Today TNPSC Current Affairs October 30 2018

TNPSC Current Affairs: October 2018 – Featured Image

We Shine Daily News

அக்டோபர் 30

தமிழ்

Download Tamil PDF – Click Here
Download English PDF – Click Here

 

இந்திய நிகழ்வுகள்

 

  • இந்தியா – ஜப்பான் இடையிலான 13-ஆவது வருடாந்திர மாநாடு டோக்கியோவில் நடைபெற்றது.
    • இதில் இரு நாடுகளின் வெளியுறவுத் துறை பாதுகாப்பு அமைச்சர்கள் (2 பிளஸ் 2) சந்தித்துப் பேச்சு வார்த்தை நடத்தினர். இந்த சந்திப்பில் மின்னணுத் துறையில் ஒத்துழைப்பு, இணைய தளப் பாதுகாப்பு, சுகாதாரப் பாதுகாப்பு, கடல்சார் பாதுகாப்பு, விண்வெளித்துறையில் ஒத்துழைப்பு, அதிவிரைவு ரயில் திட்டம் உள்ளிட்டவை தொடர்பான 6 முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாயின.

 

TNPSC Current Affairs: October 2018 – National News Image

 

  • செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பங்களில் மிகவும் மேம்பட்ட நாடுகளின் பட்டியலில் இந்தியா இடம் பெற்றிருப்பதாக பின்லாந்தைச் சேர்ந்த செயற்கை நுண்ணறிவு நிறுவனம் லைஃப்ரா தெரிவித்திருக்கிறது. இந்த நிறுவனம் நடத்திய ஆய்வில் செயற்கை நுண்ணறிவுப் பட்டியலில் அமெரிக்கா முதலிடத்திலும் சீனா இரண்டாவது இடத்திலும் இந்தியா 13 வது இடத்திலும் இருக்கின்றன.

 

TNPSC Current Affairs: October 2018 – National News Image

 

  • இந்தியாவில் 3 நாள் நடைபெறும், இயற்கை விவசாயத் துறையின் மிகப்பெரிய கண்காட்சியான BIOFACH -இன் 10 வது பதிப்பை மத்திய அமைச்சர் சுரேஷ்பிரபு புதுடெல்லியில் தொடங்கி வைத்தார்.
    • நியூரன்பர்க் மெஸ்ஸி இந்தியா (NuernbergMesse India) வர்த்தக மற்றும் தொழில்துறை அமைச்சகத்தின் வேளான் மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுப் பொருட்கள் ஏற்றுமதி மேம்பாட்டு ஆணையம். (APEDA- Agricultural and Processed Food Products Export Development Authority).
    • BIOFACH India மாநாட்டின் கருத்துரு: இந்தியாவில் இருந்து இயற்கை விவசாயப் பொருட்களின் உற்பத்தியை எற்றுமதி செய்வதற்கான உத்திகள் மற்றும் ஒருங்கிணைப்பு ஆகியவற்றை அதிகப்படுத்துவது.(Enhancing export of organic products trade from India – Strategies and synergies).

 

TNPSC Current Affairs: October 2018 – National News Image

 

உலக நிகழ்வுகள்

 

  • பருவநிலை மாற்றத்தைக் கண்காணித்து, அதனால் ஏற்படக் கூடிய ஆபத்துகள் குறித்து ஆய்வு செய்வதற்காக, பிரான்ஸின் உதவியுடன் சீன விண்வெளி ஆய்வு அமைப்பு முதல் முறையாக உருவாக்கியுள்ள செயற்கைக்கோளை, ஏந்திச் செல்லக்கூடிய சீனாவின் லாங்க் மார்ச் 2சி ராக்கெட்டானது (Long March 2C) கோபி பாலைவனத்திலுள்ள ஜியூகான் ஏவுதளத்திலிருந்து (Jiuquan Satellite Launch Center) விண்ணில் ஏவப்பட்டது.

