Today TNPSC Current Affairs November 05 2019

We Shine Daily News

நவம்பர்­­ 05

தமிழ்

Download Tamil PDF – Click Here

Download English PDF – Click Here

தேசிய நிகழ்வுகள்

 

  • அமைப்பு சாரா தொழிலாளர்களின் நலனுக்காக மத்திய அரசு கொண்டு வந்த அடல் ஓய்வூதியத் திட்டத்தில் இதுவரை 1.9 கோடி பேர் இணைந்துள்ளதாக ஓய்வூதிய நிதி மற்றும் மேம்பாட்டு ஆணையம் (பிஎஃப்ஆர்டிஏ) தெரிவித்துள்ளது.
    • அமைப்புச் சாரா தொழிலாளர்கள், 60 வயதைக் கடந்த பிறகு, மாதம் ரூ.1,000 முதல் ரூ.5,000 வரை பெறும் வகையில், அடல் ஓய்வூதியத் திட்டத்தை மத்திய அரசு கடந்த 2015-ஆம் ஆண்டு அறிமுகம் செய்தது.
    • செய்தி துளிகள்
      • இந்தத் திட்டத்தில் இணைபவர்கள், ஒவ்வொரு மாதமும் ஒரு குறிப்பிட்ட தொகையை, வங்கி அல்லது அஞ்சலகக் கணக்கு மூலமாக செலுத்த வேண்டும். அரசும் தன் பங்களிப்பாக ஒரு குறிப்பிட்ட தொகையைச் செலுத்தும்.
      • அரசின் பிற சமூக நலப் பாதுகாப்புத் திட்டங்களில் பயன்பெறுபவராக இருந்தால், அவர்களுக்கு அரசின் பங்களிப்பு தொகைக் கிடைக்காது. இந்த திட்டத்தை ஓய்வூதிய நிதி மற்றும் மேம்பாட்டு ஆணையம் (பிஎஃப்ஆர்டிஏ) நிர்வகித்து வருகிறது.

 

 

  • ஹரியானாவின் புதிய முதல்வராக மனோகர் லால் பதவியேற்றார்.
    • ஆளுநர் சத்யதேவ் நாராயண் ஆர்யா சண்டிகரில் ராஜ் பவனில் நடந்த விழாவில் அவருக்கு பதவிப் பிரமாணம் மற்றும் ரகசியக் காப்புப் பிரமாணம் ஆகியவற்றை வழங்கினார்.
    • தொடர்ந்து இரண்டாவது முறையாக மனோகர் லால் முதல்வராகப் பொறுப்பேற்கிறார்.

 

 

  • உத்தரகாண்ட் மாநிலத்தின் சிப்கோ இயக்கத்துடன் தொடர்புடைய காந்தியவாதியும் சுற்றுச்சூழல் ஆர்வலருமான சாந்தி பிரசாத் பட் என்பவருக்கு, 2017 மற்றும் 2018 ஆம் ஆண்டுகளுக்கான தேசிய ஒருங்கிணைப்புக்கான இந்திரா காந்தி விருது வழங்கப்பட்டுள்ளது.
    • இது 1985 ஆம் ஆண்டு முதல் இந்தியாவின் முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் நினைவாக, இந்திய தேசிய காங்கிரஸ் அமைப்பால் ஆண்டுதோறும் வழங்கப்படும் ஒரு மதிப்புமிக்க விருது ஆகும்.

 

 

  • வளைகுடா நாடுகளின் இராஜ்ஜியத்தில் ரூபே அட்டையை அறிமுகப்படுத்த இந்தியா சவூதி அரேபியாவுடன் ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது.
    • மேற்கு ஆசியாவில் இந்தியாவின் டிஜிட்டல் பண வழங்கீட்டு முறையைத் தொடங்கிய மூன்றாவது நாடு இதுவாகும்.
    • இந்தியா ஏற்கனவே ரூபா அட்டையை ஐக்கிய அரபு அமீரகம், பஹ்ரைன், சிங்கப்பூர் மற்றும் பூடான் ஆகிய நாடுகளில் அறிமுகப்படுத்தியுள்ளது.
    • ரூபே அட்டையானது 2012 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்ட இதே வகையைச் சேர்ந்த இந்திய உள்நாட்டு கடன் பற்று அட்டை மற்றும் கடன் வழங்கு அட்டை ஆகும்.

