Today TNPSC Current Affairs November 06 2019

We Shine Daily News

நவம்பர்­­ 06

தமிழ்

Download Tamil PDF – Click Here

Download English PDF – Click Here

 

தேசிய நிகழ்வுகள்

 

  • கிழக்கு மத்திய அரேபிய கடலில் ‘மஹா’ சூறாவளி தீவிரமான சூறாவளி புயலாக தீவிரமடைந்து வருவதால், குஜராத் மற்றும் வடக்கு மகாராஷ்டிரா கடற்கரையில் மனிதாபிமான மற்றும் பேரழிவு நிவாரண (Humanitarian and Disaster Relief (HADR)) நடவடிக்கைகளை மேற்கொள்ள இந்திய கடற்படையின் மேற்கு கடற்படை கட்டளை தயாராக உள்ளது.
    • செய்தி துளிகள் :
      • இந்தியாவிற்கும் அமெரிக்காவிற்கும் இடையேயான முதல் முத்தரப்பு சேவைப் பயிற்சி நவம்பர் 13 முதல் 21 வரை டைகர் ட்ரையம்ப் (Tiger Triumph) எனப்படும் பெரிய அளவிலான மனிதாபிமான உதவி மற்றும் பேரழிவு நிவாரண நடவடிக்கை (Humanitarian Relief and Disaster Relief (HADR)) நடவடிக்கைகளில் கவனம் செலுத்தும்.

 

 

  • தேசிய கடல்சார் தொழில்நுட்பக் கழகத்தின் (National Institute of Ocean Technology (NIOT))வெள்ளி விழா கொண்டாட்டத்தில், துணைத் தலைவர் எம்.வெங்கையா நாயுடு, தமிழக அரசுக்கு திறம்பட கட்டுப்பாடு மற்றும் வெள்ளத்தைக் குறைப்பதில் உதவுவதற்காக ரெட் அட்லஸ் செயல் திட்டம்’ மற்றும் “கடலோர வெள்ள எச்சரிக்கை அமைப்பு செயலி” (Coastal Flood Warning System app for Chennai ( CFLOWS – CHENNAI)) ஆகியவற்றை சென்னை, தமிழ்நாட்டில் வெளியிட்டுள்ளார்.
    • செய்தி துளிகள் :
      • சென்னை 2015ல் கடும் வெள்ளத்தை கண்டது என்பது குறிப்பிடத்தக்கது.
      • சென்னைக்கான கடலோர வெள்ள எச்சரிக்கை அமைப்பு பயன்பாடு (CFLOWS – CHENNAI)இந்தியாவின் முதல் ஒருங்கிணைந்த கடலோர வெள்ள எச்சரிக்கை அமைப்பு ஆகும்.

 

 

  • யானைக்கால் நோயை ஒழிப்பதற்காக ஒன்றிணைதல்” என்ற கருப்பொருள் கொண்ட ஒரு தேசியக் கருத்தரங்கமானது மத்திய சுகாதார மற்றும் குடும்ப நலத் துறை அமைச்சர் ஹர்ஷ் வர்தனால் தொடங்கி வைக்கப்பட்டது.
    • மேலும் 2021 ஆம் ஆண்டிற்குள் யானைக்கால் நோயை ஒழிப்பதற்காக எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கை மீதான அழைப்பிலும் மத்திய அமைச்சர் கையெழுத்திட்டார்.
    • செய்தி துளிகள் :
      • நிணநீர் யானைக்கால் நோயானது பொதுவாக யானைக்கால் நோய் என்று அழைக்கப்படுகின்றது. இது ஒரு புறக்கணிக்கப்பட்ட வெப்பமண்டல நோயாகக் கருதப்படுகின்றது.

