Daily Current Affairs 01 July 2021

  • 0

Daily Current Affairs 01 July 2021

Daily Current Affairs in Tamil

ஜீலை 01

தமிழ் செய்திகள்

உலக செய்திகள்

  • டெல்டா, ஆல்ஃபா வகை கரோனா தொற்றுக்கு எதிராக இந்தியாவின் பாரத் பயோடெக் நிறுவனம் தயாரித்த கோவேக்ஸின் தடுப்பூசி சிறப்பாக செயல்படுகிறது என்று அமெரிக்க தேசிய சுகாதார நிறுவனம் கூறியுள்ளது. அந்தத் தடுப்பூசி பாதுகாப்பானது மற்றும் நீடித்து செயல்படக் கூடியது என்றும் அந்த நிறுவனம் கூறியுள்ளது.

தேசிய செய்திகள்

  • கரோனா சூழலில் பாதிக்கப்பட்டுள்ள முறைசாராத் தொழிலாளர்களுக்கு ரூ.3,717.28 கோடி (500 மில்லியன் அமெரிக்க டாலர்) கடனுதவி அளிப்பதாக உலக வங்கி அறிவித்துள்ளது.
    • இந்தக் கடனுதவி மாநிலங்களுக்கு உதவியாக இருக்கும் என்றும் உலக வங்கி தெரிவித்துள்ளது.
    • இதுதொடர்பாக உலக வங்கி வெளியிட்டுள்ள அறிவிப்பில், ‘மொத்தம் 500 மில்லியன் அமெரிக்க டாலரில் உலக வங்கியின் கிளை அமைப்புகளான சர்வதேச மேம்பாட்டு சங்கம் 112.50 மில்லியனையும், சர்வதேச மறுசீரமைப்பு மற்றும் மேம்பாட்டு வங்கி 387.50 மில்லியனையும் கடனாக வழங்குகிறது.
    • 18.5 ஆண்டுகளுக்கு இந்தக் கடன் முதிர்ச்சி அடையும் காலமாகவும், அடுத்த ஐந்தாண்டுகள் கூடுதல் அவகாசமாகவும் அளிக்கப்படுகிறது.

  • 2020-ஆம் ஆண்டுக்கான சர்வதேச இணைய பாதுகாப்புக் குறியீடு (ஜிசிஐ) தரவரிசைப் பட்டியலில் 10-ஆவது இடத்துக்கு முன்னேறி, உலக அளவில் இணைய பாதுகாப்பில் தலைசிறந்த நாடு என்ற நிலையை இந்தியா எட்டியுள்ளது.
    • ‘டிஜிட்டல் இந்தியா’ திட்டத்தை மத்திய அரசு அறிமுகம் செய்து ஜூலை 1-ஆம் தேதி ஆறாம் ஆண்டை நிறைவு செய்ய உள்ள சூழலில், இந்தியாவுக்கு இந்த அங்கீகாரத்தை ஐ.நா. அமைப்பின் அங்கமான சர்வதேச தொலைத்தொடர்பு சங்கம் (ஐடியு) வழங்கியிருக்கிறது.
      இதில் அமெரிக்கா முதலிடத்தைப் பிடித்துள்ளது. பிரிட்டன், சவூதி அரேபியா நாடுகள் இரண்டாம் இடத்தையும், எஸ்டோனியா மூன்றாம் இடத்தையும் Read More…

 

All Month Current Affairs PDF  Here


Leave a Reply

Get More Info