Daily Current Affairs 23 June 2021
Daily Current Affairs in Tamil
ஜூன் 23
தமிழ் செய்திகள்
உலக செய்திகள்
- 2019-ம் ஆண்டைக் காட்டிலும் 2020-ல் உலக அளவிலான அந்நிய நேரடி முதலீடு 35 சதவீதம் குறைந்துள்ளது. அதாவது 2019-ல் 1.5 ட்ரில்லியன் டாலர் முதலீடு செய்யப்பட்டிருந்த நிலையில் 2020-ல் 1 ட்ரில்லியன் டாலர் மட்டுமே முதலீடு செய்யப்பட்டுள்ளது.
- அதேநேரம் இந்தியாவைப் பொறுத்தவரை 2020-ம் ஆண்டில் அந்நிய நேரடி முதலீடு 2019-ம்ஆண்டைக் காட்டிலும் 27 சதவீதம் அதிகரித்துள்ளது. 2019-ல் 51 பில்லியன் டாலர் முதலீடு செய்யப்பட்டிருந்த நிலையில் 2020-ல் 64 பில்லியன் டாலர் (ரூ.4.74 லட்சம் கோடி) முதலீடு செய்யப்பட்டுள்ளது. மேலும் உலக நாடுகளோடு ஒப்பிடுகையில் இந்தியா ஈர்த்துள்ள முதலீடு 5-வது பெரிய முதலீடு ஆகும்.
- உலகிலேயே முதல் முறையாக சீனாவில் இதுவரை 100 கோடி கரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளதாகச் செய்திகள் வெளியாகி உள்ளன.
- உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட 7 கரோனா தடுப்பூசிகளுக்கு சீனா அனுமதி வழங்கியுள்ளது. இதில் இரண்டு கரோனா தடுப்பூசிகள் குழந்தைகளுக்குச் செலுத்தும் தகுதியுடையவை.
- இதன் காரணமாக கடந்த 5 நாட்களில் சீனாவில் 10 கோடி கரோனா தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளது. சீனாவில் இதுவரை 43மூக்கும் அதிகமான மக்களுக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.
- மற்ற நாடுகளை ஒப்பிடும்போது சீனாவில் தாமதமாகத்தான் கரோனா தடுப்பூசி செலுத்தும் பணி தொடங்கியது. கடந்த ஒரு மாதமாகத் தடுப்பூசி செலுத்துவதை சீனா தீவிரப்படுத்தியுள்ளது.
- சீனாவில் சினோபார்ம், சினோவாக் தடுப்பூசிகள் பயன்பாட்டில் உள்ளன.
தேசிய செய்திகள்
- ஐக்கிய நாடுகளின் வர்த்தக மன்றத்தில் நிகழ்ந்த மாநாட்டின் போது மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் அவர்கள் உரையாற்றிய போது பெரிய நாடுகளின் மத்தியில் இந்தியாவில் தனிநபர் கார்பன் டை ஆக்சைடு மிகவும் குறைவு என கூறினார். 2030 ஆம் ஆண்டுக்குள் 450 மெகாவாட் திறனுடைய புதுப்பிக்கத்தக்க ஆற்றல் இலக்கை இந்தியா அடைவதில் இலட்சியமாகக் கொண்டு உள்ளது எனக் கூறியுள்ளார்.
- மேலும் இம்மாநாட்டில் பங்கேற்ற பல நாடுகள் தங்களின் நிலையான உலகை உருவாக்க வர்த்தகத்தை எவ்வாறு பயன்படுத்தலாம் என்பது பற்றிய பேச்சு வார்த்தைகளைRead More…