 

TNPSC Current Affairs: October 2018 – World News Image

 

  • இலங்கை அதிபர் மைத்ரிபால சிறிசேனவின் கட்சி, கூட்டணியை விட்டு விலகியதால், புதிய பிரதமராக மகிந்த ராஜபக்ச பதவியேற்றார்.

 

TNPSC Current Affairs: October 2018 – World News Image

 

  • சீனாவின் உதவியுடன் 2022 ஆம் ஆண்டில் முதல் முறையாக மனிதரை விண்வெளிக்கு அனுப்பப் போவதாக பாகிஸ்தான் அறிவித்துள்ளது.
    • இதற்காக பாகிஸ்தான் விண்வெளி மற்றும் புற வளிமண்டல ஆய்வு ஆணையம் (Space and upper atmosphere research commission) மற்றும் சீனா இடையே ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டுள்ளது.

 

TNPSC Current Affairs: October 2018 – World News Image

 

விளையாட்டு நிகழ்வுகள்

 

  • பேஸலில் நடைபெற்ற சுவிஸ் உள்ளரங்க (Swiss Indoor at Basel) டென்னிஸ் இறுதி ஆட்டத்தில் வென்றதின் மூலம், ரோஜர் பெடரர் தனது 99- ஆவது ஏடிபி சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளார்.
    • பெடரர், ருமோனிய வீரர் மாரியஸ் காப்பிலை (Marius Copil) 7-6, 6-4 என்ற நேர் செட்களில் வீழ்த்தி பட்டம் வென்றார். சொந்த மண்ணில் அவர் வெல்லும் 99-வது ஏடிபி சாம்பியன் பட்டமாகும்.

 

TNPSC Current Affairs: October 2018 – Sports News Image

 

 விருதுகள்

 

  • 2018 ஆம் ஆண்டிற்கான ஐ.நா. மனித உரிமை விருதுகளின் (UN Human Right Prize) வெற்றியாளர்களை ஐக்கிய நாடுகள் சபை அறிவித்துள்ளது.
    • 2018 ஆம் ஆண்டு டிசம்பர் 10 (மனித உரிமைகள் தினம்) அன்று அமெரிக்காவின் நியூயார்க்கில் அமைந்துள்ள ஐ.நா. தலைமையகத்தில் நடைபெறும் விருது வழங்கும் விழாவில் வெற்றி பெற்றவர்களுக்கு இவ்விருது வழங்கப்படவிருக்கிறது.
    • ஆஸ்மா ஹாங்கீர் (Asma Jahangir) – பாகிஸ்தானின் மறைந்த மனித உரிமை ஆர்வலர்.
    • ரெபகா கியூமி (Rebeca Gyumi) – தான்சானிய மனித உரிமை ஆர்வலர்
    • ஜியோனியா வபிசானா(Joenia Wapichana) – பிரேசிலின் முதலாவது உள்நாட்டு வழக்குரைஞர்
    • பிரெண்ட்லைன் டிபெண்டர்ஸ் (Front line Defenders) – அயர்லாந்தின் மனித உரிமைகள் அமைப்பு.
  • குறிப்பு
    • 1966 ஆம் ஆண்டில் ஐக்கிய நாடுகள் பொதுச் சபையால் இவ்விருதுகள் உருவாக்கப்பட்டன.
    • இவ்விருதுகள் முதன்முறையாக 1968 ஆம் ஆண்டில் வழங்கப்பட்டன. அன்று முதல் ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை இவ்விருதுகள் வழங்கப்படுகின்றன.

 

TNPSC Current Affairs: October 2018 – Awards News Image

 

முக்கிய தினங்கள்

 

  • உலக சேமிப்பு தினம் – அக்டோபர் 30
    இந்த உலக சேமிப்பு தினமானது 1924 ஆண்டு முதல் கடைபிடிக்கப்படுகிறது.

    • Theme : Share your Dreams.

 

TNPSC Current Affairs: October 2018 – Important Days News Image