Today TNPSC Current Affairs November 03 2019

We Shine Daily News

நவம்பர்­­ 03

தமிழ்

Download Tamil PDF – Click Here

Download English PDF – Click Here

 

தேசிய நிகழ்வுகள்

 

  • மகாராஷ்டிரத்தில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ரூ.10,000 கோடி நிதியை அந்த மாநில அரசு ஒதுக்கீடு செய்துள்ளது.
    • மாநில அமைச்சர்கள் சந்திரகாந்த் பாட்டீல், கிரிஷ் மகாஜன், சுபாஷ் தேஷ்முக், சுரேஷ் கதே மகாதேவ் ஜன்கர் உள்ளிட்டோர் இந்த ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்றனர்.
    • Related Keys :
      • மகாராஷ்டிரா முதல்வர் – தேவேந்திர ஃபட்னாவிஸ்
      • மகாராஷ்டிரா தலைநகரம் : மும்பை

 

 

  • இந்திய ரிசர்வ் வங்கியின் (ஆர்பிஐ) ஆளுநர் சக்திகாந்த தாஸை, அமெரிக்க நிதியமைச்சர் ஸ்டீவன் நூசின் மும்பையில் அக்டோபர் 2ஆம் தேதியன்று சந்தித்துப் பேசினார். இச்சந்திப்பின்போது, பொருளாதாரம் தொடர்பாக உள்நாட்டு மற்றும் சர்வதேச அளவில் காணப்படும் நிலைமை, இந்தியாவுக்கும் அமெரிக்காவுக்குமான பொதுவான பொருளாதாரப் பிரச்னைகள் ஆகியவை குறித்து இருவரும் விவாதித்தனர்.
    • பல்வேறு நாடுகளுடன் மேற்கொண்ட அணுசக்தி ஒப்பந்தத்தை மதிக்காமல் செயல்பட்டு வரும் ஈரானுக்கு எதிராக ஆதரவு திரட்டும் நோக்கில், ஸ்டீவன் நூசின் இந்தியாவுக்குப் பயணம் மேற்கொண்டுள்ளார். இப்பயணத்தின் ஒரு பகுதியாக ஆளுநர் சக்திகாந்த தாஸை மும்பையில் அவர் அக்டோபர் 2ஆம் தேதியன்று சந்தித்துப் பேசினார்.
    • Related Keys :
      • ஈரானுடன் கடந்த 2015ஆம் ஆண்டு மேற்கொண்ட அணுசக்தி ஒப்பந்தத்திலிருந்து விலகுவதாக அமெரிக்கா கடந்த ஆண்டு அறிவித்தது. இதையடுத்து ஈரான் மீது அமெரிக்கா பொருளாதாரத் தடைகளை விதித்தது.

 

 

  • ஜம்மு – காஷ்மீர் மாநிலம் ஜம்மு – காஷ்மீர், லடாக் என இரு புதிய யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்பட்டதை அடுத்து இந்தியாவின் புதிய வரைபடத்தை மத்திய உள்துறை அமைச்சகம் நவம்பர் 2ஆம் தேதியன்று வெளியிட்டது.
    • புதிய யூனியன் பிரதேசங்களின் எல்லைகள் வரைபடத்தில் தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளன. பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரின் சில பகுதிகளும், புதிய வரைபடத்தில் இடம்பெற்றுள்ளன.
    • Related Keys :
      • ஜம்மு – காஷ்மீர் மாநிலமாக 1947ஆம் ஆண்டு அறிவிக்கப்பட்டது.
      • ஜம்மு – காஷ்மீரில் சட்டம் 370 ஆகஸ்ட் 5 அன்று மத்திய அரசால் அகற்றப்பட்டது.

 

 

சர்வதேச நிகழ்வுகள்

 

  • இந்தியா – ஆசியான் உச்சி மாநாடு தாய்லாந்தில் நவம்பர் 3 மற்றும் 4ஆம் தேதி நடைபெறுகிறது. இந்த உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக பாங்காக் சென்ற பிரதமர் நரேந்திர மோடி, அங்கு தாய்லாந்து மொழியில் மொழிபெயர்க்கப்பட்ட திருக்குறள் நூலை வெளியிட்டார்.
    • மேலும் குருநானக்கின் 550வது பிறந்தநாள் நினைவாக சிறப்பு நாணயம் ஒன்றையும் வெளியிட்டார்.
    • Related Keys :
      • தாய்லாந்து தலைநகரம் : பாங்காக்
      • தாய்லாந்து நாணயம் : பட்

 

 

அறிவியல் மற்றும் தொழில்நுட்பம்

 