 

 

  • பஞ்சாப் முதலமைச்சர் அமரீந்தர் சிங், ‘கர் கர் ரோஸ்கர் திட்டத்தின் கீழ் மாநிலத்தின் வேலையற்ற இளைஞர்களுக்காக 76260 –76260 என்ற முதல் வகை ஹெல்ப்லைன் ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளார். இந்த ஹெல்ப்லைனின் நோக்கம் பஞ்சாபில் உள்ள ஒவ்;வொரு வீட்டையும் அடைவதேயாகும். மேலும் இதை தினமும் 75 ஆயிரம் மொபைல் எண்களில் தொடர்பு கொள்ளலாம். இந்த செயல்பாட்டில், தரவு தயாரிக்க பஞ்சாப் வேலை உதவி மையத்தின் 110 இருக்கைகள் கொண்ட அழைப்பு மையமும் உருவாக்கப்பட்டுள்ளது.
    • செய்தி துளிகள்
      • பஞ்சாபின் தலைநகரம்: சண்டிகர்
      • பஞ்சாப் ஆளுநர்: வி.பி. சிங் பட்னோர்.

 

 

சர்வதேச நிகழ்வுகள்

 

  • உலகிலேயே மாபெரும் தடையற்ற வர்த்தகப் பகுதியை உருவாக்க வழிவகுக்கும் ஒருங்கிணைந்த பிராந்திய பொருளாதார ஒத்துழைப்பு ஒப்பந்தத்தில் (ஆர்சிஇபி) இந்தியா கையெழுத்திடாது என்று பிரதமர் நரேந்திர மோடி திங்கள்கிழமை தெரிவித்தார்.
    • தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில் ‘ஆசியான்’ நாடுகள் மற்றும் சீனா, ஜப்பான், ஆஸ்திரேலியா, தென்கொரியா, நியூஸிலாந்து ஆகிய நாடுகளின் தலைவர்கள் பங்கேற்ற மாநாட்டின்போது இந்த அறிவிப்பை பிரதமர் மோடி வெளியிட்டார்.
    • ஆர்சிஇபி ஒப்பந்தம் தொடர்பாக இந்தியா முன்வைத்த கவலைகளுக்கு திருப்திகரமான தீர்வு காணப்படாத நிலையில், அதில் இந்தியா கையெழுத்திடுவது சாத்தியமில்லை என்று பிரதமர் குறிப்பிட்டார். இந்த ஒப்பந்தத்தில் இந்தியா கையெழுத்திடக் கூடாது என்று இந்திய தொழிற்சங்கங்களும், எதிர்கட்சிகளும் வலியுறுத்தி வந்த நிலையில், பிரதமர் மோடியின் அறிவிப்பு முக்கியத்துவம் பெற்றுள்ளது.
    • செய்தி துளிகள்
      • ஆர்சிஇபி ஒப்பந்தமானது, ‘ஆசியான்’ கூட்டமைப்பைச் சேர்ந்த 10 நாடுகள் மற்றும் அந்த கூட்டமைப்புடன் தடையற்ற வர்த்தக உறவைக் கொண்டுள்ள இந்தியா, சீனா, ஜப்பான், ஆஸ்திரேலியா, தென்கொரியா, நியூஸிலாந்து ஆகிய 6 நாடுகள் என மொத்தம் 16 நாடுகளின் மொத்த மக்கள் தொகை சுமார் 360 கோடி. இது, உலக மக்கள்தொகையில் கிட்டத்தட்ட பாதியாகும்.

