Today TNPSC Current Affairs March 17 2020

We Shine Daily News

மார்ச் 17

தமிழ்

Download Tamil PDF – Click Here

Download English PDF – Click Here

 

தமிழக நிகழ்வுகள்

 

  • நாமக்கல் மாவட்டம், பரமத்தி வட்டார ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டப் பணிகள் சார்பில், ஊட்டச்சத்து தொடர்பான நிகழ்வானது இரண்டு வாரங்களாக நடைபெற்று வருகிறது.
    • இதில், குழந்தை வளர்ச்சியின் நாள்களை தங்கமான ஆயிரம் நாள்கள் என வலியுறுத்தப்படுகிறது. இந்த நாள்களில் குழந்தை கருவுற்றது முதல் ஆயிரம் நாள்கள் வரை குழந்தைகளுக்கு தேவையான ஊட்டச் சத்துக்களை அவர்களின் வளர்ச்சிக்கேற்ப படிப்படியாக வழங்க வேண்டும் என்பதனை வலியுறுத்தி, இந்த நிகழ்வானது நடைபெற்றது.
    • செய்தி துளிகள் :
      • பெண்கள் மற்றும் குழந்தைகள் நலனில் அக்கறைகொண்டு 1975-ம் ஆண்டு அக்டோபர் 2-ம் தேதி காந்தி ஜெயந்தி அன்று துவங்கப்பட்டு கடந்த 42 ஆண்டுகளாக தாய்சேய் நலன் மற்றும் மேம்பாட்டுக்கு அரும்பணியாற்றி வருவதுதான் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்டம்.

 

 

  • நாகை மாவட்டம், வேதாரண்யம் அருகேயுள்ள கோடியக்கரையில் வன உயிரின பாதுகாப்பு சரணாலயமாக உள்ளது. நிகழாண்டுக்கான கணக்கெடுப்பு பணி மார்ச் 14, 15 நடைபெற்றது.
    • இதில் கஜா பாதிப்பிற்கு பிறகு 2018-2019-ஆம் ஆண்டில் 681 ஆக இருந்த வெளிமான் இனத்தின் எண்ணிக்கையில் சீரான முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. கடந்த ஆண்டில் 54 என்ற எண்ணிக்கையில் இருந்த புள்ளிமான்களுடன் தஞ்சை சிவகங்கை பூங்காவில் இருந்து புதிய வரவாக வந்த 43 மான்களுடன் மொத்தம் 122-ஆக அதிகரித்துள்ளது. கடந்த ஆண்டில் 47ஆக இருந்த குதிரைகள் 197ஆக உயர்ந்துள்ளன.
    • செய்தி துளிகள் :
      • 2014-15-ல் 1,527 ஆக இருந்த பழந்தின்னி வெளவால்கள் கடந்த சில ஆண்டுகளாக மேற்கொள்ளப்பட்ட கணக்கெடுப்புகளில் பதிவாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

 

 

விளையாட்டு நிகழ்வுகள்

 

  • முதல்-அமைச்சர் கோப்பைக்கான மாநில அளவிலான கபடி போட்டி 3 நாட்கள் மதுரை தமுக்கம் மைதானத்தில் நடந்தது.
    • ஆண்கள் பிரிவில் லீக் ஆட்டங்கள் முடிவில் சேலம், கரூர், கன்னியாகுமரி அணிகள் தலா 2 வெற்றி, ஒரு தோல்வி கண்டு சமநிலை வகித்தன. போட்டியில் பெற்ற புள்ளிகள் வித்தியாசத்தின் அடிப்படையில் சேலம் அணி சாம்பியன் பட்டத்தையும், கரூர் அணி 2-வது இடத்தையும், கன்னியாகுமரி அணி 3-வது இடத்தையும் பெற்றன.
    • செய்தி துளிகள்:
      • பெண்கள் பிரிவில் லீக் ஆட்டம் முடிவில் திண்டுக்கல் அணி 3 வெற்றியுடன் முதலிடத்தை பிடித்தது. கோவை, சென்னை அணிகள் ஒரு வெற்றி, 2 தோல்வியுடன் சமநிலை வகித்தன. போட்டியில் எடுத்த புள்ளிகள் வித்தியாசத்தில் கோவை அணி 2-வது இடம் பெற்றது. சென்னை அணி 3-வது இடத்துக்கு தள்ளப்பட்டது.

 

 

  • ஆல் இங்கிலாந்து பேட்மின்டன் தொடரின் மகளிர் ஒற்றையர் பிரிவின் இறுதிப்போட்டியில், நம்பர் 1 வீராங்கனை சென் யூ பெய்யுடன் டாய் ட்ஸ_ யிங் மோதினார்.
    • 21-19, 21-15 என்ற நேர் செட் கணக்கில் டாய் ட்ஸூ யிங் வெற்றி பெற்று தங்கப்பதக்கத்தை வென்றார். இதனால் அவர் சாம்பியன் பட்டத்தை வென்றார்.
    • செய்தி துளிகள்:
      • ஆல் இங்கிலாந்து பேட்மின்;டன் தொடர், பேட்மின்;டனில் மிகவும் உயரிய, கவுரவமிக்கதாக கருதப்படுகின்றது.
      • இந்த போட்டிக்கான மொத்த பரிசுத்தொகை ரூ.8 கோடியே 14 லட்சம் ஆகும். வாகை சூடும் வீரர், வீராங்கனை தலா ரூ.57 லட்சத்தை பரிசாக பெறுவார்கள்.

