Today TNPSC Current Affairs November 28 2019

We Shine Daily News

நவம்பர்­­ 28

தமிழ்

Download Tamil PDF – Click Here

Download English PDF – Click Here

 

தமிழக நிகழ்வுகள்

 

  • புதிதாக உருவாக்கப்பட்டுள்ள திருப்பத்தூர், ராணிப்பேட்டை மாவட்டங்களை தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி இன்று தொடக்கி வைக்கிறார்.
    • வேலூர் மாவட்டம் நிர்வாக வசதிக்காக வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர் ஆகியவற்றைத் தலைமையிடமாகக் கொண்டு, மூன்று மாவட்டங்களாகப் பிரிக்கப்பட்டது.
    • செய்தி துளிகள்:
      • வேலூர் மாவட்டத்தில் கே.வி. குப்பத்தை தலைமையிடமாகக் கொண்டு புதிய வட்டமும், வேலூர், காட்பாடி அணைக்கட்டு ஆகிய மூன்று வட்டங்களை உள்ளடக்கி, வேலூர் வருவாய்க் கோட்டமாகவும், மற்றொரு கோட்டமாக குடியாத்தம் கோட்டமும் புதிதாக உருவாக்கப்பட்டுள்ளன. திருப்பத்தூர் மாவட்டத்தில், உள்ள திருப்பத்தூர் கோட்டத்தில் திருப்பத்தூர், நாட்டறம்பள்ளி ஆகிய வட்டங்கள் இடம் பெறுகின்றன. புதிதாக வாணியம்பாடி வருவாய்க் கோட்டம் உருவாகிறது.
      • தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி கலந்துகொண்டு, தமிழகத்தின் 35-ஆவது மாவட்டமாக திருப்பத்தூர் மாவட்டத்தையும், 36-ஆவது மாவட்டமாக ராணிப்பேட்டை மாவட்டத்தையும் தொடக்கி வைக்கிறார்.

 

 

தேசிய நிகழ்வுகள்

 

  • சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே 2019 நவம்பர் 26 அன்று மகாராஷ்டிராவில் அரசாங்கம் அமைப்பதாக உரிமை கோரினார். மகாராஷ்டிராவின் முதல்வராக தாக்கரே நவம்பர் 28 அன்று மும்பையின் தாதர் பகுதியில் உள்ள சிவாஜி பூங்காவில் பதவியேற்க உள்ளார்.
    • செய்தி துளிகள்:
      • உத்தவ் தாக்கரே முதல்வர் பதவியை வகித்த தாக்கரே குடும்பத்தின் முதல் உறுப்பினராவார். அவர் சத்தியப்பிரமாணம் செய்து ஆறு மாதங்களுக்குள் மகாராஷ்டிரா சட்டமன்றம் அல்லது சட்டமன்றத்திற்கு தேர்தலை நாட வேண்டும்.

 

 

  • இ-சிகரெட்டை தடை செய்யும் மசோதா மக்களவையில் நிறைவேறியது. முன்னதாக, இ-சிகரெட் உற்பத்தி, இறக்குமதி, ஏற்றுமதி, பரிமாற்றம், விற்பனை, விநியோகம், சேமிப்பு, விளம்பரம் ஆகியவற்றுக்கு எதிராக கடந்த செப்டம்பர் 18-ஆம் தேதி அவசர சட்டம் பிறப்பிக்கப்பட்டது.
    • செய்தி துளிகள்:
      • இ-சிகரெட்டில் பயன்படுத்தப்படும் ரசாயனங்கள் புற்றுநோய், இருதயநோய்கள் போன்றவற்றை ஏற்படுத்தும். இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் இ-சிகரெட் குறித்து ஒரு வெள்ளை அறிக்கை வெளியிட்டு அதற்கு தடைவிதிக்க கோரியது என்றார்.
      • இந்த மசோதா மூலம் இ-சிகரெட் விற்க, வாங்க தடை விதிக்கப்படுகிறது. முதல் முறையாக தடையை மீறுபவர்களுக்கு ஓராண்டு சிறையும், ரூ.1 லட்சம் அபராதமும் விதிக்கப்படும். மீண்டும் குற்றத்தைத் தொடர்ந்தால், மூன்று ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை அல்லது ரூ.5 லட்சம் அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படும் என்று மசோதாவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

