Today TNPSC Current Affairs March 24 2020

We Shine Daily News

மார்ச் 24

தமிழ்

Download Tamil PDF – Click Here

Download English PDF – Click Here

 

தமிழக நிகழ்வுகள்

 

  • தமிழகத்தில் அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் தலா ரூபாய் 1000 வழங்கப்படும் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.
    • மார்ச் 24 சட்டப்பேரவையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, கரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையால் ஏற்பட்ட பாதிப்புகளுக்காக ரூ.3,250 கோடி நிவாரண நிதி அறிவித்தார்.
    • ரேசன் கடைகளில் கூட்டம் கூடுவதை தவிர்க்க டோக்கன் முறையில் பொருட்கள் வழங்கப்படும். மார்ச் மாத ரேசன் பொருட்களை பெற தவறியவர்கள் அவற்றை ஏப்ரல் மாத பொருட்களுடன் பெற்றுக்கொள்ளலாம்.
    • செய்தி துளிகள்:
      • நடைபாதை வியாபாரிகளுக்கு பொது நிவாரண நிதி ரூ.1000 மற்றும் கூடுதலாக ரூ.1000 உதவித்தொகை வழங்கப்படும். கட்டட தொழிலாளர்களுக்கு ஓட்டுநர் தொழில் சார்ந்தவர்களுக்கு நிவாரண நிதியாக தலா ரூ.1000 வழங்கப்படும். 100 நாள் வேலைத்திட்ட தொழிலாளர்களுக்கு 2 நாட்கள் ஊதியம் கூடுதலாக வழங்கப்படும். அம்மா உணவகங்களில் சுகாதாரமான உணவுகள் சமைத்து வழங்கப்படும் என்று தெரிவித்தார்.

 

 

  • நாகை மாவட்டத்தில் இருந்து பிரித்து மயிலாடுதுறை புதிய மாவட்டமாக உருவாக்கப்படும் என்று சட்டப்பேரவையில் முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி அறிவித்தார்.
    • சட்டப்பேரவையில் மார்ச் 24 அன்று முதல்வர் பழனிசாமி வெளியிட்ட இந்த அறிவிப்பின் மூலம் 38வது மாவட்டமாக உருவாகிறது மயிலாடுதுறை.
    • செய்தி துளிகள்:
      • நவம்பர் 2019-இல் தமிழ்நாட்டின் காஞ்சிபுரம் மாவட்டத்தைப் பிரித்து செங்கல்பட்டு மாவட்டம், விழுப்புரம் மாவட்டத்தைப் பிரித்து கள்ளக்குறிச்சி மாவட்டம், திருநெல்வேலி மாவட்டத்தைப் பிரித்து தென்காசி மாவட்டம், வேலூர் மாவட்டத்தைப் பிரித்து இராணிப்பேட்டை மாவட்டம் மற்றும் திருப்பத்தூர் மாவட்டம் என 5 புதிய மாவட்டங்கள் நிறுவப்பட்டன

 

 

தேசிய நிகழ்வுகள்

 

  • அடுத்த 3 மாதங்களில் பதவிக்காலம் நிறைவடையும் மாநிலங்களவை எம்.பி.க்கள் 57 பேருக்கு அவையில் மார்ச் 23 அன்று பிரியாவிடை அளிக்கப்பட்டது.
    • தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார், மத்திய அமைச்சர் ராம்தாஸ் அதாவலே, காங்கிரஸ் மூத்த தலைவர் மோதி லால் வோரா, முன்னாள் மத்திய அமைச்சர் விஜய் கோயல் உள்ளிட்டோர் பதவிக் காலம் நிறைவடையும் உறுப்பினர்களில் முக்கியமானவர்கள் ஆவர். இவர்களில் சரத் பவார் மீண்டும் தேர்வாகியுள்ளார்.
    • செய்தி துளிகள்:
      • மாநிலங்களவையில் மூன்றில் ஒரு பங்கு உறுப்பினர்களின் பதவிக்காலம் இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை நிறைவடையும். அதன்படி, 20 மாநிலங்களிலிருந்து 57 உறுப்பினர்களின் பதவிக்காலம், வரும் ஏப்ரல் முதல் ஜூலை வரையிலான காலகட்டத்தில் நிறைவடையவுள்ளது.
      • அவர் உள்பட 37 உறுப்பினர்கள் போட்டியின்றி தேர்வாகிவிட்டநிலையில் மீதமுள்ள இடங்களுக்கான தேர்தல் வரும் மார்ச் 26-ஆம் தேதி நடைபெறவுள்ளது.

