Today TNPSC Current Affairs March 16 2020

We Shine Daily News

மார்ச் 16

தமிழ்

Download Tamil PDF – Click Here

Download English PDF – Click Here

 

தமிழக நிகழ்வுகள்

 

  • நாகை மாவட்ட காவல்துறை சார்பில், சர்வதேச மகளிர் தினத்தையொட்டி பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பை வலியுறுத்தி நடந்த மினி மாரத்தான் போட்டியில் ஏராளமானோர் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்.
    • நாகை மாவட்ட காவல்துறை சார்பில், அவுரித்திடலில், போட்டியை எஸ்.பி.,செல்வநாகரத்தினம் கொடியசைத்து துவக்கி வைத்தார்.
    • பெண்கள் மற்றும் குழந்தைகளை பாதுகாப்போம், பாலின பாகுபாடுகள் இல்லாத உலகை உருவாக்குவோம் என்ற விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக நடந்த மினி மாரத்தான் போட்டியில், 300 பெண்கள் உட்பட 700க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.
    • செய்தி துளிகள்
      • மாரத்தான் என்பது சாலையில் தொடர்ந்து நெடுந்தொலைவு ஓடும் போட்டியாகும். இப்போட்டியில் கடக்க வேண்டிய தொலைவு195 கிலோமீட்டர் ஆகும். இப்போட்டி 1896ஆம் ஆண்டிலிருந்தே ஒலிம்பிக் விளையாட்டாக இருந்தபோதும் 1921ஆம் ஆண்டில் தான் விதிமுறைகள் சீர்தரப்படுத்தப்பட்டன.

 

 

  • கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்காக தமிழக அரசு சார்பில் ரூ. 60கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
    • தமிழக சுகாதாரம் மற்றும் குடும்பநலத் துறைக்கு ரூ.30 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. அதுபோல, போக்குவரத்துத் துறைக்கு ரூ. 5 கோடி, பெருநகர சென்னை மாநகராட்சிக்கு ரூ. 4 கோடி, நகராட்சி நிர்வாகத்துக்கு ரூ. 6 கோடி, ஊரக வளர்ச்சித் துறைக்கு ரூ. 5 கோடி, பேரூராட்சி இயக்குநரகத்துக்கு ரூ. 2 கோடி, இந்து சமய அறநிலையத் துறைக்கு ரூ.3 கோடி, பள்ளி கல்வித் துறை மற்றும் உயர் கல்வித் துறைக்கு ரூ. 2 கோடி, அங்கன்வாடி மையங்களுக்கு ரூ.0.5 கோடி மற்றும் மாவட்ட ஆட்சியர்களுக்கு ரூ.2.5 கோடி என மாநில பேரிடர் நிதியிலிருந்து மொத்தம் ரூ.60 கோடி உடனடியாக வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது.
    • செய்தி துளிகள்
      • தமிழ்நாடு ஆளுநர் : திரு பன்வாரிலால் புரோகித்
      • தமிழ்நாடு முதலமைச்சர் : திரு எடப்பாடி கே.பழனிசாமி
      • தமிழ்நாடு தலைமை நீதிபதி : திரு அமரேஷ்வர் பிரதாப் சாஹி

 

 

தேசிய நிகழ்வுகள்

 

  • மத்திய அரசின் சார்பில், விவசாய நிலங்களில் சூரியசக்தி மின் நிலையம் அமைக்கும் திட்டம், செயல்பாட்டில் உள்ளது. விவசாயிகள், 30க்கு 40 அடி என்ற அளவில், தங்கள் நிலத்தை மின் வாரியத்திடம் ஒப்படைத்தால், அங்கு, 10 கிலோ வாட் திறன் கொண்ட சோலார் மின் நிலையம் அமைக்கப்படும். இதன் மூலம், அதிகபட்சம், 50 குதிரைத்திறன் கொண்ட மோட்டார்களை, விவசாயிகள் பயன்படுத்திக் கொள்ள முடியும்.
    • இதற்காகும் செலவில், மத்திய அரசு, 40 சதவீதமும், மாநில அரசு, 30 சதவீதமும் வழங்கும். மீதமுள்ள தொகை, வங்கிக்கடன் மூலம் ஏற்பாடு செய்து கொடுக்கப்படும்.
    • செய்தி துளிகள்
      • தேசிய வேளாண் வளர்ச்சித் திட்டத்தின் கீழ், தரமானச் சான்று பெற்ற நெல் விதைகள் ஒரு கிலோவுக்கு ரூ.10 மானிய விலையில் வழங்கப்படுகிறது.
      • விவசாயக் கூலித் தொழிலாளர்களின் பற்றாக்குறை காரணமாக இயந்திரமயமாக்குதலை ஊக்குவிக்கும் வகையில் நடவு இயந்திரம் கொண்டு நெல் நடவு செய்பவர்களுக்கு ஓர் ஏக்கருக்கு ரூ.1500 மானியம் வழங்கப்படுகிறது.