 

 

நியமனமங்கள்

 

  • மாநிலங்களவை நியமன உறுப்பினராக உச்சநீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் மார்ச் 16ஆம் தேதி நியமிக்கப்பட்டார். குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், அவரை மாநிலங்களவை நியமன எம்.பி.யாக நியமித்தார்.
    • அரசியல்சாசன சட்டத்தின் 80-ஆவது சட்டப் பிரிவின்படி, மாநிலங்களவை நியமன உறுப்பினராக ரஞ்சன் கோகோயை குடியரசுத் தலைவர் நியமித்துள்ளார். மூத்த வழக்குரைஞர் கே.டி.எஸ். துளசி பதவிக்காலம் நிறைவு பெற்றதை அடுத்து இந்த நியமனம் நடைபெற்றுள்ளது.
    • செய்தி துளிகள் :
      • இதற்கு முன்பு உச்சநீதிமன்ற நீதிபதியாக இருந்தவர்களில் ரங்கநாத் மிஸ்ரா, காங்கிரஸ் கட்சியில் இணைந்து மாநிலங்களவை எம்.பி.யாக (1998-2004) இருந்தார்.
      • உச்சநீதிமன்றத்தின் 40-ஆவது தலைமை நீதிபதியாக இருந்த பி.சதாசிவம், பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசால் கேரள ஆளுநராக கடந்த 2014-ஆம் ஆண்டு நியமிக்கப்பட்டார்

 

 

திருக்குறள்

 

குறள்                                                : 140

குறள் பால்                   : அறத்துப்பால்

குறள் இயல்                : இல்லறவியல்

குறள் அதிகாரம்    : ஒழுக்கமுடைமை

உலகத்தோடு ஒட்ட ஒழுகல் பலகற்றும்

கல்லார் அறிவிலா தார்.

விளக்கம்: அறிவு ஒழுக்கங்களால் சிறந்தவர்களோடு ஒத்து நடத்தல் வேண்டும். அவ்வாறு நடக்காதவர் பல நூல்களைக் கற்றாராயினும் அறிவில்லாதவர்களேயாவர்.

 

ENGLISH CURRENT AFFAIRS

NATIONAL NEWS

  • Prime Minister Narendra Modi hosted a video-conference meet of leaders of all SAARC member nations. PM Modi also proposed a COVID-19 emergency fund, which will be based on voluntary contributions from all SAARC members. India can start with an initial offer of 10 million US dollars for this fund.
    • The PM also proposed the creation of a common research platform to carry out research to control epidemic diseases in the region.
    • Related Keys
      • SAARC Headquarters: Kathmandu
      • SAARC Founded: 8 December 1985

 

 

  • On March 16, 2020 the Minister of State (Independent Charge) for Power, New and Renewable Energy & Minister of State for Skill Development and Entrepreneurship Raj Kumar (R K) Singh launched a new website of Ministry of New and Renewable Energy (MNRE).
    • The new website is created to address the latest needs of the ministry’s rapid and accurate information and making it more informative, interactive & user friendly, including for those with visual disabilities.
    • Related Key
      • Ministry of New and Renewable Energy (MNRE) Headquarters: New Delhi
      • Ministry of New and Renewable Energy (MNRE) Formed 1992

 

 

SPORTS

  • In Badminton, Taiwan’s shuttler Tai Tzu Ying clinched her third women’s singles title of the All England Championships at Birmingham in the United Kingdom. Ying beat China’s Chen Yufei in two straight games 21-19, 21-15 in 44 minutes.
    • Earlier in the men’s singles, Denmark’s Victor Axelsen outclassed Taiwan’s Chou Tien-Chen.

 

 

SCIENCE AND TECH UPDATES

  • On March 16, 2020, the United States of America began the first human trial evaluating COVID-19 vaccine. The US National Institute of Health will enroll 45 healthy adult volunteers between age 18 and 55 for a period of 6 weeks in order to test the vaccine.
    • A healthy volunteer of Washington was injected with the vaccine.
    • Related Keys
      • The International Clinical Trials Registry Platform of WHO is a mission aimed to make sure a complete view of research is accessible.

 

 

BANKING NEWS

  • The Reserve Bank of India (RBI) on Friday lowered the single borrower and group exposure limit for urban cooperative banks (UCBs) to 15% and 25% of tier I capital, respectively, to reduce concentration risks arising out of such large loans.
    • Existing norms allowed 15% for single borrowers and 40% to group exposures of a bank’s total capital, including tier I and tier II capital.
    • Related Keys
      • RBI Founder: British Raj
      • RBI Founded: 1 April 1935, Kolkata

 

 

WORDS OF THE DAY

  • Jargon – Words used by a particular group and hard for others to understand
    • Similar Words – slang , idiom
    • Antonyms – conversation, literature.

 

  • Juncture – A particular point in time, a join
    • Similar Words – point , moment
    • Antonyms – decomposition, dissociation