Today TNPSC Current Affairs March 11 2020

We Shine Daily News

மார்ச் 11

தமிழ்

Download Tamil PDF – Click Here

Download English PDF – Click Here

 

தமிழக நிகழ்வுகள்

 

 • சென்னையில் 3 இடங்களில் அம்மா திருமண மண்டபங்கள் திறக்கப்படவுள்ளதாக துணை முதல்வர் ஓ. பன்னீர் செல்வம் அறிவித்துள்ளார்.
  • இது கொரட்டூர், வேளச்சேரி மற்றும் அயப்பாக்கம் ஆகிய இடங்களில் அமைக்கப்பட்டுள்ளன.
  • செய்தி துளிகள்
   • இது வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சி துறையினால் செயல்படுத்தப்படும் திட்டமாகும்.
   • வீட்டு வசதி மற்றும் நகாப்புற வளர்ச்சி துறையின் முதன்மை செயலாளர் – ராஜேஷ் லக்கானி

 

 

தேசிய நிகழ்வுகள்

 

 • தெலுங்கானாவில் உள்ள பாரம்பரிய சின்னமான குதுப்சாஹி கல்லறை அமெரிக்கா சார்பில் அளிக்கப்பட்ட நிதியுதவியில் புனரமைக்கப்பட்டது.
  • இது தெலங்கானாவின் தலைநகரான ஹைதராபாத்தில் 17-ஆம் நூற்றாண்டில் எழுப்பப்பட்டது.
  • செய்தி துளிகள்
   • அமெரிக்காவின் சார்பில் 2014ஆம் ஆண்டு ரூ.7.21 லட்சம் நிதி வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
   • இந்த கல்லறை இந்தோ- இசுலாமிய கட்டிடக்கலையின் அடிப்படையில் அமைக்கப்பட்டுள்ளது.

 

 

 • நெல் சாகுபடி குறைவதைத் தடுக்கும் பொருட்டு, கர்நாடகாவின் சிவமொகாவில் உள்ள வேளாண் மற்றும் தோட்டக்கலை அறிவியல் பல்கலைக்கழகமானது (University of Agricultural and Horticultural Sciences –UAHS) சஹ்யாத்ரி மேகா’ என்ற ஒரு புதிய சிவப்பு வகை நெல் வகையை உருவாக்கியுள்ளது.
  • இந்த வகையானது வெடிப்பு நோயை எதிர்க்கும் தன்மை உடையதாகவும் ஊட்டச் சத்துக்கள் நிறைந்ததாகவும் உள்ளது.
  • செய்தி துளிகள்
   • இந்தப் புதிய வகையானது மாநில அளவிலான துணை விதைக் குழுவினால் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. மேலும் இது வரும் காரீப் பருவத்திலிருந்து விவசாயிகளுக்கு கிடைக்கும்
   • புதிய வகையை மேம்படுத்துவதற்கான மற்றொரு நோக்கம் நகர்ப்புறங்களில் உள்ள சுகாதார ஆர்வமுள்ள நுகர்வோரால் நுகரப்படும் நார் மற்றும் புரதம் நிறைந்த சிவப்பு அரிசியின் தேவையைப் பூர்த்தி செய்வதாகும்.

 

 

 • ஒடிசாவின் பெர்ஹாம்பூரைச் சேர்ந்த பதினான்கு பதின்ம வயதுப் பெண்கள் சர்வதேச மகளிர் தினத்தன்று ‘கிஷோரி சக்தி காரியகிரம்’ என்ற ஒரு பிரச்சாரத்தைத் தொடங்கினர்.
  • இது நகரின் சேரிப் பகுதிகளில் வாழும் இளம் பெண்களுக்கு அதிகாரம் அளிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • இந்த ஆர்வலர்கள் 14 வயது முதல் 18 வயதுக்குட்பட்டவர்கள் ஆவர்.
  • செய்தி துளிகள்
   • இந்தப் பிரச்சாரமானது இளம் பருவத்தினருக்கும் சமூகத்திற்கும் மாதவிடாய், திருமணத்திற்கான சரியான வயது, பள்ளி மற்றும் கல்லூரிப் படிப்புகளில் இடைநின்ற பெண்களை மீண்டும் அவற்றைத் தொடர ஊக்குவித்தல், பாலினச் சமத்துவத்தை ஊக்குவித்தல், திறன் மேம்பாடு மற்றும் இளம் பருவக் குழுக்களை உருவாக்குதல் ஆகியவற்றை நோக்கமாகக் கொண்டுள்ளது.

