இது வரை இல்லாத வகையில் 2020ம் ஆண்டில் ஜப்பான் நாட்டில் குழந்தைகளின் பிறப்பு விகிதம் கடுமையாக குறைந்துள்ளது.
ஜப்பான் ஏற்கனவே மக்கள் தொகை வளர்ச்சியில் பல சிக்கல்களை எதிர்கொண்டு வரும் நிலையில், தற்போது குழந்தை பிறப்பு விகிதம் கடுமையாக சரிவடைந்திருப்பது, நாட்டில் வயதானவர்களின் விகிதம் அதிகரிப்பதும், வேலை செய்யும் மனித வளம் குறைவதும் அடுத்து வரும் ஆண்டுகளில் ஜப்பான் சந்திக்க வேண்டியிருக்கும்.
2020 ம் ஆண்டில் 8,40,832 குழந்தைகள் மட்டுமே பிறந்துள்ளன.
இது முந்தைய ஆண்டை காட்டிலும் 2.8மூ குறைவாகும்.
இது 1899 க்கு பின் பதிவாகும் மிக குறைவான வாக்கு பதிவாகும்.
தொடர்ச்சியாக 3வது ஆண்டாக உலகளாவிய நிதி கவர்ச்சி தரவரிசையில் பஹ்ரைன் முதலிடத்தில் உள்ளது.
உலகளவில் அங்கீகரிக்கப்பட்ட AIRINC Global 150 நகரங்களின் குறியீட்டுநிதி கவர்ச்சி தர வரிசையில் 3வது ஆண்டாக பஹ்ரைன் முதலிடத்தைப் பிடித்தது.
புதுதில்லி மற்றும் மும்பையின் இந்திய நகரங்கள் மட்டுமே குறியீட்டில் பட்டியலிடப்பட்டுள்ளன.
மெனா (மத்திய கிழக்கு வட ஆப்ரிக்கா) பிராந்தியத்தை சேர்ந்த 7 நகரங்கள் முதல் 16 இடங்களில் இருந்தன.
ஹைட்ரோகார்பன்களிலிருந்து விலகி பொருளாதார பல்வகைப்படுத்துதல் மூலோபாயத்தை உருவாக்கிய பிராந்தியத்தில் முதன்முதலில் பஹ்ரைன் அரசு ஒன்றாகும்.
டென்மார்க் பாராளுமன்றம் ஒரு செயற்கை தீவுக்கான திட்டங்களுக்கு ஒப்புதல் அளித்துள்ளது.
கோபன்ஹேகன் துறைமுகத்தை கடல் மட்டத்திலிருந்து உயர்த்துவதற்காக ஒரு செயற்கைத் தீவை கட்டும் திட்டத்திற்கு டென்மார்க்கின் பாராளுமன்றம் ஒப்புதல் அளித்துள்ளது.
டென்மார்க் தீவுக்கு லினெட்டெஹோம் என்று பெயரிட்டது.
இங்கு சுமார் 35000 பேருக்கு தங்குமிடம் உள்ளது.
ரிங்சாலைகள், சுரங்கப்பாதைகள் மற்றும் மெட்ரோ பாதைகள் மூலம் பரந்த தீவை டென்மார்க்கின் பிரதான நிலப்பகுதியுடன் இணைக்க அரசாங்கம்Read More…
கரோனா தொற்று காலத்தில் தேசிய உதவி எண்கள் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த தனியார் டிவி சேனல்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளது.
மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகத்தின் உதவி எண் – 1075
பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகத்தின் உதவி எண் – 1098
சமூக நீதித்துறையின் மூத்த குடிமக்களுக்கான உதவி எண் – 14567
நிம்ஹன்ஸ் அமைப்பின் உளவியல் ஆதரவு உதவி எண் – 08046110007
ஆயுஷ் கோவிட் -19 கவுன்சிலிங் உதவி எண் – 14443
மைகவ் வாட்ஸ்அப் எண் – 9013151515
மத்திய அரசின் இந்த உதவி எண்கள் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தும் படி தனியார் பொழுதுபோக்கு டிவி சேனல்களுக்கு மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத் துறை அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது.
