Daily Current Affairs 09 July 2021
Daily Current Affairs in Tamil
ஜீலை 09
தமிழ் செய்திகள்
உலக செய்திகள்
- இத்தாலிய கடற்படை கப்பலுடன் இணைந்து ஐஎன்எஸ் தபார் கப்பல் பயிற்சி மேற்கொண்டது.
- மத்திய தரைக்கடலில் நடைபெற்று வரும் பயிற்சியில் கலந்து கொள்வதற்காக ஐஎன்எஸ் தபார் கப்பல், இத்தாலியின் நேபிள்ஸ் துறைமுகத்துக்கு சென்றது.
- இந்திய கப்பலுக்கு இத்தாலிய கடற்படை உற்சாக வரவேற்பளித்தது. துறைமுகத்தில் தங்கியிருந்த போது, கமாண்டிங் அதிகாரி கேப்டன் மகேஷ் மங்கிபுடி, நேப்பிள்ஸ் ஆணையகத்தில் மண்டல இத்தாலிய கடற்படை தலைமையகம் மற்றும் நேபிள்ஸில் உள்ள கடலோர காவல்படை தலைமையகத்தின் மூத்த அதிகாரிகளை சந்தித்துப் பேசினார்.
- கரீபியன் பெருங்கடல் நாடான ஹைட்டியின் அதிபர் ஜோவனேல் மாய்ஸ{ம் அவரது மனைவியும் அவர்களது இல்லத்தில் மர்மநபர்களால் படுகொலை செய்யப்பட்டனர். (Haitian President JovenelMoïse assassinated)
- இதுகுறித்து இடைக்கால பிரதமர் கிளாட் ஜோசப் புதன்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
- அதிபர் ஜோவனேல்மாய்ஸ் (53) இல்லத்தில் நள்ளிரவு நடத்தப்பட்ட தாக்குதலில் அவர் உயிரிழந்தார்
- நாட்டின் பாதுகாப்பு நிலவரத்தை மத்திய காவல்துறையும் முப்படைகளும் தங்களது கட்டுப்பாட்டுக்குள் வைத்துள்ளன.
- பிரிட்டனில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ராணுவ தலைமை தளபதி எம்.எம்.நரவணே அந்நாட்டு முப்படைத் தளபதி நிகோலஸ் கார்ட்டரை சந்தித்துப்பேசினார். இந்தியாவுக்கும் பிரிட்டனுக்கும் இடையே பாதுகாப்புத்துறையில் நிலவி வரும் ஒத்துழைப்பு குறித்தும் அதை மேலும் வலுப்படுத்துவது தொடர்பாகவும் அவர்கள் பேச்சுவார்த்தை நடத்தியதாக இந்தியராணுவம் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட சுட்டுரைப் பதிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- முன்னதாக பிரிட்டன் ராணுவம் தரப்பில் அளிக்கப்பட்ட அணிவகுப்பு மரியாதையை தலைமை தளபதி எம்.எம்.நரவணே ஏற்றுக் கொண்டார். பிரிட்டன் ராணுவத்தின் முக்கிய அதிகாரிகளையும் அவர் சந்தித்துப்பேசவுள்ளார்.
- இத்தாலியில் அவர் 2 நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளதாக இந்திய ராணுவம்Read More…
All Month Current Affairs PDF Here