புவி வெப்பமடைவதால் ஆர்க்டிக் பனிப்பாறை உருகும் அபாயம் குறித்து ஏற்கனவே சர்வதேச அளவில் எச்சரிக்கை விடுக்கப்பட்டது.
இது குறித்த ஆராய்ச்சி மேற்கொள்ளும் குழுவின் தலைவர் மார்கஸ் ரெக்ஸ் தற்போது பனிப்பாறை உருகத் தொடங்கி விட்டதாக எச்சரிக்கை விடுத்துள்ளார்.
கோடை காலத்திலும் ஆர்க்டிக் பிராந்தியத்தில் உருகிய ஐஸ் பாளங்கள் இப்போது மறைத்துள்ளது. பனி உருகுவதன் முதல் அடையாளம் என மார்கஸ் குறிப்பிட்டுள்ளார்.
உலக கொடுப்பனவு குறியீட்டு (World Giving Index) 2021 வெளியிட்டுள்ள அறிக்கையின் படி இந்தியா, உலகின் 14வது தொண்டு நாடாக உள்ளது.
இந்தோனேசியா முதலிடத்திலுள்ளது.
இந்தோனேசியா ஒட்டு மொத்தமாக 69% குறியீட்டு மதிப்பெண்ணைக் கொண்டுள்ளது.
கென்யா, நைஜீரியா, மியான்மர் மற்றும் ஆஸ்திரேலியா முறையே முதல் 2, 3, 4, 5 ம் இடத்தில் உள்ளன.
தேசிய செய்திகள்
கரோனா முன்களப் பணியாளர்களுக்கான நாடு தழுவிய பயிற்சி வகுப்புகளை பிரதமர் நரேந்திர மோடி ஜீன் 18ல் தொடங்கி வைக்கிறார்.
கரோனா தொற்றின் வரும் 3வது அலையை சமாளிக்கவும், 3வது அலை உச்சக்கட்டத்தை அடையாமல் தடுப்பதற்கும் மத்திய அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.
மருத்துவர்கள் உள்ளிட்ட சுகாதாரத் துறை ஊழியர்களின் வேலையை கரோனா முன்களப் பணியாளர்களுக்கு பகிர்ந்தளிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
இதற்காக அவர்களுக்கு பிரத்யேக பயிற்சி அளிக்கும் திட்டம் உருவாக்கப்பட்டள்ளது.
பிரதமரின் கவுஷல் விகாஸ் திட்டத்தின் கீழ் முன்களப் பணியாளர்களுக்கு இந்தப் பயிற்சி
வழங்கப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் உள்ள 26 மாநிலங்களில் இதற்காக 111 பயிற்சி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
அடிப்படை பராமரிப்பு உதவி, அவசர கால உதவி கரோனா பரிசோதனைக்கான மாதிரிகளை பொது மக்களிடம் சேகரிப்பதற்கான வழிமுறைகள் உள்ளிட்ட 6வகை பயிற்சிகள் இதில் அடங்கும்.
ரூ 276 கோடி செலவில் செயல்படுத்தப்படவுள்ள இத்திட்டத்தை பிரதமர் மோடி காணொலிக் காட்சி வாயிலாக தொடங்கிRead More…
‘விவாடெக்’ அமைப்பின் 5வது தொழில்நுட்ப மாநாட்டில் பிரதமர் மோடி உரையாற்றுகிறார்.
ஐரோப்பிய நாடுகளின் மிகப்பெரிய டிஜிட்டல், புதுமை கண்டுபிடிப்புகளுக்கான அறிவியல் தொழில்நுட்ப மாநாடு விவாடெக் என்ற பெயரில் பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் 2016 ம் ஆண்டில் இருந்து நடத்தப்பட்டு வருகிறது.
5வது மாநாடு ஜீன் 16ம் தேதி முதல் 19ம் தேதி வரை நடைபெறவுள்ளது.
இம்மாநாட்டில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு உரையாற்றுமாறு பிரதமர் மோடிக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
அதன்படி ஜீன் 16ல் பிரதமர் மோடி மாநாட்டில் சிறப்புரையாற்றுகிறார்.
ஆப்பிள் நிறுவனத் தலைமை நிர்வாக அதிகாரி டிம் குக், ஃபேஸ்புக் நிறுவன தலைவர் மார்க் ஸக்கர்பர்க், மைக்ரோ சாஃப்ட் தலைவர் பிராட்ஸ்மித் உள்ளிட்ட தொழில்துறை தலைவர்களும் மாநாட்டில் பங்கேற்க உள்ளனர்.
இந்தியா, சீனா, பாகிஸ்தான் ஆகிய நாடுகள் அணு ஆயுதங்களை தொடர்ந்து அதிகரித்து வருவது ஆய்வில் தெரியவந்துள்ளது.
எல்லை விவகாரங்களில் பாகிஸ்தான், சீனா ஆகிய நாடுகளுடன் இந்தியா பிரச்சனைகளை எதிர்கொண்டு வருகிறது.