பிஹாரில் பொறியியல், மருத்துவ கல்வியில் பெண்களுக்கு 33.3 சதவீத இட ஒதுக்கீடு வழங்க அந்த மாநில அரசு திட்டமிட்டுள்ளது.
பீகாரில் 38 அரசு பொறியியல் கல்லூரிகளும், 17 தனியார் பொறியியல் கல்லூரிகளும் செயல்படுகின்றன.
18 மருத்துவ கல்லூரிகள் செயல்படுகின்றன.
கரோனா தொற்று பரவல் காரணமாக சிபிஎஸ்இ பிளஸ்2 பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டதைத் தொடர்ந்து மாணவர்களுக்கு மதிப்பெண்களை மதிப்பீடு செய்ய குழு அமைக்கப்பட்டுள்ளது.
சிபிஎஸ்இ பிளஸ் 2 பொதுத்தேர்வை ரத்து செய்து பிரதமர் மோடி அறிவிப்பு வெளியிட்டார்.
மாணவர்களுக்கு மதிப்பெண் மதிப்பீடு செய்வது தொடர்பாக மத்திய கல்வி அமைச்சகத்தின் இணைச் செயலாளர் விபின் குமார் தலைமையில் 12 பேர் அடங்கிய குழு அமைக்கப்பட்டுள்ளது.
இந்தக்குழு மாணவர்களுக்கு மதிப்பெண் வழங்குவது தொடர்பாக 10 நாள்களுக்கும் அறிக்கை வழங்கும் என சிபிஎஸ்இRead More…
கோவிஷீல்ட் கரோனா தடுப்பூசி தயாரிக்கும் சீரம் இன்ஸ்டிடியூட் நிறுவனம் ரஷியாவின் ஸ்புட்னிக்-வி தடுப்பூசியை உற்பத்தி செய்ய விருப்பம் தெரிவித்துள்ளது.
சோதனை ஓட்டமாக ஸ்புட்னிக் தயாரிக்க மத்திய மருந்து கட்டுப்பாட்டு வாரியத்திடம் சீரம் நிறுவனம் அனுமதி கோரியுள்ளது.
தற்போது டாக்டர் ரெட்டி நிறுவனம் ரஷிய நேரடி முதலீட்டு நிறுவனத்துடன் இணைந்து ஸ்புட்னிக்வி தடுப்பூசியை தயாரித்து வருகிறது.
இதுவரை 250 மில்லியன் டோஸ் தடுப்பூசிகளை உற்பத்தி செய்துள்ளது.
வெள்ளி கிரகத்தை ஆய்வு செய்ய 2 முக்கிய திட்டங்களை மேற்கொள்ளவுள்ளதாக அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசா அறிவித்துள்ளது.
பூமிக்கு மிக அருகில் இருக்கும் கோள்களில் ஒன்றான வெள்ளி கிரகத்தின் தட்பவெப்பம் மற்றும் புவியியல் தன்மையை ஆய்வு செய்ய நாசா திட்டமிட்டுள்ளது.
நாசாவின் கண்டுபிடிப்பு திட்டத்தின் கீழ் வரும் 2028 முதல் 2030-ம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில் சுமார் 500 மில்லியன் டாலர் (சுமார் ரூ.3650 கோடி) செலவில் இந்த இரு திட்டங்களையும் மேற்கொள்ள நாசா முடிவு செய்துள்ளது.
இந்த திட்டங்களுக்கு டாவின்சி, வெரிட்டாஸ் என்று பெயரிடப்பட்டுள்ளது.
இந்த திட்டத்தின் மூலம் வெள்ளி கிரகம் எப்படி தோன்றியது? அங்கு கடல் இருந்ததா? கிரகத்தின்
புவியியல் வரலாறு குறித்தெல்லாம் டாவின்சி திட்டத்தில் ஆய்வு மேற்கொள்ளப்படும்.
