Today TNPSC Current Affairs October 12 2018

TNPSC Current Affairs: October 2018 – Featured Image

We Shine Daily News

அக்டோபர் 12

தமிழ்

Download Tamil PDF – Click Here
Download English PDF – Click Here

 

தமிழக நிகழ்வுகள்

 

  • ஆசியாவிலேயே மிகப்பெரிய பேருந்து நிலையமான, ஐ.எஸ்.ஓ தரச் சான்றிதழ் பெற்ற கோயம்பேடு பேருந்து நிலையத்திற்கு மறைந்த முதலமைச்சர் எம்.ஜி.ஆர் பெயர் சூட்டப்பட்டுள்ளது.

 

TNPSC Current Affairs: October 2018 – Tamil Nadu News Image

 

இந்திய நிகழ்வுகள்

 

  • விபத்து மேலாண்மை, சுகாதாரம், கல்வி, தகவல் தொடர்பு, வானிலை முன்னறிவிப்பு, மற்றும் நில பயன்பாட்டு திட்டமிடல் போன்ற பல்;வேறு துறைகளில் விண்வெளி பயன்பாடுகளுக்காக புதிய விண்வெளி அறிவியல் மையத்தை (Space Science Center) இஸ்ரோவானது ஜம்மு & காஷ்மீர் மாநிலத்தில் உள்ள ஜம்மு மத்திய பல்கலைக் கழகத்தால் அமைக்க உள்ளது.
    • இம்மையத்திற்கு சதீஸ் தவான் விண்வெளி அறிவியல் மையம் எனப் பெயரிடப்பட்டுள்ளது.

 

TNPSC Current Affairs: October 2018 – National News Image

 

  • மாநிலத்தின் தேயிலை தோட்டங்களில் பணிபுரியும் கர்ப்பினிப் பெண்களுக்கு ஊதிய இழப்பீட்டுத் திட்டத்தை வழங்கும் (tea wage) முதல் மாநிலமாக அசாம் திகழ்கிறது.
    • கர்ப்பிணி பெண்களுக்கு சிறந்த ஆரோக்கியம் மற்றும் ஊட்டச்சத்து பொருட்களை வழங்குவதே இத்திட்டத்தின் நோக்கமாகும். இந்த திட்டத்தின் கீழ், ரூ.12000 ஆனது 4 தவணைகளில் வழங்கப்படும்.

 

TNPSC Current Affairs: October 2018 – National News Image

 

  • மத்திய நிதி அமைச்சகமானது மாறிவரும் வியாபாரச் சூழலுக்கு ஏற்ப போட்டிச் சட்டத்தை (Competition Law) மாற்றியமைப்பதை உறுதி செய்வதற்காக ‘இஞ்செட்டி சீனிவாஸ்’ தலைமையில் 9 உறுப்பினர்கள் கொண்ட போட்டிச் சட்ட சீராய்வுக் குழுவை (competition Law Review Committee)-யை உருவாக்கி உள்ளது.
  • குறிப்பு:
    • போட்டிச் சட்டம் 2002ம் ஆண்டு ஏற்படுத்தப்பட்டது.
    •  இச்சட்டத்தின் கீழ் இந்திய போட்டி ஆணையம் (competition Commission of India) 2003ம் ஆண்டு ஏற்படுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.

 

TNPSC Current Affairs: October 2018 – National News Image

 

உலக நிகழ்வுகள்

 

  • IND – INDO CORPAT – இந்தியா மற்றும் இந்தோனேசியா நாடுகளின் கடற்படைகளுக்கிடையேயான 32வது ஒருங்கிணைந்த ரோந்து (Coordinated Patrol) இந்தோனேசியாவின் பெலவான் நகரில் அக்டோபர் 11 முதல் அக்டோபர் 27 வரை நடைபெறுகிறது.
    • இதன் கீழ் இரு நாடுகளின் கப்பல்களும், விமானங்களும் (Air Craft) சுமார் 236 கடல் மைல்கள் தூரத்திற்கு ரோந்து பணி மேற்கொள்ள உள்ளன.
    • IND – INDO CORPAT – 2002 ஆம் ஆண்டிலிருந்து மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

 

TNPSC Current Affairs: October 2018 – World News Image

 

விளையாட்டு நிகழ்வுகள்

 