இந்நிலையில் ஸ்டாக்ஹோம் சர்வதேச அமைதி ஆராய்ச்சி மையம் சார்பில் அணு ஆயுதங்கள் தொடர்பான ஆய்வு நடத்தப்பட்டது.
அதில் உலகம் முழுவதிலும் சுமார் 13,080 அணு ஆயுதங்கள் உள்ளதாக கணக்கிடப்பட்டுள்ளது.
அவற்றில் 90% ஆயுதங்கள் அமெரிக்கா, ரஷ்யா ஆகிய இரு நாடுகளில் மட்டுமே உள்ளதாக ஆய்வில் தெரிய வந்துள்ளது.
சர்வதேச அளவில் அமெரிக்கா, ரஷியா, பிரிட்டன், வடகொரியா, இந்தியா, சீனா, பாகிஸ்தான், பிரான்ஸ், இஸ்ரேல் ஆகிய நாடுகளிடம் மட்டுமே அணு ஆயுதங்கள் உள்ளன.
அணு ஆயுதங்களைக் கொண்ட ஏவகனைகளை தயாரிப்பதற்காக அதிசெறிவூட்டப்பட்ட யுரேனியம் புளுட்டோனியம் ஆகிய கதிரியக்கப் பொருள்களை நாடுகள் பயன்படுத்தி வருகின்றன.
இந்தியா, இஸ்ரேல் ஆகியவை புளுட்டோனியத்தைக் கொண்டு அணு ஆயுதங்களை தயாரித்து வருகின்றன.
பாகிஸ்தான் யுரேனியத்தை கொண்டு ஆயுதங்கள் தயாரிக்கிறது.
தேசிய செய்திகள்
டாக்டர் ஹர்ஷவர்தன் உலகளாவிய யோகா மாநாடு 2021 ல் உரையாற்றுகிறார்.
உலகளாவிய யோகா மாநாடு 2021ன் தொடக்க விழாவில் மத்திய சுகாதார மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் டாக்டர் ஷர்ஷ்வர்தன் உரையாற்றினார்.
இந்நிகழ்ச்சியை “மோக்சயதன் யோக்சன்ஸ்தான்” மற்றும் ஆயுஷ் அமைச்சகம் இந்திய அரசு மற்றும் இந்திய கலச்சார உறவுகள் கவுன்சில் ஆகியவை இணைந்து ஏற்பாடு செய்தன.
அமெரிக்க நிறுவனமான நோவாவாக்ஸ் உருவாக்கி இந்தியாவில் தயாரிக்க திட்டமிடப்பட்டுள்ள கரோனா தடுப்பூசி 90.4மூ செயல்திறனை கொண்டிருப்பதாக அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.
அமெரிக்கா, மெக்சிகோவில் உள்ள 119 இடங்களில் 29960 தன்னார்வலர்களுக்கு நோவாவாக்ஸ் உருவாக்கியுள்ள ‘என்விஎக்ஸ் – சிஓவி 2373’ தடுப்பூசியை செலுத்தி அதன் செயல்திறன், பாதுகாப்பு, நோய் எதிர்ப்பாற்றல் குறித்து பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
தடுப்பூசியின் ஒட்டு மொத்த செயல்திறன் 90.4மூ என தெரிய வந்துள்ளது.
நோவாவாக்ஸ் உருவாக்கியுள்ள தடுப்பூசியை சாதாரண குளிர்சாதன பெட்டிகளில் சேமிக்க முடியும்.
2022 ல் அமெரிக்காவுக்கு 11 கோடி தடுப்பூசிகளையும், வளரும் நாடுகளுக்கு 110 கோடி தடுப்பூசிகளையும் வழங்க நோவாவாக்ஸ் திட்டமிட்டுள்ளது.
இந்த தடுப்பூசியை இந்தியாவின் சீரம் நிறுவனத்துடன் இணைந்து உற்பத்தி செய்ய நோவாவாக்ஸ் நிறுவனம் ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது.
ஜீன் 15 முதல் இஸ்ரேல் உலகின் முதல் முகமூடி இல்லாத நாடாக மாறும்
முகமூடிகளைப் பயன்படுத்துவதற்கான விதி ஜீன் 15 முதல் முடிவடையும்.
இதை இஸ்ரேலின் சுகாதார அமைச்சர் யூலி எடெல்ஸ்மீன் அறிவித்தார்.
வெளியில் முகமூடிகளை பயன்படுத்துவதற்கான விதி ஏற்கனவே நாட்டில் ரத்து செய்யப்பட்டுள்ளது.
9 நாடுகளுக்கு பயணம் செய்வது இன்னும் தடைசெய்யப்பட்டுள்ளது.
தேசிய செய்திகள்
உத்தரகாண்டில் 14500 அடி உயரத்தில் நந்தா தேவி வனப்பகுதியில் முதல்முறையாக ராணுவ பெண்கள் குழுவினர் ரோந்து சென்று சாதனை படைத்துள்ளனர்.