வெள்ளி கிரகத்தின் புவியியல் வளர்ச்சியையும், பூமிக்கும் அதற்குமான வேறுபாடுகளையும் வெரிட்டாஸ் திட்டம் ஆராய உள்ளது.
ஜீன் 13ல் அமெரிக்க அதிபர் ஜோ பைடனை பிரிட்டன் ராணி இரண்டாம் எலிசபெத் சந்திக்கிறார்.
ஜி7 உச்சி மாநாடு பிரிட்டனில் ஜீன் 11 முதல் 13 வரை நடைபெறுகிறது.
இம்மாநாட்டில் அமெரிக்க அதிபர் ஜோபைடன், ஆஸ்திரேலியா பிரதமர் ஸ்காட் மோரிசன், ஜெர்மன் அதிபர் ஏஞ்சலா மெர்கல் உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்கின்றனர்.
இந்நிலையை ஜி7 மாநாட்டில் பங்கேற்க பிரிட்டன் செல்லும் அமெரிக்க அதிபர் ஜோபைடனை ஜீன் 13ம் தேதி பிரிட்டன் ராணி இரண்டாம் எலிசபெத் சந்திக்க உள்ளார்.
இதனை பக்கிங்ஹாம் அரண்மனை உறுதிப்படுத்தியுள்ளது.
அமெரிக்க அதிபராக பதவியேற்றபின் ஜோபைடன் மேற்கொள்ளும் முதல் வெளிநாட்டு பயணம் இது என்பRead More…
இஸ்ரேலின் புதிய அதிபராக மூத்த அரசியல்வாதி ஐசக் ஹெர்ஸாக் தேர்வு செய்யப்பட்டார்.
இஸ்ரேலின் 10வது அதிபராக கடந்த 2014ம் ஆண்டு முதல் பொறுப்பு வகித்து வரும் ரூவன் ரிவ்லினின் பதவிக்காலம் ஜீலை 9ம் தேதியுடன் நிறைவடைகிறது.
120 உறுப்பினர்களை கொண்ட நாடாளுமன்றத்தில் அவருக்கு ஆதரவாக 87 எம்.பிக்கள் வாக்களித்தனர்.
11 வது அதிபராக ஐசக் ஹெர்ஸாக் தேர்வு செய்யப்பட்டார்.
ஐசக் ஹெர்ஸாக் முன்னாள் அதிபர் சாயிம் ஹெர்ஸாக்கின் மகன் என்பது குறிப்பிடத்தக்கது.
1983 முதல் 1993 வரை சாயிம் இஸ்ரேலின் அதிபராக பொறுப்பு வகித்துள்ளார்.
புதிய அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ஐசக் ஹெர்ஸாக் தொழிலாளர் அமைப்பின் தலைவராக இருந்துள்ளார்.
2005 ஆம் ஆண்டு முதல் 2011 ம் ஆண்டு வரை வீட்டு வசதி, சுற்றுலா, சமூகநலம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் இவர் அமைச்சராக பொறுப்பு வகித்துள்ளார்.
.
ஜப்பானுடன் நகர்ப்புற மேம்பாட்டுத்துறையில் ஒத்துழைப்புடன் செயல்பட புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ள மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
இந்திய அரசின் வீட்டு வசதி மற்றும் நகர்புற மேம்பாட்டு அமைச்சகத்துக்கும் ஜப்பானின் நிலம், உள்கட்டமைப்பு, போக்குவரத்து, சுற்றுலா அமைச்சகத்துக்கும் இடையே விரைவில் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகும்.
இந்த ஒப்பந்தத்தின் அடிப்படையில் இரு நாடுகளும் இணைந்து செயல்படுவதற்கு கூட்டு பணிக்குழு அமைக்கப்படும்.
ஒப்பந்தம் கையெழுத்தான நாளிலிருந்து 5 ஆண்டுகளுக்கு நடைமுறையில் இருக்கும்.
