Daily Current Affairs 18 June 2021

  • 0

Daily Current Affairs 18 June 2021

Daily Current Affairs in Tamil

ஜூன் 18

தமிழ் செய்திகள்

உலக செய்திகள்

  • ‘விவாடெக்’ அமைப்பின் 5வது தொழில்நுட்ப மாநாட்டில் பிரதமர் மோடி உரையாற்றுகிறார்.
    • ஐரோப்பிய நாடுகளின் மிகப்பெரிய டிஜிட்டல், புதுமை கண்டுபிடிப்புகளுக்கான அறிவியல் தொழில்நுட்ப மாநாடு விவாடெக் என்ற பெயரில் பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் 2016 ம் ஆண்டில் இருந்து நடத்தப்பட்டு வருகிறது.
    • 5வது மாநாடு ஜீன் 16ம் தேதி முதல் 19ம் தேதி வரை நடைபெறவுள்ளது.
      இம்மாநாட்டில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு உரையாற்றுமாறு பிரதமர் மோடிக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
    • அதன்படி ஜீன் 16ல் பிரதமர் மோடி மாநாட்டில் சிறப்புரையாற்றுகிறார்.
    • ஆப்பிள் நிறுவனத் தலைமை நிர்வாக அதிகாரி டிம் குக், ஃபேஸ்புக் நிறுவன தலைவர் மார்க் ஸக்கர்பர்க், மைக்ரோ சாஃப்ட் தலைவர் பிராட்ஸ்மித் உள்ளிட்ட தொழில்துறை தலைவர்களும் மாநாட்டில் பங்கேற்க உள்ளனர்.

  • இந்தியா, சீனா, பாகிஸ்தான் ஆகிய நாடுகள் அணு ஆயுதங்களை தொடர்ந்து அதிகரித்து வருவது ஆய்வில் தெரியவந்துள்ளது.
    • எல்லை விவகாரங்களில் பாகிஸ்தான், சீனா ஆகிய நாடுகளுடன் இந்தியா பிரச்சனைகளை எதிர்கொண்டு வருகிறது.
    • இந்நிலையில் ஸ்டாக்ஹோம் சர்வதேச அமைதி ஆராய்ச்சி மையம் சார்பில் அணு ஆயுதங்கள் தொடர்பான ஆய்வு நடத்தப்பட்டது.
    • அதில் உலகம் முழுவதிலும் சுமார் 13,080 அணு ஆயுதங்கள் உள்ளதாக கணக்கிடப்பட்டுள்ளது.
      அவற்றில் 90% ஆயுதங்கள் அமெரிக்கா, ரஷ்யா ஆகிய இரு நாடுகளில் மட்டுமே உள்ளதாக ஆய்வில் தெரிய வந்துள்ளது.
    • சர்வதேச அளவில் அமெரிக்கா, ரஷியா, பிரிட்டன், வடகொரியா, இந்தியா, சீனா, பாகிஸ்தான், பிரான்ஸ், இஸ்ரேல் ஆகிய நாடுகளிடம் மட்டுமே அணு ஆயுதங்கள் உள்ளன.
    • அணு ஆயுதங்களைக் கொண்ட ஏவகனைகளை தயாரிப்பதற்காக அதிசெறிவூட்டப்பட்ட யுரேனியம் புளுட்டோனியம் ஆகிய கதிரியக்கப் பொருள்களை நாடுகள் பயன்படுத்தி வருகின்றன.
      இந்தியா, இஸ்ரேல் ஆகியவை புளுட்டோனியத்தைக் கொண்டு அணு ஆயுதங்களை தயாரித்து வருகின்றன.
    • பாகிஸ்தான் யுரேனியத்தை கொண்டு ஆயுதங்கள் தயாரிக்கிறது.

தேசிய செய்திகள்

  • டாக்டர் ஹர்ஷவர்தன் உலகளாவிய யோகா மாநாடு 2021 ல் உரையாற்றுகிறார்.
    உலகளாவிய யோகா மாநாடு 2021ன் தொடக்க விழாவில் மத்திய சுகாதார மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் டாக்டர் ஷர்ஷ்வர்தன் உரையாற்றினார்.

    • இந்நிகழ்ச்சியை “மோக்சயதன் யோக்சன்ஸ்தான்” மற்றும் ஆயுஷ் அமைச்சகம் இந்திய அரசு மற்றும் இந்திய கலச்சார உறவுகள் கவுன்சில் ஆகியவை இணைந்து ஏற்பாடு செய்தன.
    • ஜீன் 21, 2021 7வது சர்வதேச யோக நாள்Read More…

 

All Month Current Affairs PDF  Here


Leave a Reply