Today TNPSC Current Affairs October 22 2019

We Shine Daily News

அக்டோபர் 22

தமிழ்

Download Tamil PDF – Click Here

Download English PDF – Click Here

 

தேசிய நிகழ்வுகள்

 

  • மகாராஷ்டிரம், ஹரியானா ஆகிய மாநிலங்களில் அக்டோபர் 21, திங்கள்கிழமை சட்டப் பேரவைத் தேர்தல் நடைபெற்றது. இதில், மகாராஷ்டிரத்தில் 60 சதவீதமும், ஹரியானாவில் 65 சதவீதமும் வாக்குகள் பதிவாகின.
    • தமிழகத்தில் இரண்டு தொகுதிகளுக்கான இடைத் தேர்தலில் விறுவிறுப்பான வாக்குப் பதிவு நடைபெற்றது. அதிகபட்சமாக விக்கிரவாண்டியில்36 சதவீத வாக்குகளும், நான்குனேரியில் 66.10 சதவீத வாக்குகளும் பதிவாகின.

 

 

  • ஜம்மு-காஷ்மீரின் லே பகுதியையும், காராகோரம் கணவாய் பகுதியையும் இணைக்கும் வகையில் அண்மையில் சாலை அமைக்கப்பட்டது. இந்தச் சாலை முடிவடையும் பகுதியில் சேவாங் ரிஞ்சேன் பாலம் அமைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் கிழக்கு லடாக் பகுதியில் உள்ள தௌலத் பேக் ஓல்டி பகுதிக்கு துருப்புகளை இனி சுலபமாக அனுப்பி வைக்க முடியும்.

 

 

சர்வதேச நிகழ்வுகள்

 

  • இந்திய விமானப் படையானது ராயல் ஏர் ஃபோர்ஸ் ஓமன் (ராஃபோ) உடன் EX EASTERN BRIDGE – V என பெயரிடப்பட்ட இருதரப்பு கூட்டுப் பயிற்சியில் பங்கேற்கிறது. இது 2019 ஆம் ஆண்டில் அக்டோபர் மாதத்தின் 17-26 தேதிகளில் ஓமனின் விமானப் படை தளமான மசிராவில் நடத்தப்பட இருக்கின்றது.
    • கடைசிப் பயிற்சியான EX EASTERN BRIDGE – IV என்பது 2017 ஆம் ஆண்டில் ஜாம்நகரில் நடத்தப்பட்டது.
    • முதல் முறையாக மிக்-29 போர் விமானம் இந்தியாவுக்கு வெளியே ஒரு சர்வதேசப் பயிற்சியில் பங்கேற்கவுள்ளது.

 

 

அறிவியல் மற்றும் தொழில்நுட்பம்

 

  • செல்லிடப்பேசிகளில் பயன்படுத்தப்படும் லித்தியம்-அயன் பேட்டரிகள் எளிதில் தீப்பிடிக்கும், சூடாகும் என்று புகார்கள் இருந்து வரும் நிலையில், எளிதில் தீப்பிடிக்காத லித்தியம்-அயன் பேட்டரிகளை அமெரிக்க விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.

 

 

  • வெளிநாட்டு செயற்கைகோள்களை விண்ணில் செலுத்துவதில் இந்தியாவுக்குப் போட்டியளிக்கும் வகையில், புதிய ரக வர்த்தக ராக்கெட் சேவையை சீனா தொடங்கியுள்ளது.
    • ‘ஸ்மார்ட் டிராகன் 3’ (எஸ்டி 3) என்று பெயரிடப்பட்டுள்ள இந்த புதிய தலைமுறை ராக்கெட், விண்வெளிக்கு5 டன் எடையளவு பொருள்களை சுமந்து செல்லும் திறன் படைத்ததாகும்.

 

 

  • மின்சக்தி வலையமைப்பின் உடைந்த பகுதியை சரிசெய்ய சர்வதேச விண்வெளி நிலையத்திலிருந்து வெளியே பெண்கள் குழு ஒன்று மிதந்த போது உலகிலேயே முதல் முறையாக பெண்கள் மட்டுமே பங்கேற்ற விண்வெளி நடை பயணம் என்ற ஒரு வரலாற்றுச் சாதனையை அக்குழு படைத்தது.
    • 35 ஆண்டுகளுக்கு முன்பு விண்வெளி நடை பயணம் மேற்கொண்ட அமெரிக்காவின் முதல் பெண் விண்வெளி வீரர் கேத்தி சல்லிவன் இந்த அணிக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

 

 

விளையாட்டு நிகழ்வுகள்

 

  • கனடா வீரர் டெனிஸ் ஷாபோலோவ் ஸ்டாக்ஹோம் ஓபன் பட்டத்தை வென்றுள்ளார். ஸ்டாக்ஹோம் ஓபன் இறுதிப் போட்டியில் பிலிப் கிராஜினோவிக்கை தோற்கடித்தார்.

 

 

ENGLISH CURRENT AFFAIRS

 

NATIONAL NEWS

  • India has highlighted Prime Minister Narendra Modi’s vision of  ‘Sab Ka Saath – Sab Ka Vikas – Sab Ka Vishwas’ for inclusive health along with scheme — Ayushman Bharat, at the on-going two-day G20 Okayama Health Ministers’ Conference in Japan.
    • Related Keys
      • Ayushman Bharath Launched on 23 September 2018.
      • Ayushman Bharath Launched by Pm Modi.
      • Ayushman Bharath CEO – Indu Bhushan.

 

 

  • Defence Minister Rajnath Singh left for Ladakh .He will attend the inaugural ceremony of Col. Chewang Rinchen Setu which has been constructed at an altitude of 14,650 feet in the forward area of Ladakh region.
    • This bridge has been built by the Border Roads Organisation (BRO).
    • Related Keys
      • Ladakh is proposed as a union territory from October 31 2019.

 

 

INTERNATIONAL NEWS

  • Indonesian President Joko Widodo has been sworn into office for his second and final five-year term. Widodo, popularly known as Jokowi, took oath at a ceremony in the capital, Jakarta.
    • Widodo clinched victory with 5 per cent of the vote in the April presidential election.
    • Related Keys
      • Indonesian Currency- Indonesian rupiah
      • Indonesian Capital – Jakarta

 

 

ECONOMY NEWS

  • Foreign portfolio investors (FPIs), have infused a net sum of 5,072 crore rupees into the Indian capital markets this month so far amid the government’s efforts to revive domestic demand.
    • FPIs had invested about 6,558 crore rupees in the domestic capital markets (both equity and debt).

 

SPORTS

  • In badminton, Kuhoo Garg and Dhruv Rawat put up a brilliant effort to win the mixed doubles title at the Egypt International 2019 in Cairo. The unseeded Garg and Rawat held their nerves for a tight 21-16, 22-20 victory over the third seeds Utkarsh Arora and Karishma Wadkar in an all-Indian final.
    • Related Keys
      • Egypt Capital: Cairo
      • Egypt Currency: Egyptian pound

 



IMPORTANT DAYS

  • India observes Police Commemoration Day or National Police day on 21 October every year. On this day in 1959, 10 police personnel were killed in a Chinese attack and the commemoration day is observed to mark the incident.
    • Last year, on this day, the National Police Memorial in New Delhi was dedicated to the nation by PM Modi.

 

 

WORDS OF THE DAY

  • Manifestation – an indication of the existence of some person or thing
    • Similar Words – exhibition, show.
    • Antonyms – hide , conceal.

 

  • Epitome – a person or thing that is a perfect example of a particular quality or type.
    • Similar words – essence , Model
    • Antonyms – complete version , expansion