 

 

சர்வதேச நிகழ்வுகள்

 

  • பாரீஸ் நகரில் இந்தியா உள்ளிட்ட சர்வதேச நாடுகள் கடந்த 2015 ஆம் ஆண்டு மேற்கொண்ட சர்வதேச பருவநிலை ஒப்பந்தத்தில் இருந்து விலகுவதற்கான அறிவிக்கையை அமெரிக்கா ஐ.நா.வில் தாக்கல் செய்துள்ளது.
    • இதையடுத்து, வரலாற்றுச் சிறப்பு மிக்க அந்த ஒப்பந்தத்திலிருந்து விலகும் நடவடிக்கையை அந்த நாடு அதிகாரப்பூர்வமாக தொடங்கியுள்ளது.
    • செய்தி துளிகள் :
      • புவியின் வெப்பத்தை அதிகரிக்கும் புகை மாசுக்களை குறிப்பிட்ட அளவு குறைப்பதன் மூலம், பருவ நிலை மாற்றத்தைக் கட்டுப்படுத்துவதற்கான ஒப்பந்தத்தில் அமெரிக்கா, இந்தியா உள்ளிட்ட 188 நாடுகள் பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் கடந்த 2015 – ஆம் ஆண்டு கையெழுத்திட்டன.
      • இந்த ஒப்பந்தம் உருவாவதில் அமெரிக்க முன்னாள் அதிபர் ஒபாமா முக்கியப் பங்காற்றினார்.

 

 

  • இந்த ஆண்டின் காலநிலை மாற்றம் மீதான ஐக்கிய நாடுகளின் கட்டமைப்பு ஒப்பந்தம் (United Nations Framework Convention on Climate Change – UNFCCC) அல்லது ஐ.நா காலநிலை மாநாட்டை நடத்துவதற்கு சிலிக்குப் பதிலாக ஸ்பெயின் நாடு மாட்ரிட் நகரைத் தேர்ந்தெடுத்துள்ளது.
    • இந்த ஆண்டானது ஐக்கிய நாடுகள் காலநிலை மாற்றத்தின் 25வது மாநாடாகும்.
    • கடந்த ஆண்டு ஐக்கிய நாடுகள் காலநிலை மாநாடானது போலந்தின் கோட்டோவைஸில் நடத்தப்பட்டது.
    • அமைதியின்மையை எதிர்கொண்டுள்ள சிலி அரசாங்கமானது நவம்பர் மாதத்தில் ஆசிய – பசிபிக் பொருளாதார ஒத்துழைப்பின் (Asia – Pacific Economic Cooperation – APEC) பொருளாதார உச்சி மாநாட்டை நடத்துவதையும் கைவிட்டுள்ளது.
    • செய்தி துளிகள் :
      • UNFCCC உறுப்பு நாடுகளின் 25வது மாநாடு

 

 

விளையாட்டு நிகழ்வுகள்

 

  • ஆசிய துப்பாக்கி சுடுதல் போட்டியில் வெண்கல பதக்கத்துடன் டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கும் தகுதி பெற்றுள்ளார் இந்திய வீரர் தீபக் குமார்.
    • கத்தார் தலைநகர் தோஹாவில் நடைபெறும் இப்போட்டியில் ஆடவர் 10மீ ஏர் ரைபிள் பிரிவில் இறுதிச் சுற்றில் 145 புள்ளிகளுடன் வெண்கலம் வென்றார் தீபக்குமார். இதன் மூலம் 2020 ஒலிம்பிக் போட்டி துப்பாக்கி சுடுதலில் இந்தியாவின் 10 இட ஒதுக்கீட்டை வென்றார் தீபக் குமார்.
    • செய்தி துளிகள் :
      • ஏற்கனவே இந்தியா 9 கோட்டா இடங்களை பெற்றுள்ளது. சீனா 25, கொரியா 12, ஜப்பான் 12 கோட்டா இடங்களைப் பெற்றுள்ளன.
      • மகளிர் பிரிவில் இளவேனில், அஞ்சும் மொட்கில், அபூர்வி சந்தேலா ஆகியோர் அடங்கிய இந்திய அணி 10மீ ஏர் ரைபிள் பிரிவில் 1883,2 புள்ளிகளுடன் வெள்ளிப்பதக்கம் வென்றனர்.

 

 

  • சீனாவின் புஷெளவில் நடைபெற்று வரும் ஆசிய துப்பாக்கி சுடுதல் போட்டியில் மகளிர் 10மீ. ஏர் பிஸ்டல் பிரிவில்3 புள்ளிகள் குவித்து தங்கப்பதக்கம் வென்றார் இளம் வீராங்கனை மானுபாக்கர்.
    • செய்தி துளிகள் :
      • விவான் கபூர், மனிஷா கீர் ஆகியோர் அடங்கிய இந்திய ஜீனியர் டிராப் கலப்பு அணி தங்கப்பதக்கத்தை வென்றது.
      • முதல் நாள் போட்டி முடிவில் 2 தங்கம் உள்பட 5 பதக்கங்களை வென்றது இந்தியா.