 

 

சர்வதேச நிகழ்வுகள்

 

 • உலகளவில் கச்சா எண்ணெய் விலையில் சரிவின் எதிரொலியால் ஆசிய பணக்காரர்கள் பட்டியலில் ரிலையன்ஸ் அதிபர் முகேஷ் அம்பானி இரண்டாம் இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளார்.
  • ஒபெக் (OPEC) கூட்டமைப்பு மற்றும் ரஷ்யா இடையே நடைபெற்ற கச்சா எண்ணெய் உற்பத்தி தொடர்பான பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்ததைத் தொடர்ந்து, ரஷ்யா கச்சா எண்ணெய்யின் உற்பத்தியை அதிகரித்து விலையை குறைக்க ரஷ்யா அறிவித்தது.
  • செய்தி துளிகள்
   • OPEC – Organisation of Petroleum Exporting Countries
   • தலைமையகம் – வியன்னா, ஆஸ்ட்ரியா
   • உறுப்பு நாடுகளின் எண்ணிக்கை -14

 

 

விருதுகள்

 

 • தமிழக அரசின் அகரமுதலித் திட்ட இயக்ககம் சார்பில் தூய தமிழ் பற்றாளர்’ விருதுக்கு மாநில அளவில் 3 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
  • நடைமுறையில் மக்களிடம் பொது பயன்பாட்டில் தூய தமிழை பயன்படுத்துவோரை ஊக்கப்படுத்தும் வகையில் செந்தமிழ் சொற்பிறப்பியல் அகரமுதலித் திட்ட இயக்ககம் பரிசு திட்டம் ஒன்றை அறிவித்தது.
  • செய்தி துளிகள்
   • அதன் அடிப்படையில், கோவையை சேர்ந்த கல்வியியல் பட்டதாரி சி.மணிகண்டன், அரசு பள்ளியில் இரவு காவலராக இருந்த இரா.அரிதாசு மற்றும் திருச்சியை சேர்ந்த கல்லூரி மாணவர் த.ஆரோக்கிய ஆலிவர் ராசா ஆகியோருக்கும் வழங்கப்படவுள்ளது.

 

 

திருக்குறள்

 

குறள் எண்: 134

குறள் பால்: அறத்துப்பால்

குறள் இயல்: இல்லறவியல்

குறள் அதிகாரம்: ஒழுக்கமுடைமை

மறப்பினும் ஓத்துக் கொளலாகும் பார்ப்பான்

பிறப்பொழுக்கங் குன்றக் கெடும்

விளக்கம்: மறை நூல்களைக் கற்பவன் கற்றதை மறக்க நேர்ந்தாலும் அதனை மீண்டும் கற்றுக்கொள்ளலாம். அவனது ஒழுக்கத்தில் குறைவுபட்டால் அவனுடைய குடியின் சிறப்புக் கெடும்.

 

ENGLISH CURRENT AFFAIRS

NATIONAL NEWS

 • Gujarat ranks first in the list for domestic solar rooftop installations, throughout the country with 64 percent of domestic solar installations. Nearly 50,915 domestic solar rooftops have been fixed in the state of Gujarat with a capacity of 177.67 MW on 2nd March 2020.
  • Maharashtra is the second state to top in the domestic solar rooftop installations list with installation of 5,513 systems on 2nd March 2020.
  • Related Keys
   • Solar rooftops need only the light from the sun to generate electricity.
   • No health hazards are involved and no pollutants are emitted by solar rooftops.

 

 

 • Andhra Pradesh ranked 1st in the country for the overall implementation of POSHAN Abhiyaan ( Prime Minister’s Overreaching Scheme for Holistic Nourishment). According to the report of NITI Aayog, “Transforming Nutrition in India: POSHAN Abhiyaan”.
  • Tamil Nadu tops the list of the states in terms of the number of participants in the programme.
  • Related Keys
   • Chief Minister of Andhra Pradesh: Y. S. Jaganmohan Reddy.
   • Governor of Andhra Pradesh: Biswa Bhushan Harichandan.
   • Capital of Andhra Pradesh: Amaravati.

 

 

 • India , for the first time, used the Lopinavir/ Ritonavir combination, usually a second line HIV medication, in the treatment of two Italian patients who tested positive for COVID-19 in Jaipur.
  • ICMR (Indian Council of Medical Research) has taken approval for use of second line HIV drugs on COVID patients, but this Lopinavir/Ritonavir combination therapy has been approved for emergency use among COVID-19 patients with moderate degree of severity with laid down protocols.

 

 

ECONOMY

 • Moody’s Investors Service said G-20 countries are expected to grow by 2.1 per cent in 2020. It has lowered its previous forecast by 0.3 percentage as the global spread of the coronavirus is resulting in simultaneous supply and demand shocks.
  • Previously on February 17, 2020 it had reduced India’s growth projection from 6.6% to 5.4% for 2020.
  • Related Keys
   • Moody’s Investors Service Headquarters– NewYork, United States
   • Moody’s Investors Service President & Chief Executive Officer– Raymond W. McDaniel, Jr.

 

 

APPOINTMENTS

 • On 9th March 2020, the Ministry of Defence announced that Lt Gen Kanwal Jeet Singh Dhillon (57) will be appointed as a Director General, Defence Intelligence Agency, Deputy Chief of Integrated Defence Staff, under the Chief of Defence staff (CDS) in the Department of Military Affairs, replacing Lt Gen AS Bedi.
  • Related Keys
   • Defence Intelligence Agency(DIA): Established- 2002
   • Defence Intelligence Agency(DIA): Headquarters- Cabinet Secretariat Raisina Hill, New Delhi

 

 

WORDS OF THE DAY

 • Ebullient – Cheerful and full of energy.
  • Similar Words – buoyant , vivacious
  • Antonyms – depressed , stressed

 

 • Edgy – tense, nervous, or irritable.
  • Similar Words – apprehensive , uneasy
  • Antonyms – calm , peaceful

 

 


Call Us