Today TNPSC Current Affairs November 13 2019

We Shine Daily News

நவம்பர்­­ 13

தமிழ்

Download Tamil PDF – Click Here

Download English PDF – Click Here

 

தேசிய நிகழ்வுகள்

 

 • மகாராஷ்டிரத்தில் ஆட்சி அமைப்பது தொடர்பாக ஆட்சி அமைப்பது தொடர்பாக தொடாந்து குழப்பமும், இழுபறியான சூழ்நிலையும் நீடித்து வந்த நிலையில் அந்த மாநிலத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சி செவ்வாய்க்கிழமை (12.11.19) அமல்படுத்தப்பட்டது.
  • குடியரசுத் தலைவர் ஆட்சியை அமல்படுத்துவது தொடர்பாக ஆளுநர் பகத்சிங் கோஷியாரி அளித்த அறிக்கையைப் பரிசீலித்த மத்திய அமைச்சரவை, இது தொடர்பாக குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்துக்கு செவ்வாய்கிழமை பரிந்துரை அனுப்பியது.
  • அந்தக் கூட்டத்தில் அரசமைப்புச் சட்டத்தின் 356 (1) பிரிவின்படி மகாராஷ்டிரத்தில் குடியரசுத்தலைவர் ஆட்சியை அமல்படுத்தவும், சட்டப்பேரவையை தற்காலிகமாக முடக்கி வைக்கவும் பரிந்துரைக்கப்பட்டது.
  • செய்தி துளிகள் :
   • மகாராஷ்டிரத்தில் கடந்த 59 ஆண்டுகால வரலாற்றில் இப்போது மூன்றாவது முறையாக குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்படுத்தப்பட்டுள்ளது.
   • மகாராஷ்டிர மாநிலம் 1960-ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது.

 

 

 • உள்ளாட்சித் தேர்தல்களில் மாற்றுத் திறனாளிகளும் போட்டியிட வகை செய்யும் சட்டத் திருத்தத்தை நடைமுறைக்குக் கொண்டு வரும் வகையில் அரசு உத்தரவு வெளியிடப்பட்டுள்ளது.
  • அவர்கள் உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தலில் போட்டியிட்டு பதவிகளில் அமரும் வகையில், கடந்த ஜூலையில் சட்டத் திருத்தம் கொண்டு வரப்பட்டது.
  • செய்தி துளிகள் :
   • சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட சட்டத்திருத்தத்தை செயலாக்கத்துக்குக் கொண்டு வரும் வகையில், உரிய உத்தரவை தமிழக அரசு பிறப்பித்துள்ளது.

 

 

 • மத்திய சுற்றுச்சூழல், வன மற்றும் காலநிலை மாற்ற அமைச்சகம் 2019 நவம்பர் 11 – 17 முதல் ‘ஸ்வச் – நிர்மல் டாட் அபியான்’ என்ற திட்டத்தின் கீழ் அடையாளம் காணப்பட்ட 50 கடற்கரைகளில் வெகுஜன தூய்மை – விழிப்புணர்வு இயக்கத்தை மேற்கொண்டு வருகிறது.
  • செய்தி துளிகள் :
   • நாடு முழுவதும் கரையோரப் பகுதிகளை சுத்தமாக மாற்ற முயற்சிப்பதும், கடலோர சுற்றுச்சூழல் அமைப்புகளின் முக்கியத்துவம் குறித்த குடிமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்துவதும், கடல் உயிரினங்களை பிளாஸ்டிக் கழிவுகள், தொழில்துறை கழிவுகள் மற்றும் பிற தீங்கு விளைவிக்கும் பொருட்களிலிருந்து காப்பாற்றுவதற்கும் ஸ்வாச் – நிர்மல் டாட் அபியான் உதவுகிறது.
   • சுற்றுச்சூழல், வன மற்றும் காலநிலை மாற்ற அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர்.

