Daily Current Affairs 14 July 2021
Daily Current Affairs in Tamil
ஜீலை 14
தமிழ் செய்திகள்
உலக செய்திகள்
- பிரான்ஸ் நாட்டு தேசிய தினவிழா : புதுச்சேரியில் போர் நினைவுச் சின்னத்தில் மரியாதை
- பிரான்ஸ் நாட்டு தேசிய தின விழாவை முன்னிட்டு, புதுச்சேரி கடற்கரைச் சாலையில் உள்ள போர் நினைவுச் சின்னத்தில் மரியாதை செலுத்தப்பட்டது.
- பாரீஸ் நகரில் உள்ள பஸ்தி என்ற சிறைச்சாலையைப் புரட்சி மூலம் மக்கள் தகர்த்து 1789-ம் ஆண்டு ஜூலை 14-ம் தேதி பிரான்ஸ் நாட்டில் இருந்த மன்னராட்சியை முடிவுக்குக் கொண்டு வந்து மக்களாட்சியை நிறுவினர்.
- இந்த தினம் பிரான்ஸ் நாட்டு தேசிய தினமாகக் கொண்டாடப்படுகிறது. இதையடுத்து, பிரெஞ்சு தேசிய தினவிழா புதுச்சேரி கடற்கரைச்சாலையில் உள்ள போர் நினைவுச் சின்னத்தில் இன்று (ஜூலை 14) கொண்டாடப்பட்டது.
- வர்ஜின் கேலக்டிக் நிறுவனத்தின் விண்கலத்தில் பயணித்த சிரிஷாபன்ட்லா
- அமெரிக்காவை தலைமையிடமாகக் கொண்ட வர்ஜின்கேலக்டிக் நிறுவனம், தனது விண்வெளி சுற்றுலா திட்டத்துக்கான இறுதிக்கட்ட சோதனையை வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளது.
- வர்ஜின்கேலக்டிக் நிறுவனத்தின் யூனிட்டி-22 விண்கலம்
- இதில், வர்ஜின் நிறுவன தலைவர் ரிச்சர்ட்பிரான்சன் மற்றும் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த சிரிஷாபன்ட்லா உள்ளிட்ட 6 பேர் பயணம் மேற்கொண்டனர்.
- பூமியிலிருந்து சுமார் 85 கிலோ மீட்டர் உயரத்தில் இந்த விண்கலம் இயங்கி சாதனை படைத்தது.
- ஆஸ்திரேலியாவுடன் கல்வி பரிமாற்றம் உயர் கல்வித்துறையில் ஒப்பந்தங்கள் கையெழுத்து
- தமிழ்நாடு மற்றும் ஆஸ்திரேலிய நாட்டு பல்கலைக்கழகங்கள் இணைந்து உயர்கல்வியில் பரிமாற்றம் செய்து கொள்ள 83 ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டன என்று அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்.
- அத்துடன், சென்னை தலைமைச் செயலகத்தில் அமைச்சர் பொன்முடி மற்றும் ஆஸ்திரேலிய நாட்டுதூதரக அதிகாரிகள் உடனானRead More…
All Month Current Affairs PDF Here