Daily Current Affairs 20 July 2021
Daily Current Affairs in Tamil
ஜீலை 20
தமிழ் செய்திகள்
உலக செய்திகள்
- அதிநவீன ஹைபர்சானிக் ஏவுகணையை வெற்றிகரமாக பரிசோதித்தது ரஷியா
- ஒலியைவிட 9 மடங்கு வேகத்தில் 1000 கி.மீ. தொலைவு சென்று இலக்கைத் தாக்கும் திறன் கொண்ட அதிநவீன ஹைபர்சானிக் ஏவுகணையை ரஷியா ஜூலை 19ம் தேதி வெற்றிகரமாக பரிசோதித்துள்ளது.
- வெண் கடலில் நிறுத்தப்பட்டுள்ள கடற்படைக் கப்பலில் இருந்து ஷிர்கான் ஹைபர்சானிக் ஏவுகணை செலுத்தப்பட்டது. அந்த ஏவுகணை 350 கி.மீ. தொலைவில் தரைப்பரப்பில் உள்ள இலக்கை வெற்றிகரமாகத் தாக்கியது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- நம்பிக்கை வாக்கெடுப்பில் நேபாள பிரதமர் ஷோ பகதூர் தேவுபா வெற்றி
- நேபாள புதிய பிரதமர் ஷோ பகதூர் தேவுபா நாடாளுமன்றத்தில் ஜூலை 18ம் தேதி நடத்தப்பட்ட நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெற்றார்.
- அரசியலமைப்புச் சட்டப் பிரிவு 76(5)-இன் படி நேபாள புதிய பிரதமராக ஷோ பகதூர் தேவுபாவை (75) நியமிக்க கடந்த ஜூலை 12-ஆம் தேதி உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. அதன்படி, பிரதமராக அவர் பதவியேற்றார். இந்நிலையில், ஜூலை 18ம் தேதி கூடிய நாடாளுமன்ற பிரதிநிதிகள் அவையில் அவர் நம்பிக்கை வாக்கெடுப்பு கோரினார்.
- நம்பிக்கை வாக்கெடுப்பில் ஷோ பகதூர் தேவுபா அரசு வெற்றி பெற்றதன் மூலம் அங்கு பொதுத் தோதல் தவிர்க்கப்பட்டுள்ளது. நாடாளுமன்றத்தின் பதவிக் காலம் முடிவடையவுள்ள அடுத்த ஒன்றரை ஆண்டுகளுக்கு அவர் பிரதமராக இருப்பார்.
தேசிய செய்திகள்
- பிரான்ஸ் பயணம் மேற்கொண்ட இந்திய கடற்படை கப்பல் ஐஎன்எஸ் தபர், அந்நாட்டு போர்க்கப்பலுடன் பயிற்சியை நிறைவு செய்தது.
- இந்திய கடற்படையின் ஐஎன்எஸ் தபர் போர்க்கப்பல் பிரான்ஸ் நாட்டின் பிரெஸ்ட் துறைமுகத்துக்கு சென்றது. அங்கு பிரான்ஸ் கடற்படை கப்பல் எப்என்எஸ் அக்யுட்டைன்-உடன் இணைந்து பிஸ்கே வளைகுடாவில் கடந்த 15, 16 தேதிகளில் கடல்சார் கூட்டுப் பயிற்சியை முடித்தது.
- பிரெஞ்சு போர்க்கப்பலில் உள்ள என்எச் 90 ரக ஹெலிகாப்டர், பிரெஞ்சு கடற்படையின் 4 ரஃபேல் போர் விமானங்கள் ஆகியவையும் இந்த பயிற்சியில் பங்கேற்றன.
- நீர்மூழ்கிக் கப்பல்களைத் தாக்குவது, துப்பாக்கிச் சூடு, வான் பாதுகாப்பு உட்பட பலவிதமான பயிற்சிகளை இரு நாட்டு போர்க்கப்பல்களும் மேற்கொண்டன. கடல்சார் அச்சுறுத்தல்களை எதிர்கொள்வதில், இந்தப் பயிற்சி இருநாட்டு கடற்படைகளுக்கும் பயனுள்ளதாக இருந்ததாகRead More…
All Month Current Affairs PDF Here