Today TNPSC Current Affairs March 05 2020

We Shine Daily News

மார்ச் 05

தமிழ்

Download Tamil PDF – Click Here

Download English PDF – Click Here

 

தமிழக நிகழ்வுகள்

 

  • சுமார் 500 ஆண்டுகளுக்கு முன் போர் வீரர்கள் பயன்படுத்திய போர் பதக்கம், கரூர் மாவட்டம், குளித்தலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக சேலம் பாரா மஹால் நாணய சங்க இயக்குநர் ஜீ.சுல்தான் தெரிவித்துள்ளார்.
    • சுமார் 500 ஆண்டுகளுக்கு முன் போர் வீரர்கள் அடையாளக் குறியீடாக கழுத்தில் வளையம் பொருத்தி பயன்படுத்திய போர் பதக்கம் கொங்கு மண்டலத்துக்குட்பட்ட கரூர் மாவட்டம், குளித்தலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளது. இது செம்பு உலோகத்தில் பொறிக்கப்பட்டு, அதைச் சுற்றியும் வட்ட வடிவத்தில் அலுமினிய வேலைப்பாடு செய்யப்பட்டுள்ளது.  இதன் எடை42 மில்லி கிராம் ஆகும்.
    • செய்தித் துளிகள்:
      • தொடர்ந்து பழங்கால நாணயங்களின் வரலாற்றை ஆய்வு செய்து வெளியிட்டு வருகிறோம். நாட்டின் வரலாற்றுக்கு நாணயங்கள் மிக முக்கியக் காரணியாக விளங்குகின்றன. போர் வீரர்களின் ஓவியம், கல்வெட்டு, சிற்பங்கள் ஆகியவை தமிழக அரசு அருங்காட்சியகத்தில் பாதுகாக்கப்பட்டு வருகின்றன. குறிப்பாக, சேலம் அரசு அருங்காட்சியகத்தில் போர் வீரர்களின் சிற்பம் இன்றும் பாதுகாக்கப்பட்டு வருகிறது.

 

 

இந்திய நிகழ்வுகள்

 

  • 10 பொதுத்துறை வங்கிகளை இணைத்து, 4 பெரிய வங்கிகளாக உருவாக்கும் திட்டத்துக்கு மத்திய அமைச்சரவை மார்ச் 04-ஆம் தேதி ஒப்புதல் அளித்தது. இந்த வங்கிகள் இணைப்பு ஏப்ரல் 1-ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வர இருப்பதாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.
    • செய்தித் துளிகள்:
      • கடந்த ஆண்டு தேனா வங்கியும், விஜயா வங்கியும், பரோடா வங்கியுடன் இணைக்கப்பட்டன. அதற்கு முன்னதாக எஸ்பிஐ-யின் 5 துணை வங்கிகளும், பாரதிய மகிளா வங்கியும் எஸ்பிஐ-யுடன் இணைக்கப்பட்டன என்பது நினைவுகூரத்தக்கது.

 

 

  • மத்திய அரசு சார்பில் தூய்மை இந்தியா (கிராம) திட்டத்தின் 2-ஆம் கட்டப் பணிகள்03.2020 தொடங்கி வைக்கப்பட்டது. இந்தப் பணிகள் ரூ.1,40,881 கோடி மதிப்பில் மேற்கொள்ளப்படவுள்ளது.
    • தில்லியில் மத்திய ஜல்சக்தி துறை அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத் தூய்மை இந்தியா திட்டத்தின் 2-ஆம் கட்டப் பணிகளை தொடங்கிவைத்தார்.
    • செய்தித் துளிகள்:
      • கடந்த 2014-ஆம் ஆண்டு தூய்மை இந்தியா திட்டம் தொடங்கப்பட்டதில் இருந்து ஊரகப் பகுதிகளில் 10 கோடிக்கும் மேற்பட்ட கழிப்பறைகள் கட்டப்பட்டுள்ளன. 35 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 699 மாவட்டங்களில்9 லட்சத்துக்கும் மேற்பட்ட கிராமங்கள் தங்கள் பகுதியில் திறந்தவெளி கழிப்பிடங்கள் இல்லை என அறிவித்துள்ளன.

 

 

அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிகழ்வுகள்

 

  • சந்திரயான்-3’ விண்கலம் அடுத்த ஆண்டின் முதல் பாதியில் செலுத்தப்படும் என்று விண்வெளி ஆய்வுத்துறை அமைச்சர் ஜிதேந்திரசிங் தெரிவித்தார்.
    • நிலவை ஆய்வு செய்வதற்காக, சந்திரயான்-3 விண்கலம் அடுத்த ஆண்டின் முதல் பாதியில் செலுத்தப்படும். சந்திரயான்-2 திட்டத்திலிருந்து கற்றுக் கொள்ளப்பட்ட பாடங்களின் அடிப்படையில் சந்திரயான்-3 திட்டம் கட்டமைக்கப்பட்டுள்ளது. விண்கலத்தின் தரம், வடிவமைப்பு, திறன் ஆகியவற்றில் கூடுதல் கவனம் செலுத்தப்பட்டு வருகிறது என்று ஜிதேந்திரசிங் தெரிவித்தார்.
    • செய்தித் துளிகள்:
      • முன்னதாக, நிலவின் தென்துருவப் பகுதியை ஆராயும் நோக்கில் சந்திரயான்-2 விண்கலத்தை, இந்திய விண்வெளி ஆய்வு மையம் (இஸ்ரோ) கடந்த ஆண்டு ஜூலை மாதம் 22-ஆம் தேதி விண்ணில் செலுத்தியது. பின்னர், நிலவைச் சுற்றி வந்து ஆய்வு செய்யும் ஆர்பிட்டர் பகுதி, விண்கலத்திலிருந்து பிரித்து விடப்பட்டது.

