Today TNPSC Current Affairs March 19 2020

We Shine Daily News

மார்ச் 19

தமிழ்

Download Tamil PDF – Click Here

Download English PDF – Click Here

 

தமிழக நிகழ்வுகள்

 

  • மாநில நெடுஞ்சாலைகள் (ம) மாவட்ட முக்கிய சாலைகள் ரூ.1500 கோடி செலவில் மேம்படுத்தப்படும் என்று முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி அறிவித்துள்ளார்.
    • தமிழ்நாடு சாலை மேம்பாட்டு திட்டம் மூலமாக உலக வங்கியின் கூடுதல் நிதியுதவியுடன் ஓமலூர் – மேச்சேரி சாலை, மல்லியக்கரை – ஆத்தூர் சாலை, மாநில நெடுஞ்சாலை – 15 உள்ள முக்கிய சாலைகள் உட்பட ஏழு சாலைகள் ரூ.1500 கோடி மதிப்பில் மேம்படுத்தப்பட உள்ளன.
    • செய்தி துளிகள் :
      • இந்தியாவின் கிழக்கில் வங்காள விரிகுடாவையும், மேற்கில் அரபிக் கடலையும் கடல்வழியாக இணைப்பதற்கு ஏதுவாக மன்னார் வளைகுடா (ம) பாக்ஜலசந்தி பகுதிகளை இணைக்கும் பாம்பன் கால்வாயை தூர்வாருவதற்கும் பொருளாதார (ம) சுற்றுச்சூழல் தொழில்நுட்ப சாத்தியகூறுகளை ஆராய்வதற்காக ரூ.1 கோடி மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது.

 

 

தேசிய நிகழ்வுகள்

 

  • மாநிலங்களவை தேர்தலில் 6 பேர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளதாக சட்ட பேரவை செயலாளரும், தேர்தல் நடத்தும் அதிகாரியுமான கி.சீனிவாசன் தெரிவித்தார்.
    • மக்கள் பிரதிநிதித்துவ சட்டப்படி திமுகவை சார்ந்த என்.ஆர்.இளங்கோ, ப.செல்வராசு, திருச்சி சிவா ஆகியோரும், அதிமுகவை சேர்ந்த மு.தம்பிதுரை, கே.பி.முனுசாமி மற்றும் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் ஜி.கே.வாசன் ஆகிய 6 பேர் முறையாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.
    • செய்தி துளிகள் :
      • சமீபத்தில் மாநிலங்களவை உறுப்பினராக முன்னாள் தலைமை நீதிபதியான ரஞ்சன் கோகோய் நியமிக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
      • ராஜ்ய சபாவின் மொத்த உறுப்பினர்களின் எண்ணிக்கை – 250
      • ஜனாதிபதியால் தேர்வு செய்யப்படுபவர்கள் எண்ணிக்கை – 12

 

 

  • சமீபத்தில் வன்முறைப் போராட்டங்களின் போது பொதுச் சொத்துக்களுக்கு ஏற்பட்ட சேதங்களை மீட்பதற்காக உத்தரப் பிரதேச மாநில அமைச்சரவையானது ‘பொதுச் சொத்துக்களைச் சேதத்திலிருந்து மீட்பதற்கான அவசரச் சட்டம் 2020’ என்ற ஒரு சட்டத்தை நிறைவேற்றியுள்ளது.
    • இது அம்மாநிலத்தில் பொது சொத்துக்களின் இழப்பைத் தடுப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

 

 

அறிவியல் மற்றும் தொழில்நுட்பம்

 

  • எக்ஸோமார்ஸ் திட்டமானது மென்பொருள் பிரச்சினைகளால் 2 ஆண்டுகள் தாமதமாகத் செலுத்தப்பட இருக்கின்றது.
    • இப்போது ஐரோப்பிய விண்வெளி அமைப்பின் திட்டமானது (European Space Agency Mission – ESA)) 2022 ஆம் ஆண்டில் தொடங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
    • செவ்வாய்க் கிரகத்தின் மீதான எக்ஸோபயாலஜி அல்லது எக்ஸோமார்ஸ் என்பது ஐரோப்பிய விண்வெளி நிறுவனம் மற்றும் ரோஸ்கோஸ்மோஸ் (ரஷ்ய விண்வெளி நிறுவனம்) ஆகியவற்றுக்கு இடையேயான ஒரு கூட்டுத்திட்டமாகும்.
    • செய்தி துளிகள் :
      • செவ்வாய்க் கிரகத்தில் காணப்படும் நீர் குறித்த வரலாறு, அதன் புவி வேதியியல், வளிமண்டலக் கலவைகள் போன்றவற்றின் ஆய்வைத் தவிர செவ்வாய்க் கிரகத்தில் உயிர் வாழ்வதற்கான சாத்தியக் கூறை ஆய்வு செய்வதும் இதன் நோக்கமாகும்.
      • ரோசாலிண்ட் பிராங்க்ளின் என்பது எக்ஸோமார்ஸ் திட்டத்தில் பயன்படுத்தப்படும் ஒரு ஆய்வு வாகனமாகும்.

