Today TNPSC Current Affairs November 20 2019

We Shine Daily News

நவம்பர்­­ 20

தமிழ்

Download Tamil PDF – Click Here

Download English PDF – Click Here

 

தமிழக நிகழ்வுகள்

 

 • மாநகராட்சி மேயர் உள்ளிட்ட உள்ளாட்சித் தலைவர் பதவிகளுக்கு மறைமுகத் தேர்தல் நடத்துவது குறித்து தமிழக அமைச்சரவைக் கூட்டத்தில் செவ்வாய்க்கிழமை (19.11.2019) ஆலோசிக்கப்பட்டது.
  • தமிழக அமைச்சரவைக் கூட்டம் முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி தலைமையில் செவ்வாய்க்கிழமை (19.11.2019) நடைபெற்றது.
  • இந்தக் கூட்டத்தில், உயர்கல்வி, தொழில், உள்ளாட்சி ஆகிய துறைகளில் முக்கிய முடிவுகளை எடுப்பது குறித்து விவாதிக்கப்பட்டது.
  • செய்தி துளிகள்
   • எந்தெந்த காலகட்டங்கள்……
   • மேயர் உள்ளிட்ட உள்ளாட்சி அமைப்புகளுக்கு நேரடி மற்றும் மறைமுகத் தேர்தல்கள் நடத்தப்பட்ட ஆண்டுகள் விவரம்:
   • 1986 முதல் 2001 வரை நேரடி தேர்தல் முறை
   • 2006 மறைமுகத் தேர்தல்
   • 2011 நேரடி தேர்தல்

 

 

தேசிய நிகழ்வுகள்

 

 • பஞ்சாப் மாநிலத்தில் உள்ள ஜாலியன்வாலா பாக் தேசிய நினைவிடத்தை நிர்வகிக்கும் அறக்கட்டளையின் அறங்காவலராக காங்கிரஸ் கட்சியின் தலைவர் அங்கம் வகித்து வந்த நிலையில், அதனை நீக்குவதற்கான மசோதா நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது.
  • ஜாலியன்வாலா பாக் தேசிய நினைவிட சட்டத் திருத்த மசோதா’ என்ற பெயரிலான அந்த மசோதா, மக்களவையில் கடந்த ஆகஸ்ட் மாதம் 2-ஆம் தேதி நிறைவேற்றப்பட்டிருந்தது.
  • செய்தி துளிகள்:
   • தேசிய நினைவுச்சின்னச் சட்டம், 1951, அறங்காவலர்கள் காங்கிரஸ் தலைவர்களாக இருப்பார்கள் என கூறுகிறது.
   • ஜாலியன் வாலா பாக் அறக்கட்டளை கடந்த 1951-இல் உருவாக்கப்பட்டது.

 

 

 • ஹரியானா மாநிலமானது பவந்தர் பார்பாய் யோஜ்னா (Bhavantar Bharpayee Yojana-BBY) என்ற திட்டத்தின் கீழ் கூடுதல் பயிர்களை இணைத்துள்ளது.
  • கேரட், பட்டாணி, கின்னோ, கொய்யா, குடை மிளகாய் மற்றும் கத்திரிக்காய் ஆகியவை இந்தத் திட்டத்தின் கீழ் இணைக்கப்பட்டுள்ள சில பயிர்களாகும்
  • செய்தி துளிகள்:
   • BBYன் கீழ், விவசாயிகள் தங்கள் பயிர்களை அரசாங்கத்தால் நிர்ணயிக்கப்பட்ட விலையை விட குறைந்த விலைக்கு விற்றதற்காக இழப்பீடு பெறுகிறார்கள்.

 

 

அறிவியல் மற்றும் தொழில்நுட்பம்

 

 • எல்லை பாதுகாப்பு கண்காணிப்புக்கு உதவக்கூடிய கார்டோசாட்-3 செயற்கைக்கோளை இந்திய விண்வெளி ஆய்வு மையம் (இஸ்ரோ) வருகிற 25-ஆம் தேதி விண்ணில் ஏவ உள்ளது.
  • ஆந்திர மாநிலம், ஸ்ரீ ஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவண் விண்வெளி மையத்தின் இரண்டாவது ஏவுதளத்திலிருந்து, பி.எஸ்.எல்.வி.சி-47 ராக்கெட் மூலம் திங்கள்கிழமை (நவ.25) விண்ணில் ஏவப்பட உள்ளது.
  • செய்தி துளிகள்:
   • அமெரிக்காவின் 13 செயற்கைக்கோள்கள் : இந்த கார்டோசாட்-3 செயற்கைக்கோளுடன் அமெரிக்காவுக்குச் சொந்தமான 13 சிறிய ரக செயற்கைக் கோள்களும் விண்ணில் ஏவப்பட உள்ளன.
   • 21-ஆவது எக்ஸெல் ரக ராக்கெட்: இந்த 14 செயற்கைக் கோள்களும் பி.எஸ்.எல்.வி.சி-47 ராக்கெட் மூலம் விண்ணில் ஏவப்பட உள்ளன.

