Today TNPSC Current Affairs November 30 2019

We Shine Daily News

நவம்பர்­­ 30

தமிழ்

Download Tamil PDF – Click Here

Download English PDF – Click Here

 

தேசிய நிகழ்வுகள்

 

  • ஹரியானாவின் குருகிராமில் உள்ள ‘தகவல் இணைவு மையம்-இந்தியப் பெருங்கடல் பிராந்தியம்’ (Information Fusion Centre-Indian Ocean Region-IFC-IOR) மையத்தில் முதல் சர்வதேச தொடர்பு அதிகாரியாக ஒரு பிரெஞ்சுக் கடற்படை அதிகாரி நியமிக்கப்பட்டுள்ளார்.
    • இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்தில் கடல் பாதைகள் குறித்தத் தரவுகளை இந்த மையம் சேகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.
    • செய்தி துளிகள்
      • உலகின் கடல் வர்த்தகத்தில் 75% மற்றும் உலகளாவிய எண்ணெய் வர்த்தகத்தில் 50% ஆகியன இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்தின் வழியாக நடைபெறுகின்றது.
      • IFC-IOR ஆனது 2018 ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் தொடங்கப்பட்டது.

 

 

  • 3 நாள் இராணுவ இலக்கிய விழாவை (எம்.எல்.எஃப்) பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் 13 டிசம்பர் 2019 அன்று சண்டிகரில் திறந்து வைப்பார். இந்த நிகழ்வு இராணுவ இலக்கியம் மற்றும் அதனுடன் தொடர்புடைய படைப்புகள் தொடர்பான அறிவு பரிமாற்றத்தை வளர்ப்பதற்கும் பாதுகாப்பதற்கும் ஒரு சர்வதேச அளவிலான மன்றத்தை வழங்கும்.
    • செய்தி துளிகள்
      • குறிப்பிடத்தக்க பாதுகாப்பு மற்றும் இலக்கிய ஆசிரியர்களின் 10 புத்தகங்களும் சந்தர்ப்பத்தில் வெளியிடப்படும்.
      • இந்த ஆண்டு, இந்த நிகழ்வு இரண்டாம் உலகப் போரில் பர்மா பிரச்சாரத்தில் இந்திய பங்கேற்பை நினைவுகூரும், இதன் 75வது ஆண்டு நிறைவு அடுத்த ஆண்டு வருகிறது.

 

 

சர்வதேச நிகழ்வுகள்

  • ஃபோர்ப்ஸ் பத்திரிக்கை வெளியிட்டுள்ள உலக முதல் 10 கோடீஸ்வரர்கள் பட்டியலில் இந்தியாவைச் சேர்ந்த முகேஷ் அம்பானிக்கு 9-ஆவது இடம் கிடைத்துள்ளது.
    • சர்வதேச அளவில் பிரபலமாக திகழும் ஃபோர்ப்ஸ் பத்திரிக்கை ஆண்டுதோறும் கோடீஸ்வரர்களின் பட்டியலை வெளியிட்டு வருகிறது.
    • அந்தவகையில், 2019-ஆம் ஆண்டுக்கான உலகின் முதல் 10 கோடீஸ்வரர்களின் பட்டியலை அந்த பத்திரிக்கை தற்போது வெளியிட்டுள்ளது. இதில், இந்தியாவைச் சேர்ந்த ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் தலைவர் முகேஷ் அம்பானி 6,000 கோடி டாலர் (ரூ.4.20 லட்சம் கோடி) சொத்து மதிப்புடன் 9-ஆவது இடத்தைப் பிடித்துள்ளார். அவருடைய நிறுவனப் பங்குகளின் சந்தை மதிப்பு வியாழக்கிழமை வர்த்தகத்தில் ரூ.10 லட்சம் கோடிக்கும் மேல் அதிகரித்து சாதனை படைத்தது.
    • செய்தி துளிகள்
      • இப்பட்டியலில், அமேசான் நிறுவனரும், தலைமைச் செயல் அதிகாரியுமான (சிஇஒ) ஜெஃப் பெஸோஸ் முதலிடத்தில் உள்ளார். இவருடைய நிகர சொத்து மதிப்பு 11,300 கோடி டாலராகும் (இந்திய மதிப்பில் சுமார் ரூ.7.91 லட்சம் கோடி).
      • இவருக்கு அடுத்தபடியாக 10,740 கோடி டாலர் சொத்து மதிப்புடன் மைக்ரோசாஃப்ட் இணை நிறுவனர் பில் கேட்ஸ் இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளார்.

