Today TNPSC Current Affairs November 02 2019

We Shine Daily News

நவம்பர்­­ 02

தமிழ்

Download Tamil PDF – Click Here

Download English PDF – Click Here

 

தேசிய நிகழ்வுகள்

 

 • புதிதாக உதயமாகியுள்ள ஜம்மு – காஷ்மீர், லடாக் யூனியன் பிரதேசங்களிலுள்ள குறிப்பிட்ட பகுதியை ஆயுதப்படை சிறப்பு அதிகாரங்கள் சட்டம் (ஏஎஃப்எஸ்பிஏ) அமல்படுத்தப்பட்ட பகுதியாக அறிவிக்கும் அதிகாரம் மத்திய அரசுக்கு வழங்கப்பட்டுள்ளது.
  • ஜம்மு – காஷ்மீர், லடாக் யூனியன் பிரதேசங்கள் கடந்த (31.10.19)வியாழக்கிழமை முதல் செயல்பாட்டுக்கு வந்தன.
  • செய்தி துளிகள் :
   • கடந்த 1990 – ஆம் ஆண்டு இயற்றப்பட்ட ஆயுதப்படை (ஜம்மு – காஷ்மீர்) சிறப்பு அதிகாரங்கள் சட்டத்தை நிர்வகிக்கும் அதிகாரம், ஜம்மு – காஷ்மீர், லடாக் விவகாரங்கள் துறைக்கு மாற்றப்படுகிறது.

 

 

 • ஜார்க்கண்ட் மாநில சட்டப்பேரவைக்கு வரும் 30 – ஆம் தேதி முதல் டிசம்பர் 20 ஆம் தேதி வரை 5 கட்டங்களாக தேர்தல் நடைபெறவுள்ளதாக தேர்தல் ஆணையம் வெள்ளிக்கிழமை அறிவித்தது. வாக்கு எண்ணிக்கை டிசம்பர் 23 ஆம் தேதி நடைபெறவுள்ளது.
  • நாட்டிலேயே முதல் முறையாக ஜார்க்கண்ட் பேரவைத் தேர்தலில் முதியோர், மாற்றுத் திறனாளிகள் தபால் மூலம் வாக்களிக்கும் வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
  • செய்தி துளிகள் :
  • தேர்தல் ஆணைய தகவலின்படி, அந்த மாநிலத்தில் 80 வயதுக்கும் அதிகமாக19 லட்சம் பேரும், 2.16 லட்சம் மாற்றுத்திறனாளிகளும் உள்ளனர்.
  • தற்போதைய அமைப்பில், இராணுவ ரூ துணை ராணுவ வீரர்கள் மற்றும் வெளிநாடுகளில் பணிபுரியும் அரசு ஊழியர்கள், தேர்தல் பணியில் பணியமர்த்தப்பட்ட ஊழியர்கள் மட்டுமே அஞ்சல் வாக்குச்சீட்டைப் பெற உரிமை உடையவர்கள் ஆவர்.

 

 

 • தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத் துறை அமைச்சர் ஸ்ரீ சந்தோஷ்குமார் கங்வார் 3 செயலிகளைத் தொடங்கினார். யுஏஎன் பதிவு, மின்-ஆய்வு மற்றும் டிஜி லாக் (UAN REGISTRATION, E-INSPECTION AND DIGI LOCKE),ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி அமைப்பு (EPFO) தனது 67 வது அறக்கட்டளை தினத்தில் டெல்லியில் உருவாக்கியது.
  • இந்த செயலிகள் எளிதான வணிகத்தை மேம்படுத்துவதோடு EPFO வில் பணியாற்றுவதில் வெளிப்படைத்தன்மையை ஊக்குவிக்கும்.
  • செய்தி துளிகள் :
   • இதன்மூலம் எந்தவொரு தொழிலாளர்களும் யுனிவெர்சல் கணக்கு எண்ணை (UAN) நேரடியாக ஈபிஎஃப்ஒ இணையத்தளத்தில் பெறலாம், இது பிஎஃப், ஓய்வூதியம் மற்றும் ஆயுள் காப்பீட்டு சலுகைகளுக்காக பதிவு செய்கிறது மற்றும் ஒரு தொழிலாளி UAN க்கு தனது முதலாளியை மட்டுமே சார்ந்து இருக்க வேண்டியதில்லை.

