Today TNPSC Current Affairs March 10 2020

We Shine Daily News

மார்ச் 10

தமிழ்

Download Tamil PDF – Click Here

Download English PDF – Click Here

 

இந்திய நிகழ்வுகள்

 

 • சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு (மார்ச் 8) ராஷ்டிரபதி பவனில் 15 பெண்களுக்கு நாரி சக்தி புரஸ்கர் விருதினை இந்தியக் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் வழங்கினார்.
  • பெண்களுக்கு அதிகாரமளிக்கவும், அதிலும் குறிப்பாக பாதிக்கப்படக்கூடிய மற்றும் விளிம்புநிலைப் பெண்களுக்கு அதிகாரமளிக்கவும் வேண்டி பணிபுரியும் தனிநபர்கள், குழுக்கள் மற்றும் நிறுவனங்களின் சிறப்பான பணிகளை அங்கீகரிக்கும் வகையில் அவர்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் இந்த தேசிய விருது வழங்கப்படுகின்றது.
  • செய்தித் துளிகள்
   • இந்த விருதானது மத்தியப் பெண்கள் மற்றும் குழந்தைகள் நல மேம்பாட்டு அமைச்சகத்தால் 1999ஆம் ஆண்டில் நிறுவப்பட்டது.
   • இது நிறுவனம் சார்ந்த ஆறு பிரிவுகளிலும் இரண்டு தனிநபர் பிரிவுகளிலும் வழங்கப்படுகின்றது.

 

 

அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிகழ்வுகள்

 

 • செவ்வாய் கிரகத்தினை ஆராய்வதற்கென நாசா விண்வெளி ஆய்வு மையத்தினால் கியூரியோசிட்டி ரோவர் அனுப்பி வைக்கப்பட்டிருந்தது. 1.8 பில்லியன் பிக்சல்கள் உடைய பனோரமா தொழில்நுட்பத்தின் ஊடாக செவ்வாய் கிரகத்தினை பதிவு செய்து பூமிக்கு அனுப்பியுள்ளது. இதுவே ரோவர் விண்கலம் அனுப்பி அதிகூடிய பிரிதிறன் கொண்ட புகைப்படமாக இருக்கின்றது.
  • செய்தித் துளிகள்
   • கடந்த சில வருடங்களாக அங்குள்ள காலநிலை மற்றும் மேற்பரப்புக்கள் என்பன தொடர்பான தகவல்களையும், புகைப்படங்களையும் பூமிக்கு அனுப்பிவருகின்றது. இவற்றினை அடிப்படையாகக் கொண்டே விஞ்ஞானிகள் செவ்வாய் கிரகம் தொடர்பான ஆய்வுகளை தொடர்ந்துவருகின்றனர். இதற்கு முன்னர் 650 மில்லியன் பிக்சல்களை கொண்ட புகைப்படமே உயர் பிரிதிறன் உடையதாக காணப்பட்டது குறிப்பிடத்தக்கது.

 

 

விருதுகள்

 