 

விளையாட்டு நிகழ்வுகள்

 

  • ஆசிய வில்வித்தை சாம்பியன்ஷிப் போட்டி காம்பவுண்ட் கலப்பு அணிகள் பிரிவில் இந்தியாவின் அபிஷேக் வர்மா-ஜோதி சுரேகா இணை தங்கம் வென்றது.
    • தாய்லாந்தின் பாங்காக் நகரில் நடைபெறும் 21-ஆவது ஆசிய வில்வித்தை போட்டியில் காம்பவுண்ட் கலப்பு அணிபிரிவு இறுதிச் சுற்று நடைபெற்றது. இதில் அபிஷேக்-ஜோதி சுரேகா வென்னாம் இணை சீன தைபே இணையை வீழ்த்தி தங்கப் பதக்கத்தை கைப்பற்றினார். இப்போட்டியில் இந்திய வீரர்கள் வென்ற ஒரே தங்கம் இதுவாகும்.
    • செய்தி துளிகள்:
      • மகளிர் காம்பவுண்ட் அணிகள் பிரிவிலும் ஜோதி, முஸ்கான் கிரார், பிரியா இணை கொரியாவிடம் வீழ்ந்து வெள்ளி வென்றது. ஏற்கெனவே இப்போட்டியில் இந்திய 4 வெண்கலப் பதக்கங்களை வென்றது. ஏற்கெனவே ஆடவர் அணி ஒலிம்பிக் தகுதியை பெற்றுள்ளது.

 

 

அறிவியல் மற்றும் தொழில்நுட்பம்

 

  • இந்திய விண்வெளி ஆய்வு மையம் (இஸ்ரோ) சார்பில் ஏவப்பட்ட பி.எஸ்.எல்.வி. –சி47 ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது.
    • ஆந்திர மாநிலம், ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவண் விண்வெளி ஆய்வு மையத்தின் இரண்டாவது ஏவுதளத்திலிருந்து, திட்டமிட்டப்படி ராக்கெட் விண்ணில் ஏவப்பட்டது. ராணுவ கண்காணிப்புக்கு உதவும் இந்தியாவின் கார்டோசாட்-3’ உள்பட 14 செயற்கைக்கோள்களும் திட்டமிடப்பட்ட சுற்றுவட்டப் பாதைகளில் செலுத்தப்பட்டன.
    • செய்தி துளிகள்:
      • முதலில் தகவல்தொடர்புக்கு உதவும் (மெஷ்பெட்) செயற்கைக்கோள் பிரித்துவிடப்பட்டது.
      • இந்தத் திட்டத்தைத் தொடர்ந்து, 2020 மார்ச் வரை 13 ராக்கெட் திட்டங்களை இஸ்ரோ செயல்படுத்த உள்ளது. இதில் 6 ராக்கெட் திட்டங்களும், செயற்கைக்கோள்களை விண்ணுக்கு அனுப்பும் 7 திட்டங்களும் அடங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
      • இதுவரை கடந்த 2005-ஆம் ஆண்டு முதல் 8 கார்டோசாட் செயற்கைக்கோள்கள் அனுப்பப்பட்டுள்ளன.
      • இதன் மூலம், இஸ்ரோ விண்ணுக்கு அனுப்பிய வெளிநாட்டு செயற்கைக்கோள்களின் எண்ணிக்கை 310-ஆக அதிகரித்துள்ளது.

 

 

வர்த்தக நிகழ்வுகள்

 