  • சந்திராயன் – 2 திட்டத்தின் மூலம் நிலவின் தென் துருவத்தில் விக்ரம் லேண்டர் நிச்சயம் தரையிறக்கப்படும் என்று இஸ்ரோ தலைவர் கே.சிவன் தெரிவித்துள்ளார். ஐஐடி தில்லியின் 50வது பட்டமளிப்பு விழாவில் இஸ்ரோ தலைவர் கே.சிவன் பங்கேற்றார்.
    • விக்ரம் லேண்டரை தரையிறக்குவதற்கான தொழில்நுட்பத்தை செயல்முறையில் செய்து பார்க்க வேண்டும். நாங்கள் விக்ரம் லேண்டரை தரையிறக்குவது தொடர்பான திட்டத்தில் பணியாற்றி வருகிறோம்” என்றார்.
    • Related Keys :
      • சூர்pயனை ஆய்வு செய்வதற்காக ‘ஆதித்யா எல் – 1’ செயற்கைக்கோளை விண்ணில் செலுத்தும் திட்டம் விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பும் ‘ககன்யான்’ திட்டம் ஆகியவை அடுத்தக்கட்டமாக செயல்படுத்தப்படும்.
      • சந்திராயன்-2 ஜீலை 22, 2019 அன்று ஏவப்பட்டது.

 

 

திருக்குறள்

குறள் – 6

அதிகாரம் – கடவுள் வாழ்த்து

குறள் இயல் – பாயிரம்

குறள் பால் – அறத்துபால்

பொறிவாயில் ஐந்தவித்தான் பொய்தீர் ஒழுக்க

நெறிநின்றார் நீடுவாழ் வார்.

விளக்கம் :

ஐம்பொறி வாயிலாக பிறக்கும் தீய ஆசைகளை அழித்து கடவுளின் பொய்யற்ற ஒழுக்க நெறியில் நின்றவர், நிலை பெற்று நெடுங்காலம் வாழ்வார்.

 

ENGLISH CURRENT AFFAIRS

NATIONAL NEWS

  • Around 17 agreements were signed between India and Germany in the fields of agriculture, ayurveda, yoga, maritime technology and others. German Chancellor Angela Merkel along with her team, signed the agreements with PM Modi and his cabinet. The German team led by the Chancellor is on a two-day visit to India.
    • Related News
      • The DST (Department of Science and Technology) and the German Federal Ministry of Education will organize a bilateral workshop in Berlin in 2020.

 

           

  • A Supreme Court-mandated panel EPCA has declared a public health emergency in the Delhi-NCR region and banned all the construction activity till 5th November.
    • In a letter written to Chief Secretaries of Uttar Pradesh, Haryana and Delhi, EPCA chairperson Bhure Lal said air quality in Delhi-NCR in a severe category.
    • Related Keys
      • In November 2017, EPCA had enforced several measures, including ban on brick kilns, closure of Badarpur thermal power plant, hot mix plants and stone crushers, and construction activities in NCR.

 

 

  • The city of Kanpur in Uttar Pradesh held the title for the world’s most polluted city in the latest edition of Guinness World Records.
    • The book, ‘Guinness World Records 2020’, lists thousands of new record titles and holders that will educate curious readers of all age groups.
    • Related News
      • Uttar Pradesh Literacy (2011) – 67.68%.
      • Uttar Pradesh Governor – Anandiben Patel

 

 

INTERNATIONAL NEWS

  • The 7th India-US Economic and Financial partnership meeting was held in New Delhi. It was Co-chaired by Finance Minister Nirmala Seetharaman and US Secretary Steven T Minuchin.
    • The leaders took efforts to improve mutual cooperation on wide range of multilateral subjects. It included combating financing of terrorism and anti-money laundering.

 

 

SCIENCE AND TECH UPDATES

  • The Robotic Surgery Facility was opened in the Safdarjung Hospital, New Delhi. It is one of the biggest tertiary care referral centre of India under the Ministry of Health and Family Welfare.
    • It caters to all poor patients for cancers like bladder cancer, kidney failure, kidney cancers from different parts of the country.
    • Related Keys
      • Ministry of Health and Family Welfare Formed – 1976
      • Ministry of Health and Family Welfare Headquarters – New Delhi

 

 

WORDS OF THE DAY

  • Hindrance – any obstruction that impedes
    • Similar Words – barrier, block.
    • Antonyms -assistance , encouragement , support

 

  • Hinterland – a remote and undeveloped area
    • Similar Words – the back of beyond , Rural Areas.
    • Antonyms- Urban Area, Civilization