Today TNPSC Current Affairs September 17 2019

We Shine Daily News

செப்டம்பர் 17

தமிழ்

Download Tamil PDF – Click Here

Download English PDF – Click Here

 

தேசிய நிகழ்வுகள்

 

  • பயணிகளுக்கு பல்வேறு வசதிகளை ஏற்படுத்தும் வகையில், முதல் கட்டமாக, தில்லி – லக்னோ இடையே தனியார் ரயில் சேவை வரும் அக்டோபர் மாதம் தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது. இதன் சோதனை ஓட்டம் தற்போது தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதைத்தொடர்ந்து, மும்பை – அகமதாபாத் இடையே தனியார் ரயில் டிசம்பரில் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. மேலும், தென் மாநிலங்களில் தனியார் ரயில்களை இயக்குவது குறித்தும் ஐ.ஆர்.சி.டி.சி. ஆய்வு பணிகளைத் தீவிரப்படுத்தியுள்ளது.

 

 

  • நாட்டில் இருந்து தகவல் தொழில்நுட்ப சேவைகளின் ஏற்றுமதியை அதிகரிக்கும் வகையில், ‘இந்தியா சாப்ட்’ என்னும் சர்வதேச கண்காட்சி மற்றும் மாநாடு ஹைதராபாத்தில் அடுத்த ஆண்டு மார்ச் 3, 4 ஆகிய தேதிகளில் நடைபெறவுள்ளது.

 

சர்வதேச நிகழ்வுகள்

 

  • அமெரிக்காவின் ஹீஸ்டன் நகரில் பிரதமார் நரேந்திர மோடி பங்கேற்கும் ‘மோடி நலமா’ (ஹெளடி மோடி) நிகழ்ச்சியில், அந்நாட்டு அதிபர் டொனால்ட் டிரம்ப்பும் இணையவிருப்பதாக வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.
    • ஹீஸ்டன் நகரில் இந்திய – அமெரிக்கர்கள் மத்தியில் 22ம் தேதி உரையாற்றவுள்ளார். ‘மோடி நலமா’ என்று பெயரிடப்பட்டுள்ள இந்நிகழ்ச்சி, ஹீஸ்டனின் என் ஆர்.ஜி அரங்கில் மிகப் பிரம்மாண்டமாக நடைபெற உள்ளது.

 

 

  • இந்தியா, சிங்கப்பூர், தாய்லாந்து நாடுகளின் கடற்படை பங்கேற்கும் முத்தரப்பு கூட்டுப் பயிற்சி திங்கள்கிழமை தொடங்கியது. இம்மூன்று நாடுகளும் இத்தகைய முத்தரப்பு பயிற்சியில் பங்கேற்பது இது முதல் முறையாகும்.
    • முத்தரப்பு கடற்படையின் கூட்டுப் பயிற்சி, அந்தமான் – நிகோபர் தீவுகளில் உள்ள போர்ட் பிளேர் நகரில் திங்கள்கிழமை தொடங்கியது. இந்தப் பயிற்சி, கடற்பகுதி, கரைப்பகுதி என இரு கட்டங்களாக நடைபெறுகிறது.
    • கடற்பகுதி பயிற்சி செப். 18 முதல் 20 ஆம் தேதி வரை நடைபெறும்.

 

 

  • உடற்பயிற்சி MAITREE இந்திய ராணுவம் (IA) மற்றும் ராயல் தாய்லாந்து இராணுவம் (RTA) ஆகியவற்றுக்கு இடையேயான வருடாந்திர இருதரப்பு கூட்டுப் பயிற்சி இன்று மேகாலயாவின் உம்ரோய், வெளிநாட்டு பயிற்சி முனை (FIN) இல் தொடங்கியது. பயிற்சியின் நோக்கம் காட்டில் நிலப்பரப்பு மற்றும் நகர்ப்புற சூழ்நிலைகளில் பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகளில் கூட்டு பயிற்சி அளிப்பதாகும். 2006 முதல் இந்தியாவிற்கும் தாய்லாந்திற்கும் இடையிலான நீண்டகால இருதரப்பு உறவுகளின் முகாமாக MAITREE – 2019 உடற்பயிற்சி உள்ளது.