 

 

பொருளாதார நிகழ்வுகள்

 

  • சரக்கு மற்றும் சேவைகள் வரி (Goods and Services Tax – GST) ஆணையத்தின் 39வது கூட்டமானது சமீபத்தில் டெல்லியில் நிறைவடைந்தது. இந்தக் கூட்டத்தில் பல்வேறு பொருட்களுக்குப் பொருந்தக் கூடிய சரக்கு மற்றும் சேவைகள் வரி விகிதங்கள் குறித்து முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன.
    • கைபேசிகள் மற்றும் அவற்றின் சில உதிரிப் பாகங்கள் மீதான GST வரி விகிதமானது 12% லிருந்து 18% ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
    • விமானத்தின் எம்ஆர்ஓ சேவைகளுக்கு 18 சதவீதத்திலிருந்து 5 சதவீதமாகக் குறைக்கப்பட்டுள்ளது.
    • கையால் தயாரிக்கப்பட்ட மற்றும் இயந்திரத்தால் தயாரிக்கப்பட்ட தீப்பெட்டிகளுக்கு 12% ஆகத் திருத்தி அமைக்கப்பட்டுள்ளது.
    • செய்தி துளிகள் :
      • GST என்பது 101வது அரசியலமைப்புத் திருத்தச் சட்டத்தால் 2016 ஆம் ஆண்டில் அறிமுகப்படுத்தப்பட்ட ஒரு அரசியலமைப்பு ரீதியிலான அமைப்பு ஆகும்.
      • இது அரசியலமைப்பின் 279ஏ என்ற சரத்தின் கீழ் அமைக்கப்பட்டுள்ளது.
      • இது மத்திய நிதியமைச்சர் அவர்களால் தலைமை தாங்கப்படுகின்றது.

 

 

திருக்குறள்

 

குறள்                                                : 142

குறள் பால்                   : அறத்துப்பால்

குறள் இயல்                : இல்லறவியல்

குறள் அதிகாரம்    : பிறனில் விழையாமை

அறன்கடை நின்றாருள் எல்லாம் பிறன்கடை

நின்றாரின் பேதையார் இல்.

விளக்கம்: பிறனுடைய பொருளாயுள்ள மனைவியை விரும்பி நடக்கும் அறியாமை உலகத்தில் அறம், பொருள் ஆகியவற்றின் புகழ் அறிந்தவர்களிடத்தில் இல்லை.

 

ENGLISH CURRENT AFFAIRS

 

NATIONAL NEWS

  • The government has approved a proposal for the development of 780 km of national highways in four states at a cost of Rs 7,660 crore. This project will set new standards for green highway projects in the form of green cover, utilisation of reusable material in laying roads, etc.
    • The project investment includes Rs 3,500 crore assistance from the World Bank under Green National Highways Corridor Project (GNHCP).
    • Related keys
      • Ministry of Road Transport and Highways Founded: July 1942
      • Ministry of Road Transport and Highways Headquarters : Transport Bhawan, New Delhi

 

 

INTERNATIONAL NEWS

  • On March 17, 2020, Philippines become the first country to close its financial markets due to the COVID 19 (Coronavirus) outbreak. It resumed its trading on March 19, 2020. This measure was taken to ensure the safety of their employees and the people they interact with.
    • Related keys
      • Philippines Capital– Manila
      • Philippines Currency– Philippine peso

 

 

ECONOMY

  • On 18th March 2020, L&T Technology Services(LTTS) signed a multi-year Memorandum of Understanding (MoU) with the Indian Institute of Technology Kanpur (IIT) to collaborate on research industrial and infrastructure cybersecurity.
    • Related Keys
      • LTTS Headquarters– Vadodara, Gujarat
      • LTTS CEO– Dr. Keshab Panda

 

 

SCIENCE AND TECH UPDATES

  • On March 17, 2020, Scientists from the Institute of Nano Science and Technology (INST), an autonomous institute under the Department of Science & Technology, developed a starch-based ‘hemostat’ material which absorbs excess fluid by concentrating the natural clotting factors in the blood that stops the rapid blood loss.
    • Related Keys
      • The microparticles of the product are called ‘calcium-modified carboxymethyl-starch,’ which form a cohesive & sticky gel within 30 seconds of contact with blood.

 

 

APPOINTMENTS

  • The Election Commission of India appointed Hirdesh Kumar as the new Chief Electoral Officer of the Union Territory of Jammu and Kashmir. He will replace Shailendra Kumar with effect from the date he assumes charge.
    • Hridesh Kumar, a 1999 batch IAS officer is presently serving as Commissioner Secretary in the School Education Department of J&K.

 

 

WORDS OF THE DAY

  • Turmoil a state of great disturbance, confusion, or uncertainty.
    • Similar Words – confusion ,turbulence
    • Antonym- calm ,peace

 

  • Apace – in an active, quick and swiftly
    • Similar Words – rapidly , briskly
    • Antonyms – Slowly.