Daily Current Affairs 06 July 2021

  • 0

Daily Current Affairs 06 July 2021

Daily Current Affairs in Tamil

ஜீலை 06

தமிழ் செய்திகள்

உலக செய்திகள்

  • உலகின் முதல் வானிலை செயற்கை கோள் ஏவியது சீனா
    வானிலை தொடர்பான அறிவிப்பு, தகவல் பரிமாற்றங்கள் துல்லியமாக இருப்பதை உறுதி செய்ய, உலகின் முதல் வானிலை செயற்கை கோளை சீனா வெற்றிகரமாக விண்ணில் ஏவியது. 8 ஆண்டுகள் செயல்படும் வகையில் உருவாக்கப்பட்ட இந்த செயற்கைகோள் 11 தானியங்கிபேலோடுகளுடன் ஜியுகுவான் செயற்கைகோள் ஏவுதளத்தில் இருந்து நேற்று செலுத்தப்பட்டது.

    • இதன் மூலம் சுற்றுச்சூழல் வெப்பம், ஈரப்பதம் உள்ளிட்ட வானிலை தகவல்கள், கனமழை, வெள்ளம், புயல், சூறாவளி போன்றவற்றால் ஏற்படும் பேரிடர், பனிமூடல், கடல் மட்டதட்ப வெப்பம், இயற்கை பேரிடர், சுற்றுச்சூழலியல் ஆகியவற்றால் ஏற்படும் பருவநிலை மாற்றம் ஆகியவற்றை கண்காணிக்கமுடியும். இதுதவிர, விண்வெளி தட்பவெப்பம் மற்றும் அது தொடர்பான சேவைகளை பெற தேவையான அயன் மண்டலத்துக் குரியதரவுகள், விண்வெளி சுற்றுச்சூழல், சூரியன் ஆகியவற்றை கண்காணிக்கலாம்.

தேசிய செய்திகள்

  • விண்வெளி செல்லும் இந்திய வம்சாவளி பெண் சிரிஷாபண்ட்லா
    பிரிட்டன் கோடீசுவரர்ரிச்சர்டு பிரான்சன் அமெரிக்காவில் விர்ஜின்கேலக்டிக் என்னும் பெயரில் விண்வெளி முகமை நடத்தி வருகிறார். இந்த நிறுவனம் சோதனை முயற்சியின் ஒரு பகுதியாக அடுத்த வார இறுதியில் யூனிட்டி 22 என்கிற விண்கலத்தை அறிமுகப்படுத்துகிறது.

    • இதன் மூலம் நிறுவனத்தின் தலைவரான ரிச்சர்ட்பிரான்சன் உள்ளிட்ட 5 பேர் கொண்ட குழு வரும் 11-ம் தேதி விண்வெளிப் பயணம் மேற்கொள்ளவுள்ளது. பிரான்சனுடன் சிரிஷாபண்ட்லா, பெத்மோசஸ் மற்றும் கொலின் பென்னட் ஆகியோர் விண்வெளிக்கு பயணம் மேற்கொள்ள உள்ளனர்.
    • விர்ஜின் கேலடிக் நிறுவனத்தில் அரசு விவகாரங்கள் மற்றும் ஆராய்ச்சி நடவடிக்கைகளின் துணைத்தலைவராக சிரிஷாபண்ட்லா இருக்கிறார்.
    • விண்வெளி பயணம் மேற்கொள்ளவுள்ள 2-வது இந்திய வம்சாவளி பெண் என்ற பெருமையை ஆந்திராவை பூர்வீகமாகக் கொண்ட சிரிஷாபண்டாலா பெற்றுள்ளார். இந்தியாவில் பிறந்த 2-வது நபராகவும், தெலுங்கு வம்சாவளியைச் சேர்ந்த முதல் நபராகவும் இருப்பார்.

 

  • ‘கோ-வின்’ டிஜிட்டல் தளத்தை பயன்படுத்த 50 நாடுகள் ஆர்வம்; இந்தியாவின் தொழில்நுட்பத்தை உலக நாடுகளுடன் பகிர்வோம்: சர்வதேச மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி உறுதி
    • ‘கோ-வின்’ டிஜிட்டல்தளம், ஆரோக்கிய சேது செயலி தொடர்பான இந்தியாவின் தொழில்நுட்பத்தை அனைத்து நாடுகளுடனும் பகிர்ந்து கொள்வோம் என்றும் பிரதமர் நரேந்திரமோடி உறுதி அளித்துள்ளார்.
    • கரோனா வைரஸ{க்கு எதிராக எந்த நாடும் தனித்துப் போரிட முடியாது.
    • இதே போன்ற டிஜிட்டல் தளங்களை உருவாக்கித் தருமாறுகனடா, மெக்ஸிகோ, பனாமா, நைஜீரியா, உகாண்டா உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்ட நாடுகள் இந்தியாவிடம் உதவிகோரியுள்ளன.
    • இந்நிலையில், மத்திய சுகாதாரத்துறை மற்றும் வெளியுறவுத்துறை சார்பில ;‘கோ-வின் சர்வதேச மாநாடு’ காணொலி வாயிலாக நேற்று நடந்தது
    • இந்தியாவில் கடந்த ஜனவரி 16-ம் தேதி உலகின் மிகப் பெரிய தடுப்பூசி போடும் திட்டத்தை தொடங்கினோம். இந்ததிட்டத்தை முழுவதுமாக டிஜிட்டல் மயமாக்கி உள்ளோம்.
      142 நாடுகளைச் சேர்ந்த Read More…

All Month Current Affairs PDF  Here


Leave a Reply

Get More Info