உலக நம்பர் டூ வீராங்கனை நவோமி ஒசாகா பிரெஞ்சு ஓபனிலிருந்து விலகினார்.
ஜப்பானிய டென்னிஸ் வீரர் நவோமி ஒசாகா மே 31, 2021 அன்று பிரெஞ்சு ஓபன் போட்டியிலிருந்து தன்னை விலக்க முடிவுRead More…
டென்மார்க்கின் முன்னாள் பிரதமர் பவுல் ஸ்க்லூட்டர் காலமானார்.
1929, ஏப்ரல் 3 ம் தேதி டென்மார்க்கின் டோண்டரில் பிறந்தார். இரண்டாம் உலகப் போருக்கு பின் 1982 முதல் 1993 வரை நீண்ட கால டேனிஷ் பிரதமராக பவுல் ஸ்க்லூட்டர் இருந்தார்.
1994 முதல் 1999 வரை ஐரோப்பிய நாடாளுமன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்டார்.
‘ஹெச் 10 என் 3’ எனப்படும் பறவைக் காய்ச்சல் நோய்த் தொற்று சீனாவில் ஒருவரிடம் கண்டறியப்பட்டுள்ளது.
இந்த வகை தீ நுண்மியால் மனிதர் ஒருவர் பாதிக்கப்பட்டிருப்பது இதுவே முதல் முறையாகும்.
பறவைக் காய்ச்சலை ஏற்படுத்தும் ‘ஹெச்10 என்3’ வகை தீ நுண்மி, சீனாவின் ஜியாங்சு மாகாணம், ஜென்ஜியாங் நகரில் ஒருவருக்கு தொற்றிருப்பது முதல் முறையாக கண்டறியப்பட்டுள்ளது.
தேசிய செய்திகள்
உலகின் முதல் நானோ யூரியா திரவம் அறிமுகப்படுத்தப்பட்டது.
உலகம் முழுவதும் விவசாயிகளுக்கு மே 31, 2021 அன்று இந்திய விவசாயிகள் உர கூட்டுறவு லிமிடெட் (இப்கோ) அறிமுகப்படுத்தப்பட்டது.
நானோ யூரியா திரவமானது அதன் விஞ்ஞானிகள் மற்றும் பொறியியலாளர்கள் பல ஆண்டுகளாக மேற்கொண்ட ஆராய்ச்சிக்குப் பிறகு ஒரு தனியுரிம தொழில்நுட்பத்தின் மூலம் உள்நாட்டில் உருவாக்கப்பட்டுள்ளது.
இது கலோனின் நானோ பயோடெக்னாலஜி ஆராய்ச்சி மையத்தில் ‘ஆத்மநிர்பார் பாரத்’ மற்றும் ‘ஆத்மனிர்பர் கிருஷி’ ஆகியவற்றுடன் உருவாக்கப்பட்டது.
பயிர்களின் ஊட்டச் சத்துக்களின் செயல்திறனை மேம்படுத்த நானோ தொழில்நுட்பத்திலிருந்து உற்பத்தி செய்யப்படும் யூரியாவை நானோ யூரியா என்று அழைக்கப்படுகிறது.
நானோ யூரியா திரவம் வழக்கமான யூரியாவை மாற்றும். மேலும் அதன் தேவையை 50 சதவிகிதம்Read More…
இந்தியாவில் முதன் முதலில் கண்டறியப்பட்ட உருமாறிய பி.1.617.1 வகை வைரஸீக்கு ‘கப்பா’ என்றும், 2 வதாக கண்டறியப்பட்ட பி.1.617.2 வைரஸீக்கு ‘டெல்டா’ என்றும் உலக சுகாதார அமைப்பு பெயரிட்டுள்ளது.