உத்தரகாண்ட் மாநிலம் டேராடூன் அருகே நந்தா தேவி வனப்பகுதி உள்ளது. இந்தப் பகுதியில் ராணுவக் குழுவினர் ரோந்துப் பணியில் ஈடுபடுகின்றனர்.
ராணுவத்தை சேர்ந்த துர்கா சதி, ரோஷ்னி நெகி, மம்தா கன்வாசி ஆகியோர் அடங்கிய குழு நந்தாதேவி வனப்பகுதியில் சுமார் 14,500 அடி உயரத்தில் ரோந்துப் பணியில் ஈடுபட்டு சாதனை படைத்துள்ளது.
நந்தா தேவி சிகரமானது 25 ஆயிரம் அடி உயரம் கொண்டது. இந்த பெண்கள் ராணுவக் குழுவினர் 14,500 அடி உயரம் வரை Read More…
இஸ்ரேல் புதிய பிரதமராக நாஃப்டாலி பென்னட் பதவியேற்றார்.
இதன்மூலம் பெஞ்சமின் நெதன்யாகுவின் 12 ஆண்டு கால ஆட்சி முடிவுக்கு வந்தது.
இஸ்ரேலில் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவுக்கு எதிராக எதிர் கட்சிகள் ஒன்றிணைந்து கூட்டணி அமைத்தன.
அந்த கூட்டணி அமைத்துள்ள புதிய அரசுக்கு நாடாளுமன்ற அங்கீகாரம் அளிப்பதற்கான வாக்கெடுப்பு நடைபெற்றது. இதில் நாஃப்டாலி பென்னட் தலைமையிலான புதிய அரசு வெற்றி பெற்றது.
120 உறுப்பினர்களைக் கொண்ட நாடாளுமன்றத்தில் புதிய அரசுக்கு ஆதரவாக 60 வாக்குகளும், எதிராக 59 வாக்குகளும் கிடைத்தன.
இஸ்ரேலின் 13வது பிரதமராக நாஃப்டாலி பென்னட் பதவியேற்றார். புதிய அரசில் 27 அமைச்சர்கள் இடம் பெற்றுள்ளனர். இவர்களில் 9 பேர் பெண்கள். .
கம்போடியாவில் கண்ணி வெடிகளை அகற்றுவதற்காக புதிய எலிகள் குழு நியமனம் செய்யப்பட்டுள்ளது.
கம்போடியா நாட்டின் பாதுகாப்புக்காக பல்வேறு பகுதிகளில் சுமார் 60 லட்சத்துக்கும் மேற்பட்ட கண்ணிவெடிகள் புதைக்கப்பட்டுள்ளன.
இந்த வெடிகளில் சிக்கி சுமார் 60 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் இறந்ததால் அவற்றை அகற்ற கம்போடியா அரசு முடிவு செய்தது.
இந்த பணியில் விலங்குகளை பயன்படுத்த முடிவு செய்யப்பட்டது. அதன்படி எலிகளை கொண்டு கண்ணி வெடிகள் அகற்றப்பட்டு வருகின்றன.
இந்த பணியில் மகாவா என்ற எலி 5 ஆண்டுகளுக்கும் மேலாக சுறுசுறுப்பாக பணியாற்றியது.
கண்ணி வெடிகளை கண்டுபிடிப்பதில் அசாத்திய திறமை கொண்ட இந்த எலி, இதுவரை 71 கண்ணிவெடிகளை கண்டுபிடித்துள்ளது.
இதன் மிகச் சிறப்பான பணியை அங்கீகரிக்கும் விதமாக இங்கிலாந்து விலங்குகள் நல அமைப்பு, எலி மகாவாவுக்கு தங்கப்பதக்கம் வழங்கி கௌரவப்படுத்தியது.
அந்த அமைப்பின் 77 ஆண்டுகால வரலாற்றில் எலி ஒன்று தங்கப்பதக்கம் பெறுவது இதுவே முதன்முறை.
தற்போது மகாவா எலிக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளதால், கண்ணி வெடிகளை அடையாளம் காண புதிய எலிகள் குழு கம்போடியா அரசால் நியமனம் செய்யப்பட்டுள்ளது.
கண்ணி வெடிகளை அடையாளம் கண்டுபிடிக்கும் பயிற்சியை எலிகளுக்கு அபோபா என்ற தொண்டு நிறுவனம் வழங்கி வருகிறது.
தான்சானியாவை தலைமையிடமாக கொண்ட இந்த அமைப்பு எலிகளுக்கு பயிற்சி வழங்கி, அதில் சிறப்பாக இருக்கும் எலிகளுக்கு ‘ஹீரோ ராட்’ என்ற சான்றிதழையும் வழங்குகிறது.
தற்போது உருவாக்கப்பட்ட புதிய குழுவில் 21 ஆப்ரிக்க வகை பெரிய எலிகள் உள்ளன.
உலகின் மிக நீளமான கடலுக்கடியில் கேபிளை கூகுள் உருவாக்குகிறது.
