Today TNPSC Current Affairs November 21 2019

We Shine Daily News

நவம்பர்­­ 21

தமிழ்

Download Tamil PDF – Click Here

Download English PDF – Click Here

 

தமிழக நிகழ்வுகள்

 

  • தமிழகத்தில் மாநகராட்சி மேயர், நகராட்சி, பேரூராட்சித் தலைவர்கள் உள்ளிட்ட உள்ளாட்சி அமைப்புகளுக்கான பதவிகளுக்கு மறைமுகத் தேர்தல் மூலமாகத் தேர்வு செய்வதற்கான அவசரச் சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்தச் சட்டத்துக்கு தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் ஒப்புதல் தெரிவித்துள்ளார்.
    • செய்தி துளிகள்:
      • மாநகராட்சி மேயர், நகராட்சி, பேரூராட்சித் தலைவர்களை நேரடியாக வாக்காளர்களே தேர்வு செய்வதற்கான சட்டம் கடந்த ஆண்டு நிறைவேற்றப்பட்டது.
      • சென்னை மாநகராட்சிகள் சட்டம், தமிழ்நாடு மாவட்ட நகராட்சிகள் சட்டம் ஆகியவற்றில் திருத்தங்கள் செய்யப்பட்டுள்ளன. இந்த திருத்த சட்ட மசோதாவுக்கு ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் ஒப்புதல் அளித்துள்ளார்.

 

 

தேசிய நிகழ்வுகள்

 

  • சபரிமலை ஐயப்பன் கோயிலை நிர்வகிக் தனிச்சட்டம் இயற்றுமாறு கேரள அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
    • கேரள மாநிலம் பத்தனம் திட்டாமாவட்டத்திலுள்ள சபரிமலை ஐயப்பன் கோயிலை நிர்வகிப்பது தொடர்பாகக் கடந்த 2011 – ஆம் ஆண்டு உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டது. இதன் மீதான விசாரணை, உச்சநீதிமன்ற நீதிபதிகள் என்.வி.ர மணா தலைமையிலான அமர்வு முன் புதன்கிழமை நடைபெற்றது.
    • செய்தி துளிகள்:
      • சபரி மலையில் அனைத்து வயதுப் பெண்களும் வழிபாடு நடத்த அனுமதி அளித்த உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை மறு ஆய்வு செய்யக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை, 7 நீதிபதிகள் அமர்வுக்கு மாற்றி உச்சநீதி மன்றம் அண்மையில் உத்தரவிட்டது நினைவுகூரத்தக்கது.

 

 

  • சீட்டு நிதி நிறுவன சட்ட திருத்த மசோதாவுக்கு மக்களவை ஒப்புதல் அளித்தது.
    • தனி நபராலும், 4 பேரை விட குறைவான பங்குதாரர்களாலும் நிர்வகிக்கப்படும் சீட்டு நிதி நிறுவனங்கள் வசூலிக்கும் தொகையை ரூ.1 லட்சத்தில் இருந்து ரூ.3 லட்சமாக உயர்த்துவதற்கு மசோதாவில் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
    • இதேபோல், 4 பேருக்கும் அதிகமான பங்குதாரர்களைக் கொண்ட சீட்டு நிதி நிறுவனம் வசூலிக்கும் தொகை ரூ.6 லட்சத்தில் இருந்து 18 லட்சமாக உயர்த்துவதற்கு இந்த மசோதா பரிந்துரை செய்துள்ளது.
    • செய்தி துளிகள்:
      • இதுமட்டுமன்றி, நிதி நிறுவனத்தின் முகவருக்கான கமிஷன் தொகையை 5 சதவீதத்தில் இருந்து 7 சதவீதமாக உயர்த்துவதற்கு மசோதா பரிந்துரை செய்துள்ளது.
      • நிதி நிறுவனங்களின் செயல்பாடுகளுக்கு மதிப்பளிக்கும் வகையில், 2019- ஆண்டைய சீட்டு நிதி சட்டதிருத்த மசோதாவில் ‘கடன் வழங்கும் நிறுவனம்’இ ‘கூட்டு நிதி’ போன்ற வார்த்தைகள் சேர்க்கப்பட்டுள்ளன என்றார்.
      • மத்திய நிதித் துறை இணையமைச்சர் அனுராக்தாக்குர்.

 

 

  • இந்திய விமானப் படையிடம் 3 ரஃபேல் போர் விமானங்களை பிரான்ஸ் அரசு ஒப்படைத்துள்ளது.பிரான்ஸில் அந்தப் போர் விமானங்களில் இந்திய விமானப் படை வீரர்கள் மற்றும் பொறியாளர்களுக்குப் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது’ என்று பாதுகாப்புத் துறை இணையமைச்சர் ஸ்ரீபாத் நாயக்இ மக்களவையில் கூறினார்.
    • செய்தி துளிகள்:
      • பிரான்ஸின் டஸால்ட் ஏவியேஷன் நிறுவனத்திடம் இருந்து இந்திய விமானப் படைக்கு ரூ.59,000 கோடியில் 36 ரஃபேல் போர் விமானங்களைக் கொள்முதல் செய்வதற்கு கடந்த 2016-ஆம் ஆண்டில் ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது.
      • இந்நிலையில், முதல் ரஃபேல் விமானம், பிரான்ஸில் உள்ள ஒரு விமானப் படைத் தளத்தில் பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கிடம் கடந்த அக்டோபர் 8-ஆம் தேதி ஒப்படைக்கப்பட்டது. இதேபோல், இதுவரை மொத்தம் 3 ரஃபேல் போர் விமானங்கள், இந்திய விமானப் படையிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.