 • திருவண்ணாமலையைச் சேர்ந்த சமூக ஆர்வலர் ரா. கண்ணகிக்கு முதல்வர் பழனிசாமி மார்ச் 10-ஆம் தேதி ஒளவையார் விருது வழங்கி கௌரவித்தார்.
  • தமிழக முதல்வர் பழனிசாமி மார்ச் 09-ஆம் தேதி தலைமைச் செயலகத்தில், சமூகநலம் மற்றும் சத்துணவு திட்டத்துறை சார்பில், திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த ரா.கண்ணகிக்கு, மகளிர் சுய உதவிக் குழுக்களை அமைக்க ஊக்கப்படுத்தியது, ஆதரவற்ற சடலங்களுக்கு இறுதி சடங்குகளை மேற்கொண்டது, குடிசை வீடுகளை ஓட்டு வீடுகளாக மாற்ற நடவடிக்கைகள் எடுத்தது போன்ற பல்வேறு சமூகநலப் பணிகளை அர்ப்பணிப்புடன் ஆற்றியதற்காக 2020-ஆம் ஆண்டிற்கான ஒளவையார் விருதினை வழங்கி சிறப்பித்தார்கள்.
  • செய்தித் துளிகள்
   • சமூக சீர்திருத்தம், மகளிர் மேம்பாடு, மதநல்லிணக்கம், மொழித் தொண்டு, கலை, அறிவியல், பண்பாடு, கலாச்சாரம், பத்திரிக்கை, நிர்வாகம், சமூகத்திற்கு தனித்துவமான பங்களிப்பு உள்ளிட்ட பல்வேறு துறைகளில் தொண்டாற்றும் பெண்களை கௌரவப்படுத்தும் வகையில், ஒவ்வோர் ஆண்டும் இந்தத் துறைகளில் சிறப்புடன் பணியாற்றும் பெண்களில், ஒருவரை தேர்ந்தெடுத்து அவருக்கு அந்த ஆண்டின் சர்வதேச மகளிர் தினத்தையொட்டி “ஒளவையார் விருது” எனும் உயரிய விருது வழங்கப்படும் என்றும் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அறிவித்தார். அதன்படி, 2012-ஆம் ஆண்டு முதல் “ஒளவையார் விருது” வழங்கப்பட்டு வருகிறது.

 

 

நியமனங்கள்

 

 • பாதுகாப்புத் துறை உளவு அமைப்பின் இயக்குநராக லெப்டினென்ட் ஜெனரல் கே.ஜே.எஸ்.தில்லான் (57) நியமிக்கப்பட்டுள்ளார்.
  • பாதுகாப்புத் துறையின் உளவு அமைப்பானது ராணுவம், விமானப் படை, கடற்படை ஆகியவை தொடர்பான உளவுத் தகவல்களை ஒருங்கிணைக்கும் பணியை மேற்கொண்டு வருகிறது. கார்கில் போர் தொடர்பாக ஆய்வு நடத்திய அமைச்சர்கள் குழு அளித்த பரிந்துரையின் அடிப்படையில் கடந்த 2002-ஆம் ஆண்டு இந்த உளவு அமைப்பு தொடங்கப்பட்டது.
  • செய்தித் துளிகள்
   • இந்திய ராணுவ அகாடெமியின் 1983-ஆம் ஆண்டு பிரிவைச் சேர்ந்த கே.ஜே.எஸ்.தில்லான், ராணுவத்தின் 15-ஆவது பிரிவின் தலைவராகப் பணியாற்றி வந்தார். அண்மையில் அந்தப் பொறுப்பு லெப்டினென்ட் ஜெனரல் பி.எஸ்.ராஜுவுக்கு வழங்கப்பட்டது நினைவுகூரத்தக்கது.

 

 

 • மாநில திட்டக் குழு துணைத் தலைவராக முன்னாள் அமைச்சர் சி.பொன்னையன் நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான உத்தரவை திட்டம், வளர்ச்சி மற்றும் சிறப்பு முயற்சிகள் துறை கூடுதல் தலைமைச் செயலாளர், ஜெயஸ்ரீ ரகுநந்தன் மார்ச் 09-ஆம் தேதி வெளியிட்டார்.
  • தமிழகத்தின் மாநில திட்டக் குழுவானது முதல்வர் தலைமையில் செயல்பட்டு வருகிறது. முக்கியத்துவம் வாய்ந்த முதன்மைத் துறைகளில் தமிழக அரசுக்கு உரிய ஆலோசனைகள் தேவைப்படுவதால், மாநில திட்டக் குழுவுக்கு துணைத் தலைவரை நியமிப்பது அவசியமானதாகக் கருதப்படுகிறது.
  • செய்தித் துளிகள்
   • 1977, 1980, 1984 மற்றும் 2001 ஆகிய ஆண்டுகளில் சட்டப் பேரவை உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். மறைந்த முன்னாள் முதல்வர்கள் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகியோரின் அமைச்சரவைகளில், போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், சட்டம், கூட்டுறவு, கல்வி, தொழில், வேளாண்மை, விளையாட்டு, நிதி, தகவல் தொழில்நுட்பம் என பல்வேறு துறைகளின் அமைச்சராகப் பொறுப்பு வகித்தவர்.