 

 

  • இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில் அமைதியை நிலைநாட்டவும், வளர்ச்சியை மேம்படுத்தவும் இந்தியா, ஜப்பான் உறுதி பூண்டன.
    • தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில் திங்கள்கிழமை நடைபெற்ற கிழக்கு ஆசியா அமைப்பு நாடுகளின் உச்சிமாநாட்டின் ஒரு பகுதியாக, ஜப்பான் பிரதமர் ஷின்ஸோ அபேவை பிரதமர் நரேந்திர மோடி சந்தித்துப் பேசினார். இந்தச் சந்திப்பின்போது, இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில் நிலவும் பாதுகாப்பு நிலைமை குறித்து இருவரும் ஆய்வு செய்தனர்.
    • செய்தி துளிகள்
      • ‘2+2 பேச்சுவார்த்தை’: இரு நாடுகளுக்கிடையே பல்வேறு துறைகளில் நிலவும் ஒத்துழைப்பை மேம்படுத்த இருநாட்டுத் தலைவர்களும் உறுதிபூண்டனர்.
      • இரு நாடுகளின் பாதுகாப்பு, வெளியுறவு அமைச்சர்களுக்கு இடையேயான முதலாவது பேச்சுவார்த்தையை இந்த மாத இறுதியில் இந்தியாவில் நடத்த இரு தலைவர்களும் ஒப்புக்கொண்டனர். இந்தப் பேச்சுவார்த்தை, பாதுகாப்புத் துறையில் இரு நாடுகளுக்கிடையே நிலவும் ஒத்துழைப்பை வலுப்படுத்தும் என அவர்கள் நம்பிக்கை தெரிவித்தனர்.
      • ஜப்பான் உதவியுடன் மேற்கொள்ளப்பட்டு வரும் மும்பை-ஆமதாபாத் அதிவேக ரயில் (புல்லட் ரயில்) திட்டம் செயல்படுத்தப்படுவது குறித்து இருவரும் விவாதித்தனர். அந்தத் திட்டத்தை விரைந்து நடைமுறைக்குக் கொண்டு வரவும் இருவரும் உறுதிபூண்டனர்.

 

 

நியமனங்கள்

 

  • ஒரு தனியார் துறை கடன் வழங்குநரான இண்டஸ்இண்ட் வங்கி அதன் நுகர்வோர் வங்கித் தலைவர் சுமன் கத்பாலியாவை அதன் புதிய நிர்வாக இயக்குநராக (எம்.டி) மற்றும் தலைமை நிர்வாக அதிகாரியாக நியமித்துள்ளது. அவர் மார்ச் 2020 இல் ஓய்வு பெறும் ரோமேஷ் சோப்டியை மாற்றுவார்.
    • செய்தி துளிகள்
      • இண்டஸ்இண்ட் வங்கியின் தலைமையகம்: மும்பை; நிறுவப்பட்டது: 1994; கோஷம்: நாங்கள் உங்களை பணக்காரர்களாக உணரவைக்கிறோம்.

 

 

திருக்குறள்

குறள் – 8

அதிகாரம் – கடவுள் வாழ்த்து

குறள் இயல் – பாயிரம்

குறள் பால் – அறத்துபால்

அறவாழி அந்தணன் தாள்சேர்ந்தார்க் கல்லால்

பிறவாழி நீந்தல் அரிது

விளக்கம்:

அறக்கடலாக விளங்கும் கடவுளின் திருவடிகளைப் பொருந்தி நினைக்கின்றவர் அல்லாமல், மற்றவர் பொருளும் இன்பமுமாகிய மற்ற கடல்களைக் கடக்க முடியா

 

ENGLISH CURRENT AFFAIRS

 

NATIONAL NEWS

  • Union Minister of Finance and Corporate Affairs, Nirmala Sitharaman launched a new IT initiatives called ICEDASH for improved monitoring and pace of Customs clearance of imported goods.
    • ICEDASH would be key drivers for further improvement in Customs especially as it would reduce interface and increase transparency of Customs functioning.
    • Related Keys:
      • ICEDASH and ATITHI are expected to be key drivers for further improvement.
      • It will also reduce interface and increase the transparency of Customs functioning.
      • ATITHI would create a tech-savvy image of India Customs. It also aims to encourage tourism and business travel to India.

