- உலக மூளைக்கட்டி தினம் ஆண்டுதோறும் ஜூன் மாதம் 8ம் தேதி கடைபிடிக்கப்படுகிறது. முதன் முதலில் இந்த நாள் ஜெர்மன் மூளைக்கட்டி சங்கத்தால் அனுசரிக்கப்பட்டது. இது ஓர் இலாபநோக்கற்ற அமைப்பு. மூளையில் செல்களின் அசாதாரணமான வளர்ச்சி மூளைக்கட்டி என்று வழங்கப்படுகிறது. இந்த தினம் அனைத்து மூளைக்கட்டி நோயாளிகளுக்கும் மற்றும் அவர்களது குடும்பங்களுக்கும் விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக, 2000ஆம் ஆண்டிலிருந்து அனுசரிக்கப்படுகிறது.