கூகிள் ஒரு திறந்த சப்ஸீகேபிளை அமைப்பதன் மூலம் அமெரிக்காவை தென் அமெரிக்க நாடுகளுடன் இணைக்கும் திட்டத்தை அறிவித்தது.
பிரேசிலின் 1வது கவிஞர் ‘மரியா பிர்மினா டோஸ் ரெய்ஸை’ கௌரவிக்கும் வகையில் ‘ஃபிர்மினா’ என்று சப்ஸீ கேபிள் பெயரிடப்பட்டது.
இது உலகின் மிக நீளமான சப்ஸீ கேபிள் ஆகும். இது ஒரு மின் மூலத்தின் மூலம் முழுமையாக இயங்க கூடியது.
உலகின் மிகப்பெரிய கடலுக்கடியில் உள்ள கேபிளான ஃபிர்மினியா, தென் அமெரிக்காவில் உள்ள பயனர்களுக்கான கூகிள் சேவைகளுக்கான அணுகலைRead More…
அடுத்த ஆண்டுக்குள் 70% மக்களுக்கு கரோனா தடுப்பூசி செலுத்த ஜி7 உறுப்பு நாடுகளுக்கு உலக சுகாதார அமைப்பு வேண்டுகோள் விடுத்துள்ளது.
ஜி-7 கூட்டமைப்பின் 47வது உச்சி மாநாடு ஜீன் 11 அன்று தொடங்கியது.
பிரிட்டனின் கார்ன்வால் பகுதியில் செயின்ட் ஜவ்ஸ் நகரில் உள்ள கார்பில் பே பகுதியில் மாநாடு நடைபெற்று வருகிறது.
இம்மாநாட்டில் உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ராஸ் அதானம் கேப்ரியேசஸ் கலந்து கொண்டார்
‘ஒரு பூமி, ஒரே சுகாதார’ அணுகுமுறையை கடைபிடிக்க ஜி7 உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி தெரிவித்தார்.
.
அமெரிக்க கறுப்பினத்தவர் ஜார்ஜ் பிளாய்ட் கொலையை படம் பிடித்த 18 வயது இளம்பெண் டார்னெல்லா ஃபிரேசியர் புலிட்சர் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
அமெரிக்காவின் மினசோட்டா மாகாணம் மினியாபொலிஸ் நகரில் 2020 மே, 25 ல் ஜார்ஜ் பிளாய்ட் என்ற கருப்பினத்தை சேர்ந்தவரை போலிஸார் சந்தேகத்தின் அடிப்படையில் மடக்கிப் பிடித்தனர்.
டெர்ரக்சவுவின் என்ற போலீஸ்காரர் பிளாய்டை கீழேதள்ளி அவரது கழுத்தில் காலை வைத்து பலமாக அழுத்தினார். இதில் மூச்சுதிணறல் ஏற்பட்டு அவர் இறந்தார்.
இதையடுத்து அமெரிக்க தலைநகர் வாஷிங்டன் உட்பட பல மாகாணங்களில் போராட்டம் வெடித்தது.
போலீஸ்காரர் டெர்ரக் சவுவின் மீது போலீஸார் கொலை வழக்குப் பதிவு செய்தனர்.
வீடியோவாக பதிவு செய்தவர் டார்னெல்லா ஃபிரேசியர் என்ற இளம்பெண்
ஜார்ஜ் பிளாய்டின் கொலை வெளி உலகிற்கு தெரிய அந்த வீடியோ தான் முக்கிய காரணம்.
புகைப்பட கலைஞர்களுக்கு வழங்கப்படும் உலகின் மிக உயரிய விருது புலிட்சர் விருது
அமெரிக்கா பத்திரிகையாளர் ஜோசப் புலிட்சர் என்பவரின் பெயரில் 1912 முதல் இவ்விருது வழங்கப்படுகிறது.
சீனாவின் மனித உரிமை மீறல்களை அம்பலப்படுத்திய இந்திய வம்சாவளி செய்தியாளருக்கு புலிட்சர் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்திய வம்சாவளி செய்தியாளர் மேகா ராஜகோபாலனுக்கு புலிட்சர் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்க பத்திரிகையாளர் ஜோசப் புலிட்சர் நினைவாக பத்திரிக்கை, நாடகம், இசை உள்ளிட்ட துறையில் சிறந்து விளங்குவோருக்கு ஆண்டுதோறும் கொலம்பியா பல்கலைக் கழகத்தால் புலிட்சர் பரிசு வழங்கப்படுகிறது.
இந்த ஆண்டுக்கான புலிட்சர் பரிசு பட்டியல் வெளியடப்பட்டது. இதில் பொது சேவை பிரிவில் நியூயார்க் டைம்ஸ் நாளிதழ் புலிட்சர் பரிசுக்கு தேர்வு செய்யப்பட்டது.
