Today TNPSC Current Affairs March 29 2020

We Shine Daily News

மார்ச் 29

தமிழ்

Download Tamil PDF – Click Here

Download English PDF – Click Here

 

தேசிய நிகழ்வுகள்

  • ஆயுஷ் மருத்துவத் துறையினர் தங்களது மருத்துவ வளங்களின் மூலம் சுத்திகரிப்பான் (சானிடைசர்) உள்ளிட்ட அத்தியாவசியப் பொருள்களை தயாரித்து கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் உதவ வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்தினார்.
    • ஆயுர்வேதம், யுனானி, சித்தா, ஹோமியோபதி உள்ளிட்ட பாரம்பரிய மருத்துவ முறைகளை உள்ளடக்கியது ஆயுஷ் மருத்துவத் துறையாகும். அதை நிர்வகிப்பதற்காக ஆயுஷ் அமைச்சகம் செயல்பட்டு வருகிறது.
    •  செய்தி துளிகள்:
      • இம்முறைகளை மேம்படுத்த 1995-ல் மத்திய சுகாதாரம் மற்றும் குடும்பநலத் துறையில் இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதி பிரிவு உருவாக்கப்பட்டது. இத்துறைக்கு 2003-ஆம் ஆண்டு ஆயுஷ் என்று மறுபெயர் சூட்டப்பட்டது.

 

 

  • கொரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்தால், செயற்கை சுவாசக் கருவியின் தேவை அதிகரிக்கும். அதன் காரணமாக அடுத்த 3 மாதங்களில் 40,000 செயற்கை சுவாசக் கருவிகளைத் தயாரிப்பதற்கு மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் முடிவெடுத்துள்ளது.
    •  செயற்கை சுவாசக் கருவியை தயாரிக்கப் போட்டியிடும் நிறுவனங்கள் உத்தரப் பிரதேசத்தின் கான்பூரிலுள்ள இந்தியத் தொழில்நுட்பக் கல்வி நிறுவனம், மகாராஷ்டிரத்தின் புணேவிலுள்ள ‘நோக்கா ரோபாடிக்ஸ்’ நிறுவனம், குஜராத்தின் ஆமதாபாதைச் சேர்ந்த ‘சிடிஸன் இண்டஸ்ட்ரீஸ்’ நிறுவனம் ஏப்ரல் 5-ஆம் தேதிக்குள் தயாரிக்கத் திட்டமிட்டுள்ளன..
    •  செய்தி துளிகள்:
      • 40,000- அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் தற்போது உள்ள செயற்கை சுவாசக் கருவிகளின் எண்ணிக்கை.
      • 1.10 லட்சம் முதல் 2.20 லட்சம் – மே மாதத்தில் தேவைப்படும் செயற்கை சுவாசக் கருவிகளின் எண்ணிக்கை.
      •  ரூ.5 லட்சம் முதல் ரூ.10 லட்சம்- செயற்கை சுவாசக் கருவியின் சராசரி விலை.

 

 

  • அறுவடைப் பணிகள் சுமுகமாக நடைபெறுவதற்காக, விவசாயம் சார்ந்த பணிகளுக்கு ஊரடங்கில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
    •  கொரோனா தொற்று பரவலைக் கட்டுப்படுத்துவதற்காக, நாடு முழுவதும் ஏப்ரல் 14-ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது.
    •  இந்த காலகட்டத்துக்குப் பிறகு மக்களுக்கு உணவுப் பொருள்கள் கிடைத்திட வேண்டும். இந்தப் பிரச்னைகளை மத்திய உள்துறை அமைச்சகத்தின் கவனத்துக்கு கொண்டு விவசாயம் சார்ந்த பணிகளை மேற்கொள்வதற்கு அனுமதி அளிக்க முடிவு செய்யப்பட்டது..
    •  செய்தி துளிகள்:
      • விளைபொருள்கள் கொள்முதல், அறுவடை, பண்ணை சார்ந்த தொழில்கள் ஆகியவற்றுக்கு ஊரடங்கில் இருந்து மத்திய அரசு விலக்கு அளித்தது. உரம், பூச்சிக் கொல்லிகள், விதைகள் உற்பத்தி மையங்கள், விற்பனை மையங்கள் இயங்கவும் அனுமதி அளிக்கப்பட்டது.

 

 

சர்வதேச நிகழ்வுகள்

  • கூகுள் தனது டுயோ சாட் ஆப்பை மேம்படுத்தியுள்ளது. அதன் மூலம் இது 8 பேருடன் ஒரே சமயத்தில் குழு அழைப்பை மேற்கொள்ளும் வசதியை 12 ஆக அதிகரித்துள்ளது.
    • உலகம் முழுக்க கரோனா பரவல் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில், நிறுவனங்கள் குழு அழைப்பை மேற்கொள்ளவும், தனிநபர்கள் உறவினர்களோடு பேசவும் வசதியாக கூகுள் டுயோ இந்த வாய்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
    • செய்தி துளிகள்:
      • கூகுள் தலைமையகம் : கலிபோர்னியா, ஐக்கிய அமெரிக்கா.
      • இந்நிறுவனம் 1998இல் லாரி பேஜ், சேர்ஜி பிரின் ஆகியோரால் துவங்கப்பட்டது.

