Today TNPSC Current Affairs March 04 2020

We Shine Daily News

மார்ச் 04

தமிழ்

Download Tamil PDF – Click Here

Download English PDF – Click Here

 

தமிழக நிகழ்வுகள்

 

  • மேட்டூர் அணையில் இருந்து மிகை நீரை ஏரிகளுக்கு வழங்கும் திட்டத்துக்கு முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி மார்ச் 04 அன்று அடிக்கல் நாட்டுகிறார்.
    • இதற்கான விழா மேட்டுப்பட்டியில்03.2020 அன்று நடைபெறுகிறது. இதில், சேலம் மாவட்டத்தில் ரூ.7.27 கோடியில் 12 முடிவுற்ற திட்டப் பணிகளைத் திறந்து வைத்து, ரூ.28.82கோடியில் 8 புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, சுமார் 5,800-க்கும் மேற்பட்ட பயனாளிகளுக்கு சுமார் ரூ.630.88 கோடியில் நலத்திட்ட உதவிகளை முதல்வர் கே.பழனிசாமி வழங்குகிறார்.
    • செய்தித் துளிகள்
      • இதைத் தொடர்ந்து, அவர் மார்ச் 05 அன்று காலை நாமக்கல்லில் புதிய மருத்துவக் கல்லூரிக்கு அடிக்கல் நாட்டுகிறார். பின்னர் அங்கிருந்து கரூர் புறப்பட்டு செல்லும் முதல்வர், அரசு மருத்துவமனைக் கட்டடங்களைத் திறந்து வைக்கிறார்.

 

 

இந்திய நிகழ்வுகள்

 

  • மத்திய அரசின் எழுச்சி இந்தியா’ (ஸ்டேண்ட் அப் இந்தியா) திட்டத்தின் கீழ் 4 ஆண்டுகளில் பெண்களுக்கு ரூ.16,712 கோடி கடன் வழங்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது என்று மத்திய நிதியமைச்சகம்03.2020 அன்று தெரிவித்தது.
    • பெண்களின் தொழில்முனைவோர் கனவை நனவாக்கும் வகையில் ‘எழுச்சி இந்தியா’ திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்தத் திட்டத்தின் கீழ் கடன் வழங்கப்பட்டவர்களில் 81 சதவீதம் பேர் பெண்கள். சுமார் 73,155 வங்கிக் கடன் கணக்குகள் பெண்கள் பெயரில் தொடங்கப்பட்டுள்ளன.
    • செய்தித் துளிகள்
      • தாழ்த்தப்பட்டோர் (எஸ்.சி), பழங்குடியினர் (எஸ்.டி) மற்றும் பெண் தொழில்முனைவோர்களுக்கு கடனுதவி வழங்குவதை நோக்கமாகக் கொண்டு ‘எழுச்சி இந்தியா’ திட்டம் கடந்த 2016-ஆம் ஆண்டு ஏப்ரல் 5-ஆம் தேதி தொடங்கப்பட்டது. இந்தத் திட்டத்தின் கீழ் ரூ.10லட்சம் முதல் ரூ.1கோடி வரை கடன் வழங்கப்படுகிறது.

 

 

அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிகழ்வுகள்

 

  • எக்ஸ் கதிர் மற்றும் ரேடியோ தொலைநோக்கிகளைப் பயன்படுத்திப் பெரு வெடிப்பிற்குப் பிறகு பிரபஞ்சத்தில் காணப்பட்ட மிகப்பெரிய வெடிப்பை வானியலாளர்களைக் கொண்ட சர்வதேச குழுவானது கண்டுபிடித்துள்ளது.
    • இந்தக் கண்டுபிடிப்பிற்காக 3 தொலைநோக்கிகள் பயன்படுத்தப்பட்டன.
    • அவையாவன: NASAவின் சந்திரா எக்ஸ்ரே ஆய்வகம்,
    • ஐரோப்பிய விண்வெளி நிறுவனத்தின் எக்ஸ்எம்எம் – நியூட்டன் மற்றும் மேற்கு ஆஸ்திரேலியாவில் உள்ள முர்ச்சீசன் வைட்ஃபீல்ட் அரே ஆய்வகம்.
    • செய்தித் துளிகள் :
      • பூமியிலிருந்து 390 மில்லியன் ஒளி ஆண்டுகள் தொலைவில் உள்ள ஓபியுச்சஸ் விண்மீன்த் திரள் குழுவில் (Ophiuchus galaxy cluster) இந்த வெடிப்பு நிகழ்ந்தது.
      • இந்த வெடிப்பின் ஆற்றலானது விண்மீன் தொகுப்பில் உள்ள வெப்பமான வாயுக்களைக் கொண்ட பிளாஸ்மாவில் பெரும் இடைவெளியை ஏற்படுத்தியது.

