Today TNPSC Current Affairs March 12 2020

We Shine Daily News

மார்ச் 12

தமிழ்

Download Tamil PDF – Click Here

Download English PDF – Click Here

 

சர்வதேச நிகழ்வுகள்

 

 • சிகாகோ தமிழ்ச் சங்க பொன்விழா: 2019ஆம் ஆண்டில் ஐம்பது ஆண்டுகளை நிறைவு செய்யும் பொன்விழா ஆண்டாக கொண்டாடப்பட்டது. இந்த ஐம்பது ஆண்டுகளில் சங்கத்திற்காக அரும் பாடுபட்ட முன்னாள் செயற்குழு உறுப்பினர்களைச் சிறப்பிக்கும் விதமாக விருந்தளித்து, சங்க வளர்ச்சிக்காக அவர்களின் மேலான ஆலோசனைகள் பெறப்பட்டது.
  • தமிழ்நாடு அரசின் உயரிய விருதான ‘தமிழ்த் தாய் விருது’-2019 சிகாகோ தமிழ்ச் சங்கம் பெற்றது.
  • செய்தி துளிகள்:
   • தமிழ்நாடு அரசின் ஆழ்ந்த பரிசீலனைக்குப்பின் சிகாகோ தமிழ்ச் சங்கத்தின் பணிகள் மிகச் சிறப்பானதாகக் கருதி தேர்வு செய்தனர்.
   • புலம் பெயர் மண்ணில், சிகாகோ தமிழ்ச் சங்கம் தான் இத்தகைய விருது பெறுவதற்குத் தேர்வு பெற்ற முதல் தமிழ் அமைப்பாகும்.

 

 

 • கொரோனா வைரஸ் ஒரு தீவிர தொற்றுநோய் என்று உலக சுகாதார அமைப்பு (WHO) அறிவித்துள்ளது. ஒரு தீவிர தொற்றுநோய் என்பது ஒரே நேரத்தில் உலகெங்கிலும் பல நாடுகளில் பரவி வரும் ஒரு நோயாகும்.
  • கடந்த இரண்டு வாரங்களில் சீனாவுக்கு வெளியே உள்ள நாடுகளில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை சடுதியாக அதிகரித்துள்ளது என்று உலக சுகாதார அமைப்பின் தலைவர் டொக்ரர் ரெட்ரோஸ் அடனோம் கெப்ரியசுஸ் (Dr Tedros Adhanom Ghebreyesus)தெரிவித்துள்ளார்.
  • செய்தி துளிகள்:
   • அவசர மற்றும் கடுமையான நடவடிக்கை எடுத்து வைரஸ் பரவுவதன் போக்கை மாற்றுமாறு அவர் அரசாங்கங்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார். இந்த வைரஸை அடக்கிக் கட்டுப்படுத்த முடியும் என்பதை பல நாடுகள் நிரூபித்துள்ளன என்றும் அவர் கூறினார்.

 

 

 • அமெரிக்காவில் இந்த ஆண்டு நடைபெறவிருக்கும் அதிபர் தேர்தலுக்கான ஜனநாயகக் கட்சி வேட்பாளரைத் தேர்ந்தெடுப்பதற்காக 3 மாகாணங்களில் நடைபெற்ற வாக்கெடுப்பில் முன்னாள் துணை அதிபர் ஜோ பிடன் (77) வெற்றி பெற்றுள்ளார்.
  • இதையடுத்து, போட்டியில் அவருக்கு அடுத்த இடத்திலுள்ள வெர்மான்ட் மாகாண எம்.பி. பெர்னி சாண்டர்ஸை (78) விட அவர் அதிக முன்னிலை பெற்றுள்ளார்.
  • செய்தி துளிகள்:
   • அமெரிக் ஜனாதிபதிகளின் பட்டியல்
   • ஜனவரி 20, 2001 – ஜனவரி 20, 2009 ஜார்ஜ் டபிள்யூ புஷ்
   • ஜனவரி 20, 2009 – ஜனவரி 20, 2017 பராக் ஓபாமா
   • ஜனவரி 20, 2017 டொனால்டு டிரம்ப்

 

 

விளையாட்டு நிகழ்வுகள்

 

