Today TNPSC Current Affairs March 23 2020

We Shine Daily News

மார்ச் 23

தமிழ்

Download Tamil PDF – Click Here

Download English PDF – Click Here

 

தமிழக நிகழ்வுகள்

 

 • இந்திய ரயில்வேயின் கடினமான ரயில் என்ஜின் லோகோ பைலட் பணியிடங்களில் பெண்கள் தற்போது அதிக அளவில் சேர்ந்து, தடம் பதிக்க உள்ளார்கள். இந்திய ரயில்வேயில் ஓர் ஆண்டில் முதன்முறையாக 1,280 பெண்கள் என்ஜின் உதவி லோகோ பைலட் ஆக தேர்வாகியுள்ளார்கள்.
  • இவர்கள் வருகையின் மூலமாக, வரும் ஆண்டுகளில் இந்த கடின பணியில் சேரும் பெண்கள் எண்ணிக்கை மேலும் உயரும் என்று ரயில்வே அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்தனர்.
  • செய்தி துளிகள்
   • கடந்த 3 ஆண்டுகளில் தொழில்நுட்பம் சார்ந்த ரயில்வே பணிகளுக்கு விண்ணப்பித்தவர்கள் 2 கோடியே 79 லட்சத்து 60 ஆயிரத்து 224 பேர்.
   • இதில், பெண் விண்ணப்பதாரர்கள் மட்டும் 46 லட்சத்து 76 ஆயிரத்து 928 பேர். இதில் பணிமனைகள், தொழிற்சாலைகள், ரயில் நிலையங்களில் பணியாற்றவே அதிகம் விண்ணப்பித்தார்கள்.

 

 

 • தமிழகத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக கூடுதலாக ரூபாய் ரூ.500 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி சட்ட பேரவையில் அறிவித்துள்ளார்.
  • ஏற்கனவே ரூ.60 கோடி நிதி ஒதுக்கப்பட்ட நிலையில் தற்போது கூடுதலாக ரூ.500 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி சட்ட பேரவையில் அறிவித்துள்ளார்.
  • செய்தி துளிகள்
   • தமிழ்நாடு சட்டப் பேரவை தலைமை அவைத்தலைவர் ப.தனபால்
   • தமிழ்நாடு சட்டப் பேரவை துணை அவைத்தலைவர் பொள்ளாச்சி ஜெயராமன்
   • தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி கே. பழனிசாமி,
   • தமிழ்நாடு துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம்

 

 

இந்திய நிகழ்வுகள்

 

 • நாட்டில் முதல் முதலாக பிஎஸ்-6 எரிபொருள் விற்பனையை இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் (ஐஓசி) நிறுவனம் தொடங்கியுள்ளது.
  • இந்தியாவின் மிகப்பெரிய எண்ணெய் நிறுவனமாகத் திகழும் ஐஓசியின் தலைவர் சஞ்சீர் சிங் கூறியதாவது:
  • உலகின் மிக சுத்தமான எரிபொருளாக பிஎஸ்-6 கருதப்படுகிறது. இதனை நாடு முழுவதும் நாங்கள் வெற்றிகரமாக கொண்டு சேர்த்துள்ளோம்.
  • அதன்படி, நிறுவனத்துக்கு சொந்தமான 28,000 பெட்ரோல் நிலையங்களில் மிக குறைந்த அளவு கந்தகத்தைக் கொண்ட பிஎஸ்-6 எரிபொருளை இறுதிக் காலக்கெடுவான ஏப்ரல் 1-ஆம் தேதிக்கு இரண்டு வாரங்களுக்கு முன்னதாகவே கொண்டு சேர்த்து விநியோகத்தை தொடங்கியுள்ளோம்.
  • செய்தி துளிகள்
   • தேசிய தலைநகர் தில்லியில் பிஎஸ்-6 தர எரிபொருள்களின் விற்பனையை எண்ணெய் நிறுவனங்கள் கடந்த 2018 ஆண்டு ஏப்ரல் 1-ஆம் தேதியே தொடங்கிவிட்டன என்பது குறிப்பிடத்தக்கது.

 

 

விளையாட்டு நிகழ்வுகள்

 

 • இந்தியாவில் முதன் முறையாக முழுவதும் திருநங்கைகள் அடங்கிய கால்பந்து அணி மணிப்பூரில் உருவாகியுள்ளது. இம்பாலை சேர்ந்த அரசு சாரா நிறுவனம் ‘யா ஆல்”. இரு ஆண்டுக்கு முன் திருநங்கைகளுக்காக ஆறு பேர் கொண்ட கால்பந்து போட்டிகளை நடத்தியது. இதையடுத்து முழுவதும் திருநங்கைகள் அடங்கிய 14 பேர் கொண்ட கால்பந்து அணி மணிப்பூரில் உருவாகியுள்ளது.
  • செய்தி துளிகள்
   • சமீபத்தில் பெண்கள் தினத்தில் (மார்ச் 8) தலா 7 பேர் கொண்ட அணியாக பிரிந்து ‘நட்பு’ போட்டியில் விளையாடினர். ‘யா ஆல்’ நிறுவனம் சதாம் ஹன்ஜபம் கூறுகையில், மத்திய அரசு திருநங்கைகளை அங்கீகரித்துள்ளது.

