Today TNPSC Current Affairs November 27 2019

We Shine Daily News

நவம்பர்­­ 27

தமிழ்

Download Tamil PDF – Click Here

Download English PDF – Click Here

 

தமிழக நிகழ்வுகள்

 

 • நியாய விலைக் கடைகளில் அரிசி பெறும் அட்டைதாரர்கள் அனைவருக்கும் பொங்கல் பரிசுத் தொகுப்புடன் தலா ரூ.1,000 ரொக்கமாக வழங்கப்படும் என்று கள்ளக்குறிச்சியில் முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி அறிவித்தார்.

 

 

தேசிய நிகழ்வுகள்

 

 • இந்த ஆண்டில் ஜம்மு காஷ்மீர் ஒன்றியப் பிரதேசமானது பிரதான் மந்திரி கிராமீன் சதக் யோஜனா (Pradhan Mantri Grameen Sadak Yojana – PMGSY) என்ற திட்டத்தின் கீழ் நாட்டில் மிக அதிகத் தொலைவு கொண்ட சாலை வசதிகளை ஏற்படுத்தி சாதனை படைத்து இருக்கின்றது.
  • இப்பகுதியானது இதுவரையில் 1,838 வாழ்விடங்களை உள்ளடக்கிய 11,400 கிலோ மீட்டர் சாலை வசதியைக் கொண்டிருக்கின்றது.
  • செய்தி துளிகள்:
   • PMGSY என்பது நாட்டில் சாலை வசதியால் இணைக்கப்படாத கிராமங்களுக்கு சிறந்த, அனைத்து வானிலைகளையும் தாங்கக் கூடிய சாலை இணைப்பை வழங்குவதற்காக மத்திய அரசால் தொடங்கப்பட்ட ஒரு முன்னெடுப்பாகும்.
   • இது 2000 ஆம் ஆண்டில் அப்போதையப் பிரதமரான ஏபி வாஜ்பாயின் ஆட்சிக் காலத்தில் தொடங்கப்பட்டது.

 

 

 • ஊழல் தடுப்பு அமைப்பான லோக்பால் குழுவின் சின்னம் (லோகோ) மற்றும் குறிக்கோள் வாசகம் செவ்வாய்க்கிழமை(26.11.2019) தேர்வு செய்யப்பட்டது.
  • தேசிய அளவில் அரசு அதிகாரிகளுக்கு எதிரான ஊழல் வழக்குகளை கையாளும் வகையில் ஏற்படுத்தப்பட்ட அமைப்பு லோக்பால் குழு.
  • லோக்பால் அமைப்பின் தலைவராக நீதிபதி பினாக்கி சந்திரகோஷ் நியமிக்கப்பட்டு, மார்ச் 23-இல் அவருக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். இதன் தொடர்ச்சியாக லோக்பால் குழுவில் 8 உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டு மார்ச் 27-இல் பொறுப்பேற்றுக் கொண்டனர்.
  • செய்தி துளிகள்:
   • இந்நிலையில், லோக்பால் குழுவுக்கு புதிய சின்னமும், வாசகமும் தேவைப்பட்ட நிலையில் இதுதொடர்பான திறந்தநிலை போட்டி அறிவிக்கப்பட்டிருந்தது.
   • ‘யாருடைய செல்வத்திற்கும் பேராசை கொள்ளாதீர்’ என்ற சமஸ்கிருத வாசகம் லோக்பாலுக்கான குறிக்கோளாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.

 

 

 • ஆபத்தான பிணந்தின்னிக் கழுகுகளைப் பாதுகாப்பதற்கான ஒரு முக்கிய படியாக, உத்தரபிரதேச அரசு மகாராஜ்கஞ்ச் மாவட்டத்தின் ஃபரேண்டா பகுதியில் மாநிலத்தின் முதல் பிணந்தின்னிக் கழுகு பாதுகாப்பு மற்றும் இனப்பெருக்க மையத்தை அமைக்கும்.
  • செய்தி துளிகள்:
   • சுற்றுச்சூழல் அமைச்சரின் கூற்றுப்படி, நாட்டில் பிணந்தின்னிக் கழுகுகளின் எண்ணிக்கையில் கூர்மையான சரிவு ஏற்பட்டுள்ளது, இது மூன்று தசாப்தங்களுக்கும் மேலாக 40 மில்லியனிலிருந்து 19,000 ஆக குறைந்துள்ளது.