 • ஜோர்டானில் நடைபெற்ற ஆசிய ஒலிம்பிக் தகுதிச்சுற்றுப் போட்டியில் காயம் காரணமாக இறுதிச்சுற்றில் விளையாடாமல் விலகியதை அடுத்து, இந்திய குத்துச்சண்டை வீரர் விகாஷ் கிருஷண் வெள்ளி வென்றார்.
  • உலக சாம்பியன்ஷிப், ஆசிய விளையாட்டுப் போட்டி ஆகியவற்றில் பதக்கங்கள் வென்றவரான விகாஸ் 69 கிலோ எடைப்பிரிவில் ஆசிய ஒலிம்பிக் தகுதிச்சுற்றில் பங்கேற்றார்.
  • இவருக்கு கண்ணுக்கு அருகே காயம் ஏற்பட்டிருப்பதால், இறுதிப் போட்டியில் விளையாட முடியவில்லை. இதனால், ஜோர்டான் வீரர் ஜெயத் ஈஷாஷை அவரால் எதிர்கொள்ள முடியவில்லை.
  • செய்தி துளிகள்:
   • டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கு இந்திய குத்துச்சண்டை வீரர் மணீஷ் கௌசிக் (63 கிலோ) தகுதி பெற்றார்.
   • இவர் ஒலிம்பிக்குக்கு தகுதி பெற்ற 9-ஆவது இந்திய குத்துச்சண்டை வீரராவார்.

 

 

வர்த்தக நிகழ்வுகள்

 

 • இந்திய பங்குச்சந்தைகள் இன்று கடும் வீழ்ச்சியுடன் தொடங்கியுள்ளன. மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் 1,590 புள்ளிகள் சரிந்து 34,106-ல் புள்ளிகளில் வர்த்தகமாகிறது. தேசிய பங்குச்சந்தை குறியீட்டெண் நிஃப்டி 500 புள்ளிகள் சரிந்து 9,990 புள்ளிகளில் வர்த்தகம் தொடங்கியுள்ளது.
  • அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 16 மாதங்களில் இல்லாத அளவுக்கு கடுமையாக வீழ்ச்சியடைந்துள்ளது.
  • செய்தி துளிகள்:
   • கொரோனா வைரஸ் உலக தொற்று நோய் என்று உலக சுகாதாரத்துறை அறிவித்த நிலையில், பங்குச் சந்தைகள் கடும் சரிவுடன் வர்த்தகமாகின.

 

 

திருக்குறள்

 

குறள் எண் : 135

குறள் பால் : அறத்துப்பால்

குறள் இயல் : இல்லறவியல்

குறள் அதிகாரம் : ஒழுக்கமுடைமை

அழுக்கா றுடையான்கண் ஆக்கம்போன்று இல்லை

ஒழுக்க மிலான்கண் உயர்வு.

விளக்கம்: பொறாமையுடையவனிடம் செல்வம் நிற்காது போல், ஒழுக்கம் இல்லாதவனிடத்தில் உயர்ச்சி இல்லையாகும்.

 

ENGLISH CURRENT AFFAIRS

 

NATIONAL NEWS

 • The Major national event for the 6th International Day of Yoga is to be held in Leh, the capital of Ladakh on 21st June, 2020. The event is to be led by PM Modi.
  • Since 2015, PM Modi leads a mass demonstration of Yoga every year on the International Day of Yoga.
  • Related Keys
   • The IDY is being celebrated since 2015. The idea was introduced in the United Nations in 2014. Today more than 200 countries observe IDY. It is also called the World Yoga Day.

 

 

 • Government-issued industrial licenses to 15 companies to manufacture Bullet Proof Jackets (BPJs) on 11 March. The announcement was made by Minister of Defence Rajnath Singh.
  • India exports Bullet Proof Jackets to 18 countries.
  • Related Keys
   • Earlier, Indian soldiers did not have bullet-proof jackets. At present, 86 lakh soldiers are given BPJs.

 

 

INTERNATIONAL NEWS

 • On March 11, 2020, the World Health Organization declared Corona Virus as Global Pandemic as it is rapidly spreading across the world. Today there are more than 126,369 people infected with COVID-19 virus. The virus has so far killed 4,634 people.
  • Related Keys
   • The United States Centre for Disease Control and Prevention defines pandemic as epidemic spread over several countries affecting large number of people.

 

 

BANKING NEWS

 • The World Bank signed an $80 million loan agreement with the Government of India, Government of Himachal Pradesh on 11 March 2020.
  • The aim is to improve water management practices and increase agricultural productivity in selected Gram Panchayats in Himachal Pradesh
  • Related Keys
   • World Bank Headquarters: Washington, DC, US.
   • World Bank Membership: 189 countries .

 

 

IMPORTANT  DAYS

 • World Kidney Day is observed on 12 March. It is celebrated on the second Thursday of March every year.
  • The theme of the 2020 World Kidney day is “Kidney Health for Everyone Everywhere–from Prevention to Detection and Equitable Access to Care.”

 

 

 

WORDS OF THE DAY

 • Fallacy – A mistaken belief, unsound reasoning, misleading
  • Similar Words – misapprehension , misunderstanding
  • Antonyms – verity, understanding

 

 • Figment – A thing that exists only in the imagination
  • Similar Words – delusion,fantasy
  • Antonyms – actuality, fact

Call Us