆர்.குமாரின் பதவிக்காலத்தை அடுத்த ஆண்டு மார்ச் 13-ஆம் தேதி வரையில் நீட்டித்து உத்தரவிடப்பட்டுள்ளது.

  • மகாராஷ்டிராவின் நாசிக் நகரில் உள்ள விஷ்வாஸ் தியான் பிரபோகினி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தால் நடத்தப்படும் ரேடியோ விஷ்வாஸ் 90.8. இது, நாள்தோறும் 14 மணிநேரம் நிகழ்ச்சிகளை ஒலிபரப்புகிறது. கோவிப் பெருந்தொற்று காலத்தில் ஸ்மார்ட்போன் இல்லாத மாணவர்களின் கல்வி பாதிக்கக்கூடாது என்பதற்காக
    • கடந்த ஆண்டு ஜூன் மாதம் பெரு நிறுவன சமூக பொறுப்பு திட்டத்தின் கீழ், “அனைவருக்கும் கல்வி” என்ற நிகழ்ச்சி தொடங்கப்பட்டது.
    • இதில், மூன்று முதல் 10ம்வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு இலவசக் கல்வி வழங்கப்பட்டது. ஜில்லா பரிஷத் மற்றும் நாசிக் நகராட்சி பள்ளிகளில் படிக்கும் அனைத்து மாணவர்களையும் சென்றடையும் விதத்தில் ஹிந்தி, ஆங்கிலம், மராத்தி மற்றும் சமஸ்கிருதம் ஆகிய மொழிகளில் பாடங்கள் ஒலிபரப்பப்பட்டன.
    • நாசிக் வானொலிக்கு 2 தேசியவிருது

  • உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட நவீன சிறியரக நடமாடும் பாலங்கள் இந்திய ராணுவத்தில் இணைப்பு
    • “சுயசார்பு இந்தியா”திட்டத்தின் கீழ் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட நவீன சிறியரக நடமாடும் பாலங்கள் இந்திய ராணுவத்தில் நேற்று இணைத்துக் கொள்ளப்பட்டன. இந்தப் பாலங்களால் பாகிஸ்தான் எல்லையில் இந்தியாவின் செயல்திறன் பலமடங்கு அதிகரிக்கும் என ராணுவ தளபதி மனோஜ் முகுந்த்நரவானே தெரிவித்தார்.
    • இந்திய எல்லைப்பகுதிகளில் உள்ள சிறிய ஆறுகள், பள்ளத்தாக்குகள், மலையடிவாரங்கள் முதலியவற்றை பீரங்கிகளும், ராணுவ வாகனங்களும் கடப்பது மிகவும் சிரமமான ஒன்றாகும். இந்தப் பிரச்சினையை நிவர்த்தி செய்வதற்காக, சிறியரக பாலங்களை ராணுவம் பயன்படுத்தி வருகின்றன.
    • முதல்கட்டமாக 12 பாலங்கள் ராணுவத்திடம் ஒப்படைக்கப்பட்டன. இதன் மதிப்புRead More…

All Month Current Affairs PDF  Here