பிரிட்டனில் முதன் முதலில் கண்டறியப்பட்ட உருமாறிய கரோனா வைரஸ் பி.1.17 வைரஸை ‘ஆல்ஃபா’ என்றும்
தென்னாப்ரிக்காவில் கண்டறியப்பட்ட பி.1.351 வைரஸீக்கு ‘பீட்டா’ என்றும்
பிரேசில் கண்டறியப்பட்ட வைரஸீக்கு ‘காமா’ என்றும் பெயரிடப்பட்டுள்ளது.
இந்தியாவில் கண்டறியப்பட்ட இரு வைரஸ்களுக்கு ‘கப்பா’ என்றும் ‘டெல்டா’ என்றும் பெயரிடப்பட்டுள்ளது. இந்த புதிய பெயர்கள் எளிதாக அடையாளபடுத்தி காட்டும் என்றாலும், இதன் அறிவியல் ரீதியிலான பெயர்கள் மாறாது என உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.
சீனாவில் மக்கள் தொகை குறைந்து வருவதை கருத்தில் கொண்டு ஒரு குடும்பத்தில் 3 குழந்தைகளைப் பெற்றுக் கொள்ள சீன அரசு அனுமதி அளித்துள்ளது.
சீனாவில் சமீபத்தில் எடுக்கப்பட்ட மக்கள் தொகை கணக்கெடுப்பில் கடந்த 70 ஆண்டுகளில் இல்லாத அளவாக மக்கள் தொகை பெருக்க விகிதம் வீழ்ச்சி அடைந்துள்ளது.
உதாரணமாக 2016 ம் ஆண்டு 1.8 கோடியாக இருந்த குழந்தைகளின் பிறப்பு எண்ணிக்கை 2018 ல் 1.2 கோடியாக குறைந்துள்ளது.
இதனால் ஒரு குடும்பத்தில் 3 குழந்தைகள் பெற்றுக்கொள்ள சீன அரசு அனுமதி அளித்துள்ளது.
தேசிய செய்திகள்
தாக்தே சூறாவளியால் பாதிக்கப்பட்ட கடலோரப் பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு மகாராஷ்டிரா அரசு 2021 மே 27 அன்று ரூ.252 கோடி நிவாரண நிதிக்கு ஒப்புதல் அளித்தது.
மகாராஷ்டிராவின் முதல்வர் உத்தவ் தாக்கரே தலைமையில் வாராந்திர அமைச்சரவையில் நிவாரண நிதிக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது.
அரேபிய கடலில் தாக்தே சூறாவளி 2021 மே 17 அன்று இந்தியவானிலை ஆய்வுத் துறையால் ‘மிகக்கடுமையான சூறாவளி புயலாக’ அறிவிக்கப்பட்டது.
சூறாவளி மகாராஷ்டிராவின் கடலோரப் பகுதிகள் வழியாக குஜராத்தில் 2021 மே 17-18 க்கு இடையில் நிலச்சரிவை ஏற்படுRead More…
சீனாவின் ‘தியான்ஹே’ எனப்படும் புதிய விண்வெளி நிலையத்துக்கு 3 வீரர்கள் ஜீன் மாதம் அனுப்பப்படவுள்ளனர்.
சீன விண்வெளி நிலைய திட்டத்தின் துணை தலைமை வடிவமைப்பாளர் யாங்லிவி இத்தகவலை தெரிவித்துள்ளார்.
அமெரிக்கா, ரஷ்யா, பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகளின் பங்களிப்பில் சர்வதேச விண்வெளி நிலையம் செயல்பட்டு வருகிறது. அதில் இடம் பெறாத சீனா தனியாக விண்வெளி நிலையம் ஒன்றை கட்டமைத்து வருகிறது.
‘தியான்ஹே’ எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த விண்வெளி நிலையத்துக்கான மைய தொகுதியானது ஏப்ரல் 29ம் தேதி சுற்று வட்டப் பாதையில் நிலைநிறுத்தப்பட்டது.