  • இந்தோனேஷியாவின் ஜகர்த்தா நகரில் நடைபெற்று வரும் பாரா ஆசிய விளையாட்டு போட்டியில், ஆடவருக்கான உயரம் தாண்டுதலில் இந்தியாவின் சரத் குமார் 1.90 மீட்டர் உயரம் தாண்டி முதலிடம் பிடித்துள்ளார். இந்திய வீரர்களான வருண்பார்த்தி மற்றும் மாரியப்பன் தங்கவேலு முறையே வெள்ளி மற்றும் வெண்கலப் பதக்கத்தை வென்றுள்ளனர்.
    • ஆடவருக்கான 400 மீட்டர் ஓட்டத்தில் இந்தியாவின் ஆனந்தன் குணசேகரன் வெள்ளிப் பதக்கத்தையும், வினய் குமார் வெண்கலப் பதக்கத்தையும் வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

 

TNPSC Current Affairs: October 2018 – Sports News Image

 

அறிவியல் மற்றும் தொழில்நுட்பம்

 

  • அமெரிக்கா, ரஷ்யா, ஜப்பான், ஐரோப்பா, கனடா, பிரேசில் இத்தாலி உள்ளிட்ட 13 நாடுகள் இணைந்து சர்வதேச விண்வெளி ஆய்வு மையம், பூமியிலிருந்து சுமார் 418 கி.மீ. தூரத்தில் அமைந்துள்ளது.
    • இவ்விண்வெளி மையத்தின் கட்டுமான பணிக்கு, இரண்டு விண்வெளி வீரர்களை சுமந்து சென்ற ரஷ்யாவின் “சோயுஸ்” என்ற விண்கலம் தொழில்நுட்ப கோளாறு காரணமாக மத்திய கஜகஸ்தானில் ஷெஷ்காஸ் கானின் நகரத்திற்கு அருகே தரையிறக்கம் செய்யப்பட்டது.

 

TNPSC Current Affairs: October 2018 – Science and Technology News Image

 

விருதுகள்

 

  • ஜம்மு – காஷ்மீரில் பயங்கரவாதிகளுக்கு எதிரான தேடுதல் வேட்டையின் போது, உடலில் குண்டு காயங்கள் பட்டு வீர மரணம் அடைந்த போலீஸ் கான்ஸ்டபிள் மன்சூர் அகமதுக்கு “சவுர்ய சக்ரா” விருது வழங்கப்பட்டுள்ளது.

 

TNPSC Current Affairs: October 2018 – Awards News Image

 

முக்கிய தினங்கள்

 

  • உலக பெண் குழந்தைகள் தினம் – அக்டோபர் 11
    • பெண் குழந்தைகளுக்கான உரிமைகளையும், சுதந்திரத்தையும் பாதுகாக்கப்பட வேண்டிய அவசியத்தை உணர்த்துவதற்காக ஆண்டுதோறும் அக்டோபர் 11 அன்று சர்வதேச பெண் குழந்தைகள் தினமாக அனுசரிக்கப்படுகிறது.
    • அக்டோபர் 11 ஆம் தேதியை பெண் குழந்தைகள் தினமாக ஐ.நா. சபையானது 2011-ல் அறிவித்தது.
    • 2018ம் ஆண்டு சர்வதேச பெண் குழந்தைகள் தினத்தின் கருத்துரு (Theme) – ‘with Her : A Skilled Girl Force’.

 

TNPSC Current Affairs: October 2018 – Important Days News Image

 

ENGLISH CURRENT AFFAIRS

 

NATIONAL NEWS

  • The Union Cabinet chaired by the Prime Minister Shri Narendra Modi has approved the merger of the existing regulatory institutions in the skills space – National Council for Vocational Training (NCVT) and the National Skill Development Agency (NSDA) into the National Council for Vocational Education and Training (NCVET).
    • NCVET will regulate the functioning of entities engaged in vocational education and training, both long-term and short-term and establish minimum standards for the functioning of such entities.

 

  • External Affairs Minister Sushma Swaraj will be participating in the 17th Council of Heads of Government, CHG,meeting of the Shanghai Cooperation Organization to be held in Dushanbe, Tajikistan on 11th to 12th of this month. This will be the second CHG meeting since India became a full member of SCO in June 2017.
    • The leaders will be discussing prospects for further development of SCO and will exchange in-depth views on current international and regional issues.