  • சர்வதேச அபிவிருத்தி நிதி நிறுவனமான ஆசிய அபிவிருத்தி வங்கி (Asian Development Bank (ADB)), மாநிலத்தில் மூலதன முதலீடு மற்றும் உள்கட்டமைப்பை உயர்த்துவதற்காக மேற்கு வங்கத்திற்கு கொள்கை அடிப்படையிலான திட்டக் கடனான 150 மில்லியன் டாலர் (சுமார் 1,065 கோடி ரூபாய்) வழங்க ஒப்புதல் அளித்துள்ளது.
    • செய்தி துளிகள்:
      • ஆசிய அபிவிருத்தி வங்கி
      • குறிக்கோள் : ஆசியா மற்றும் பசிபிக் நாடுகளில் வறுமையை எதிர்த்துப் போராடுவது
      • உருவாக்கம் – 19 டிசம்பர் 1966
      • தலைமையகம் – மணிலா, பிலிப்பைன்ஸ்
      • உறுப்பினர் – 68 நாடுகள்
      • முன்னதாக 2019 செப்டம்பரில், ஏடிபி தலைவர் டேகிகோ நகாவோ தனது ராஜினாமாவை அறிவித்துள்ளார். இது 2020 ஜனவரி 16 முதல் அமலுக்கு வரும்.

 

 

திருக்குறள்

 

குறள் எண் : 31

அதிகாரம் : அறன்; வலியுறுத்தல்

குறள் பால் : அறத்துப்பால்

குறள் இயல் : பாயிரம்

சிறப்பு ஈனும் செல்வமும் ஈனும் அறத்தினூஉங்கு

ஆக்கம் எவனோ உயிர்க்கு

விளக்கம் : அறம், நான்கு பேர் முன் நமக்கு மேன்மையைத் தரும், நல்ல செல்வத்தையும் கொடுக்கும். இத்தகைய அறத்தைக் காட்டிலும் மேன்மையானது நமக்கு உண்டா?

 

ENGLISH CURRENT AFFAIRS

 

NATIONAL NEWS       

  • Parliament has passed National Institute of Design (Amendment) Bill, 2019, with the Lok Sabha approving it on 26 November 2019. The bill was already passed by Rajya Sabha on 6 August 2019, Now it is placed before President to seek his assent, before it becomes a law.
    • The bill also seeks the declaration 4 National Institutes of Design (NID) as institutions of national importance.
    • Related News
      • These institutes are registered as Societies under Societies Registration Act, 1860.

 

 

  • The Centre for Water Resources Development and Management (CWRDM), operating under the Government of Kerala has launched the “Water 4 Change”. Under the project, six prominent institutions from Netherlands will perform a long-term research and field level action on urban water management systems along with Indian scientists.
    • The project will bring solutions for water problems in the cities of Kozhikode, Shimla, Bhuj and Bhopal.
    • Related News
      • CWRDM is a premier R & D institution in the water sector established by the Government of Kerala under its Science and Technology Policy in February 1978.
      • CWRDM has substantially contributed to the scientific hydrologic studies and water management in the region.

 

 

  • Union Cabinet has approved the Memorandum of Understanding (MoU) signed between India and Myanmar on bilateral cooperation for Prevention of Trafficking in Persons; Rescue, Recovery, Repatriation and Re-integration of victims of Trafficking. The cabinet was chaired by Prime Minister Narendra Modi.
    • Related News
      • Myanmar Currency: Burmese kyat
      • Myanmar President : Win Myint.

 

 

  • Parliament has passed the Transgender Persons (Protection of Rights) Bill 2019 with the Rajya Sabha approving it by a voice vote on 26 November 2019. The bill was already passed by the 17th Lok Sabha on 5 August 2019. now The bill waits Presidential approval.
    • Related News
      • As per the present bill, the punishment for sexual abuses of transgenders is 6 months to 2 years, however, many agree that the duration of punishment must be increased for sexual abuses.

 

 

INTERNATIONAL NEWS

  • Israel-India Conference on Water aim is to strengthen India-Israel cooperation on water and sewage areas. The conference will be attended by the Israel Energy Minister Dr. Yuval Steinitz and the Indian Federal Minister of Water Mr. Gajendra Singh Shekhawat, Water Ministers of the Uttar Pradesh, Rajasthan and Andhra Pradesh states as well as government and water companies from Israel and India interested in collaboration.
    • Related News
      • Israel President : Reuven Rivlin
      • Israel Capital : Jerusalem

 

 

WORDS OF THE DAY

  • Xenial – used to describe a friendly relationship between two parties
    • Similar Words – matey , pally
    • Antonyms – unfriendly

 

  • Yearning – a feeling of intense longing for something.
    • Similar Words – longing , craving , desire.
    • Antonyms – aversion, disfavor.