அந்த நிலையத்துக்கான எரிபொருள் உள்ளிட்ட பொருள்கள், விண்வெளி உடைகள், உணவுப் பொருள்களுடன் ஒரு விண்கலம் அனுப்பப்பட்டு அது விண்வெளி நிலையத்துடன் இணைந்தது.
இதன் அடுத்தகட்டமாக ‘சென்ஷீ 12’ என்ற விண்கலம் மூலம் ஜியூகுவான் தளத்திலிருந்து 3 விண்வெளி வீரர்கள் விண்வெளி நிலையத்துக்கு அடுத்த மாதம் அனுப்பப்படவுள்ளனர்.
70 டன் எடை கொண்டதாக உருவாக்கப்படும் விண்வெளி நிலையத்தை அடுத்த ஆண்டு இறுதிக்குள் முழுமையாக கட்டமைக்க சீன விண்வெளி நிறுவனம் திட்டமிட்டுள்ளது.
எவரெஸ்ட் சிகரத்தை வேகமாக ஏறிய சாதனையை ஹாங்காங்கை சேர்ந்த சாங்யின்-ஹங் முறியடித்தார்.
44 வயதான சாங்யின் ஹங் 8848.86 மீ எவரெஸ்ட் மலையை மே 23 அன்று 25 மணி 50 நிமிடங்களில் ஏறி சாதனை படைத்துள்ளார்.
இதற்கு முன் எவரெஸ்டை வென்ற மிக விரைவான பெண் என்ற சாதனையை நேபாளி புன்ஜோ ஜாங்மு லாமா வைத்திருந்தார். 2018 ல் 39 மணி 6 நிமிடங்களில் ஏறுதலை முடித்திருந்தார்.
தேசிய செய்திகள்
விஸ்டாரா நிறுவனம் கொள்முதல் செய்த எரிபொருள் சிக்கனம் மற்றும் அதிக இருக்கை வசதிகள் கொண்ட ஏ-320 நியோ ரக விமானம் இந்தியா வந்து சேர்ந்தது.
சிஎஃப்எம் நிறுவனத்தின் அதிநவீன ‘லீப்’ இயந்திரம் பொருத்தப்பட்ட இந்த விமானம் பிரான்ஸின் ஏர்பஸ் நிறுவனம் உருவாக்கியதாகும்.
டாடா குழுமம் மற்றம் சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் கூட்டு நிறுவனமான விஸ்டாராவின் விமான சேவையில் இணையும் 46 வது விமானம் இதுவாகும்.
ஏர்பஸ் ஏ-320 நியோ விமானம் உள்பட 50 விமானங்கள் கொள் முதல் செய்ய பிரான்ஸின் ஏர்பஸ் நிறுவனத்திடம் விஸ்டாரா நிறுவனம் 2018 ல் ஒப்பந்தம் மேற்கொண்டது. அதன் ஒரு பகுதியாக இந்த ஏர்பஸ் ஏ320 நியோ விமானம் வந்துRead More…
கலைவிமர்சகர், எழுத்தாளரும், பத்திரிக்கையாளருமான டாக்டர் அல்கா ரகுவன்ஷி நிமோனியா நோயால் பாதிக்கப்பட்டு மே 26 அன்று காலமானார்.
லண்டனின் கோலட்ஸ்மி;த் கல்லூரி மற்றும் ஆக்ஸ்போர்டில் உள்ள நவீன கலை அருங்காட்சியகத்தில் பயிற்சி பெற்ற அவர் இந்தியாவின் முதல் பயிற்சி பெற்ற கலைக் கண்காணிப்பாளராக இருந்தார்.
டோக்கியோ ஒலிம்பிக்கில் மல்யுத்தத்தில் பணியாற்றிய ஒரே இந்திய நடுவர் அசோக்குமார்.
தனது 2வது ஒலிம்பிக்கில் பணியாற்றும் அசோக் உலக சாம்பியன்ஷிப், ஆசிய சாம்பியன்ஷிப் மற்றும் (United World Wrestling) UWW வெளியிட்ட அதிகாரிகளின் பட்டியலில் இடம் பெற்றார்.