 

 

  • வரும் ஏப்ரல் 1-ஆம் தேதி தொடங்கவுள்ள 2020-21-ஆம் நிதியாண்டில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி2 சதவீதமாக இருக்கும் என சர்வதேச தரக்குறியீட்டு நிறுவனமான எஸ் & பி தெரிவித்துள்ளது.
    • பணவீக்கத்தைப் பொருத்தவரையில் தற்போதைய7 சதவீதத்திலிருந்து அடுத்த நிதியாண்டில் 4.4 சதவீதமாக குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது, 2021-22 நிதியாண்டில் 4.2 சதவீதமாக குறையும் எனவும், 2021-22 நிதியாண்டில் 4.4 சதவீதமாகவும், 2022-23 நிதியாண்டில் 4.5 சதவீதமாகவும் உயரும் என மதிப்பிடப்பட்டுள்ளது.
    • செய்தி துளிகள்:
      • வரும் 2020-21-ஆம் நிதியாண்டில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி5 சதவீதமாக இருக்கும் என முன்பு மதிப்பிடப்பட்டிருந்தது. இந்தச் சூழ்நிலையில், கரோனா வைரஸ் உலக பொருளாதாரத்தில் கடும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. அதன் விளைவாக, வரும் நிதியாண்டில் இந்தியாவின் பொருளாதார வளார்ச்சி 5.2 சதவீதமாக குறையும் என தற்போதைய மதிப்பீட்டின் மூலமாக தெரியவந்துள்ளது.

 

 

விளையாட்டு நிகழ்வுகள்

 

  • கேன்டிடேட்ஸ் செஸ் தொடரின் ஐந்தாவது சுற்றில் ரஷ்யாவின் நோபோம்னியாட்சி வெற்றி பெற்றார்.
    • உலகின் முன்னணி வீரர்கள் 8 பேர் இதில் பங்கேற்கின்றனர். ரவுண்டு ராபின்’ முறையில் ஒவ்வொருவரும் மற்ற வீரர்களுடன் தலா இரண்டு முறை மோதுவர். இதில் வெற்றி பெறும் வீரர், இந்த ஆண்டு நடக்கும் உலக செஸ் சாம்பியன்ஷிப் பட்டத்துக்கான போட்டியில் மோதுவர்.
    • ஐந்தாவது சுற்றில் ரஷ்யாவின் நேபோம்னியாட்சி, சீனாவின் ஹாவோ வாங்கை சந்தித்தார்.
    • இதில் வெள்ளை நிற காய்களுடன் களமிறங்கிய நேபோம்னியாட்சி, போட்டியின் 43வது நகர்த்தலில் வெற்றி பெற்றார்.
    • செய்தி துளிகள்
      • மற்ற வீரர்கள் மோதிய போட்டிகள் ‘டிரா’ ஆகின. ஐந்து சுற்று முடிவில் ரஷ்யாவின் நேபோம்னியாட்சி (3.5) முதலிடத்துக்கு முன்னேறினார். மற்ற ரஷ்ய வீரர்கள் மாக்சிம் வாசியர் (3.0), அலெக்சாண்டர் (2.5) அடுத்த இரு இடங்களில் உள்ளனர்.

 

 

திருக்குறள்

 

குறள் எண் : 147

குறள் பால் : அறத்துப்பால்

குறள் இயல் : இல்லறவியல்

குறள் அதிகாரம் : பிறனில் விழையாமை

அறினியலான் இல்வாழ்வா னென்பான் பிறனியலான்

பெண்மை நயவா தவன்”

விளக்கம் :அறத்தின் இயல்போடு பொருத்தி இல்வாழ்கை வாழ்பவன், பிறனுக்கு உரிமையானவளின் பெண் தன்மையை விரும்பாதவனே

 

ENGLISH CURRENT AFFAIRS

 

NATIONAL NEWS

  • On March 22, 2020 the government set up a 21 member high-level technical committee of public health experts to guide the people in preventive & control activities of COVID-19.
    • The committee is headed by  NITI Aayog member V K Paul & is co-chaired by Union Health Secretary- Preeti Sudan, Director General Indian Council of Medical Research (ICMR)- Balram Bhargava

 

 

  • On March 23, 2020, the Defence Ministry announced in the Parliament that it has acquired land from the State Governments of Uttar Pradesh and Tamil Nadu. As Land is state subject, it is important for the centre to acquire land from the state government for development projects.
    • Related Keys
      • Defence Investor Cell was created to address the issues related to investments and its related regulatory measures.

 

 

INTERNATIONAL NEWS

  • On March 23, 2020 the Heritage Foundation published its 26th annual edition of Economic Freedom Index 2020 to measure the level of economic freedom in 186 countries. India (56.5) ranks in 120th position & Singapore (89.4) tops the index for the 1st time.
    • Related Keys
      • Economic Freedom Index created in 1995
      • Economic Freedom Index by the Heritage Foundation and The Wall Street Journal

 

 

BANKING NEWS

  • On March 23, 2020, State Bank of India (SBI), an Indian multinational, public sector bank, became the 1st bank to launch COVID 19 emergency credit line (CECL) to provide funds to businesses affected by the infectious coronavirus.
    • Related Keys
      • State Bank of India (SBI): Headquarter– Mumbai, Maharashtra
      • SBI Chairman– Rajnish Kumar

 

 

IMPORTANT DAYS

  • Every year, March 24 is marked as the World Tuberculosis Day. The idea was proposed by International Union Against Tuberculosis and Lung Disease(IUATLD). The day is also marked by the World Health Organization (WHO).
    • Theme: It’s Time

 

 

WORDS OF THE DAY

  • Panache – confidence of style or manner.
    • Similar Words – self-assurance ,flair
    • Antonyms -spiritlessness

 

  • Paradigm – A typical example or model
    • Similar Words – Pattern, prototype
    • Antonyms – Expand, decentralize