 

 

  • As part of Union Government’s ‘Ek Bharat, Shreshtha Bharat’ initiative, the state of Odisha is tagged with Maharashtra to organize different programmes to promote art, culture and tourism of their respective states.
    • Accordingly, a large contingent of Maharashtra will be hosted by Bhubaneswar (Odisha capital) to showcase the culture and art of Maharashtra.
    • Related Keys:
      • Odisha is also known as Utkala .
      • It means ‘the land of excellent art and culture.’

 

 

INTERNATIONAL NEWS

  • India and Uzbekistan signed Memorandum of Understandings (MoU), for enhancing bilateral cooperation in fields of Military Medicine and Military Education between the Armed Forces of the two countries.
    • The MoUs were signed during the three-day visit by Defence Minister of India Rajnath Singh to Tashkent (Uzbekistan capital) from 1-3 November 2019. This was the first visit by an Indian Defence Minister to Uzbekistan in nearly 15 years.

 

 

  • The biennial Commonwealth Law Ministers’ Conference is being held in Colombo, Sri Lanka from 4-7 November 2019. India will be represented at the conference by Union Minister for Law and Justice Ravi Shankar Prasad.
    • Related Keys:
      • Theme for 2019 CLM Conference is- ‘Equal Access to Justice and the Rule of Law’.
      • Objective: The Conference seeks to address challenges faced by millions of people seeking to resolve legal disputes.

 

 

SCIENCE & TECH UPDATES

  • The Ministry of Science & Technology is organizing a Science and Technology Media Conclave. The fest will be held at India International Science Festival (IISF) 2019 in Kolkata on 6-7 November 2019.
    • The media conclave will be inaugurated by the Chairman of Prasar Bharati, Shri A. Surya Prakash and Dr. Vijay P. Bhatkar, President, Vigyan Bharati.
    • Related Keys:
      • The conference is aimed to bring together science and environment journalists from India and abroad.
      • Discussion regarding issues like science communication in the age of convergence, creating a science niche in the media, the art of science storytelling, research papers, and popular content, social media influencers, regional media, among others.

 

 

AWARDS

  • The 27-year-old, Madhuri Vijay has won the JCB Prize for Literature 2019 for her debut novel ‘The Far Field’. She has been selected from a shortlist featuring novels from five accomplished writers. She is also a recipient of Henfield Prize and the Pushcart Prize.
    • Related Keys:
      • It is an annual Indian literary award founded in 2018.
      • It is the richest literary honour in the country.
      • It is awarded to a distinguished work of fiction by an Indian writer working in English or to a translated fiction by an Indian writer.

 

 

IMPORTANT DAYS

  • World Tsunami Awareness Day is observed globally on 5 November 2019. The day was observed to raise tsunami awareness and share innovative approaches to risk reduction.
    • The 2019 World Tsunami Awareness Day focuses on promoting targets on the Sendai Seven Campaign. It focuses on reducing disaster damage to critical infrastructure and the disruption of basic services.
    • Related Keys:
      • In December 2015, the United Nations General Assembly (UNGA) marked 5 November as World Tsunami Awareness Day.
      • The observation of the day was initiated by Japan. Japan has experienced destruction because of the Tsunami over the years.

 

 

Words of the Day:

  • Imbroglio – an Extramely confused
    • Similar Words : Complication, Predicament
    • Antonyms : Simplicity, ease, agreement

 

  • Dismantling – Take a piece
  • Similar Words : Deconstruct, Disassemble
  • Antonyms : Build, Construct