Daily Current Affairs 04 July 2021
Daily Current Affairs in Tamil
ஜீலை 04
தமிழ் செய்திகள்
தேசிய செய்திகள்
- எல்ஐசி தலைவரின் ஓய்வு பெறும்வயதை 62 – ஆக நீட்டித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
- இது தொடர்பாக மத்திய அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில், ‘இந்திய ஸ்டேட் வங்கி உள்பட பல்வேறு பொதுத்துறை நிறுவனங்களின் தலைவர்களின் ஓய்வு பெறும் வயது 60-ஆக உள்ளது. எல்ஐசி தலைவரின் ஓய்வு பெறும் வயது 62-ஆக நீட்டிக்கப்பட்டுள்ளது.
- இதற்காக இந்திய ஆயுள்காப்பீட்டு நிறுவனம் சட்டத்திருத்தத்தில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
- எல்ஐசி நிறுவனத்தின் பங்குகளை 2021-22-ஆம் ஆண்டில் இந்திய பங்குச்சந்தையில் வெளியிட்டு ரூ.1.75 லட்சம் கோடி திரட்டப்படும் என்றும் நிகழாண்டு பட்ஜெட் உரையில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்திருந்தார்.
- இதற்கு ஏதுவாக, தற்போது எல்ஐசி தலைவராக உள்ள எம். ஆர்.குமாரின் பதவிக்காலத்தை அடுத்த ஆண்டு மார்ச் 13-ஆம் தேதி வரையில் நீட்டித்து உத்தரவிடப்பட்டுள்ளது.
- மகாராஷ்டிராவின் நாசிக் நகரில் உள்ள விஷ்வாஸ் தியான் பிரபோகினி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தால் நடத்தப்படும் ரேடியோ விஷ்வாஸ் 90.8. இது, நாள்தோறும் 14 மணிநேரம் நிகழ்ச்சிகளை ஒலிபரப்புகிறது. கோவிப் பெருந்தொற்று காலத்தில் ஸ்மார்ட்போன் இல்லாத மாணவர்களின் கல்வி பாதிக்கக்கூடாது என்பதற்காக
- கடந்த ஆண்டு ஜூன் மாதம் பெரு நிறுவன சமூக பொறுப்பு திட்டத்தின் கீழ், “அனைவருக்கும் கல்வி” என்ற நிகழ்ச்சி தொடங்கப்பட்டது.
- இதில், மூன்று முதல் 10ம்வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு இலவசக் கல்வி வழங்கப்பட்டது. ஜில்லா பரிஷத் மற்றும் நாசிக் நகராட்சி பள்ளிகளில் படிக்கும் அனைத்து மாணவர்களையும் சென்றடையும் விதத்தில் ஹிந்தி, ஆங்கிலம், மராத்தி மற்றும் சமஸ்கிருதம் ஆகிய மொழிகளில் பாடங்கள் ஒலிபரப்பப்பட்டன.
- நாசிக் வானொலிக்கு 2 தேசியவிருது
- உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட நவீன சிறியரக நடமாடும் பாலங்கள் இந்திய ராணுவத்தில் இணைப்பு
- “சுயசார்பு இந்தியா”திட்டத்தின் கீழ் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட நவீன சிறியரக நடமாடும் பாலங்கள் இந்திய ராணுவத்தில் நேற்று இணைத்துக் கொள்ளப்பட்டன. இந்தப் பாலங்களால் பாகிஸ்தான் எல்லையில் இந்தியாவின் செயல்திறன் பலமடங்கு அதிகரிக்கும் என ராணுவ தளபதி மனோஜ் முகுந்த்நரவானே தெரிவித்தார்.
- இந்திய எல்லைப்பகுதிகளில் உள்ள சிறிய ஆறுகள், பள்ளத்தாக்குகள், மலையடிவாரங்கள் முதலியவற்றை பீரங்கிகளும், ராணுவ வாகனங்களும் கடப்பது மிகவும் சிரமமான ஒன்றாகும். இந்தப் பிரச்சினையை நிவர்த்தி செய்வதற்காக, சிறியரக பாலங்களை ராணுவம் பயன்படுத்தி வருகின்றன.
- முதல்கட்டமாக 12 பாலங்கள் ராணுவத்திடம் ஒப்படைக்கப்பட்டன. இதன் மதிப்புRead More…
All Month Current Affairs PDF Here