சர்வதேச செய்தி சேகரிப்பு பிரிவில் இந்திய வம்சாவளியை சேர்ந்த மேகா ராஜகோபாலனுக்கு புலிட்சர் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவின் ஆன்லைன் செய்தி ஊடகமான டீரணணகநநன சார்பில் சீனாவில் சுமார் 6 ஆண்டுகளுக்கும் மேலாக ராஜ கோபாலன்Read More…
மங்கோலியாவின் முன்னாள் பிரதமர் உக்னா குரெல்சுக் நாட்டின் 6வது ஜனநாயக ரீதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட ஜனாதிபதியானார்.
ஆளும் மங்கோலிய மக்கள் கட்சியின் அதிகாரத்தை ஒரு மகத்தான வெற்றியுடன் மேலும் பலப்படுத்தினார்.
தேசிய செய்திகள்
இந்தியாவில் உருவாக்கப்பட்ட கோவேக்சின் கரோனா தடுப்பூசிக்கு அவசர கால அனுமதி தர அமெரிக்காவின் உணவு மற்றும் மருந்து நிர்வாகம் மறுத்துள்ளது.
கோவேக்சின் தடுப்பூசி பரிசோதனை குறித்து கூடுதல் தரவுகளுடன் உயிரி உரிம விண்ணப்ப (பிஎல்ஏ) வழியில் அனுமதி கேட்டு விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தியுள்ளது.
ஹைதராபாத்தில் உள்ள பாரத் பயோடெக் நிறுவனத்தின் கோவேக்சின் தடுப்பூசியின் மூன்றாம் கட்ட பரிசோதனை முடிவுகள் வெளிவரும் முன்னரே இந்த தடுப்பூசியை அவசர கால பயன்பாட்டின் அடிப்படையில் பயன்படுத்த மத்திய அரசு அனுமதி அளித்தது.
கோவேக்சின் தடுப்பூசிக்கு எப்டிஏ அங்கீகாரம் பெறுவதற்கான முயற்சியை பாரத் பயோடெக் நிறுவனம் அமெரிக்காவில் உள்ள தனது பங்கு நிறுவனமான ஒகுஜன் மூலம் முயற்சி மேற்கொண்டது.
பிஎல்ஏ நடைமுறை என்பது மருந்து அல்லது தடுப்பூசிகளுக்கு அனைத்து விதமான பரிசோதனை முடிவுகளின் அடிப்படையில் வழங்கப்படும் நீண்ட வழிமுறையுடைய அனுமதி நடைமுறையாகும்.
எல்லைச் சாலைகள் அமைப்பின் 2 மையங்களை ராஜ்நாத்சிங் திறந்து வைத்தார்.
தில்லியில் எல்லைச் சாலைகள் அமைப்புக்கு(BRO) 2 மையங்களை பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் காணொலி வழியாகத் திறந்து வைத்தார்.
சாலை விபத்துகளால் ஆண்டுதோறும் 1.5 லட்சம் பேர் உயிரிழக்கிறார்கள்.
இந்த உயிரிழப்பைத் தடுப்பதற்காக தேசிய சாலைப் பாதுகாப்புக் கொள்கை, மோட்டார் வாகனச் சட்டம் -2020 மற்றும் தேசிய நெடுஞ்சாலையில் ஆபத்தான பகுதிகளை கண்டறிதல் போன்ற பல நடவடிக்கைகளை மத்திய அரசு எடுத்துள்ளது.
தற்போது முக்கிய நடவடிக்கையாக பிஆர்ஓ அமைப்பு சார்பில் இரு மையங்கள்Read More…
ஜி7 உச்சி மாநாட்டில் ஜீன் 12, 13 ல் பிரதமர் நரேந்திர மோடி காணொலி முறையில் பங்கேற்கிறார்.
பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சனின் அழைப்பை ஏற்று இந்த நிகழ்ச்சியில் மோடி கலந்து கொள்கிறார்.
ஜி7 நாடுகள் அமைப்புக்கு தற்போது பிரிட்டன் தலைமையேற்றுள்ளது.
இந்தியா, ஆஸ்திரேலியா, தென்கொரியா மற்றும் தென்னாப்ரிக்கா ஆகிய நாடுகளை விருந்தினர்களாக ஜி7 உச்சி மாநாட்டுக்கு பிரிட்டன் பிரதமர் அழைத்துள்ளார்.
நேரடி மற்றும் காணொலி முறைகளில் மாநாடு நடைபெறும்.
‘சிறப்பான முறையில் மீண்டும் கட்டமைப்போம்’ என்பது இந்த உச்சி மாநாட்டின் மையப்பொருளாகும்.
.
கழிவுநீரில் கரோனா தீநுண்மி இருப்பதைக் கண்டறியும் குறைந்த விலையிலான சென்ஸார் தொழில்நுட்பத்தை பிரிட்டன் – இந்திய விஞ்ஞானிகள் கூட்டாக உருவாக்கியுள்ளனர்.
இதனைப் பயன்படுத்த ஆய்வக வசதிகளோ, விலை உயர்ந்த ரசாயானமோ இதற்கு தேவைப்படாது.