 

                                                    

விளையாட்டு நிகழ்வுகள்

 

  • ஐசிசி டெஸ்ட் பேட்டிங் தரவரிசையில் ஸ்மித் முதலிடத்தில் நீடிக்கிறார். இந்திய கேப்டன் விராட் கோலி இரண்டாம் இடத்தில் உள்ளார்.
    • பேட்ஸ்மேன் தரவரிசையில் ஆஸி.வீரர் ஸ்டீவ் ஸ்மித் 937 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளார். ஓராண்டுக்கு மேலாக முதலிடத்தில் இருந்த கோலி 903 புள்ளியுடன் இரண்டாம் இடத்தில் உள்ளார்.

 

 

அறிவியல் நிகழ்வுகள்

 

  • வரும் 2022ம் ஆண்டில் விண்வெளிக்கு மனிதர்களை அனுப்ப பாகிஸ்தான் திட்டமிட்டுள்ளது.
    • பாகிஸ்தான் தனது முதல் விண்வெளி வீரரை வரும் 2022 ஆம் ஆண்டு விண்வெளிக்கு அனுப்ப திட்டமிட்டுள்ளது. இத்திட்டத்தில் சீனாவுடன் இணைந்து பாகிஸ்தான் பணியாற்ற உள்ளது. இத்திட்டத்துக்கான விண்வெளி வீரர்கள் தேர்வு வரும் 2020- ஆம் ஆண்டில் தொடங்கும் என்று அந்நாட்டின் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை அமைச்சர் சௌதரி ஃபாவாத் ஹீசைன் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

 

 

ENGLISH CURRENT AFFAIRS

 

NATIONAL NEWS

  • The Delhi-Lucknow Tejas Express, which will be India’s first private train to be entirely run by Indian Railway Catering and Tourism Corporation (IRCTC), will become operational on 4th October after it will be flagged off by Uttar Pradesh Chief Minister Yogi Adityanath.
    • The Delhi-Lucknow Tejas Express will cover the journey between the two cities in 6 hours and 15 minutes.

 

 

  • India Soft a two-day flagship IT event of Electronics and Computer Software Promotion Council (sponsored by the Government of India) 20th edition, will be held on March 3-4, 2020 in Hyderabad.
    • It will display India’s capabilities in areas such as automation, Internet of Things and robotics.

 

  • India, Thailand and Singapore have jointly conducted the five-day maritime exercise is aimed at bolstering the maritime inter-relationships and contribute significantly to enhancing the overall maritime security in the region.
    • The exercise comprises a shore phase at port blair in andaman and nicobar islands on September 18 to 20.

 

 

  • Defence officials said the Indian Army and the Royal Thailand Army commenced a joint exercise at Umroi in Meghalaya on Monday.
    • The aim of the exercise is joint training of troops in counter-terrorism operations in both jungle terrain and urban scenario

 

INTERNATIONAL NEWS

  • Prime Minister Narendra Modi will be joined in by US president Donald Trump at the “Howdy, Modi!” event in Texas on September 22. 
    • White House Press Secretary said, “It will be a great opportunity to emphasize the strong ties between the people of the United States and India

 

 

 

SCIENCE AND TECH UPDATES

  • Pakistan Federal Minister for Science and Technology Fawad Chaudhry has Reported that the country plans to send its first astronaut to space by 2022.
    • China would collaborate with Pakistan in its space mission.

 

 

SPORTS

  • The International Cricket Council(ICC) Test Rankingsfor batsmen released on September 16, 2019 has ranked Indian cricket captain Virat Kolhi at second place with 903 points, which is 34 points behind first positioned Australian cricketer Steve Smith holds 937 points.