Daily Current Affairs 27 July 2021

  • 0

Daily Current Affairs 27 July 2021

Daily Current Affairs in Tamil

ஜூலை 27

தமிழ் செய்திகள்

உலக செய்திகள்

  • பொதுமக்கள் போராட்டம் எதிரொலி : துனிசியா பிரதமர் பதவிநீக்கம்
    • வடக்கு ஆப்பிரிக்க நாடான துனிசியாவில் கரோனா நோய்த்தொற்றுக்கு முன்னரே பொருளாதாரம் வீழ்ச்சியடைந்தது. வேலைவாய்ப்பின்மை அதிகரித்ததால் இளைஞர்கள் உள்பட பொதுமக்கள் பிரதமர் ஹைக்கெம் மெசிசிக்கு எதிராக நிகழாண்டு தொடக்கத்தில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    • இதனால் பிரதமரை பதவிநீக்கம் செய்தும், நாடாளுமன்ற நடவடிக்கைகளை தற்காலிகமாக நிறுத்திவைத்தும் அதிபர் கைஸ் சையத் உத்தரவிட்டுள்ளார்.
    • நாட்டின் பொருளாதார சிக்கல்கள் மற்றும் கரோனா நோய்த்தொற்று விவகாரத்தில் அரசு சரியாக செயல்படவில்லை எனக் கூறி நாடு முழுவதும் நடைபெற்ற போராட்டத்தைத் தொடர்ந்து இந்த நடவடிக்கையை அதிபர் மேற்கொண்டுள்ளார்.

  • பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் சட்டப்பேரவைத் தேர்தலில் பிரதமர் இம்ரான் கானின் பாகிஸ்தான் தெஹ்ரீக்-இ-இன்சாஃப் கட்சி 25 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது.
    • ஆக்கிரமிப்பு காஷ்மீர் சட்டப்பேரவைத் தேர்தல் ஜூலை 25ம் தேதி நடைபெற்றது. மொத்தம் 53 இடங்கள் இருந்தாலும், 45 உறுப்பினர்கள் மட்டுமே மக்களால் நேரடியாகத் தோந்தெடுக்கப்படுகிறார்கள்.
    • அந்த 45 இடங்களுக்கு வாக்குப் பதிவு நடத்தப்பட்டது. இதில் பிரதமர் இம்ரான் கான் தலைமையிலான தெஹ்ரீக்-இ-இன்சாஃப் (பிடிஐ), முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீஃபின் முஸ்லிம் லீக் (நவாஸ்) (பிஎம்எல்-என்), பாகிஸ்தான் மக்கள் கட்சி (பிபிபி) ஆகியவற்றுக்கிடையே மும்முனைப் போட்டி நிலவியது.
    • இதில் இம்ரான் கானின் தெஹ்ரீக்-இ-இன்சாஃப் கட்சி தனிப் பெரும்பான்மை பெற்றுள்ளதால் அக்கட்சி முதல்முறையாக ஆக்கிரமிப்பு காஷ்மீரில் ஆட்சி அமைக்கவுள்ளது.

  • வர்த்தக கப்பல்களில் இந்திய மாலுமிகள் இருக்கக்கூடாது : சீன அரசு தடை
    • சீனாவுக்கு வரும் வர்த்தக கப்பல்களில் இந்திய மாலுமிகள் இருக்க கூடாது என சீன அரசு அதிகாரபூர்வமற்ற தடையை விதித்துள்ளதால் 20 ஆயிரத்திற்கும் அதிகமான இந்தியர்கள் வேலை இழக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாக புகார் எழுந்துள்ளது.
    • இந்திய பணியாளர்கள் உள்ள கப்பல்களை தனது துறைமுகங்களில் நிறுத்தவும் சீனா தடை விதித்துள்ளதாகவும்Read More…

 

All Month Current Affairs PDF  Here


Leave a Reply