Today TNPSC Current Affairs March 09 2020

We Shine Daily News

மார்ச் 09

தமிழ்

Download Tamil PDF – Click Here

Download English PDF – Click Here

 

இந்திய நிகழ்வுகள்

 

  • நிறுவனங்களின் இயக்குநர் குழுவில் பெண்களின் பங்கேற்பு தொடர்பான தரப் பட்டியலில் இந்தியா உலகளவில் 12ஆவது இடத்தில் உள்ளது. இயக்குநர் குழுவில் பெண்களின் பங்கேற்பு குறித்து உலகளவில் 36 நாடுகளில் 7,824 பட்டியலிடப்பட்ட நிறுவனங்களிடம் ஆய்வு நடத்தப்பட்டது.
    • பட்டியலிடப்பட்ட 628 இந்திய நிறுவனங்களின் இயக்குநர் குழுவில் 55 சதவீதம் பெண் இயக்குநர்கள் இடம்பெற்றிருப்பது ஆய்வில் கண்டறியப்பட்டது.
    • செய்தித் துளிகள் :
      • இந்தியாவில் நிறுவனங்களின் நிர்வாக குழுவில் ஆண் இயக்குநர்களின் சராசரி பதவிக்காலம் மூன்றாண்டுகளாக உள்ளது. அதேசமயம், உலகளவில் நிர்வாக குழுவில் உள்ள பெண்களின் சராசரி பதவிக்காலம் இரண்டு ஆண்டுகளாக மட்டுமே உள்ளது என அந்த ஆய்வில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

 

அறிவியல் மற்றும் தொழில்நுட்பம்

 

  • சமீபத்தில் ஜீனோம் இந்தியா திட்டம் (Genome India Project – GIP) என்ற ஒரு மரபணு குறியாக்கத் திட்டத்திற்கு மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை அமைச்சகமானது ஒப்புதல் அளித்துள்ளது.
    • ஜீனோம் இந்தியா திட்டம் என்பது மருத்துவம், விவசாயம் மற்றும் வாழ்க்கை அறிவியலில் புதிய செயல்திறனை செயல்படுத்த உதவும் 20 நிறுவனங்களின் ஒத்துழைப்பாகும்.
    • செய்தித் துளிகள் :
      • இது இந்திய மக்களைப் பாதிக்கும் நோய்கள் மற்றும் குணாதிசயங்களின் வகை மற்றும் தன்மையை முழுமையாக புரிந்து கொள்வதற்காக இந்திய “குறிப்பு மரபணுவின்” தொடரை உருவாக்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

 

 

விளையாட்டு நிகழ்வுகள்

 

  • ரஞ்சி கோப்பைக்கான முதல் தர கிரிக்கெட் போட்டியின் முதல் ஆட்டத்தில் அதிக வயதில் 5 விக்கெட்டுகளை வீழ்த்திய வீரர் என்ற சாதனையைப் படைத்தார் புதுச்சேரி வீரர் சாந்தமூர்த்தி.
    • இதன் மூலம் 125 ஆண்டுகால சாதனையை அவர் முறியடித்தார்.
    • செய்தித் துளிகள் :
      • கடந்த 1895-ஆம் ஆண்டு இங்கிலாந்து வீரர் பிரெட் ரைட் என்பவர் முதல் தர கிரிக்கெட் போட்டியில் அதிக வயதில் (40 வயது 49 நாள்கள்) அறிமுகமான முதல் ஆட்டத்தில் 5 விக்கெட்டுகளை வீழ்த்தியதே இதுவரை சாதனையாக இருந்தது.

 

 

  • அகில இந்திய அளவில் மாற்று திறன் ஆண்களுக்கான வாள்வீச்சு போட்டி, பெண்களுக்கான வாள்வீச்சு போட்டியில் தமிழகம் அணி முதலிடத்தை பிடித்தது.
    • தமிழ்நாடு உதவிக்கரம் மாற்றுத்திறனாளர் நலவாழ்வு சங்கம் சார்பில், அகில இந்திய விளையாட்டு போட்டி சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. கல்லூரியில் உள்ள உள்விளையாட்டு அரங்கில் வெள்ளிக்கிழமை (06.03.2020) தொடங்கியது.
    • செய்தித் துளிகள் :
      • இதில், ஆண்களுக்கான வாள்வீச்சு போட்டி, பெண்களுக்கான வாள்வீச்சு போட்டியில் தமிழகம் முதலிடத்தைப் பிடித்தது.
      • இதுபோல, அமர்ந்து விளையாடும் வாலிபால் போட்டி, அமர்ந்து விளையாடும் கபடிபோட்டி, நின்று விளையாடும் கபடி போட்டியில் தமிழக அணி முதலிடத்தை பிடித்தது
      • இந்த போட்டி நிறைவு விழா03.2020ல் நடைபெற்றது. போட்டிகளில் வெற்றிபெற்ற அணிகளுக்கு பரிசுகளை ஜெயா கல்வி குழுமத்தின் நிறுவனர் ஏ.கனகராஜ் வழங்கினார்.