 

 

திருக்குறள்

 

குறள்                          : 133

குறள் பால்                 : அறத்துப்பால்

குறள் இயல்              : இல்லறவியல்

குறள் அதிகாரம்    : ஒழுக்கமுடைமை

ஒழுக்கம் உடைமை குடிமை இழுக்கம்

இழிந்த பிறப்பாய் விடும்.

விளக்கம்: ஒருவன் உயர்ந்த குளத்தில் பிறந்தவனாதலை நல்லொழுக்கம் காட்டும். ஒழுக்கத்தினின்று தவறுதல் அவனைத் தாழ்ந்த குலத்தினனாக்கி விடும்.

 

ENGLISH CURRENT AFFAIRS

NATIONAL NEWS

 • The 5th edition of BIMSTEC (Bay of Bengal Initiative for Multi-Sectoral Technical and Economic Cooperation) Summit 2020 to be held in Colombo, Sri Lanka in the month of September 2020.
  • The summit will be preceded by the 17th Ministerial Meeting and 21st Senior Officials Meeting by the end of 2020.
  • Related Keys
   • BIMSTEC Founded: 6 June 1997
   • BIMSTEC Headquarters location: Dhaka, Bangladesh

 

 

 • On March 8, 2020 Chief Minister Naveen Patnaik announced that Odisha is the 1st state to own a separate department for Self Help Groups named as “Mission Shakti”. It is created for the development of women & is dedicated to all the women of Odisha.
  • Mission Shakti and Mamata Scheme combinedly benefits 70 lakh women. 50% reservation in Panchayati Raj has created a new era for the socio-economic development of women.
  • Related Keys
   • Odisha Capital- Bhubaneswar
   • Odisha Governor– Ganeshi Lal
   • Odisha Chief Minister– Naveen Patnaik

 

 

 • On March 7, 2020 Kerala will soon launch a digital literacy drive named “I am also digital” in the Thiruvananthapuram Corporation, Kerala, to create public-awareness about e-governance and use of various digital platforms through which wide ranges of services are being delivered.
  • The literacy drive is organized by Kerala State IT mission under the Department of Information Technology (IT) and Kerala Literacy Mission
  • Related Keys
   • Kerala Chief Minister (CM)- Pinarayi Vijayan.
   • Kerala Governor- Arif Mohammad Khan.

 

 

APPOINTMENTS

 • On March 8, 2020 Nupur Kulshrestha becomes the 1st woman to be promoted as Deputy Inspector General (DIG )of Indian Coast Guard. She joined Indian Coast Guard in 1999.
  • Related Keys
   • Indian Coast Guard Founded 18 August 1978
   • Indian Coast Guard Headquarters New Delhi

 

 

SPORTS

 • Union Minister for Youth Affairs and Sports Kiren Rijiuju inaugurated the five-day Khelo India Winter games at famous tourist destination Gulmarg in Jammu and Kashmir.
  • During the event, the competitions in the sports disciplines like snow skiing, snow boarding, snow shoeing, ski mountaineering and snow baseball would be held.
  • Related Keys
   • Ministry for Youth Affairs and Sports Founded: 27 May 2000
   • Ministry for Youth Affairs and Sports Headquarters location: New Delhi

 

 

WORDS OF THE DAY

 • Debacle – a sudden and ignominious failure
  • Similar Words – fiasco , failure , catastrophe
  • Antonyms – success, winner

 

 • Dubious – Hesitating or doubting,
  • Similar Words – unsettled , unconfirmed
  • Antonyms – certain , definite

 


Call Us