 

 

  • எரிசக்தித் திறன் அமைப்பானது சமீபத்திய நிகழ்வின் போது ஆழ்உறைப் பெட்டகம் மற்றும் இலகு ரக வணிக ரீதியிலான குளிர்சாதனப் பெட்டிகளுக்கான (Light Commercial Air Conditioners – LCAC)) நட்சத்திர மதிப்பீட்டுத் திட்டத்தை அறிமுகப் படுத்தியுள்ளது.
    • எரிசக்தி பாதுகாப்புச் சட்டம், 2001ன் கீழ், நட்சத்திரக் குறியீட்டுத் திட்டமானது, அதன் விதிமுறையின் ஒரு பகுதியாக வடிவமைக்கப்பட்டுள்ளது.
    • செய்தித் துளிகள் :
      • நட்சத்திர மதிப்பீடானது ஒரு சாதனத்தின் ஆற்றல் செயல்திறனை வழங்குகின்றது. அதிக நட்சத்திர மதிப்பீடானது குறைவாக நுகரப்படும் ஆற்றலைக் குறிக்கின்றது.
      • இந்த நிகழ்வின் போது உலக வள நிறுவனத்துடன் (WRI – World Resources Institute) இணைந்து BEE ஆல் எடுக்கப்பட்ட முதலாவது முயற்சியான உர்ஜா தக்சதா தகவல் கருவியானது (Urja Dakshata Information Tool – UDIT)தொடங்கப்பட்டுள்ளது.

 

 

நியமனங்கள்

 

  • மத்திய வருவாய்த்துறை செயலராக உள்ள ஏ.பி.பி.பாண்டே, மத்திய நிதித்துறை செயலராக மார்ச் 03 அன்று நியமனம் செய்யப்பட்டார்.
    • இதுதொடர்பாக பணியாளர் அமைச்சகம் பிறப்பித்த உத்தரவில், ‘1984-ஆம் ஆண்டு மகாராஷ்டிர பிரிவு இந்திய ஆட்சிப்பணி அதிகாரி ஏ.பி.பி. பாண்டேயை நிதித்துறை செயலராக நியமிக்க மத்திய அமைச்சரவையின் நியமனங்கள் குழு ஒப்புதல் வழங்கியுள்ளது’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
    • செய்தித் துளிகள்
      • கடந்த மாதம் நிதித்துறை செயலராக இருந்த ராஜீவ் குமார் ஓய்வு பெற்றதையடுத்து, அத்துறை செயலராக பாண்டே நியமிக்கப்பட்டுள்ளார். மத்திய நிதியமைச்சகத்தில் உள்ள செயலர்களில் மிக மூத்தவராக உள்ளவரே நிதித்துறை செயலராக நியமிக்கப்படுவார்.

 

 

திருக்குறள்

 

குறள்: 127

குறள் பால்: அறத்துப்பால்

குறள் இயல்: இல்லறவியல்

குறள் அதிகாரம்: அடக்கம் உடைமை

யாகாவா ராயினும் நாகாக்க காவாக்காற்

சோகாப்பர் சொல்லிழுக்குப் பட்டு.

விளக்கம்: ஒருவர் எதைக் காத்திட முடியாவிட்டாலும் நாவையாவது அடக்கிக் காத்திட வேண்டும் இல்லையேல் அவர் சொன்ன சொல்லே அவர் துன்பத்துக்குக் காரணமாகி விடும்.

 

ENGLISH CURRENT AFFAIRS

 

NATIONAL NEWS

  • On March 3, 2020, Uttar Pradesh Chief Minister Yogi Adityanath announced that his government will pay Rs 900 per month to farmers willing to keep stray cattle. Earlier in 2019, the farmer protests in Uttar Pradesh had gone up over stray cattle destroying their fields.
    • Related News
      • Initially cow shelters were built to adopt abandoned stray cattle However, they began overflowing and also it was financially difficult for the UP Government to take care of cattle in huge numbers.

 

 

  • On March 2, 2020 Centre notified 870 sq km around the National Chambal Sanctuary in Madhya Pradesh(MP) as eco-sensitive zone (ESZ) to prohibit polluting activities like industries, major hydroelectric project ,mining, stone quarrying & big construction within the ‘no-go area’ for the purpose of conservation of water bodies , unique geographical features(ravines), flora & fauna.

 

 

  • A 3-day long 11th National Krishi Vigyan Kendra (KVK) Conference –2020based on the theme ‘Empowering Youth for Technology Led Farming’ was held in New delhi.
    • It was inaugurated by Union Minister for Agriculture & Farmers’ Welfare, Rural Development & Panchayati Raj, Shri Narendra Singh Tomar
    • Related News
      • Ministry of Agriculture & Farmers’ Welfare Founded– 1947
      • Ministry of Agriculture & Farmers’ Welfare Headquarters– New Delhi

 

 

  • On March 3, 2020 Tamil Nadu (TN) Chief Minister (CM) Shri Edappadi K. Palaniswami launched Tamil Nadu Health System Reform Programme (TNHSRP) in Chennai, Tamil Nadu. The programme will be implemented with the World Bank’s fund .
    • This was the first Program-for-Results (PforR) project for the Bank in India and the first for Tamil Nadu.
    • Related News
      • TN Health Minister – C. Vijayabaskar
      • TN Governor- Banwarilal Purohit.

 

 

ECONOMY

  • According to the latest OECD Interim Economic Outlook Forecasts, India’s real GDP growth is expected at 5.1 percent during the fiscal year starting 1 April, 2020 and improve to 5.6 percent in the following year.
    • The latest projection for 2020-21 is 1.1 percentage point lower than the November 2019 forecast.
    • Related News
      • OECD Headquarter– Paris, France
      • OECD Member Countries– 36

 

 

WORDS OF THE DAY

  • Yell – A loud sharp cry or call
    • Similar Words – shout , howl
    • Antonyms – whisper , murmur

 

  • Zeal – Great energy or enthusiasm
    • Similar Words – passion , ardour
    • Antonyms – apathy , indifference