 

 

  • ஐசிசி மகளிர் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் ஒரு பகுதியாக இந்தியாவுக்கு எதிரான இறுதிச் சுற்றில் 85 ரன்கள் வித்தியாசத்தில் வென்ற ஆஸ்திரேலியா அணி 5-ஆவது முறையாக சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றியது.
    • முதலில் ஆடிய நடப்பு சாம்பியன் ஆஸி. அணி 184ஃ4 ரன்களைக் குவித்தது. பின்னர் ஆடிய இந்திய அணியால் 99 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
    • செய்தித் துளிகள்
      • 2010, 2012, 2014, 2018ஆம் ஆண்டுகளில் ஏற்கனவே உலகக் கோப்பையை வென்றுள்ளது ஆஸ்திரேலியா.
      • கேப்டன் – மெக் லானிங்
      • பயிற்சியாளர் – மத்தேயு மோட்

 

 

திருக்குறள்

 

குறள் : 132

குறள் பால் : அறத்துப்பால்

குறள் இயல் : இல்லறவியல்

குறள் அதிகாரம் : ஒழுக்கமுடைமை

பரிந்தோம்பிக் காக்க ஒழுக்கம் தெரிந்தோம்பித்

தேரினும் அஃதே துணை

விளக்கம் : ஒழுக்கத்தை வருந்தியும் பாதுகாத்தல் வேண்டும். ஏனென்றால், அரண்கள் எல்லாவற்றுள்ளும் ஆராய்ந்து பார்த்தால் அவ்வொழுக்கமே சிறந்த துணையாக உள்ளது.

 

ENGLISH CURRENT AFFAIRS

 

NATIONAL NEWS

  • Union Government has invited bids for the sale of its entire 52.98 per cent stake in the Bharat Petroleum Corporation Limited.
    • Expressions of interest for the strategic sale of BPCL were invited by 2nd of May, the Department of Investment and Public Asset Management said in the bid document.
    • Related Keys
      • Bharat Petroleum Corporation Limited operates two large refineries of the country located in Kochi and Mumbai.
      • Bharat Petroleum Corporation Limited Headquarters: Mumbai

 

 

  • On March 8, 2020, TIFAC operating under Ministry of Science and Technology launched Vigyan Jyoti. The scheme was announced to celebrate International Women’s Day.
    • The Technology Information Forecasting and Assessment Council (TIFAC) launched Vigyan Jyoti in order to encourage women to take science as their career
    • Related Keys
      • TIFAC was formed as a registered body in 1988 under DST (Department of Science and Technology).

 

 

  • Indian Coast Guard (ICG),an armed force that protects India’s maritime interests, has conducted a 2-day 9th edition of national level search and rescue exercise ‘SAREX-2020’ based on the theme ‘Harmonization of Maritime and Aeronautical Search and Rescue (HAMSAR)’ in the sea at Vasco, South Goa district from March 5-7,2020.
    • Related Keys
      • Indian Coast Guard (ICG) Headquarters– New Delhi
      • Indian Coast Guard (ICG) Director General– Krishnaswamy Natrajan

 

 

AWARDS

  • The 21st edition of International Indian Film Academy (IIFA) Awards has been postponed in light of the coronavirus scare.
    • One of the most popular award functions in the country IIFA was scheduled to be held from March 27 to 29 at Indore and Bhopal in Madhya Pradesh.
    • Related Keys
      • International Indian Film Academy awards were introduced in 2016, around the films released in 2015

 

 

SPORTS

  • Asian champion Pooja Rani in the 75kg category and Vikas Krishan in 69kg category became the first set of Indian boxers to qualify for Tokyo Olympics 2020.
    • Both boxers advanced to the semifinals of the continental qualifiers at Amman in Jordan.
    • Related Keys
      • Tokyo was selected as the host city during the 125th IOC Session in Buenos Aires, Argentina on 7 September 2013.
      • This will be the second time that Japan and specifically Tokyo has hosted the Summer Olympic Games.

 

 

WORDS OF THE DAY

  • Callow – inexperienced and immature.
    • Similar Words – raw , untrained
    • Antonyms – experienced , sophisticated

 

  • Covert – Hidden, secretive, done secretly
    • Similar Words – secret , conceal
    • Antonyms – Overt , visible