 

 

சர்வதேச நிகழ்வுகள்

 

 • பொருளாதார மற்றும் சமூக உள்ளடக்கம் ஆகியவற்றின் அடிப்படையில், உலகில் உள்ள 113 நகரங்களில் இந்தியாவில் உள்ள பெங்களுரு நகரமானது நாட்டின் மிகவும் முன்னணியில் உள்ள ஒரு தரவரிசைப்படுத்தப்பட்ட நகரமாக (அந்நகரின் தரவரிசை 83) உருவெடுத்துள்ளது.
  • வளமை மற்றும் உள்ளடக்கல் நகர முத்திரை மற்றும் விருதுகள் (Prosperity & Inclusion City Seal and Awards – PICSA) குறியீடானது முதன்முறையாக பாஸ்க் நிறுவனங்கள் மற்றும் டி ரூ எல் பங்காளர்கள் ஆகியவற்றால் ஏற்படுத்தப்பட்டது.
  • செய்தி துளிகள்:
   • இந்தப் பட்டியலில் ஜூரிச் (சுவிட்சர்லாந்து) முதலிடத்திலும் வியன்னா (ஆஸ்திரியா) இரண்டாவது இடத்திலும் கோபன்ஹேகன் (டென்மார்க்) மூன்றாவது இடத்திலும் உள்ளன.
   • இந்தப் பட்டியலில் தில்லி 101வது இடத்திலும் மும்பை 107 இடத்திலும் உள்ள மற்ற இந்திய நகரங்களாகும்.

 

 

நியமனங்கள்

 

 • தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகப் புதிய துணைவேந்தராக பேராசிரியர் என்.பஞ்சநாதம் நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான உத்தரவை பல்கலைக்கழக வேந்தரும், தமிழக ஆளுநருமான பன்வாரிலால் புரோஹித் செவ்வாய்க்கிழமை பிறப்பித்தார்.
  • செய்தி துளிகள்:
   • 2017-ஆம் ஆண்டில் மும்பை ஐஐடி – இந்திய கணினி சமூகத்தின் தலைசிறந்த பேராசிரியர் விருதையும் பஞ்சநாதம் பெற்றுள்ளார். 2018-ஆம் ஆண்டில் இந்திய சர்வதேச மேலாண்மை ஆராய்ச்சியாளர் சங்கத்தின் தலைசிறந்த மேலாண்மை ஆராய்ச்சி வழிகாட்டுநருக்கான விருதையும் இவர் பெற்றுள்ளார்.
   • இப்போது தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகத் துணைவேந்தராக நியமிக்கப்பட்டிருக்கும் இவர், தொடர்ந்து மூன்று ஆண்டுகள் அந்தப் பொறுப்பில் இருப்பார்.

 

 

அறிவியல் மற்றும் தொழில்நுட்பம்

 

 • இந்தியாவின் கார்டோசாட் செயற்கைக்கோள் மற்றும் அமெரிக்காவின் 13 சிறிய ரக செயற்கைக்கோள்களைச் சுமந்தபடி பி.எஸ்.எல்.வி-சி47 ராக்கெட் புதன்கிழமை விண்ணில் பாய்கிறது.
  • ஆந்திர மாநிலம், ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவண் விண்வெளி மையத்தின் இரண்டாவது ஏவுதளத்திலிருந்து ராக்கெட் விண்ணில் ஏவப்பட உள்ளது. இதற்கான 26 மணி நேர கவுன்ட்-டவுண் தொடங்கப்பட்டது.
  • செய்தி துளிகள்:
   • 1,625 கிலோ எடை கொண்ட இந்த மூன்றாம் தலைமுறை அதிநவீன கார்டோசாட்-3 செயற்கைக்கோள், புவியிலிருந்து 509 கி.மீ. தொலைவிலான சுற்றுவட்டப் பாதையில்5 கோணத்தில் நிலைநிறுத்தப்பட உள்ளது. அங்கிருந்தபடி, புவியைக் கண்காணிப்பதுடன் உயர் தரத்திலான புகைப்படத்தை எடுத்தனுப்பும் திறன் கொண்டது.
   • இந்த கார்டோசாட்-3 செயற்கைக்கோளுடன் அமெரிக்காவுக்கு சொந்தமான 13 சிறிய ரக செயற்கைக்கோள்களையும் பி.எஸ்.எல்.வி. சி-47 ராக்கெட் சுமந்து செல்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

