Today TNPSC Current Affairs September 10 2019

We Shine Daily News

செப்டம்பர் 10

தமிழ்

Download Tamil PDF – Click Here

Download English PDF – Click Here

 

தமிழக நிகழ்வுகள்

 

  • தமிழகத்தில் 71 லட்சம் மரக்கன்றுகளை நடும் திட்டத்திற்கு 100 நாள் வேலைத் திட்டத்தின் கீழ் ரூ.198.57 கோடி நிதி ஒதுக்கி மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.
    • 71 லட்சம் மரக்கன்றுகளில் 64 லட்சம் கன்றுகள் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறையின் மூலமாகவும், 7 லட்சம் கன்றுகளை வனத்துறை மூலமாகவும் நட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
    • இந்த திட்டம் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் மூலம் செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.

 

 

தேசிய நிகழ்வுகள்

 

  • தரிசு நிலங்களை வளப்படுத்துவதற்கு வரும் 2030–ம் ஆண்டு இந்தியா இலக்கு நிர்ணயித்துள்ளது.
    • நிலங்கள் பாலைவனமாவதை எதிர்கொள்வது தொடர்பான ஐ.நாவின் மாநாடு புதுதில்லியில் நடைபெற்றது.
    • இந்த மாநாட்டில் பங்கேற்ற பிரதமர் மோடி தரிசு நிலங்களை வளமான நிலங்களாக 2030–ம் ஆண்டுக்குள் மாற்றப்படும் என உறுதியளித்தார்.

 

 

  • அஞ்சல் வங்கிக் கணக்கு – தேசிய அளவில் தமிழக அஞ்சல் வட்டம் முதலிடம்.
    • இந்திய போஸ்ட் பேமெண்ட் வங்கியை மத்திய அரசு 2018–ம் ஆண்டு செப்டம்பர்-1 ம் தேதி தொடங்கியது.
    • பிரதம மந்திரி ஜன்தன் திட்டத்தின் மூலம் ஐபிபிபி எனும் அஞ்சல் வங்கி தொடங்கப்பட்டுள்ளது.
    • மத்திய மாநில அரசுகளின் திட்டங்களில் 440 திட்டங்களின் தொகையை நேரடியாக பயனாளிகளின் வங்கி கணக்குகளில் சென்றடையும்.

 

 

  • உலக அளவில் மலேரியா பாதிப்பில் இந்தியா 4-வது இடத்தில் இருப்பதாக “தி லேன்செட்” மருத்துவ இதழ் ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
    • நைஜீரியா, மலேரியா பாதிக்கப்பட்ட நாடுகளில் முதலிடத்தில் உள்ளது.
    • இந்தியா, மலேரியாவை முற்றிலும் ஒழிக்க 2030–ஆம் ஆண்டு இலக்கு நிர்ணயித்துள்ளது.

 

 

விளையாட்டு செய்திகள்

 

  • யுஎஸ் ஒபன் ஆடவர் ஒற்றையர் பிரிவில் ரபேல் நடால் சாம்பியன் பட்டம் வென்றார்.
    • ஒட்டுமொத்தமாக ரபேல் நடால் இதுவரை 19 கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை வென்றுள்ளார்.
    • 2019-ம் ஆண்டு பிரஞ்சு ஒபன் பட்டத்தையும் நடால் வென்றுள்ளார்.

 

 

நியமனங்கள்

 

  • ராஜஸ்தான் மாநில ஆளுநராக கல்ராஜ் மிஸ்ரா பதவியேற்றார்.
    • இந்திய அரசியலமைப்பு சட்ட விதி 159-ன் படி மாநில உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி ஸ்ரீபதி ரவிந்திர பட் முன்னிலையில் பதவியேற்றுக் கொண்டார்.
    • ராஜஸ்தான் மாநில முதல்வர் அசோக் கெல்லாட் இவ்விழாவில் கலந்து கொண்டார்.

 

 

ENGLISH CURRENT AFFAIRS

 

TAMIL NADU NEWS

  • 71 lakh saplings were planned to be planted in Tamil Nadu on the 71st birthday of the late Chief Minister Jayalalithaa under the 100 days work opportunity scheme . For this project Rs. 198.57 have been allotted by our State Government.
    • It was proposed that trees will be planted at school, colleges, parks, state-owned areas and forest areas in rural places throughout Tamil Nadu.

 

 

  • Tamil Nadu tops in the Postal Bank Accounts all over the Country. Indian Post payment Bank is formed on September 1st, 2018. This comes under the Prime minister Jan dhan project.
    • In Central and State government’s Projects 440 project amount were directly credited to the concern person’s account.

 

 

NATIONAL NEWS

  • India have set a goal to enrich the soil of Waste and dry lands by 2030. The UN summit of controlling the lands from transforming into the desert held at New Delhi.
    • PM Modi have report in the summit that waste and Dry land will be prevented from transforming into deserts.

 

 

  • India ranked fourth in the global incidence of the deadly mosquito-borne disease malaria in 2017, with four per cent of the cases worldwide reported in the country, according to a report published in The Lancet journal Where Nigeria tops in the ranking Board.
    • India have set a goal to become a malaria free nation by 2030.

 

 

SPORTS

  • Rafael Nadal won the title of men singles in the US Open 2019.  In total Nadal won upto 19 Grandslam titles.
    • He also won the title of French Open 2019.

 

 

APPOINTMENTS

  • Former Union minister Kalraj Mishra was sworn in as Governor of Rajasthan in a ceremony at the Raj Bhawan on 9th September.
    • Mishra replaced Kalyan Singh, who has completed his five year tenure