எளிதாக கையில் எடுத்துச் செல்லக் கூடிய வகையிலான இந்த தொழில் நுட்பம், குறைந்த வருவாய் மற்றும் நடுத்தர வருவாய் நாடுகளுக்கு நோய் தொற்று பரவலைக் கண்டறிய இந்த தொழில்நுட்பம் உதவும்.
பிரிட்டனைச் சேர்ந்த ஸ்டிராத்கிளைட் பல்கலைக்கழகம் மற்றும் மும்பை ஐஐடி ஆராய்ச்சியாளர்கள் இணைந்து உருவாக்கிய இந்த சென்ஸார் தொழில்நுட்பம் தொடர்பான ஆய்வுக் கட்டுரை சென்ஸார்ஸ் அண்ட் ஆக்சுலேட்டர்ஸ் பி கெமிக்கல்” ஆய்விதழில் வெளியிடப்பட்டுள்ளது.
இந்த ஆய்வுக்காக மும்பையிலுள்ள கழிவுநீர் சுத்திகரிப்பு ஆலையிலிருந்து கழிவுநீர் சேகரிக்கப்பட்டு அதனுடன் சார்ஸ் சி ஓவி-2 ரிபோநியூக்ளிக் அமிலத்தை கலந்து இந்த சென்ஸார் தொழில்நுட்பத்தை பரிசோதித்துள்ளனர்.
தனது சொந்த விண்வெளி நிலையத்துக்கு வீரர்களை அனுப்ப சீனா தயாராகி வருகிறது. வீரர்கள் அனுப்பபடவுள்ள ராக்கெட் ஏவுதளத்துக்கு கொண்டு செல்லப்ட்டது.
சீன விண்வெளி நிலையத்துக்கு 3 விண்வெளி வீரர்கள் அனுப்பப்படவுள்ளனர்.
இவர்கள் விண்வெளி நிலையத்தில் 3 மாதங்கள் தங்கியிருந்து கட்டமைப்பு, பராமரிப்புப்பணி மற்றும் அறிவியல் பரிசோதனைகளில் ஈடுபடுவார்கள்.
சீனா தனக்கு என சொந்தமாக தியான்ஹே விண்வெளி நிலையத்தை அமைத்து வருகிறது.
இந்நிலையில் 3 விண்வெளி வீரர்கள் செல்லவுள்ள சென்ஷோ-12 விண்கலத்தை ஏற்றிக்கொண்டு செல்லும் லாங் மார்ச்-2 எஃப் ஒய்12 ராக்கெட் வடமேற்கு சீனாவில் உள்ள ஏவுதளத்துக்கு கொண்டு செல்லப்பட்டதாக சீன விண்வெளி பொறியியல் அலுவலகம் தெரிவித்துள்ளது.
பிட்காயினை சட்டப்பூர்வ நாணயமாக மத்திய அமெரிக்க நாடான எல் சால்வடார் அங்கீகரித்துள்ளது.
இத்தகைய அறிவிப்பை வெளியிட்டுள்ள முதல் நாடு எல் சால்வடார் தான் என்பது குறிப்பிடத்தக்கது.
எல் சால்வடாரின் பொருளாதாரம் அந்த நாட்டிலிருந்து வெளிநாடுகளுக்கு சென்று பணியாற்றும் தொழிலாளர்கள் அனுப்பும் பணத்தை பெரும்பான்மையாக சார்ந்துள்ளது.
இத்தகைய அங்கீகாரத்தை பிட்காயின் பெற்றுள்ளது இதுவே முதல் முறையாகும்.
அந்தமான் கடல்பகுதியில் இந்தியா – தாய்லாந்து கடற்படைகளின் 3 நாள் கூட்டு ரோந்து நடவடிக்கை ஜீன் -9ல் தொடங்கியது.
இந்திய கடல் பிராந்தியத்தில் சீனாவின் ஆதிக்கம் அதிகரித்து வரும் சூழலில் பிராந்திய கடல் பகுதி பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில் ஆஸ்திரேலியா, அமெரிக்கா, ஜப்பான் ஆகிய நாடுகளுடன் இணைந்து க்வாட் கூட்டமைப்பை உருவாக்கி இந்தியப் பெருங்கடல் பகுதியில் கூட்டுப்போர் பயிற்சி உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளை இந்தியா மேற்கொண்டு வருகிறது.
அதன் ஒரு பகுதியாக, சாகர் திட்டத்தின் கீழ் தாய்லாந்து நாட்டு கடற்படையுடன் இணைந்து கூட்டு ரோந்து பணியையும் தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது.
க்யூஎஸ் (Quacquarelli Symonds) உலக பல்கலைக்கழக தரவரிசைப் பட்டியலில் முதல் 200 இடங்களில் 3 இந்திய பல்கலைக்கழகங்கள் இடம்பிடித்து சாதனை படைத்துள்ளது.
