Daily Current Affairs 20 June 2021

  • 0

Daily Current Affairs 20 June 2021

Daily Current Affairs in Tamil

ஜூன் 20

தமிழ் செய்திகள்

உலக செய்திகள்

  • தனது சொந்த விண்வெளி நிலையத்துக்கு 3 வீரர்களை முதல் முறையாக அனுப்பி சீனா சாதனை படைத்துள்ளது.
    • 5 ஆண்டுகளுக்கு பிறகு விண்வெளி வீரர்களை அனுப்பியுள்ள சீனா இதுவரை இல்லாத வகையில் 380 கி.மீ தொலைவுக்கு அவர்களை அனுப்பியுள்ளது.
    • விண்வெளியில் சீனா அமைத்து வரும் தியான்காங் ஆய்வு நிலையத்தின் பிரதானப் பகுதியாக தியான்ஹே ஏப்ரல் 29ல் விண்ணில் செலுத்தப்பட்டது.
    • ஆய்வு நிலையத்தை நோக்கி 3 வீரர்களுடன் ஷென்ஷோ விண்வெளி ஓடம் கோபி பாலைவனத்தில் அமைந்துள்ள ஜிகுவான் ஏவுதளத்திலிருந்து விண்ணில் செலுத்தப்பட்டது.
    • 3 வீரர்களும் 3 மாதங்கள் தியான்காங் விண்வெளி நிலையத்தை கட்டமைக்கும் பணியில் ஈடுபடவுள்ளனர்.
    • 2019 ல் அதிகம் அறியப்படாத நிலவின் தொலைதூர பக்கத்தில் தனது சாங்கே-4 ஆய்வுகலத்தை சீனா முதல் முறையாக தரையிறக்கியது.
    • சீனாவின் சாங்கே-5 ஆய்வுக்கலம், நிலவிலிருந்து பாறை மற்றும் மண் மாதிரிகளை சேகரித்து பூமிக்கு எடுத்து வந்தது.
      .

  • இலங்கையில் சூரிய ஆற்றல் மூலம் எரிசக்தி உற்பத்தியை அதிகரிக்கும் வகையில் சுமார் ரூ.740 கோடி கடனை இந்தியா வழங்கியுள்ளது.
    • 2030ம் ஆண்டுக்குள் மொத்த எரிசக்தி பயன்பாட்டில் 70 சதவீதத்தை மரபு சாரா மூலங்கள் வாயிலாக உற்பத்தி செய்வதற்கு இலங்கை அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது.
    • சூரிய ஆற்றல் மூலம் எரிசக்தி உற்பத்தியை அதிகரிக்கும் திட்டங்களை செயல்படுத்துவதற்காக இந்திய ஏற்றுமதி இறக்குமதி வங்கி, இலங்கை அரசுக்கு சுமார் ரூ.740 கடனுதவி வழங்கியுள்ளது.
    • இதற்கான ஒப்பந்தம் ஜீன் 16ல் கையெழுத்தானது.
    • சர்வதேச சூரிய எரிசக்தி கூட்டமைப்பை இந்தியா முன்னின்று 2018 ல் உருவாக்கியது. அதில் இலங்கையும் உறுப்பு நாடாக உள்ளது.

  • ஆப்ரிக்க நாடான போட்ஸ்வானாவில் உலகில் 3வது பெரிய வைரம் கண்டறியப்பட்டுள்ளது.
    போட்ஸ்வானா உலகின் வைரங்களை அதிகம் உற்பத்தி செய்யும் நாடுகளில் ஒன்று.

    • இந்நிலையில் போட்ஸ்வானாவில் சமீபத்தில் எடை அதிகமுள்ள வைரம் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டது.
      இதன் எடை சுமார் 1098 கேரட் ஆகும். உலகின் கண்டறியப்பட்ட 3வது பெரிய வைரம் இதுவாகும்.
    • உலகில் 2வது பெரிய வைரமும் போட்ஸ்வானாவில் 2016ம் ஆண்டு கண்டுபிடிக்கப்பட்டது. இதன் எடை 1109 கேரட் ஆகும்.
    • உலகிலேயே மிகப்பெரிய வைரம் 1905 ஆம் ஆண்டு தென்னாப்பிரிக்காவில் கண்டறியப்பட்டது. இதன் எடை 3106 கேரட் அளவுRead More…

 

All Month Current Affairs PDF  Here


Leave a Reply