அவர் ஒரு UWW நடுவர்களின் கல்வியாளரும் ஆவார்.
ஆஷ்ரிதா வி ஒலெட்டி இந்தியாவின் முதல் பெண் விமான சோதனை பொறியாளர் ஆவார்.
இந்திய விமானப்படையின் (IAF) ஒரு பெண் அதிகாரி விமானப்படை டெஸ்ட் பைலட் பள்ளியில் பட்டம் பெற்றார். நாட்டின் முதல் பெண் விமான சோதனை பொறியாளராக ஆனார்.
விமான சோதனை பொறியியலாளர் பாத்திரத்திற்கு தகுதி பெற்ற ஒரே பெண் IAF.
விமானப்படை டெஸ்ட் பைலட் பள்ளியிலிருந்து ஓராண்டு படிப்பை முடித்து 43 வது விமான சோதனை பாடத்தின் ஒரு பகுதியாகRead More…
ஒரு டோஸ் தடுப்பூசியான ஜான்சன் & ஜான்சன் தடுப்பூசியை செலுத்துவதற்கான அனுமதியை பிரிட்டன் வழங்கியுள்ளது.
பொருளாதாரத்தை வலுப்படுத்தும் நோக்கில் கரோனா தடுப்பூசியை வேகமாக செலுத்தும் பணியை பிரிட்டன் அரசு முன்னெடுத்துள்ளது. இதன் காரணமாக பிரிட்டனில் அஸ்ட்ரா ஜெனகா, பைஸர், மாடர்னா ஆகிய கரோனா தடுப்பூசிகளுக்கு அனுமதி கொடுத்த நிலையில், தற்போது ஜான்சன் & ஜான்சன் தடுப்பூசிக்கு பிரிட்டன் அரசு அனுமதி அளித்துள்ளது.
சிரியாவின் அதிபராக பஷார்அல் ஆசாத் 4வது முறையாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
சிரியாவில் மே 26 ல் அதிபர் தேர்தல் நடைபெற்றது. இதில் 70% க்கும் அதிகமான வாக்குகள் பதிவாகின.
இத்தேர்தலில் பசார் ஆசாத்க்கு எதிராக அப்துல்லா சலிம் போட்டியிட்டார். இந்நிலையில் பஷார் அல் ஆசாத் அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா மற்றும் தென்னாப்ரிக்கா ஆகிய நாடுகள் உறுப்பினராக உள்ள பிரிக்ஸ் அமைப்பின் செயற்குழு கூட்டம் அண்மையில் காணொலி வாயிலாக நடைபெற்றது.
இதில் பிரிக்ஸ் நாடுகளை சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள், கல்வியாளர்கள், அரசு அதிகாரிகள் என 60 பேர் கலந்து கொண்டனர்.
இந்த கூட்டத்தில் இந்திய குழுவுக்கு அறிவியல் மற்றும் தொழில்நுட்ப துறையின் சர்வதேச ஒத்துழைப்பு பிரிவின் தலைவர் டாக்டர் சஞ்சீவ் குமார் வர்ஷ்னே தலைமை தாங்கினார்.
பிரிக்ஸ் அறிவியல் தொழில்நுட்பம் & புத்தாக்க நடவடிக்கைள் கால அட்டவணை 2020-21 ன் ஒரு பகுதியாக இந்த கூட்டம் நடைபெற்றது.
2021 ஜனவரி முதல் பிரிக்ஸ் அமைப்பிற்கு இந்தியாRead More…
அமேசான் நிறுவனத்தை உருவாக்கியவரும் 27 ஆண்டுகளாக கட்டமைத்தவருமான ஜெஃப் பெசோஸ் அமேசான் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி பொறுப்பிலிருந்து முறைப்படி விலகுவதாக தெரிவித்துள்ளார்.
அமேசான் நிறுவனம் 1994 ஜீலை 5 ல் நிறுவப்பட்டது.