 

 

  • உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட ‘பிருத்வி-2’ ஏவுகணை புதன்கிழமை இரவில் வெற்றிகரமாக பரிசோதிக்கப்பட்டது.
    • இந்த ஏவுகணை 500 கிலோ முதுல் 1,000 கிலோ எடையுள்ள அணு ஆயுதத்தை தாங்கிச் சென்று நிலத்தில் 350கி.மீ, தொலைவில் உள்ள இலக்கை தாக்கி அழிக்கும் திறன் கொண்டதாகும்.
    • செய்தி துளிகள்:
      • ஒடிஸா மாநிலம், சந்திப்பூரில் உள்ள ஒருங்கிணைந்த பரிசோதனை தளத்தில் புதன்கிழமை இரவில் இரண்டு ‘பிருத்வி-2’ ஏவுகணைகள் வெற்றிகரமாக ராணுவத்தால் பரிசோதிக்கப்பட்டன.

 

 

  • மக்கள் தொகை கணக்கெடுப்பு 2021, 16 மொழிகளில் நடத்தப்படும் என்று மத்திய உள்துறை இணை அமைச்சர் நித்யானந்த் ராய் தெரிவித்தார்.
    • மக்கள் தொகை கணக்கெடுப்பு 2021 இன் போது, தரவு சேகரிப்புக்கு மிக்ஸ் மோட் அணுகுமுறை பின்பற்றப்படுகிறது. 2020 ஏப்ரல் முதல் செப்டம்பர் வரை வீடு பட்டியல் மற்றும் வீட்டுவசதி கணக்கெடுப்பு மற்றும் 2021 பிப்ரவரி 09-28 காலப்பகுதியில் மக்கள் தொகை கணக்கெடுப்பு என இரண்டு கட்டங்களாக கணக்கெடுப்பு நடத்தப்படும்.
    • செய்தி துளிகள்:
      • 16 மொழிகளில் மக்கள் தொகை கணக்கெடுப்பு 2021 நடத்த23 கோடி ரூபாய் செலவாகும் என செலவு நிதிக் குழுவால் (Expenditure Finance Committee (EFC)) கணக்கிடப்பட்டுள்ளது.
      • தலைமைப் பதிவாளர் மற்றும் இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு ஆணையர் : விவேக் ஜோஷி

 

 

சர்வதேச நிகழ்வுகள்

 

  • இலங்கையின் புதிய பிரதமராக முன்னாள் அதிபர் மகிந்த ராஜபட்ச நவ.21 பொறுப்பேற்கிறார்.
    • இலங்கையில் கடந்த சனிக்கிழமை (16.11.2019) நடைபெற்ற அதிபர் தேர்தலில், முன்னாள் பாதுகாப்புச் செயலாளரான கோத்தபய ராஜபட்ச வெற்றி பெற்றார்.
    • அதையடுத்து, நாட்டின் 8-ஆவது அதிபராக கோத்தபய ராஜபட்ச கடந்த திங்கள்கிழமை (18.11.2019) பொறுப்பேற்றார்.
    • செய்தி துளிகள்:
      • கடந்த 2005-ஆம் ஆண்டு முதல் 2015-ஆம் ஆண்டு வரை அதிபராகப் பொறுப்பு வகித்த மிகந்த ராஜபட்ச, தெற்காசியாவில் மிக நீண்ட காலம் அதிபர் பொறுப்பை வகித்தவர் ஆவார். அத்துடன், தனது 24-ஆவது வயதில் (1970-ஆம் ஆண்டு) நாடாளுமன்ற உறுப்பினரான அவர்தான், இலங்கையில் அந்தப் பொறுப்பை ஏற்ற மிக இளைய வயதினர் ஆவார்.