 

 

முக்கிய தினங்கள்

 

  • உலக சுனாமி விழிப்புணர்வு நாள் நவம்பர் 5 அன்று உலகம் முழுவதும் அனுசரிக்கப்பட்டது.
    • சுனாமியின் ஆபத்துகள் தொடர்பான விஷயங்களில் உலகம் முழுவதும் மக்கள் மத்தியில் விழிப்புணர்வை பரப்புவதற்காக இந்த நாள் கொண்டாடப்படுகிறது. டிசம்பர் 2015 இல், ஐ.நா பொதுச்சபை நவம்பர் 5ஐ உலக சுனாமி விழிப்புணர்வு தினமாக நியமித்தது.

 

 

திருக்குறள்

குறள் : 09

அதிகாரம் : கடவுள் வாழ்த்து

குறள் இயல் : பாயிரம்

குறள் பால் : அறத்துபால்

 

கோளில் பொறியில் குணமிலவே எண்குணத்தான்

தாளை வணங்காத் தலை.

 

விளக்கம் : கேட்காதசெவி, பார்க்காத கண் போன்ற எண் குணங்களை உடைய கடவுளின் திருவடிகளை வணங்காதவரின் தலைகள் பயனற்றவைகளாம்.

 

ENGLISH CURRENT AFFAIRS

 

NATIONAL NEWS

  • The 19th India-Russia Inter-Governmental Commission on Military and Military-Technical Cooperation starting in Moscow , Which will be co chaired by Defence minister Rajnath Singh .
    • During his visit, Defence minister is expected to hold discussions with Defence Minister of Russian Federation General Sergei Shoigu.
    • Related News
      • Russia ranks first in the field of military-technical cooperation between India and foreign countries.
      • Military-technical cooperation between India and Russia as the successor of the USSR has been going on since 1960

 

 

  • The 5th India International Science Festival (IISF) is being held in Kolkata, West Bengal from 5-8 November 2019. The four-day festival was inaugurated by Prime Minister Narendra Modi via video conference.
    • IISF 2019 theme: RISEN- Research, Innovation and Science Empowering the Nation.
    • Related News
      • The IISF was first started in 2015 to promote science and technology by showing everyone how STEM (Science, Technology, Engineering and Mathematics)
      • The first ever IISF was held at IIT Delhi in December 2015

 

 

INTERNATIONAL NEWS

  • US- Bangladesh Navy exercise named ‘Cooperation Afloat Readiness and Training (CARAT)- 2019’ second phase started at Chattogram. CARAT is considered as one of the U.S. Navy’s longest and continuous running exercise in South Asia and Southeast Asia.
    • M Makbul Hossain was present as the chief guest in the opening ceremony. He is an Assistant chief of naval staff (operations) Bangladesh Navy rear admiral.
    • Related Keys
      • In 2010, Cambodia and Bangladesh became the first CARAT participants to join the exercise since 1995

 

 

SCIENCE AND TECH UPDATES

  • A Defense Research Development Organization (DRDO) Igniter Complex was inaugurated at High Energy Materials Research Laboratory (HEMRL), Pune. The main purpose of the laboratory is to design, process, evaluate ignition systems for any kind of DRDO projects.

 

SPORTS

  • For the eighth time in his career Rafael Nadal is back to the world No. 1 position in the ATP rankings. The Spaniard goes up one place to overtake Novak Djokovic.
    • Since Novak Djokovic loses the points that he won a year ago in London when Nadal was absent, He slips down in the rankings.
    • Related Keys
      • The ATP began as the men’s trade union in 1972
      • The ATP first rankings for singles were published on 23 August 1973 while the doubles players were ranked for the first time on 1 March 1976

 

           

Words of the day

  • Haggle – dispute persistently, especially over the cost of something.
    • Similar words – negotiate , bargain.
    • Antonyms – agree , concur ,comply

 

  • Hapless – unfortunate and deserving pity
    • Similar Words – unfortunate , unlucky
    • Antonyms – lucky , Fortunate