Today TNPSC Current Affairs March 31 2020

We Shine Daily News

மார்ச் 31

தமிழ்

Download Tamil PDF – Click Here

Download English PDF – Click Here

தமிழக நிகழ்வுகள்

 

  • கரோனா தடுப்புப் பணிகளுக்காக பிரதமர் மற்றும் முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு தலா ரூ.1 கோடியை ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் வழங்கியுள்ளர்.
    • செய்தி துளிகள்
      • ஆளுநரின் விருப்ப உரிமை நிதிகளில் இருந்து பிரதமர் மற்றும் முதல்வரின் பொதுநிவாரண நிதிகளுக்கு தலா ரூ.1 கோடி வழங்கப்பட்டு உள்ளது.
      • இத்துடன் பிரதமரின் நிவாரண நிதிக்கு தனது ஒரு மாத ஊதியத்தையும் ஆளுநர் புரோஹித் வழங்கியுள்ளார்.

 

இந்திய நிகழ்வுகள்

  • கரோனா நோய்த்தொற்று இந்தியாவில் சமூகப் பரவலாக உருவெடுக்கவில்லை என்று மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
    • நோய்த்தொற்று பரவல் 100 நபர்களில் இருந்து 1000 நபர்களாக அதிகரிக்க 12 நாள்கள் வரை எடுத்துக் கொண்டுள்ளதால், இது சமூகப் பரவலாக மாறவில்லை என்று அமைச்சகம் விளக்கமளித்துள்ளது.
    • செய்தி துளிகள்
      • இந்த நேரத்தில் சமூக விலகல் என்பது மிகவும் முக்கியமானது. ஒரு நபர் கவனக் குறைவாக இருந்தாலும் மற்றவர்களுக்கும் நோய் பரவும் அபாயம் உள்ளது.
      • கரோனா குறித்து யாரும் வீண் வதந்தியைப் பரப்பக் கூடாது. உண்மையான விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்

  •  செயற்கை சுவாசக் கருவியைத் தயாரிக்குமாறு வாகனத் தயாரிப்பு (ஆட்டோமொபைல்) நிறுவனங்களை அறிவுறுத்தியுள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
    • நாட்டில் கரோனா நோய்த்தொற்று (கொவைட்-19) பரவல் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகிறது. அந்த நோய்த்தொற்றால் பாதிக்கப்படுபவர்களுக்கு மூச்சு விடுவதில் சிரமம் ஏற்படும்.
    •  அதன் காரணமாக அவர்களுக்கு செயற்கை முறையில் ஆக்ஸிஜனை அளித்து, கார்பன் டை ஆக்ஸடை வெளியேற்றுவதற்கான கருவியைப் பயன்படுத்த வேண்டிய அவசியம் ஏற்படும்
    • செய்தி துளிகள்
      • கரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும்பட்சத்தில், செயற்கை சுவாசக் கருவிக்கான தேவையும் அதிகரிக்கும்.
      • அதன் காரணமாக வரும் ஜூன் மாதத்துக்குள் 40,000 செயற்கை சுவாசக் கருவிகளைத் தயாரிப்பதற்கான நடவடிக்கைகளை எடுக்கவுள்ளதாக மத்திய அரசு அண்மையில் அறிவித்திருந்தது.

 

சர்வதேச நிகழ்வுகள்

  • இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தன்னைத் தனிமைப்படுத்திக் கொண்டார்.
    • தனது உதவியாளருக்கு கரோனா நோய்த்தொற்று ஏற்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டதையடுத்து நெதன்யாகு இந்த முடிவை எடுத்துள்ளதாக அந்நாட்டு பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
    • செய்தி துளிகள்
      • கரோனா நோய்த்தொற்று காரணமாக உலகம் முழுவதும் 785,777 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 37,815 பேர் உயிரிழந்துவிட்டனர்.
      • அமெரிக்காவில் நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை 1.64 லட்சமாக அதிகரித்துள்ளது.

 

 

விளையாட்டு நிகழ்வுகள்

  • கரோனா நோய்த் தொற்று பரவலால் ஓராண்டுக்கு ஒத்திவைக்கப்பட்ட ஒலிம்பிக் போட்டிகள் வரும் 2021 ஆம் ஆண்டு ஜூலை 23 முதல் ஆக.8-ஆம் தேதி வரையும், பாராலிம்பிக் போட்டிகள் ஆக. 24 முதல் செப். 5 வரையும் நடைபெறும் என ஐஓசி , போட்டி அமைப்புக் குழு உள்ளிட்டவை அறிவித்துள்ளன.
    • செய்தி துளிகள்
      • விளையாட்டு உலகின் மிகப்பெரிய போட்டியாக கருதப்படுவது ஒலிம்பிக் போட்டிகளாகும்.
      • 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்படும் இப்போட்டி 2016-இல் ரியோ டி ஜெனிரோவில் நடைபெற்றது.