 

 

  • பொதுத் துறையைச் சேர்ந்த இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் (ஐஓபி) புதிய தலைமை நிதி அதிகாரியாக (சிஎஃப்ஓ) புவன் சந்திரா நியமிக்கப்பட்டுள்ளார்.
    • செய்தி துளிகள்
      • இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் தற்போதைய தலைமை நிதி அதிகாரியான ராதா வெங்கடகிருஷ்ணன் நவம்பர் 30-ஆம் தேதி பணியிலிருந்து ஓய்வுபெறுகிறார். இதையடுத்து, தற்போது வங்கியின் பொது மேலாளராகப் பணியாற்றி வரும் புவன் சந்திரா சிஎஃப்ஓ-வாக பதவி உயர்வு பெறவுள்ளார். அவரின் இந்த புதிய பொறுப்பு டிசம்பர் 1-ஆம் தேதி முதல் அமலுக்கு வரவுள்ளதாக இந்தியன் ஓவர்சீஸ் வங்கி அந்த செய்திக் குறிப்பில் கூறியுள்ளது.

 

 

  • ஐ.நா. சபையின் இடம்பெயர்வுக்கான சர்வதேச அமைப்பு ஆனது 2020 ஆம் ஆண்டுக்கான உலக இடம்பெயர்வு அறிக்கையை வெளியிட்டுள்ளது.
    • இந்த அறிக்கையானது சர்வதேச அளவில் இடம்பெயர்ந்தோரின் எண்ணிக்கை 270 மில்லியனாக இருப்பதாக மதிப்பிடுகின்றது.
    • சுமார் 51 மில்லியன் இடம்பெயர்ந்தோர்களைக் கொண்டு அமெரிக்காவனாது இடம்பெயருபவர்கள் தேர்ந்தெடுக்கும் நாடுகளில் முதலிடம் வகிக்கின்றது.
    • செய்தி துளிகள்
      • இந்தியாவிலிருந்து 17.5 மில்லியன் மக்கள் சர்வதேச அளவில் இடம்பெயர்ந்துள்ளனர். இடம்பெயர்வோர் அதிகம் உள்ள நாடுகளில் இந்தியா முதலிடம் வகிக்கின்றது.
      • பணம் அனுப்பும் நாடுகளில் அமெரிக்கா (68.0 பில்லியன் டாலர்), ஐக்கிய அரபு அமீரகம் (44.4 பில்லியன் டாலர்) மற்றும் சவுதி அரேபியா (36.1 பில்லியன் டாலர்) ஆகிய நாடுகள் முன்னிலையில் உள்ளன.
      • அகதிகளை உருவாக்கும் நாடுகளில் சிரியா (6 மில்லியன்) முதலிடத்திலும் அதனையடுத்து ஆப்கானிஸ்தானும் உள்ளன.

 

 

  • நவம்பர் 12-27, 2019 முதல் பாரிஸில் நடைபெறற் 40வது யுனெஸ்கோ பொது மாநாட்டில் மத்திய மனிதவள மற்றும் மேம்பாட்டு அமைச்சர் (எம்.எச்.ஆர்.டி) ஸ்ரீ ரமேஷ் போக்ரியால் ‘நிஷாங்க்’ உரையாற்றினார்.
    • ஐக்கிய நாடுகளின் கல்வி, அறிவியல் மற்றும் கலாச்சார அமைப்பு (யுனெஸ்கோ) பொது மாநாடு வேகமாக மாறிவரும் உலகில் பன்முகத்தன்மையின் எதிர்காலம் குறித்து விவாதித்தது.
    • செய்தி துளிகள்
      • ஐக்கிய நாடுகளின் கல்வி, அறிவியல் மற்றும் கலாச்சார அமைப்பு (யுனெஸ்கோ) பற்றி:
      • தலைமை பொது இயக்குனர் : ஆட்ரி அஸ்வுலே
      • உருவாக்கம் : 4 நவம்பர் 1946
      • தலைமையகம் : பாரிஸ், பிரான்ஸ்

 

 

முக்கிய தினம்

 

