Daily Current Affairs 11 June 2021
Daily Current Affairs in Tamil
ஜூன் 11
தமிழ் செய்திகள்
உலக செய்திகள்
- ஐ.நா சமூக பொருளாதார கவுன்சிலின் உறுப்பினராக 3 ஆண்டுகளுக்கு இந்தியா தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.
- ஐ.நாவின் 6 முக்கிய அமைப்புகளில் சமூக-பொருளாதார கவுன்சிலும் ஒன்றாக உள்ளது.
- சமூகம், பொருளாதாரம், சுற்றுச்சூழல் ஆகிய விவகாரங்களில் நீடித்த வளர்ச்சியை ஏற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை அந்த கவுன்சில் மேற்கொண்டு வருகிறது.
- சர்வதேச அளவில் ஒப்புக் கொள்ளப்பட்ட இலக்குகளை அடைவதற்கான நடவடிக்கைகளையும் கவுன்சில் மேற்கொண்டு வருகிறது.
- சமூக பொருளாதார கவுன்சிலில் 54 நாடுகள் உறுப்பினர்களாக இடம் பெற முடியும்.
- ஆசிய கண்டத்திலிருந்து 11 நாடுகளும், ஆப்ரிக்க கண்டத்திலிருந்து 14 நாடுகளும், கிழக்கு ஐரோப்பிய பகுதிகளிலிருந்து 6 நாடுகளும் தென் அமெரிக்க கண்டத்திலிருந்து 10 நாடுகளும், மற்ற பகுதிகளில் இருந்து 13 நாடுகளும் கவுன்சிலின் உறுப்பினர்களாக தேர்ந்தெடுக்கப்படும்.
- ஐ.நா சமூக – பொருளாதார கவுன்சிலுக்கான தேர்தல் நடைபெற்றது. அதில் ஆசியகண்டத்தில் இருந்து இந்தியா, ஆப்கானிஸ்தான், ஓமன், கஜகஸ்தான் ஆகிய நாடுகள் தேர்ந்தெடுக்கப்பட்டன.
- ஐ.நா பாதுகாப்பு கவுன்சிலின் நிரந்தரமற்ற உறுப்பு நாடாக இந்தியா ஏற்கனவே செயல்பட்டு வருகிறது. அதன் தலைமை பொறுப்பை ஆகஸ்ட் மாதம் இந்தியா ஏற்கும்.
- ஐ.நாவுக்கான இந்திய தூதர் – டி.எஸ்.திருமூர்த்தி
- ஐ.நா பொதுச்செயலர் பதவிக்காக அன்டோனியோ குட்டெரெஸ் பெயரை ஐ.நா பாதுகாப்பு கவுன்சில் பரிந்துரைத்தது.
- தற்போது ஐ.நா பொதுச் செயலராக இருக்கும் குட்டெரெஸ் 2வது முறையாக அந்த பதவிக்காக பரிந்துரைக்கப்பட்டுள்ளார்.
- 15 உறுப்பு நாடுகளை கொண்ட ஐ.நா பாதுகாப்பு கவுன்சிலின் கூட்டம் ஜீன் 8 ல் நடைபெற்றது. அதில் ஐ.நா. பொதுச் செயலர் பதவிக்காக குட்டெரெஸ் பெயரை பரிந்துரைக்கும் தீர்மானம் ஒரு மனதாக நிறைவேறியது அடுத்து இந்த தீர்மானம் ஐ.நா பொது சபையில் சமர்ப்பிக்கப்படும்.
- ஐ.நா பொதுச் செயலர் நியமனமானது ஐ.நா பாதுகாப்பு கவுன்சில் பரிந்துரையின் பேரில் ஐ.நா பொதுச்சபையால் மேற்கொள்ளப்படுகிறது.
- ஐ.நாவின் 9வது பொதுச் செயலராக இருக்கும் அன்டோனியோ குட்டெரெஸ் 2017 ஜனவரி 1 முதல் 5 ஆண்டுகளாக அப்பதவியில் இருந்து வருகிறார்.
- அவரது பதவிக்காலம் டிசம்பர் 31ம் தேதியுடன் நிறைவடைகிறது.
- இஸ்ரேலின் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின் 12 ஆண்டுகால ஆட்சியை முடிவுக்கு கொண்டு வந்து எதிர்க் கட்சிகள் புதிய அரசை அமைப்பதற்கு நாடாளுமன்ற அனுமதியைப் பெறுவதற்கான வாக்கெடுப்பு ஜீன் 14 ல் நடைபெற உள்ளது.
- நெதன்யாகுவின் கூட்டாளியான நாடாளுமன்ற அவைத் தலைவர் யாரிவ் லெவின் இதற்கான அறிவிப்பை வெளியிட்டார்.
- இஸ்ரேலில் 1996-99 வரை பிரதமராக பதவி வகித்த நெதன்யாகு 2009 ம் ஆண்டு முதல் தொடர்ந்து பிரதமராக பதவிவகித்துRead More…