க்யூஎஸ் உலக பல்கலைக் கழக தர வரிசைப் பட்டியல் 2022 ல், 3 இந்திய பல்கலைக் கழகங்கள் இடம்பிடித்து சாதனை படைத்துள்ளது.ஆராய்ச்சி பிரிவில், உலகளவில் முதலாவது இடத்தில் பெங்களுர் ஐஐஎஸ்சி உள்ளது.
மும்பை ஐஐடி 117வது இடத்தையும், டெல்லி ஐஐடி 185வது இடத்தையும், பிடித்துள்ளன.உலகளவில் உயர்கல்வி குறித்து க்யூஎஸ் (குவாக்கரெல்லி சைமண்டஸ்) என்ற அமைப்பு ஆய்வு செய்து தரவரிசைப் பட்டியலை ஒவ்வொரு ஆண்டும் வெளியிட்டுRead More…
ஐ.நா சமூக பொருளாதார கவுன்சிலின் உறுப்பினராக 3 ஆண்டுகளுக்கு இந்தியா தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.
ஐ.நாவின் 6 முக்கிய அமைப்புகளில் சமூக-பொருளாதார கவுன்சிலும் ஒன்றாக உள்ளது.
சமூகம், பொருளாதாரம், சுற்றுச்சூழல் ஆகிய விவகாரங்களில் நீடித்த வளர்ச்சியை ஏற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை அந்த கவுன்சில் மேற்கொண்டு வருகிறது.
சர்வதேச அளவில் ஒப்புக் கொள்ளப்பட்ட இலக்குகளை அடைவதற்கான நடவடிக்கைகளையும் கவுன்சில் மேற்கொண்டு வருகிறது.
சமூக பொருளாதார கவுன்சிலில் 54 நாடுகள் உறுப்பினர்களாக இடம் பெற முடியும்.
ஆசிய கண்டத்திலிருந்து 11 நாடுகளும், ஆப்ரிக்க கண்டத்திலிருந்து 14 நாடுகளும், கிழக்கு ஐரோப்பிய பகுதிகளிலிருந்து 6 நாடுகளும் தென் அமெரிக்க கண்டத்திலிருந்து 10 நாடுகளும், மற்ற பகுதிகளில் இருந்து 13 நாடுகளும் கவுன்சிலின் உறுப்பினர்களாக தேர்ந்தெடுக்கப்படும்.
ஐ.நா சமூக – பொருளாதார கவுன்சிலுக்கான தேர்தல் நடைபெற்றது. அதில் ஆசியகண்டத்தில் இருந்து இந்தியா, ஆப்கானிஸ்தான், ஓமன், கஜகஸ்தான் ஆகிய நாடுகள் தேர்ந்தெடுக்கப்பட்டன.
ஐ.நா பாதுகாப்பு கவுன்சிலின் நிரந்தரமற்ற உறுப்பு நாடாக இந்தியா ஏற்கனவே செயல்பட்டு வருகிறது. அதன் தலைமை பொறுப்பை ஆகஸ்ட் மாதம் இந்தியா ஏற்கும்.
ஐ.நாவுக்கான இந்திய தூதர் – டி.எஸ்.திருமூர்த்தி
ஐ.நா பொதுச்செயலர் பதவிக்காக அன்டோனியோ குட்டெரெஸ் பெயரை ஐ.நா பாதுகாப்பு கவுன்சில் பரிந்துரைத்தது.
தற்போது ஐ.நா பொதுச் செயலராக இருக்கும் குட்டெரெஸ் 2வது முறையாக அந்த பதவிக்காக பரிந்துரைக்கப்பட்டுள்ளார்.
15 உறுப்பு நாடுகளை கொண்ட ஐ.நா பாதுகாப்பு கவுன்சிலின் கூட்டம் ஜீன் 8 ல் நடைபெற்றது. அதில் ஐ.நா. பொதுச் செயலர் பதவிக்காக குட்டெரெஸ் பெயரை பரிந்துரைக்கும் தீர்மானம் ஒரு மனதாக நிறைவேறியது அடுத்து இந்த தீர்மானம் ஐ.நா பொது சபையில் சமர்ப்பிக்கப்படும்.
ஐ.நா பொதுச் செயலர் நியமனமானது ஐ.நா பாதுகாப்பு கவுன்சில் பரிந்துரையின் பேரில் ஐ.நா பொதுச்சபையால் மேற்கொள்ளப்படுகிறது.
ஐ.நாவின் 9வது பொதுச் செயலராக இருக்கும் அன்டோனியோ குட்டெரெஸ் 2017 ஜனவரி 1 முதல் 5 ஆண்டுகளாக அப்பதவியில் இருந்து வருகிறார்.
அவரது பதவிக்காலம் டிசம்பர் 31ம் தேதியுடன் நிறைவடைகிறது.
இஸ்ரேலின் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின் 12 ஆண்டுகால ஆட்சியை முடிவுக்கு கொண்டு வந்து எதிர்க் கட்சிகள் புதிய அரசை அமைப்பதற்கு நாடாளுமன்ற அனுமதியைப் பெறுவதற்கான வாக்கெடுப்பு ஜீன் 14 ல் நடைபெற உள்ளது.