 

திருக்குறள்

குறள் எண் : 154

குறள் பால் : அறத்துப்பால்

குறள் இயல் : இல்லறவியல்

குறள் அதிகாரம் : பொறையுடைம

குறள் :

நிறையுடைமை நீங்காமை வேண்டின் பொறையுடைமை
போற்றி யொழுகப் படும்.

விளக்கம் :
ஒருவன் நற்குணங்கள் தன்னை விட்டு நீங்காமல் இருக்க வேண்டும் என விரும்பினால் பொறுமையைப் பாதுகாத்து நடக்க வேண்டும்.

 

ENGLISH CURRENT AFFAIRS

NATIONAL NEWS

  • Prime Minister Narendra Modi has created of assistance an emergency situation relief fund Namely.
    • Prime Minister’s Citizan Assistance and Relief in Emergency Situation Fund (PM – Cares) where people can contribute and help in the govi’s fight against Coronovirus. This newly created public Charitable trust has PM Narendra Modi as the chairman and defense minister, home minister and the finance minister as its member.
    • People can visit pmindia.gov.in to make contributions using credit and debit cards, UPI, Net banking and RTGS.
    • Related Keys
      • About Indian Control Govt Defense Minister – Rajnath Singh
      • Home Minister – Amit Shah
      • Finance Minister – Nirmala Sitaraman

 

 

  • The mega bank consolidation Plan is all set to come into force from April 1, 2020. The branches of merging banks will operate as of the banks which those have been amalgamated.
    • Also the, customers of merging banks will be treated as customers of the banks in which these banks have been merged with effect from April 1st
    • Related Keys
      • As per the Scheme, Oriental Bank of Commerece and united Bank of India will be merged into Punjab National Bank : Syndicate Bank into Canara BanK : Allahabad Bank into Indian Bank : and Andhra Band and Corporation Bank into Union Bank of India.

 

 

  • PNB releases new logo ahead of merger with UBI & BC on April 1st 2020
    • On March 30.2020. The Punjab National Bank (PNB) has launched a new logo before the moga merger of the Bank. With the united Bank of India (UBI) and the oriental Bank of Commerce (OBC) comes into force from 1st April 2020. The new logo will have signages of all the 3 Bank.
    • With the merger, PNB will be the 2nd largest bank in the country with a total Business and sizo of Rs. 17.94 lakh core. Currently, State Bank of India is the largest Bank in the country.
    • Related Keys :
      • About Punjab National Bank (PNB)
      • Headquarters – New Delhi
      • D & CEO – S.S. Mallikarjuna Rao

 

 

AWARDS AND RECOGNITIONS

  • Mirza waheed and Santanu Das win The Hindu Prize 2019
    • The Hindu Prize (annual) 2019 is awarded to mirza waheed’s Tell her Everything (Fiction) – 2019 and Santanu Das’s India Empire and first world war culture writings.
    • Images and songs (Non – Fiction) 2018.
    • Mirza waheed’s Novel talks about human ethics noble love & the corrosive nature of companionship and is published by westland publications limited
    • Related Keys
      • About The Hindu
      • Founder – G. Subramaniya Iyer
      • Owners – The Hindu Group and Kasturi and So limited

 

 

SPORTS NEWS

  • PV Sindhu was awarded the 2019 BBC Indian Sports woman of the year.
    • Top Indian Shuffler PV Sindhu won the BBC Indian sports woman of the year 2019. The award ceremony was hosted BBC Direct – General tony hall. Also veteran athlete.
    • PT Usha was awarded the lifetime Achievement Award. She is the first Indian Singles badminton. Player to win an Olympic Silver Medal.
    • Related Keys :
      • BBC Headquarters located in London
      • ChairmanSir David Clemonti

 

 

WORDS OF THE DAY

  • Panache – confidence of style or manner.
    • Similar Words – self-assurance ,flair
    • Antonyms -spiritlessness
  • Paradigm – A typical example or model
    • Similar Words – Pattern ,prototype
    • Antonyms – Expand, decentralize