 

 

  • சிங்கப்பூரின் ஏவுகணைகளை ஒடிஸா மாநிலம் சந்திப்பூரில் உள்ள ஒருங்கிணைந்த ஏவுகணை சோதனை தளத்தில் பரிசோதித்துப் பார்ப்பதற்கு அனுமதி அளிக்கும் வகையிலான புரிந்துணர்வு ஒப்பந்தம் இந்தியா-சிங்கப்பூர் இடையே கையெழுத்தானது.
    • சந்திப்பூர் பரிசோதனை தளத்தில் பிற நாடுகளுக்கு இந்தியா அனுமதி அளிப்பது இதுவே முதல்முறையாகும்.
      • செய்தி துளிகள்:
      • இந்தியா-சிங்கப்பூர்-தாய்லாந்து நாடுகளின் கடற்படைகள் பங்கேற்கும் முத்தரப்பு கடற்படை பயிற்சி 2020-ஆம் ஆண்டு முதல் ஆண்டுதோறும் நடத்துவதென இந்தியா-சிங்கப்பூர் முடிவு செய்துள்ளது.
      • இந்தோ-பசிபிக் கடற்பகுதியின் பாதுகாப்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாக, இந்தியா-சிங்கப்பூர்-தாய்லாந்து நாடுகள் பங்கேற்ற முதல் முத்தரப்பு கடற்படை பயிற்சி (சிட்மெக்ஸ்) கடந்த செப்டம்பர் மாதம் அந்தமான் கடற்பகுதியில் நடைபெற்றது

 

 

முக்கிய தினங்கள்

 

  • உலக குழந்தைகள் தினம் முதன்முதலில் 1954 ஆம் ஆண்டில் நவம்பர் 20 ஆம் தேதியை யுனிவர்சல் குழந்தைகள் தினமாக நிறுவப்பட்டது மற்றும் ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 20 ஆம் தேதி சர்வதேச ஒற்றுமை, உலகளாவிய குழந்தைகளிடையே விழிப்புணர்வு மற்றும் குழந்தைகளின் நலநன மேம்படுத்துவதற்காக கொண்டாடப்படுகிறது.

 

 

திருக்குறள்

குறள் எண் : 24

குறள் அதிகாரம்  : நீத்தார் பெருமை

குறள் பால்    : அறத்துப்பால்

குறள் இயல்                : பாயிரம்

உரனென்னும் தோட்டியான் ஒரைந்தும் காப்பான்

வரனென்னும் வைப்பிற்கோர் வித்து

விளக்கம் : அறிவு என்னும் கருவியினால் ஐம்பொறிகளாகிய யானைகளை அடக்கி காக்க வல்லவன், மேலான வீட்டிற்கு விதை போன்றவன்

 

ENGLISH CURRENT AFFAIRS

 

NATIONAL NEWS

  • The Centre and Asian Development Bank (ADB) has signed an agreement to extend 91 million US dollar loan to modernize the Vijayanagara Channel Irrigation Systems and prepare river basin management plans in the Krishna river basin.
    • This is expected to improve irrigation water use efficiency and contribute to improving sustainable water security in Karnataka.
    • Related Keys
      • Asian Development Bank (ADB) is a regional development bank established on 19 December 1966
      • In September India and ADB sign 200-million dollar loan agreement for upgrading roads in Maharashtra.

 

 

  • Union Minister of State for Home Affairs Nityanand Rai informed that Census 2021 will be conducted in 16 languages. During Census 2021, a mix mode approach is being adopted for data collection.
    • Census will be conducted in two phases – House-listing and Housing Census from April to September 2020 and Population Enumeration during February 09-28, 2021.
    • Related Keys
      • All the censuses since 1951 were conducted under the 1948 Census of India Act.
      • The last census was held in 2011

 

 

  • The Government of India will expand the 3S programme-Smart Safety Surveillance of WHO in the country. The expansion is being done to make sure the vaccines distributed under universal immunization programme are safe and also to optimize post-marketing surveillance of priority drugs.
    • Related Keys
      • The key stakeholders of 3S programme include Ministry of Health and Central Drugs Standard Control Organization (CDSCO).
      • GoI will also expand the coverage of PCV (Pneumonal Conjugate Vaccine) to all states by 2022 under 3S programme.

 

 

INTERNATIONAL NEWS

  • Microsoft’s India-born CEO Satya Nadella has grabbed the top spot in Fortune’s “Businessperson of the Year 2019” list. Other Indian-origin CEOs in the Top 20 list are Mastercard CEO Ajay Banga (8th spot) and Santa Clara, California-based computer networking company Arista’s head Jayshree Ullal (18th position).
    • Related Keys
      • Microsoft Founded April 4, 1975;
      • Microsoft Founders: Bill Gates, Paul Allen
      • Microsoft Headquarters: Redmond, Washington, United States

 

 

SCIENCE AND TECH UPDATES

  • Scientists at NASA have detected water vapour for the first time above the surface of Europa, a finding that supports the idea of a liquid water ocean sloshing beneath the miles-thick ice shell of the Jupiter’s moon.
    • Using the M. Keck Observatory in Hawaii, scientists were able to measure the water vapor.
    • Related Keys
      • NASA Formed – July 29, 1958
      • NASA Headquarters – Washington, D.C., United States.

 

 

WORDS OF THE DAY

  • ravage – cause severe and extensive damage to someone or Something
    • Similar Words – devastate , ruin.
    • Antonyms – conserve, preserve.

 

  • Rebellious – showing a desire to resist authority, control, or convention.
    • Similar Words – defiant , disobedient.
    • Antonyms – obedient , conformist