 

 

முக்கிய தினங்கள்

 

 • ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 26 ஆம் தேதி டாக்டர் வெர்கீஸ் குரியனின் பிறந்த நாளில் தேசிய பால் தினம் நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. இந்த நாள் இந்தியாவில் வெள்ளை புரட்சியின் தந்தை வர்கீஸ் குரியனின் பிறந்த நாளைக் குறிக்கிறது. இந்த ஆண்டு டாக்டர் குரியனின் 98 வது பிறந்த நாளை இந்தியா கொண்டாடப்படுகிறது.

 

 

திருக்குறள்

 

குறள் எண் : 30

அதிகாரம் : நீத்தார் பெருமை

குறள் பால் : அறத்துப்பால்

குறள் இயல் : பாயிரம்

அந்தணர் என்போர் அறவோர்மற் றெவ்வுயிர்க்கும்

செந்தண்மை பூண்டொழுக லான்.

விளக்கம் : எல்லா உயிர்களிடத்தில் செம்மையான அருளை மேற்கொண்டு ஒழுகுவதால் அறவோரே அந்தணர் எனப்படுவோர் ஆவர்.

 

ENGLISH CURRENT AFFAIRS

NATIONAL NEWS

 • The Child Rights and You recently released a report “How Vulnerable are Children in India to crime?” The report was based on the analysis of National Crime Records Bureau for 2016-17.
  • The report says that the states of Madhya Pradesh and Uttar Pradesh topped the list of states for crimes against children. There were over 19,000 cases in both the states.

 

 

 • India aims to conduct a unique naval exercise for which an invitation has been extended to 41 countries who are otherwise unlikely partners.
  • “The Naval Exercise ‘MILAN 2020’ is scheduled to be held at Visakhapatnam in March 2020 in which 41 countries have been invited.
  • Related Keys
   • Milan is a multilateral naval exercise hosted by the Indian Navy under the aegis of the Andaman and Nicobar Command.
   • Milan was first held in 1995.
   • The most recent edition of Milan was held at Port Blair from 6-13 March 2018.

 

 

 • The Inter-Ministerial Approval Committee chaired by Minister of Food Processing Shri Harsimrat Kaur has sanctioned Rs 271 crores for the CEFPPC scheme (Creation/Expansion of Food Processing and Preservation Capacities) scheme.
  • The aim of the scheme is to create direct employment that will help in achieving India’s goal of doubling farmers income by 2022. It expected that the project would create 9000 employment.
  • Related Keys
   • PM Krishi Sampada Yojana (PMKSY) is being implemented by the Ministry of Food Processing.
   • Under the scheme, subsidies are provided in terms of grants-in-aid that ranges between 35% and 75% according to the project.

 

 

 • The Uttar Pradesh Government has launched a three-day campaign against Filaria as GoI has set a target of eradicating Filaria completely by 2021. The campaign began on November 25, 2019 and is to run till December 10, 2019.
  • The campaign will cover 47 districts and will aim at eradicating Filaria from Uttar Pradesh.
  • Related Keys
   • Filaria is spread through Culex fatigans female mosquito. The disease is caused by the Filarioidea type roundworms.
   • In June 2018, India hosted the Global Alliance to eliminate Filariasis. The meeting was held in New Delhi.

 

 

INTERNATIONAL NEWS

 • The last surviving Sumatran Rhino in Malaysia, Iman, died in Borneo Rhino Sanctuary. The Rhino died of cancer. With this Sumatran rhino have become extinct in Malaysia. Iman was captured in 2014 from Danum Valley in Malaysia.
  • Related Keys
   • The Sumatran Rhinos are the smallest of the five extant rhino species in the world.
   • The International Union of Conservation of Nature Red List has put the Sumatran Rhinos in the Critically Endangered category.

 

 

WORDS OF THE DAY

 • Wrangle – a dispute or argument, typically one that is long and complicated.
  • Similar Word – disagreement , quarrel.
  • Antonyms – agree.

 

 • Waggish – humorous in a playful or mischievous manner.
  • Similar words – playful , roguish.
  • Antonyms – sober, staid.

 


FaceBook Updates

WeShine on YouTube