Daily Current Affairs 06 June 2021
Daily Current Affairs in Tamil
ஜூன் 06
தமிழ் செய்திகள்
உலக செய்திகள்
- கோவிஷீல்ட் கரோனா தடுப்பூசி தயாரிக்கும் சீரம் இன்ஸ்டிடியூட் நிறுவனம் ரஷியாவின் ஸ்புட்னிக்-வி தடுப்பூசியை உற்பத்தி செய்ய விருப்பம் தெரிவித்துள்ளது.
- சோதனை ஓட்டமாக ஸ்புட்னிக் தயாரிக்க மத்திய மருந்து கட்டுப்பாட்டு வாரியத்திடம் சீரம் நிறுவனம் அனுமதி கோரியுள்ளது.
- தற்போது டாக்டர் ரெட்டி நிறுவனம் ரஷிய நேரடி முதலீட்டு நிறுவனத்துடன் இணைந்து ஸ்புட்னிக்வி தடுப்பூசியை தயாரித்து வருகிறது.
- இதுவரை 250 மில்லியன் டோஸ் தடுப்பூசிகளை உற்பத்தி செய்துள்ளது.
- வெள்ளி கிரகத்தை ஆய்வு செய்ய 2 முக்கிய திட்டங்களை மேற்கொள்ளவுள்ளதாக அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசா அறிவித்துள்ளது.
- பூமிக்கு மிக அருகில் இருக்கும் கோள்களில் ஒன்றான வெள்ளி கிரகத்தின் தட்பவெப்பம் மற்றும் புவியியல் தன்மையை ஆய்வு செய்ய நாசா திட்டமிட்டுள்ளது.
- நாசாவின் கண்டுபிடிப்பு திட்டத்தின் கீழ் வரும் 2028 முதல் 2030-ம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில் சுமார் 500 மில்லியன் டாலர் (சுமார் ரூ.3650 கோடி) செலவில் இந்த இரு திட்டங்களையும் மேற்கொள்ள நாசா முடிவு செய்துள்ளது.
- இந்த திட்டங்களுக்கு டாவின்சி, வெரிட்டாஸ் என்று பெயரிடப்பட்டுள்ளது.
- இந்த திட்டத்தின் மூலம் வெள்ளி கிரகம் எப்படி தோன்றியது? அங்கு கடல் இருந்ததா? கிரகத்தின்
- புவியியல் வரலாறு குறித்தெல்லாம் டாவின்சி திட்டத்தில் ஆய்வு மேற்கொள்ளப்படும்.
- வெள்ளி கிரகத்தின் புவியியல் வளர்ச்சியையும், பூமிக்கும் அதற்குமான வேறுபாடுகளையும் வெரிட்டாஸ் திட்டம் ஆராய உள்ளது.
- ஜீன் 13ல் அமெரிக்க அதிபர் ஜோ பைடனை பிரிட்டன் ராணி இரண்டாம் எலிசபெத் சந்திக்கிறார்.
- ஜி7 உச்சி மாநாடு பிரிட்டனில் ஜீன் 11 முதல் 13 வரை நடைபெறுகிறது.
- இம்மாநாட்டில் அமெரிக்க அதிபர் ஜோபைடன், ஆஸ்திரேலியா பிரதமர் ஸ்காட் மோரிசன், ஜெர்மன் அதிபர் ஏஞ்சலா மெர்கல் உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்கின்றனர்.
- இந்நிலையை ஜி7 மாநாட்டில் பங்கேற்க பிரிட்டன் செல்லும் அமெரிக்க அதிபர் ஜோபைடனை ஜீன் 13ம் தேதி பிரிட்டன் ராணி இரண்டாம் எலிசபெத் சந்திக்க உள்ளார்.
- இதனை பக்கிங்ஹாம் அரண்மனை உறுதிப்படுத்தியுள்ளது.
- அமெரிக்க அதிபராக பதவியேற்றபின் ஜோபைடன் மேற்கொள்ளும் முதல் வெளிநாட்டு பயணம் இது என்பRead More…