Daily Current Affairs 10 June 2021
Daily Current Affairs in Tamil
ஜூன் 10
தமிழ் செய்திகள்
உலக செய்திகள்
- ஐசிஐசிஐ வங்கி ‘ஸ்விஃப்ட் ஜிபிஐ இன்ஸ்டன்ட்’ வசதியை வழங்குவதில் ஆசியா-பசிபிக் பகுதியில் 1வது இடமும், உலகளவில் 2 வது இடமும் பிடித்துள்ளது.
- ‘ஸ்விஃப்ட் ஜிபிஐ இன்ஸ்டன்ட்’ மூலம் அனுப்பப்படும் 2 லட்சம் வரை தனிப்பட்ட முறையில் பணம் அனுப்படுவது உடனடியாக செயல்படுத்தப்பட்டு IMPS நெட்வொர்க் வழியாக இந்தியாவில் உள்ள எந்தவொரு வங்கியிலும் பயனாளி கணக்கில் வரவு வைக்கப்படுகிறது.
- 24 x 7 எல்லா நேரங்களிலும் 365 நாட்கள் இந்த சேவை கிடைக்கும்.
- இந்தியாவுக்கு உடனடி பணம் அனுப்ப குடியிருப்பாளர்கள் தங்கள் வங்கியை வெளிநாடுகளுக்கு சென்று ‘ஸ்விஃப்ட் ஜிபி இன்ஸ்டண்ட்’ மூலம் பணம் அனுப்பும் பரிவர்த்தனையை தொடங்கலாம். இதனால் இந்தியாவிலுள்ள ஐசிஐசிஐ வங்கியால் பயனாளிக்கு உடனடியாக பணம் அனுப்பப்படும்.
- ICICI வங்கி MD & CEO சந்தீப் பக்ஷி
- ராணுவ கட்டமைப்புகளைக் கண்காணிப்பதற்கு வழிவகுக்கும் சர்வதேச ஒப்பந்தத்தில் இருந்து ரஷியா விலகியுள்ளது.
- அமெரிக்காவுக்கும் ரஷியாவுக்கும் இடையேயான பனிப்போர் முடிவுக்கு வந்ததையடுத்து குறிப்பிட்ட நாடுகளில் மேற்கொள்ளப்பட்டுள்ள ராணுவ கட்டமைப்புகளை மற்ற நாடுகளின் விமானங்கள் கண்காணிக்கும் வகையில் சர்வதேச ஒப்பந்தம் கையெழுத்தானது.
- அமெரிக்கா, ரஷியா, ஐரோப்பிய நாடுகள் உள்ளிட்ட 35 க்கும் மேற்பட்ட நாடுகள் அந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன. கடந்த 2002 ம் ஆண்டில் இந்த ஒப்பந்தம் அமலுக்கு வந்தது.
- இதுவரை 1500 க்கும் மேற்பட்ட விமானங்கள் சம்பந்தப்பட்ட நாடுகளில் உள்ள ராணுவக் கட்டமைப்புகளைக் கண்காணித்துள்ளன.
- ரஷியாவின் ஸ்புட்னிக்-வி கரோனா தடுப்பூசியை பயன்படுத்தும் ஐரோப்பிய யூனியனை சேர்ந்த 2வது நாடாக ஸ்லோவாகியா உள்ளது.
- முன்னதாக ஸ்புட்னிக்-வி தடுப்பூசியை ஐரோப்பிய யூனியனின் மற்றொரு நாடான ஹங்கேரி முதல்முறையாக பயன்படுத்தியது.
ஐரோப்பிய யூனியனின் மருத்துவக்குழு ஸ்புட்னிக்-வி இதுவரை முறைப்படி அனுமதி வழங்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. - ரஷியாவிடம் இருந்து 20 லட்சம் ஸ்புட்னிக்-வி தடுப்பூசிகளை இறக்குமதி செய்ய ஸ்லோவாகியா ரகசிய ஒப்பந்தம் மேற்கொண்டது.
- இதுவரை 5000 பேர் மட்டுமே இருமுறை ஸ்புட்னிக்-வி தடுப்பூசியை செலுத்தி கொண்டுள்ளனர்.
ஸ்லோவாகியாவில் மக்கள்தொகை சுமார் 54 லட்சம் என்பது குறிப்பிடத்தக்கது. - அந்நாட்டில் ஃபைசர், மாடர்னா, அஸ்ட்ராஸெனகா ஆகிய தடுப்பூசிகள் பயன்பாட்டில் உள்ளன. இவை ஐரோப்பிய யூனியன் மருத்துவக் குழுவால் அங்கீகரிக்கப்பட்டRead More…
- முன்னதாக ஸ்புட்னிக்-வி தடுப்பூசியை ஐரோப்பிய யூனியனின் மற்றொரு நாடான ஹங்கேரி முதல்முறையாக பயன்படுத்தியது.