 

 

முக்கிய தினங்கள்

 

 • உலக வானிலை தினம், இன்று, காலநிலையும், நீர் நிலையும்” என்ற கருத்துடன், உலகம் முழுவதும் கடைப்பிடிக்கப்படுகிறது.
  • உலக வானிலை அமைப்பு, சுவிட்சர்லாந்து நாட்டில் உள்ள ஜெனிவா நகரில், 1950 மார்ச், 23ல் துவங்கப்பட்டது. இந்த நாளை, உலக வானிலை தினமாக, பல்வேறு நாடுகள் கடைப்பிடிக்கின்றன. அதன்படி, இன்று உலக வானிலை தினம், அனைத்து நாடுகளிலும் கடைப்பிடிக்கப்படுகிறது.

 

 

திருக்குறள்

 

குறள் எண் : 146

குறள் பால்: அறத்துப்பால்

குறள் இயல்: இல்லறவியல்

குறள் அதிகாரம்: பிறனில் விழையாமை

பகைபாவம் அச்சம் பழியென நான்கும்

இகவாவாம் இல்லிறப்பான் கண்.

விளக்கம்: பிறனுடைய மனைவியை விரும்பி அவன் வீட்டில் செல்பவனிடத்தில் பகை, பாவம், பழி, பயம் என்னும் நான்கும் நீங்காமல் இருக்கும்.

 

ENGLISH CURRENT AFFAIRS

 

NATIONAL NEWS

 • In October 2019, India had put the Fleet Vessel Ship (FVS) Agreement on hold. The agreement was signed with Turkey to manufacture 45,000 tonne FSV at Vishakhapatnam. Highlights India and Turkey signed the FSV agreement in 2016.
  • FSVs are important for the Indian Navy to transport fuel and other supplies for warships at sea.
  • Related Keys
   • Turkey Capital: Ankara
   • Turkey Currency: Turkish lira

 

 

INTERNATIONAL NEWS

 • Recently, Greece handed over the Olympic Flame to Japan. However, due to the increasing threats of Corona Virus, the International Olympics Committeeis considering postponement of 2020 Olympics. The organization might postpone Olympics to 2021.
  • The International Olympics Committee has set a time frame of 4 weeks to make a decision about the postponement of Olympics.
  • Related Keys
   • GreeceCurrency: Euro
   • GreeceCapital :Athens

 

 

BANKING NEWS

 • The Reserve Bank of India decided to infuse additional liquidity with a second tranche of bond purchase worth ₹30,000 crores amid the Covid-19 pandemic. In the backdrop of the Coronavirus outbreak, the Apex Bank has decided to ensure that all market segments function normally with adequate liquidity and turnover.
  • The auctions would be conducted on March 24 and March 30.
  • Related Keys
   • RBI Headquarters: Mumbai
   • RBI Founder: British Raj

 

 

SCIENCE AND TECH UPDATES

 • On March 20, 2020 the National Aeronautics and Space Administration’s (NASA) Centre for Near-Earth Object Studies (CNEOS) identifies 4 asteroids namely, 2020 FK, 2020 FS, 2020 DP4 & 2020 FF1 approaching the earth which follows Earth-intersecting orbits. The 2020 FK asteroid is the smallest of the four, with a diameter of 43 feet
  • The 2020 DP4 asteroid is the largest of the four, and is large enough to hit nearly 12 limousines with a diameter of 180 feet
  • Related Keys
   • NASA Founded: 29 July 1958, United States
   • NASA Headquarters: Washington, D.C., United States

 

 

IMPORTANT DAYS

 • Every year on March 23, World Meteorological Day is celebrated. It was established in 1950. The Day is being observed by the World Meteorological Organization (WMO) and also by the United Nations. March 23 has been chosen as the World Meteorological Organization was established on that day in 1950.
  • The theme of 2020 World Meteorological Day is Theme: Climate and Water

 

 

WORDS OF THE DAY

 • Obdurate – stubbornly refusing to change one’s opinion or course of action.
  • Similar Words – stubborn ,obstinate
  • Antonyms – amenable ,compliant

 

 • Obscure – Not known about or well known, hard to understand or see.
  • Similar Words –unclear , uncertain , unknown
  • Antonyms –clear , reveal

 


Call Us