 

 

விளையாட்டு நிகழ்வுகள்

 

  • ஓமன் ஐடிடிஎஃப் டேபிள் டென்னிஸ் சேலஞ்ச் ஒபன் போட்டியில் இந்திய நட்சத்திர வீரர் சரத் கமல் சாம்பியன் பட்டம் வென்றார்
    • 10 ஆண்டுகள் காத்திருப்புக்கு பின் அவர் மீண்டும் ஐடிடிஎஃப் பட்டத்தை கைப்பற்றியுள்ளார்.
    • மஸ்கட்டில் மார்ச் 15 அன்று இரவு நடைபெற்ற இறுதி ஆட்டத்தில் முதல் நிலை வீரர் போர்ச்சுகலின் மார்கோஸ் ப்ரைடாஸை 6-11, 11-8, 12-10, 11-9, 3-11, 17-15 என்ற கேம் கணக்கில் வீழ்த்தி பட்டத்தை கைப்பற்றினார்.
    • செய்தி துளிகள்
      • கடந்த 2010-இல் எகிப்து ஓபன் போட்டியில் பட்டம் வென்றிருந்தார். 2011, 2017-இல் அரையிறுதியோடு வெளியேறினார் சரத்.

 

 

  • ஆல் இங்கிலாந்து பாட்மிண்டன் போட்டி ஆடவர் ஒற்றையர் பிரிவில் டென்மார்க்கின் விக்டர் ஆக்ஸ்லெசன் சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றினார்.
    • மகளிர் ஒற்றையர் பிரிவு அரையிறுதியில் சீனாவின் உலக நம்பர் ஒன் வீராங்கனை சென் யூபெய் 21-14, 23-21 என்ற கேம் கணக்கில் ஜப்பானின் ஒகுஹராவையும், மற்றொரு அரையிறுதியில் சீன தைபேயின் டை சூ இங் 19-21, 21-13, 21-11 என ஸ்பெயினின் கரோலினா மரினையும் வீழ்த்தி இறுதிச் சுற்றில் நுழைந்தனர்.
    • கலப்பு இரட்டையர் பிரிவு இறுதியில் இந்தோனேஷியாவின் பிரவீன் ஜோர்டான்-மெலடி தவே இறுதிச் சுற்றில் தாய்லாந்தின் டேச்போல்-சப்சிரியுடன் மோதுகின்றனர்.
    • செய்தி துளிகள்
      • நூற்றாண்டு கால பழமை வாய்ந்த ஆல் இங்கிலாந்து ஓபன் பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் ஆண்டுதோறும் இங்கிலாந்தில் நடத்தப்பட்டு வருகிறது.

 

 

திருக்குறள்

 

குறள்: 139

குறள் பால்: அறத்துப்பால்

குறள் இயல்: இல்லறவியல்

குறள் அதிகாரம்: ஒழுக்கமுடைமை

ஒழுக்க முடையவர்க்கு ஒல்லாவே தீய

வழுக்கியும் வாயாற் சொலல்.

விளக்கம்: மறந்தும் தீயசொற்களை வாயினால் சொல்லும் செயல் நல்லொழுக்கம் உடையவர்க்கு ஆகாது.

 

ENGLISH CURRENT AFFAIRS

 

NATIONAL NEWS

  • On March 13, 2020, The Central Reserve Police Force (CRPF), India’s largest Central Armed Police Force, has signed an Memorandum of Understanding (MoU) with Aditya Mehta Foundation (AMF),a non-profit organization. It aids people with disabilities to pursue sports, to train its 189 CRPF personnel who had lost their limbs in operations in areas of cyber security, artificial intelligence (AI) and paralympic sports.
    • Related Keys
      • Central Reserve Police Force (CRPF) Headquarters: New Delhi
      • Central Reserve Police Force (CRPF) Formed 27 July, 1939

 

 

  • Welcomgroup Graduate School of Hotel Administration (WGSHA) of Manipal Academy of Higher Education (MAHE) entered the Limca Book of Records (LBR) for establishing “India’s First Living Culinary Arts Museum” at WGSHA, Manipal, Karnataka.
    • The museum was opened in the year April 2018, spread approximately over 25,000 square feet & the structure of the museum is shaped in the form of a giant pot.
    • Related Keys
      • Limca Book of Records (LBR) is a catalogue of achievements made by Indians, at home and abroad in diverse fields of human endeavour.
      • Limca Book of Records (LBR) Originally published: 1990

 

 

  • On March 15, 2020, at a political delegation Home Minister Amit Shah announced that statehood of Jammu and Kashmir is to be While resuming statehood of the state, the GoI is to release people from detention, relax curfew and restore internet.
    • This is the first political delegation that is being held after the Abrogation of Article 370.

 

 

INTERNATIONAL NEWS

  • The small Pacific island nation Niue, with a population of just over 1,600, is the first country to receive the designation by the International Dark-Sky Association. It has become the world’s first whole country recognized as a ‘Dark Sky Place’.
    • International Dark Sky Places are spaces recognised for responsible lighting policies that keep the night-time environment naturally dark
    • Related Keys
      • Niue Capital: Alofi
      • Currency: New Zealand dollar

 

SCIENCE AND TECH UPDATES

  • The Agharkar Research Institute of Pune has isolated 45 strains of methanotrophic bacteria. These bacteria are capable of reducing methane emissions in rice plants.
    • Apart from isolating the strains, the scientists have also created methanotrophic culture. The isolated bacteria were from southern and western India.
    • Related Keys
      • Bio-Inoculant are strains of bacteria, algae or fungi. They take in nitrogen from atmosphere and prepare nitrates required for plants.

 

 

WORDS OF THE DAY

  • Imperious – Arrogant, expecting unquestioning obedience
    • Similar Words – dominating , commanding
    • Antonyms – meek , patient

 

  • Impetus – A driving or moving force or motive
    • Similar Words – momentum , propulsion , impulsion
    • Antonyms – discouragement , hindrance.