ஜெஃப் பெசோஸீக்கு பதிலாக 20 ஆண்டுகளாக அவருடன் இணைந்து பணியாற்றிய ஆன்டிஜாஸே புதிய தலைமை நிர்வாக அதிகாரியாக ஜீலை 5ம் தேதி பதவி ஏற்க உள்ளார்.
ஜெஃப் பெசோஸின் சொத்து மதிப்பு ஏறக்குறைய ரூ.13 லட்சம் கோடியாகும்.
சீனாவில் 70 வயது வாங்லாங் என்ற பெண் கடந்த 16 ஆண்டுகளில் 100 மராத்தான் போட்டிகளில் ஓடி சாதனை படைத்துள்ளார். இதனால் இவரை ‘சூப்பர் பாட்டி’ என சீனர்கள் அழைக்கிறார்கள்.
2004 ம் ஆண்டு தன்னுடைய முதல் மராத்தான் ஓட்டத்தை ஆரம்பித்தார்.
இதுவரை 100 மாரத்தான் ஓட்டங்களை ஓடி முடித்திருக்கிறார். 2005 முதல் 2017 வரை ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் பெய்ஜிங் மாரத்தான் போட்டியில் 13 முறை ஓடி முடித்திருக்கிறார்.
2021 ல் லியோனிங் பகுதியில் நடைபெற்ற அல்ட்ரா மாரத்தான் போட்டியில் கலந்து கொண்டு 168 கிமீ தூரத்தை 40 மணி நேரத்தில் கடந்தார்.
சீனாவின் தைஷானில் நடைபெற்ற சர்வதேச மலையேற்ற போட்டியில் கலந்து கொண்டு 27 வது இடத்தை வாங்லாங் பிடித்துள்ளார்.
மூச்சுக் காற்று மூலம் ஒருவருக்கு கரோனா தொற்று இருக்கிறதா இல்லையா என்பதை கண்டறியும் கருவிக்கு சிங்கப்பூர் அரசு அனுமதி வழங்கியுள்ளது. இந்த கருவிக்கு ‘பிரீபென்ஸ்கோ’ என பெயரிடப்பட்டுள்ளது.
சிங்கப்பூரில் உள்ள சிங்கப்பூர் தேசிய பல்கலைகழகத்தின் 3 மாணவர்கள், இந்தியப் பேராசிரியர் அடங்கிய குழு கண்டுபிடித்த இந்த கருவி மூலம் ஒருவருக்கு கரோனா தொற்று இருக்கிறாத என்பதை ஒரு நிமிடத்துக்குள் கண்டுபிடிக்க முடியும்.
சிங்கப்பூர் தேசிய பல்கலைகழகத்தின் ப்ரீத்தா நிக்ஸ் நிறுவனம் சார்பில் இந்த கருவி கண்டுபிடிக்கப்பட்டது.
சிங்கப்பூர் தேசிய பல்கலைகழகத்தை, சேர்ந்த இந்தியப் பேராசிரியர் டி வெங்கி வெங்கடேசன், அவரின் மாணவர்கள் டாக்டர் ஜியா ஹீனன், டுஃபாங், வேனே வீ ஆகியோர் இந்த பிரீத்தா நிக்ஸ் நிறுவனத்தை தொடங்கியுள்ளனர்.
இந்த ‘பிரீபென்ஸ்கோ’ கருவியில் இருக்கும் சிறிய குழாயை பரிசோதனைக்கு உட்படுபவர் வாயில் வைத்து மூச்சுக்காற்றை அழுத்தமாக செலுத்த வேண்டும்.
அவரின் மூச்சுக்காற்று இந்த கருவியில் சேமிக்கப்பட்டு, ஸ்பெக்டோ மீட்டர் அடுத்த சில வினாடிகளில் மூச்சுக் காற்றில் கரோனா வைரஸ் கிருமி இருக்கிறதா அதாவது பாசிட்டிவா அல்லது நெகட்டிவாRead More…