 

  • Prime Minister Narendra Modi unveiled a 64-feet-tall statue of peasant leader Sir Chhotu Ram at his native village Sampla in Haryana’s Rohtak district. The 64-feet-tall statue has been sculpted by renowned sculptor and Padma Bhushan-recipient Ram Vanji Sutar.
    • Besides unveiling the statue, Prime Minister Modi also inaugurated a rail coach factory in Haryana’s Sonipat.

 

  • India’s first India-Israel Innovation Centre (IIIC), an entrepreneurial technology hub, was launched in The IIIC is a significant step towards facilitating penetration of Israeli companies in India and aims to forge local partnerships and joint ventures between companies from the two countries.
    • The launch of IIIC, at the IoT India Congress in Bengaluru, the first ever in India that aims to meet the long pending need to connect the start-up ecosystems of Israel and India to improve quality.

 

  • The Department of Posts will celebrate the National Postal Week between October 9 and 15 to highlight its role and contribution in the lives of people.
    • The department also celebrated the World Post Day on October 9 to commemorate the establishment of the Universal Postal Union (UPU) in 1874 in the Swiss capital Berne.

 

  • The Indian Space Research Organisation (ISRO) signed an MoU with the Central University of Jammu (CUJ) in Jammu for setting up of the Satish Dhawan Center for Space Science in the University. Another MoU was signed between CUJ and the Central Scientific Instruments Organization (CSIR-CSIO).
    • To create awareness about space research and to motivate young minds to take up research related to space, astronomy, geology, atmospheric sciences and related fields, a two day workshop was also inaugurated at the CUJ campus.

 

  • Delhi government signed a twin-city agreement with the government of Moscow for cooperation in various fields like environment, culture and education, for the next 3 years. The agreement will also help in enhancing friendship and cooperation between the two cities and maintain regular contacts between the two governments.
    • The two governments have mutually agreed to extend the Twining Agreement for a period of 3 years, from November 1, 2018, in environmental protection and air pollution control, cultural and tourism, healthcare, education, sports, transport management and e-governance

 

INTERNATIONAL NEWS

  • Indian Naval Ship Kulish, a Kora class missile corvette, commanded by Commander Deepak Bali and an Indian Dornier (naval maritime time patrol aircraft) from Andaman and Nicobar command entered Belawan harbour, Indonesia for the opening ceremony of the 32nd edition of India – Indonesia coordinated patrol (IND-INDO CORPAT), to be held from 11 – 27 Oct 2018.

 

ECONOMY

  • The government reduced excise duty on jet fuel to 11 % from current 14 % inorder to help the aviation industry that has been affected badly by high fuel prices. The Revenue Department of the Finance Ministry has notified that the excise duty on aviation turbine fuel (ATF) change will come to effect from 12th October 2018.

 

  • The Centre has notified a higher interest rate of 8% for the non-government provident, superannuation, and gratuity funds, effective from October 1. The interest rate on these funds has been raised from 7.6%. The move comes on the back of a hike in small savings rates — by up to 40 basis points for some schemes — that was also made effective from October 1.

 

APPOINTMENTS

  • PHD Chamber of Commerce and Industry (PHDCCI) has announced that Mahesh Y Reddy has taken over as its Secretary General with immediate effect. Earlier, Reddy served as Director General of Infrastructure Industry and Logistics Federation of India for eight years.

 

SPORTS

  • Manu Bhaker became the first shooter from India to claim a gold medal at the Youth Olympic Games taking place in Buenos Aires, Argentina with a spectacular performance in what is being seen as a comeback after a disappointing Asian Games.

 

  • Pistol shooter Saurabh Chaudhary has bagged the Gold Medal in the 10-meter air pistol event in the ongoing Youth Olympic Games in Argentina. In Buenos Aires, the 16-year old blew the field away in the final as he finished a massive Seven and a half points ahead of his closest rival.
    • It is India’s third gold medal in the history of Youth Olympic Games and all three have come in this edition in Buenos Aires.

 

IMPORTANT DAYS

  • International Day of the Girl Child 2018
    • Since 2012, 11 October has been marked as the International Day of the Girl. The theme for International Day of the Girl Child 2018 is ‘With Her: A Skilled Girl Force’.
    • The day aims to highlight and address the needs and challenges girls face, while promoting girls’ empowerment and the fulfillment of their human rights.