 

 

சர்வதேச நிகழ்வுகள்

 

 • இந்தியா – ஜெர்மனி இடையே 17 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளன. இது தவிர பல்வேறு துறை ஒத்துழைப்பு தொடர்பாக 5 கூட்டுப் பிரகடனங்கள் வெளியிடப்பட்டுள்ளன.
  • வேளாண்மை, கடல்சார் பாதுகாப்பு தொழில்நுட்பம், ஆயுர்வேதம், யோகாசனம், தியானம், தொழிற்பயிற்சி, நோய்த்தடுப்பு, தேசிய அருங்காட்சியக ஒத்துழைப்பு, விளையாட்டு, அறிவியல் ஆய்வு, நவீன தொழில்நுட்ப ஆய்வில் ஒத்துழைப்பு உள்ளிட்ட துறைகளில் இருநாடுகளிடையே 17 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளன.
  • செய்தி துளிகள் :
   • பேட்டரி வாகனப் பயன்பாடு மூலம் நகர்ப்புற சுற்றுச்சூழலை பாதுகாப்பது, செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் தொடர்பான ஆய்வு, கடலில் கழிவுகள் கொட்டப்படுவதைத் தடுப்பதில் ஒத்துழைப்பு உள்ளிட்ட துறைகளில் 5 கூட்டுப் பிரகடனங்கள் வெளியிடப்பட்டன.
   • இந்த ஒப்பந்தத்தில் இந்தியா-ஜெர்மனி இடையிலான உயர்கல்வி ஒத்துழைப்பு ஒப்பந்தம் மிகவும் முக்கியமானதாகும்.

 

 

 • உலக நகரங்கள் தினத்தை முன்னிட்டு யுனெஸ்கோ அமைப்பானது ஹைதராபாத் நகரத்தை ‘அறுசுவை உணவியல்’ என்ற வகையின் கீழ் ஆக்கப்பூர்வ நகரம்’ என்று அறிவித்துள்ளது.
  • மேலும் மும்பை நகரமும் ‘திரைப்பட வகையின் கீழ் ‘ஆக்கப்பூர்வ நகரம்;’ என்ற குறியீட்டைப் பெற்றுள்ளது.
  • யுனெஸ்கோ அமைப்பானது ஏழு பிரிவுகளின் அடிப்படையில் ‘ஆக்கப்பூர்வ நகரங்கள்’ என்ற அந்தஸ்தை வழங்குகின்றது.
  • செய்தி துளிகள் :
   • ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் சபை அக்டோபர் 31 ஆம் தேதி உலக நகரங்கள் தினமாக நியமித்துள்ளது.
   • 2019 கருத்துரு: உலகை மாற்றுவது : புதுமைகள் மற்றும் எதிர்கால சந்ததியினருக்கு சிறந்த வாழ்க்கை 2019 Theme: Changing the world: innovations and better life for future generations

 

 

 • சர்வதேச உயிரி இந்தியா 2019 ஆனது மிகப்பெரிய உயிரி தொழில்நுட்ப பங்குதாரர்களின் கூட்டமைப்புகளில் ஒன்றாகும். இது இந்தியாவில் முதல் முறையாக புது தில்லியில் நடத்தப்பட இருக்கின்றது.
  • இது அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சகத்தின் கீழ் உள்ள உயிரி தொழில்நுட்பத் துறை மற்றும் உயிரித் தொழில்நுட்பத் தொழில் ஆராய்ச்சி உதவி மன்றம் (BIRAC) ஆகியவற்றால் ஒருங்கிணைக்கப்படுகின்றது.
  • செய்தி துளிகள் :
   • இது இந்தியாவில் முதல் முறையாக நவம்பர் 21 முதல் 2019 நவம்பர் 23 வரை நடைபெற உள்ளது. மேக் இன் இந்தியா0 இன் முக்கிய துறைகளில் ஒன்றாக பயோடெக் அடையாளம் காணப்பட்டுள்ளது.
   • 30 நாடுகளின் பங்குதாரர்களை ஒன்றிணைக்க இந்த நிகழ்வு திட்டமிடப்பட்டுள்ளது.