 

 

வர்த்தக நிகழ்வுகள்

  • நீண்ட கால முடக்கத்தின் காரணமாக இந்தியன் வங்கி மற்றும் அலாகாபாத் வங்கி இணைப்பு நடைமுறைகள் முழுமை பெறுவதில் சிறிது காலதாமதம் ஏற்படக்கூடும்.
    •  ரொக்க டெபாசிட், பணம் எடுப்பது மற்றும் அனுப்புவது உள்ளிட்ட அடிப்படை வங்கி பரிவர்த்தனைகள் திட்டமிட்டபடி வரும் ஏப்ரல் 1-ஆம் தேதியிலிருந்து தொடங்கும்.
    •  இந்த இணைப்பு நடவடிக்கைக்குப் பிறகு புதிய லோகோவில் ‘அலாகாபாத்’ என்ற பெயரும் இடம்பெறும் என்றார் கொல்கத்தாவை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு அலாகாபாத் வங்கியைச் சேர்ந்த உயரதிகாரி பிடிஐ
    •  செய்தி துளிகள்:
      • இந்த இணைப்பு நடவடிக்கையின்படி, அலாகாபாத் வங்கியின் ஒவ்வொரு 1,000 பங்குகளுக்கும் இந்தியன் வங்கியின் 115 பங்குகள் ஒதுக்கீடு செய்யப்படும் என பங்குகள் பரிமாற்ற ஒப்பந்தத்தில் கூறப்பட்டுள்ளது.
      • இந்தியன் வங்கி-அலாகாபாத் வங்கி இணைப்புக்குப் பிறகு, மொத்த வர்த்தகம் ரூ.8.40 லட்சம் கோடியாக அதிகரிக்கும்.

 

 

திருக்குறள்

குறள் எண்: 152

குறள் பால்: அறத்துப்பால்

குறள் இயல்: இல்லறவியல்

குறள் அதிகாரம்: பொறையுடைமை

குறள்:

பொறுத்த லிறப்பினை யென்றும் அதனை
மறத்த லதனினும் நன்று.

விளக்கம்:
பிறர் செய்யும் அளவற்ற தீமையை எப்பொழுதும் பொறுத்துக் கொள்ளுதல் வேண்டும்; அதனை உடனே மறந்துவிடுதல் அப்பொறுமையை விட நல்லது.

 

ENGLISH CURRENT AFFAIRS

NATIONAL NEWS

  • Nagaland CM launches self Declaration COVID-19 APP. Chief Minister of Nagaland Neiphiu Rio launched the self Declaration COVID-19 Nagaland APP at kohima on 28 march. The app is aimed to trace the person who entered the state, as a measure to tackle the spread of coronavirus.
    • The app will be mandatory for any person who entered Nagaland after 6th The app is available for Android and ios users. The app is crucial for tracking and surveillance of high-risk cases people can download the app from the website.
    • Related Keys:
      • About Nagaland
      • Capital – Kohima
      • CM –  Neiphiu Rio

INTERNATIONAL NEWS

  • India Japan signed major rail projects for public, freight transport. Delhi-Mumbai Industrial Corridor (DMIC) initiative is part of the Japanese-Indian collaborative project aimed at comprehensive regional Development.
    • Japanese Government Funding agency JICA signed Rs. 15,295 core agreement with the Indian Government for three mega rail infrastructure projects. The agreement will provide long-term low-cost loans for development projects to various countries.
    • Related Keys:
      • About Japan
      • President –           Shinzo Abe
      • Capital –           Tokyo
      • Currency –           Japanese yen

 

 

  • IMF reported that the global economy might enter a recession. International Monetary Fund (IMF) Chief Kristalina Georgieva announced that the global economy is now in a recession due to coronavirus. It has been made clear that the world countries have entered a recession.
    • IMF stated that over 80 countries have already have requested emergency aid to contain coronavirus of the 80 countries. Most of the countries are low-income countries.
    • Related Keys:
      • About IMF:
      • Managing Director –           Kristalina Georgieva
      • Chief Economist –           Gita Gopinath
      • Chairman –           Kristalina Georgieva

SCIENCE & TECHNOLOGY

SCIENCE NEWS

  • China to launch long march-5B Carrier rocket in April. China is planning to launch a long march-5B Carrier rocket an experimental spacecraft, without a crew in April 2020. The mission is a part of a border space flight program to shuttle: astronauts to its future space station.
    • The new generation space craft has been scheduled to launch china’s largest carrier rocket from the southern island province of Hainan. The launch has been set for mid to late April.
    • Related Keys:
      • China Currency Name –           Renminibi
      • China Capital –           Beijing

 

 

TECHNOLOGY NEWS

  • Apple launched app for COVID-19 Information. Tech giant app has released a new dedicated app and website for users across the US. The app provides accurate and credible information to users about the COVID-19 pandemic.
    • The news COVID-19 app and website provide the needed guidance and latest information from the centers for disease control and prevention (CDC). The app has been made available on the APP store. The users can also use the new tools to answer questions around risk factors, Recent exposure and symptoms.
    • Related Keys:
      • About Apple
      • CEO –           rim cook
      • Headquarters located in Cupertino, California, US

 

 

WORDS OF THE DAY

  • Dagger – a type of knife used as a weapon.
    • Similar words -Hilt, Kris, Drik knife
    • Antonyms-Unfold uppercase
  • Grommet -An eyelet placed in a hole to protect
    • Similar words -Arm care label, Drain
    • Antonyms- open circuit, Unite Unwind