  • பாலஸ்தீனிய மக்களுடனான சர்வதேச ஒற்றுமை தினத்தை நினைவுகூரும் வகையில் 27 நவம்பர் அன்று நியூயார்க்கில் உள்ள சர்வதேச சமூகத்தின் தூதர்கள் மற்றும் பிற பிரதிநிதிகளுடன் மூத்த அதிகாரிகள் இணைந்தனர், ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 29 அன்று அதிகாரப்பூர்வமாக அனுசரிக்கப்பட்டது.
    • செய்தி துளிகள்
      • 1977 ஆம் ஆண்டில் நிறுவப்பட்ட இது 1947 ஆம் ஆண்டில் ஐ.நா. பொதுச் சபை பாலஸ்தீனத்தை ஒரு அரபு அரசு மற்றும் யூத அரசாகப் (Jewish State) பிரிக்கும் தீர்மானத்தை நிறைவேற்றிய நாளைக் குறிக்கிறது.

 

திருக்குறள்

குறள் எண் : 33

அதிகாரம் : அறன் வலியுறுத்தல்

குறள் பால் : அறத்துப்பால்

குறள் இயல் : பாயிரம்

ஒல்லும் வகையான் அறவினை ஒவாதே

செல்லும்வாய் எல்லாஞ் செயல்.

விளக்கம் : செய்யக்கூடிய வகையால், எக்காரணத்தாலும் விடாமல்

செல்லுமிடமெல்லாம் அறச்செயலைப் போற்றிச் செய்ய வேண்டும்.

 

ENGLISH CURRENT AFFAIRS

 

NATIONAL NEWS

  • RIL has become the first Indian company to touch a market capitalization (m-cap) of Rs 10 lakh crore as its shares jumped to touch a record high of Rs 1,581 per piece. It was lingering around the Rs 10 lakh crore m-cap for several days before finally reaching the milestone today.
    • Reliance Industries shares again rose 0.70 per cent in early trade to finally surpass Rs 10 lakh crore m-cap.

 

 

  • The three-day NuGen Mobility Summit 2019 was held in Manesar, Haryana from November 27 to 29, 2019. It was organized by International Centre for Automotive Technology (ICAT), based on the theme “Smart & Green Mobility” to find alternative mobility solutions to problems like pollution emanating from vehicular emissions.
    • It was inaugurated by Union Minister of Road Transport & Highways (MoRTH) Nitin Gadkari.
    • Related News
      • ICAT was established in 2006 at Manesar, Haryana.
      • More than 2,500 participants and over 250 exhibitors from 14 countries apart form India are expected to take part in the summit.

 

 

SPORTS

  • Indian archers Deepika Kumari and Anikita Bhakat won the gold and silver medals respectively in the women”s individual recurve event of the 21st Asian Championships. Deepika defeated Ankita 6-0 in the one-sided final.
    • The duo had earlier secured an individual Olympic quota for the country by storming into the semifinals of the event.

                   

 

APPOINTMENTS  

  • H R Khan, former deputy governor of Reserve Bank of India (RBI) has been appointed as first chairman of steering committee panel on Code for Responsible Lending (CRL) in Micro-Credit. Members of panel include: P Satish of Sa-Dhan, Sonia Krishnankutty of L&T Finance, Harsh Shrivastava of MFIN and Srinivas Bonam of IndusInd Bank among others.
    • Related News
      • CRL was launched in September 2019.
      • Code for Responsible Lending is a self-regulatory step for the micro-credit industry making diverse entities like banks, NBFC-MFIs and NBFCs adhere to standards of customer protection

 

 

SCIENCE AND TECH UPDATES

  • Indian Navy test-fired the BrahMos supersonic cruise missile, from the Navy’s stealth destroyer INS Kochi. The supersonic missile successfully hit a decommissioned target ship in Arabian Sea. Moreover, the second ship of Project 15-A ‘Kolkata-class’ guided missile destroyer test-fired advanced missile during a naval drill in west coast.
    • Related News
      • Earlier the BrahMos missile has been successfully test fired twice from INS Kolkata, (one in June 2014 and February 2015
      • BrahMos supersonic missile  has been jointly developed by India and Russia and has been in service with Indian Navy since 2005

 

 

WORDS OF THE DAY

  • bathetic – describes something that’s overly sentimental, gushy, and worse yet insincere
    • Similar Words – anticlimactic , disappointing , disillusioning.
    • Antonyms – unemotional , unmoved.

 

  • befuddle – cause to become unable to think clearly.
    • Similar Words – confused , muddled
    • Antonyms – clear