 

 

நியமனங்கள்

 

  • சிஸ்கோ நிறுவனத்தின் முன்னாள் நிர்வாகி பிபாஷா சக்ரபர்த்தியை புதிய தகவல் தொடர்புத்துறை தலைவராக நியமிப்பதாக பேஸ்புக் மார்ச் 4-ஆம் தேதி அறிவித்துள்ளது.
    • கோடிக்கணக்கான பயனர்களைக் கொண்டுள்ள பேஸ்புக் நிறுவனம் இந்தியாவில் தகவல் தொடர்புத்துறைக்கு புதிய தலைமையை நியமித்துள்ளது.
    • செய்தித் துளிகள்:
      • சிஸ்கோ நிறுவனத்தில் பணிபுரிந்த பிபாஷா சக்ரபர்த்திக்கு இந்தியாவில் பேஸ்புக் தகவல் தொடர்புத்துறை தலைமைப் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. சக்ரபர்த்தி, சிஸ்கோ நிறுவனத்தில் கம்யூனிகேஷன்ஸ் துறையின் தலைவராக பணிபுரிந்துள்ளார்.

 

 

திருக்குறள்

 

குறள்                                                : 128

குறள் பால்                   : அறத்துப்பால்

குறள் இயல்                : இல்லறவியல்

குறள் அதிகாரம்    : அடக்கம் உடைமை

ஒன்றானுந் தீச்சொல் பொருட்பயன் உண்டாயின்

நன்றாகா தாகி விடும்.

விளக்கம்: ஒரு குடம் பாலில் துளி நஞ்சுபோல், பேசும் சொற்களில் ஒரு சொல் தீய சொல்லாக இருந்து துன்பம் விளைவிக்குமானாலும், அந்தப் பேச்சில் உள்ள நல்ல சொற்கள் அனைத்தும் தீயனவாகிவிடும்.

 

ENGLISH CURRENT AFFAIRS

 

NATIONAL NEWS

  • On March 4, 2020, the Union Cabinet under PM Modi cleared the Foreign Direct Investment Policy on Civil Aviation. According to the policy, 100% FDI is permitted in the air transport services. Earlier only 49% was available for sale to NRIs
    • The main benefit of the policy is that it will help in divestment of Air India.
    • Related Keys
      • For airlines other than Air India, 100% FDI is permitted under automatic route. This includes domestic, scheduled and other air transport services.

 

 

  • The Agricultural and Processed Food Export Development Authority (APEDA) has signed Memorandum of Understandings with IIT Delhi, Quality Council of Indian Chamber of Food and Agriculture (ICFA).
    • The Agriculture Export Policy was launched in 2018. It aims to increase the agricultural export potential of the country.
    • Related Keys
      • The Agricultural and Processed Food Export Development Authority Headquarters location: New Delhi
      • The Agricultural and Processed Food Export Development Authority Founded: 1986

 

 

  • On March 3,2020, A 5-day-long 35th edition of the Food and Hospitality fair ‘AAHAR 2020’ has commenced in Pragati Maidan, New Delhi. It was inaugurated by Union Minister of Commerce and Industry, Piyush Goyal.
    • This fair has been specially focused on promoting the agriculture-community as well as tourism sectors especially hospitality companies.
    • Related Keys
      • Ministry of Commerce and Industry Headquarters          New Delhi
      • Ministry of Commerce and Industry administers two departments, the Department of Commerce and the Department for Promotion of Industry & Internal Trade.

 

 

INTERNATIONAL NEWS

  • Israeli Prime Minister Benjamin Netanyahu has claimed victory in the general elections With 90% of votes counted, his Likud party and its right-wing allies were on course to win 59 seats. This election was Israel’s third in less than a year.
    • Neither of the two main party leaders was able to command a majority in the 120-seat parliament following the last two rounds.
    • Related Keys
      • Israel parliament: Knesset
      • Israel Capital: Jerusalem

 

 

APPOINTMENTS

  • Indian-American Seema Verma has been appointed as one of the key members of the White House Coronavirus Task Force constituted by US President Donald Trump.
    • The Task Force has been created to combat the deadly disease that has claimed six lives in the country and infected over 90 others.
    • Related Keys
      • WHO have named Corona Virus as COVID.
      • It was first reported from Wuhan, China, on 31 December 2019.

 

 

WORDS OF THE DAY

  • Abashed – Embarrassed or ashamed
    • Similar Words –  discountenanced , floored
    • Antonyms – unabashed , undaunted

 

  • Abeyance – In temporary disuse or suspension
    • Similar Words –  reserve , pending
    • Antonyms – continue , resume