 

 

 • சமீபத்தில் இந்தியத் தலைமைப் பதிவாளரால் வெளியிடப்பட்ட மகப்பேறு இறப்பு விகிதம் (Maternity Mortality Ratio – MMR) குறித்த ஒரு சிறப்பு அறிக்கையின்படி, இந்தியாவின் MMR ஆனது ஒரு ஆண்டில் 8 புள்ளிகள் என்ற அளவில் குறைந்துள்ளது.
  • 2014 – 16 ஆம் அண்டுகளில் பிறந்த ஒரு லட்சம் குழந்தைகளுக்கு 130 ஆக இருந்த MMR ஆனது 2015 – 17 ஆம் ஆண்டுகளில் பிறந்த ஒரு லட்சம் குழந்தைகளுக்கு 122 ஆக (6.2% சரிவு) குறைந்துள்ளது.
  • செய்தி துளிகள் :
   • தற்போது கேரளா, மகாராஷ்டிரா, தமிழ்நாடு, ஆந்திரப் பிரதேசம், ஜார்க்கண்ட், தெலுங்கானா, குஜராத், உத்தரகாண்ட், மேற்கு வங்கம், கர்நாடகா மற்றும் ஹரியானா ஆகிய இந்தியாவில் உள்ள 11 மாநிலங்கள் இந்த MMR இலக்கை அடைந்துள்ளன.
   • அசாம், உத்தரப் பிரதேசம், மத்தியப் பிரதேசம் மற்றும் ராஜஸ்தான் ஆகிய நான்கு மாநிலங்கள் MMR இலக்கை அடைவதில் பின்தங்கியுள்ளன.

 

 

 • ஸ்ரீநகரில் உள்ள தால் ஏரி மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகள் சுருங்கி வருவதன் காரணமாக, ஜம்மு காஷ்மீர் அரசானது இந்தப் பகுதியை சுற்றுச்சூழல் பாதுகாப்பு மண்டலமாக (ESZ – eco sensitive zone) அறிவிப்பதற்காக பத்து உறுப்பினர்கள் கொண்ட ஒரு குழுவை அமைத்துள்ளது.
  • செய்தி துளிகள் :
   • சுற்றுச்சூழல் பாதுகாப்பு மண்டலங்கள் என்பது பாதுகாக்கப்பட்ட பகுதிகள், தேசியப் பூங்காக்கள் மற்றும் வன விலங்குச் சரணாலயங்கள் ஆகியவற்றைச் சுற்றி 10 கி.மீ தொலைவு வரை பரவியுள்ள பகுதிகளாகும். சுற்றுச்சூழல் பாதுகாப்புச் சட்டம் 1986ன் கீழ் இந்திய அரசின் மத்திய சுற்றுச் சூழல் மற்றும் வனங்கள் துறை அமைச்சகத்தால் ESZகள் அறிவிக்கப்படுகின்றன.

 

 

சர்வதேச நிகழ்வுகள்

 

 • ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு 2020 இன் 19வது அரசாங்கத் தலைவர்கள் குழுவை இந்தியா நடத்துகிறது. 2017 ஆம் ஆண்டில் குழுவில் அனுமதிக்கப்பட்ட பின்னர் புது தில்லி ஏற்பாடு செய்யவுள்ள 8 பேர் கொண்ட குழுவின் முதல் உயர்மட்டக் கூட்டம்.
  • எஸ்சிஓ என்பது சீனா தலைமையிலான எட்டு உறுப்பினர்களின் பொருளாதார மற்றும் பாதுகாப்பு முகாமை ஆகும், இதில் இந்தியாவும் பாகிஸ்தானும் முழு உறுப்பினர்களாக 2017 இல் அனுமதிக்கப்பட்டன.
  • செய்தி துளிகள் :
   • அதன் நிறுவன உறுப்பினர்களில் சீனா, ரஷ்யா, கஜகஸ்தான், கிர்கிஸ்தான், தஜிகிஸ்தான் மற்றும் உஸ்பெகிஸ்தான் ஆகியன அடங்கும்.
   • அரசாங்க தலைவர்களின் சமீபத்திய உச்சி மாநாடு 2019 நவம்பரில் தாஷ்கண்டில் நடைபெற்றது.
   • எஸ்சிஓ பொதுச்செயலாளர் : விளாடிமிர் நோரோவ்.