 

 • பயங்கரவாத எதிர்ப்பு தந்திரோபாயங்கள் குறித்த 10 நாள் அமர்வில் இந்தியா உஸ்பெகிஸ்தானுடன் தனது முதல் இராணுவ பயிற்சியான டஸ்ட்லிக் 2019 நடத்தவுள்ளது.
  • இந்த பயிற்சி நவம்பர் 4 முதல் 2019 நவம்பர் 13 வரை உஸ்பெகிஸ்தானின் சிர்ச்சிக் பயிற்சி பகுதியில் நடைபெறும்.
  • செய்தி துளிகள் :
   • மலை, கிராமப்புற மற்றும் நகர்ப்புறங்களில் கிளர்ச்சி மற்றும் பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகளில் கவனம் செலுத்துவதே இந்த பயிற்சியின் நோக்கம்.
   • உஸ்பெகிஸ்தானின் ஜனாதிபதி : ஷவ்காட் மிர்சியோயேவ் உஸ்பெகிஸ்தானின் நாணயம் : உஸ்பெகிஸ்தான் சோம்

 

 

அறிவியல் நிகழ்வுகள்

 

 • நிலவில் ஆர்கான் – 40 வாயு மூலக்கூறுகள் இருப்பதை சந்திராயன்-2 விண்கலம் உறுதிப்படுத்தியிருப்பதாக இந்திய விண்வெளி ஆய்வு மையம் (இஸ்ரோ) அறிவித்துள்ளது.
  • நிலவின் தென் துருவத்தை ஆய்வு செய்ய சந்திராயன் – 2 விண்கலத்தை இஸ்ரோ கடந்த ஜீலை 22-ஆம் தேதி விண்ணில் அனுப்பியது.
  • செய்தி துளிகள் :
   • விண்கலத்திலிருந்து பிரிந்த ஆர்பிட்டர் கருவி, நிலவிலிருந்து 100 கி.மீ தொலைவில் இருந்தபடி சுற்றிவந்து தொடர்ந்து வெற்றிகரமாக ஆய்வை மேற்கொண்டு வருகிறது.
   • இந்த நிலையில், நிலவின் புறக்காற்று மண்டலத்தில் ஆர்கான்-40 வாயு மூலக்கூறுகள் இருப்பதை ஆர்பிட்டரில் சேஸ் – 2 என்ற கருவி உறுதிப்படுத்தியிருக்கிறது.

 

 

திருக்குறள்

குறள் : 5

அதிகாரம் : கடவுள் வாழ்த்து

குறள் இயல் : பாயிரம்

குறள் பால் : அறத்துபால்

இருள்சேர் இருவினையும் சேரா இறைவன்

பொருள்சேர் புகழ்புரிந்தார் மாட்டு.

விளக்கம் :

கடவுளின் உண்மைப் புகழையே விரும்புபவரிடம் அறியாமையால் விளையும் இருவகை வினையும் சேருவதில்லை.

 

ENGLISH CURRENT AFFAIRS

 

NATIONAL NEWS

 • Tamil Nadu has become the first state in the country to enact the law on contract farming with President Ram Nath Kovind giving assent to the Agricultural Produce and Livestock Contract Farming and Services (Promotion and Facilitation) Act.
  • The law would safeguard the interests of farmers when there is a bumper crop or during major fluctuation in market prices.

 

 

 • For the first time, Arunachal Pradesh will host the Multilingual Writers’ Meet at its oldest town Pasighat in East Siang District.
  • The two-day event will be held at the auditorium of the College of Horticulture and Forestry.
  • Related News
   • Arunachal Pradesh Capital – Itanagar
   • Arunachal Pradesh Chief Minister – Pema Khandu

 

 

INTERNATIONAL NEWS

 • Pavan Kapoor, a 1990 batch Indian Foreign Service officer took charge as the new Ambassador to UAE. Ambassador Kapoor replaced Navdeep Singh Suri, who retired last month. During his last posting, Mr Kapoor served as the Ambassador to Israel
  • Related News
   • UAE Capital: Abu Dhabi
   • UAE Currency: United Arab Emirates dirham

 

 

 • India will conduct its first ever military exercise with Uzbekistan in a 10-day session on counter terrorism tactics. The exercise will be held at Chirchiq Training Area, Uzbekistan between November 4 and November 13, 2019.
  • Related News
   • Uzbekistan Capital: Tashkent
   • Uzbekistan Currency: Uzbekistani soʻm

 

 

SCIENCE AND TECH UPDATES

 • The Archaeological Survey of India has discovered the remains of huge settlement during its first phase of excavation at Gottiprolu near Naidupeta, Nellore, Andhra Pradesh. It has uncovered a mass settlement that was surrounded by a massive brick enclosure
  • Related News
   • Andhra Pradesh Founded: 1 October 1953
   • Andhra Pradesh Literacy rate: 67.41%

 

 

WORDS OF THE DAY

 • Hasten – move fast
  • Similar Words – hurry , hurtle
  • Antonyms – delay , slow down

 

 • Heed – pay close attention to
  • Similar Words – notice , regard
  • Antonyms- disregard , ignore

 

 

 

 


FaceBook Updates

WeShine on YouTube