Daily Current Affairs 13 June 2021

  • 0

Daily Current Affairs 13 June 2021

Daily Current Affairs in Tamil

ஜூன் 13

தமிழ் செய்திகள்

உலக செய்திகள்

  • ஜி7 உச்சி மாநாட்டில் ஜீன் 12, 13 ல் பிரதமர் நரேந்திர மோடி காணொலி முறையில் பங்கேற்கிறார்.
    • பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சனின் அழைப்பை ஏற்று இந்த நிகழ்ச்சியில் மோடி கலந்து கொள்கிறார்.
    • ஜி7 நாடுகள் அமைப்புக்கு தற்போது பிரிட்டன் தலைமையேற்றுள்ளது.
    • இந்தியா, ஆஸ்திரேலியா, தென்கொரியா மற்றும் தென்னாப்ரிக்கா ஆகிய நாடுகளை விருந்தினர்களாக ஜி7 உச்சி மாநாட்டுக்கு பிரிட்டன் பிரதமர் அழைத்துள்ளார்.
    • நேரடி மற்றும் காணொலி முறைகளில் மாநாடு நடைபெறும்.
    • ‘சிறப்பான முறையில் மீண்டும் கட்டமைப்போம்’ என்பது இந்த உச்சி மாநாட்டின் மையப்பொருளாகும்.
      .

  • கழிவுநீரில் கரோனா தீநுண்மி இருப்பதைக் கண்டறியும் குறைந்த விலையிலான சென்ஸார் தொழில்நுட்பத்தை பிரிட்டன் – இந்திய விஞ்ஞானிகள் கூட்டாக உருவாக்கியுள்ளனர்.
    • இதனைப் பயன்படுத்த ஆய்வக வசதிகளோ, விலை உயர்ந்த ரசாயானமோ இதற்கு தேவைப்படாது.
      எளிதாக கையில் எடுத்துச் செல்லக் கூடிய வகையிலான இந்த தொழில் நுட்பம், குறைந்த வருவாய் மற்றும் நடுத்தர வருவாய் நாடுகளுக்கு நோய் தொற்று பரவலைக் கண்டறிய இந்த தொழில்நுட்பம் உதவும்.
    • பிரிட்டனைச் சேர்ந்த ஸ்டிராத்கிளைட் பல்கலைக்கழகம் மற்றும் மும்பை ஐஐடி ஆராய்ச்சியாளர்கள் இணைந்து உருவாக்கிய இந்த சென்ஸார் தொழில்நுட்பம் தொடர்பான ஆய்வுக் கட்டுரை சென்ஸார்ஸ் அண்ட் ஆக்சுலேட்டர்ஸ் பி கெமிக்கல்” ஆய்விதழில் வெளியிடப்பட்டுள்ளது.
    • இந்த ஆய்வுக்காக மும்பையிலுள்ள கழிவுநீர் சுத்திகரிப்பு ஆலையிலிருந்து கழிவுநீர் சேகரிக்கப்பட்டு அதனுடன் சார்ஸ் சி ஓவி-2 ரிபோநியூக்ளிக் அமிலத்தை கலந்து இந்த சென்ஸார் தொழில்நுட்பத்தை பரிசோதித்துள்ளனர்.

  • தனது சொந்த விண்வெளி நிலையத்துக்கு வீரர்களை அனுப்ப சீனா தயாராகி வருகிறது. வீரர்கள் அனுப்பபடவுள்ள ராக்கெட் ஏவுதளத்துக்கு கொண்டு செல்லப்ட்டது.
    • சீன விண்வெளி நிலையத்துக்கு 3 விண்வெளி வீரர்கள் அனுப்பப்படவுள்ளனர்.
    • இவர்கள் விண்வெளி நிலையத்தில் 3 மாதங்கள் தங்கியிருந்து கட்டமைப்பு, பராமரிப்புப்பணி மற்றும் அறிவியல் பரிசோதனைகளில் ஈடுபடுவார்கள்.
    • சீனா தனக்கு என சொந்தமாக தியான்ஹே விண்வெளி நிலையத்தை அமைத்து வருகிறது.
    • இந்நிலையில் 3 விண்வெளி வீரர்கள் செல்லவுள்ள சென்ஷோ-12 விண்கலத்தை ஏற்றிக்கொண்டு செல்லும் லாங் மார்ச்-2 எஃப் ஒய்12 ராக்கெட் வடமேற்கு சீனாவில் உள்ள ஏவுதளத்துக்கு கொண்டு செல்லப்பட்டதாக சீன விண்வெளி பொறியியல் அலுவலகம் தெரிவித்துள்ளது.
    • அந்த ராக்கெட் ஜீன்-16ம் தேதி ஏவRead More…

 

All Month Current Affairs PDF  Here


Leave a Reply

Get More Info