 

 

 • நியூசிலாந்து பாராளுமன்றமானது சுழியக் கார்பன்” என்ற ஒரு புதிய சட்டத்தை நிறைவேற்றியுள்ளது. இது 2050 ஆம் ஆண்டிற்குள் கிட்டத்தட்ட அனைத்துப் பசுமை இல்ல வாயு உமிழ்வுகளுக்கும் “நிகர சுழிய இலக்கை” நிர்ணயிப்பதன் மூலம் காலநிலை மாற்றத்தை எதிர்கொள்வதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
 • செய்தி துளிகள் :
  • 2030க்குள் 10% உயிரியல் மீத்தேன் மற்றும் 2050க்குள் 47% வரை குறைக்கப்படுவதை இது நோக்கமாகக் கொண்டுள்ளது.

 

 

முக்கிய தினங்கள்

 

 • உலக நிமோனியா தினம் நவம்பர் 12 அன்று அனுசரிக்கப்படுகிறது. நிமோனியாவுக்கு எதிராக போராடுவதே இதன் நோக்கம். இது நிமோனியா நோய், அதன் அறிகுறிகள், காரணங்கள் மற்றும் சிகிச்சை பற்றிய விழிப்புணர்வையும் உருவாக்குகிறது.

 

 

திருக்குறள்

 

குறள் எண் : 16

அதிகாரம் : வான் சிறப்பு

குறள் பால் : அறத்துப்பால்

குறள் இயல் : பாயிரம்

விசும்பின் துளிவீழின் அல்லால்மற் றாங்கே

பசும்புல் தலைகாண்பு அரிது.

விளக்கம்: மேகத்திலிருந்து மழைத்துளி விழாது போனால், பசும்புல்லின் நுனியைக்கூட இங்கே காண்பது அரிதாகிவிடும்.

 

ENGLISH CURRENT AFFAIRS

 

NATIONAL NEWS

 • The Gujarat government gave its approval for a Compressed Natural Gas (CNG) terminal in Bhavnagar with a proposed investment of Rs 1,900 crore. A state government release said the facility, approval for which was given by the Gujarat Infrastructure Development Board headed by chief minister Vijay Rupani, would be the world’s first CNG port terminal.
  • Related Keys
   • Gujarat Capital: Gandhinagar
   • Gujarat Governor: Acharya Devvrat

 

 

 • The government of India has given approval for setting up four medical device parks with a view to support Make in India initiative and provide world-class products at an affordable price for treatment. The four parks will be set up in Andhra Pradesh, Telangana, Tamil Nadu and Kerala.
  • These parks will provide the necessary infrastructure, where companies can easily plug and play.

 

INTERNATIONAL NEWS

 • Sri Lanka has become the first South Asian nation to criminalise several offences related to match-fixing as its parliament passed all three readings of a bill labelled “Prevention of Offences Related to Sports”.
  • If a person is found guilty of committing an offence related to corruption in sports, then he may find himself jailed for a term up to 10 years and he will also be required to pay various fines.
  • Related Keys
   • Sri Lanka President – Maithripala Sirisena
   • Sri Lanka Capital – Sri Jayawardenepura Kotte

 

 

SCIENCE AND TECH UPDATES

 • Dhruv Prajapati, a junior researcher with the Gujarat Ecological Education & Research (GEER) Foundation, discovered two new species of spiders and named one after Sachin Tendulkar and the other after Saint Kuriakose Elias Chavara, who played a key role in creating awareness on education in Kerala.
  • Related Keys
   • Gujarat Ecological Education & Research (GEER) Foundation set up in 1982
   • The Foundation is governed by a Board of Governors chaired by the Hon’ble Chief Minister of Gujarat.

 

 

APPOINTMENTS

 • Mohammad Imran has been appointed as the new high Commissioner of Bangladesh to India. Currently he serves as Bangladesh’s Ambassador to the United Arab Emirates.
  • He succeeds Syed Muazzem Ali.
  • Related Keys
   • Muhammad Imran belongs to the 1986 batch of Bangladesh Civil Service Foreign Affairs cadre.

 

 

WORDS OF THE DAY

 • Lambaste – criticizing a person or thing harshly.
  • Similar Words – castigate , censure
  • Antonyms – compliment, praise.

 

 • Leverage – The power to influence
  • Similar Words – grip ,purchase ,hold
  • Antonyms – powerlessness, weakness

 


FaceBook Updates

WeShine on YouTube