நெதன்யாகுவின் கூட்டாளியான நாடாளுமன்ற அவைத் தலைவர் யாரிவ் லெவின் இதற்கான அறிவிப்பை வெளியிட்டார்.
இஸ்ரேலில் 1996-99 வரை பிரதமராக பதவி வகித்த நெதன்யாகு 2009 ம் ஆண்டு முதல் தொடர்ந்து பிரதமராக பதவிவகித்துRead More…
ஐசிஐசிஐ வங்கி ‘ஸ்விஃப்ட் ஜிபிஐ இன்ஸ்டன்ட்’ வசதியை வழங்குவதில் ஆசியா-பசிபிக் பகுதியில் 1வது இடமும், உலகளவில் 2 வது இடமும் பிடித்துள்ளது.
‘ஸ்விஃப்ட் ஜிபிஐ இன்ஸ்டன்ட்’ மூலம் அனுப்பப்படும் 2 லட்சம் வரை தனிப்பட்ட முறையில் பணம் அனுப்படுவது உடனடியாக செயல்படுத்தப்பட்டு IMPS நெட்வொர்க் வழியாக இந்தியாவில் உள்ள எந்தவொரு வங்கியிலும் பயனாளி கணக்கில் வரவு வைக்கப்படுகிறது.
24 x 7 எல்லா நேரங்களிலும் 365 நாட்கள் இந்த சேவை கிடைக்கும்.
இந்தியாவுக்கு உடனடி பணம் அனுப்ப குடியிருப்பாளர்கள் தங்கள் வங்கியை வெளிநாடுகளுக்கு சென்று ‘ஸ்விஃப்ட் ஜிபி இன்ஸ்டண்ட்’ மூலம் பணம் அனுப்பும் பரிவர்த்தனையை தொடங்கலாம். இதனால் இந்தியாவிலுள்ள ஐசிஐசிஐ வங்கியால் பயனாளிக்கு உடனடியாக பணம் அனுப்பப்படும்.
ICICI வங்கி MD & CEO சந்தீப் பக்ஷி
ராணுவ கட்டமைப்புகளைக் கண்காணிப்பதற்கு வழிவகுக்கும் சர்வதேச ஒப்பந்தத்தில் இருந்து ரஷியா விலகியுள்ளது.
அமெரிக்காவுக்கும் ரஷியாவுக்கும் இடையேயான பனிப்போர் முடிவுக்கு வந்ததையடுத்து குறிப்பிட்ட நாடுகளில் மேற்கொள்ளப்பட்டுள்ள ராணுவ கட்டமைப்புகளை மற்ற நாடுகளின் விமானங்கள் கண்காணிக்கும் வகையில் சர்வதேச ஒப்பந்தம் கையெழுத்தானது.
அமெரிக்கா, ரஷியா, ஐரோப்பிய நாடுகள் உள்ளிட்ட 35 க்கும் மேற்பட்ட நாடுகள் அந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன. கடந்த 2002 ம் ஆண்டில் இந்த ஒப்பந்தம் அமலுக்கு வந்தது.
இதுவரை 1500 க்கும் மேற்பட்ட விமானங்கள் சம்பந்தப்பட்ட நாடுகளில் உள்ள ராணுவக் கட்டமைப்புகளைக் கண்காணித்துள்ளன.
ரஷியாவின் ஸ்புட்னிக்-வி கரோனா தடுப்பூசியை பயன்படுத்தும் ஐரோப்பிய யூனியனை சேர்ந்த 2வது நாடாக ஸ்லோவாகியா உள்ளது.
முன்னதாக ஸ்புட்னிக்-வி தடுப்பூசியை ஐரோப்பிய யூனியனின் மற்றொரு நாடான ஹங்கேரி முதல்முறையாக பயன்படுத்தியது.
ஐரோப்பிய யூனியனின் மருத்துவக்குழு ஸ்புட்னிக்-வி இதுவரை முறைப்படி அனுமதி வழங்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
ரஷியாவிடம் இருந்து 20 லட்சம் ஸ்புட்னிக்-வி தடுப்பூசிகளை இறக்குமதி செய்ய ஸ்லோவாகியா ரகசிய ஒப்பந்தம் மேற்கொண்டது.
இதுவரை 5000 பேர் மட்டுமே இருமுறை ஸ்புட்னிக்-வி தடுப்பூசியை செலுத்தி கொண்டுள்ளனர்.
ஸ்லோவாகியாவில் மக்கள்தொகை சுமார் 54 லட்சம் என்பது குறிப்பிடத்தக்கது.
அந்நாட்டில் ஃபைசர், மாடர்னா, அஸ்ட்ராஸெனகா ஆகிய தடுப்பூசிகள் பயன்பாட்டில் உள்ளன. இவை ஐரோப்பிய யூனியன் மருத்துவக் குழுவால் அங்கீகரிக்கப்பட்டRead More…