 

 

விளையாட்டு நிகழ்வுகள்

 

 • இந்தியா-பாகிஸ்தான் அணிகள் இடையிலான டேவிஸ் கோப்பை போட்டி கஜகஸ்தான் தலைநகர் நுர்-சுல்தானில் நடைபெறும் என சர்வதேச டென்னிஸ் சம்மேளனம் (ஐடிஎப்) அறிவித்துள்ளது.
  • இந்தியா-பாகிஸ்தான் அணிகள் இடையிலான டேவிஸ் கோப்பை ஆட்டம் இஸ்லாமாபாதில் நடைபெறும் என ஏற்கெனவே அறிவிக்கப்பட்டிருந்தது.
  • இதனால் இரு நாடுகளின் டேவிஸ் கோப்பை போட்டி வரும் 29, 30 தேதிகளில் கஜகஸ்தான் தலைநகர் நுர்சுல்தான் நகரில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

 

 

முக்கிய தினங்கள்

 

 • ஆப்பிரிக்கா தொழில்மயமாக்கல் தினம் ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 20 அன்று கொண்டாடப்படுகிறது.
  • பல ஆப்பிரிக்க நாடுகளில் உள்ள அரசாங்கங்களும் பிற அமைப்புகளும் ஆப்பிரிக்காவின் தொழில்மயமாக்கல் செயல்முறையைத் தூண்டுவதற்கான வழிகளை ஆராயும் காலம் இது.
  • 2019 கருப்பொருள்: “ஆப்பிரிக்க தொழில்துறையை ஆப்கிஎஃப்டிஏ சந்தைக்கு வழங்குவது”

 

 

திருக்குறள்

 

குறள் எண் : 23

அதிகாரம் : நீத்தார் பெருமை

குறள் பால் : அறத்துப்பால்

குறள் இயல் : பாயிரம்

இருமை வகைதெரிந்து ஈண்டுஅறன் பூண்டார்

பெருமை பிறங்கிற்று உலகு.

விளக்கம் : பிறப்பு வீடு என்பன போல் இரண்டிரண்டாக உள்ளவைகளின் கூறுபாடுகளை ஆராய்ந்தறிந்து அறத்தை மேற்கொண்டவரின் பெருமையே உலகத்தில் உயர்ந்தது.

 

ENGLISH CURRENT AFFAIRS

 

NATIONAL NEWS

 • NITI Aayog today advocated for a healthcare system for the middle class which is still not covered under any public health care system.
  • The healthcare system would exclude those covered under the newly-launched Ayushman Bharat scheme that mainly caters to the bottom 40 per cent population of the country.
  • Related News
   • NITI Aayog Formed – 1 January 2015.
   • NITI Aayog Headquarters – Delhi.

 

 

 • Union Government on Monday announced Bharatiya Poshan Krishi Kosh which is a repository of diverse crops across 128 agro-climatic zones for better nutritional outcomes.
  • The Kosh aims at reducing malnutrition through a multi-sectoral results-based framework, including agriculture, among women and children across the country.

 

 

 • State-run Indian Oil Corporation Ltd (IOC) launched a special winter-grade diesel that remains unfrozen up to minus 33 degree Celsius.
  • The fuel would help provide year-round access to snow-capped border regions and is part of India’s efforts to speed up strategic road connectivity.
  • Related News
   • Indian Oil Corporation Ltd Founded – 30 June 1959.
   • Indian Oil Corporation Ltd Headquarters – New Delhi.

 

 

 • The earnings from internet ticketing services of IRCTC (Indian Railway Catering and Tourism Corporation) increased by 80.8% between the period April, 2019 and September, 2019.
  • The earnings in the four-month period is Rs 199.3 crores.
  • Related News
   • The IRCTC is one of the Miniratna companies of India. It is a subsidiary of the Indian Railways.
   • A Miniratna status is provided to the Public Sector Undertakings that satisfy the criteria.

 

 

 • India was ranked 59th among 63 countries in the 2019 IMD World Talent Ranking released by International Institute for Management Development. This year, India slipped by 6 places as compared to 53rd rank in 2018 edition of this global annual list.
  • India’s poor performance was on account of low quality of life and expenditure on education.
  • Related News
   • International Institute for Management Development (IMD) Established – 1990.
   • International Institute for Management Development (IMD) President – Jean-Francois Manzoni.

 

 

SCIENCE AND TECH UPDATES

 • The DRDO Chief, Mr G Sateesh Reddy recently announced that DRDO (Defence Research Development Organization) is to increase the range of ASTRA air-to-air missiles. India is one of the few countries to own a successful BMD-Ballistic Missile Defence programme.
 • About Astra
  • Astra (Sanskrit word for weapon) is an all-weather air-to-air missile developed completely by DRDO.
  • ASTRA is currently capable of engaging targets upto a distance of 110 km.
  • It is integrated with Sukhoi Su-30 MKI aircrafts .

 

 

WORDS OF THE DAY

 • Queasy – nauseous, feeling sick.
  • Similar Words – bilious , Uneasy .
  • Antonyms – well, wholesome, untroubled.

 

 • quorum – the minimum number of members of an assembly or society.
  • Similar Words – Required number, attendance, plenum.
  • Antonyms – disassembly .

FaceBook Updates

WeShine on YouTube