Today TNPSC Current Affairs March 03 2020

We Shine Daily News

மார்ச் 03

தமிழ்

Download Tamil PDF – Click Here

Download English PDF – Click Here

 

இந்திய நிகழ்வுகள்

 

  • பூர்வோதயா திட்டம் : இந்திய அரசு ஒடிசாவை இந்தியாவின் எஃகு உற்பத்தி மையமாக மாற்றும் என்று இந்தியத் தொழில்துறை கூட்டமைப்பினால் ஏற்பாடு செய்யப்பட்ட ஒரு பயிலரங்கத்தில் மத்திய எஃகுத் துறை அமைச்சர் அறிவித்தார்
    • ஜப்பானின் உதவியுடன் இந்திய அரசினால் எஃகு உற்பத்தி மையமாக ஒடிசா மாற்றப்படும் என்று இவர் அறிவித்துள்ளார்.
    • பூர்வோதயா திட்டமானது 2020ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தில் தொடங்கப்பட்டது.
    • செய்தித் துளிகள் :
      • இது கிழக்கு இந்தியாவை ஒருங்கிணைந்த எஃகு உற்பத்தி மையமாக மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
      • இது 2030ஆம் ஆண்டிற்குள் 300 மெட்ரிக் டன் எஃகு உற்பத்தி செய்ய வேண்டும் என்ற தேசிய எஃகு கொள்கையின் இலக்கை அடைய உதவ இருக்கின்றது.

 

 

  • 2008 ஆம் ஆண்டு பிப்ரவரி 8 அன்று வழங்கப்பட்ட உத்தரவை ரத்து செய்வதன் மூலம் வடகிழக்கு மாநிலங்களான அருணாச்சலப் பிரதேசம், அசாம், மணிப்பூர் மற்றும் நாகலாந்து ஆகிய மாநிலங்களில் தொகுதி வரையறையை மீண்டும் தொடங்குவதற்கு இந்தியக் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் ஒப்புதல் அளித்து உள்ளார்.
    • 2001ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்புப் புள்ளி விவரங்களின் அடிப்படையில் மக்களவை மற்றும் மாநில சட்டசபைத் தேர்தல்கள் ஆகியவற்றிற்காக ஒவ்வொரு மாநிலம் மற்றும் ஒன்றியப் பிரதேசம் ஆகியவற்றைத் தொகுதிகளாகப் பிரிப்பதற்காக தொகுதி வரையறைச் சட்டம், 2020ன் கீழ் தொகுதி வரையறை ஆணையம் ஒன்று அமைக்கப்பட்டுள்ளது.
    • செய்தித் துளிகள் :
      • இந்தியாவில் இதுவரை நான்கு முறை தொகுதி வரையறை ஆணையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. அவையாவன :
      • 1952ல் தொகுதி வரையறை ஆணையச் சட்டம் 1952ன் கீழ்,
      • 1963ல் தொகுதி வரையறை ஆணையச் சட்டம் 1962ன் கீழ்,
      • 1973ல் தொகுதி வரையறைச் சட்டம், 1972ன் கீழ் மற்றும்
      • 2002ல் தொகுதி வரையறைச் சட்டம், 2002ன் கீழ் தொகுதி வரையறை ஆணையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

 

               

  • மத்திய வேளாண் மற்றும் விவசாயி நலத்துறை அமைச்சரான நரேந்திர சிங் தோமர் புது தில்லியில் 11வது தேசிய கிருஷி விக்யான் கேந்திர (Krishi Vigyan Kendra – KVK) மாநாடு – 2020ஐத் தொடங்கி வைத்தார்.
    • செய்தித் துளிகள் :
      • முதலாவது KVK ஆனது 1974ஆம் ஆண்டில் கோயம்புத்தூரில் உள்ள தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தின் நிர்வாகக் கட்டுப்பாட்டில் சோதனை அடிப்படையில் புதுச்சேரியில் நிறுவப்பட்டது.
      • தற்போது நாடு முழுவதும் 700 க்கும் மேற்பட்ட KVK க்கள் உள்ளன.

 

               

  • மத்திய பிரதேச அரசால் ஏற்பாடு செய்யப்படும் ஒரு தனித்துவமான திருவிழாவான நிமத் மிளகாய்த் திருவிழா – 2020” ஆனது மத்தியப் பிரதேசத்தின் கார்கோன் மாவட்டத்தில் தொடங்குகின்றது.
    • இந்தத் திருவிழாவின் நோக்கம் அம்மாநிலத்தில் மிளகாய் உற்பத்தி மற்றும் மிளகாய் சார்ந்த தொழில்களை ஊக்குவிப்பதும் குறிப்பாக இந்தியா & வெளிநாடுகளில் நிமாரி வகை மிளகாயை ஊக்குவிப்பதும் ஆகும்.
    • இந்தத் திருவிழாவானது உள்ளுரில் ‘மிர்ச் மஹோ உட்சவ்’ என்று அழைக்கப்படுகின்றது

 

 

  • பஞ்சாப் சட்டப் பேரவையின் நடப்பு கூட்டத் தொடரில் லோக் ஆயுக்தா வரைவு மசோதா தாக்கல் செய்ய, அந்த மாநில அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது.
    • இது தற்போது நடைமுறையில் உள்ள பஞ்சாப் லோக்பால் சட்டம் 1996 க்கு மாற்றாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
    • 4 உறுப்பினர்களைக் கொண்ட ஆயுக்தாவுக்கு, உச்சநீதிமன்றம் (அ) உயர்நீதிமன்றத்தின் நீதிபதியாக இருப்பவரோ (அ) இருந்தவரோ தலைவராக இருப்பார்.
    • செய்தித் துளிகள் :
      • 4 உறுப்பினர்களில் குறைந்தபட்சம் ஒருவராவது தாழ்த்தப்பட்ட வகுப்பை சேர்ந்தவராகவோ, பிற்படுத்தப்பட்டவராக, சிறுபான்மை வகுப்பைச் சேர்ந்தவராக (அ) பெண்ணாக இருக்க வேண்டும்.
      • இவர்களை மாநில ஆளுநர் நியமனம் செய்வார். மேலும் தேர்வு குழுவின் தலைவராக முதல்வர் பொறுப்பு வகிப்பார்.

 

 

அறிவியல் நிகழ்வுகள்

 

  • இந்திய விண்வெளி ஆய்வு மையம் (ISRO) தயாரித்துள்ள புவி கண்காணிப்பிற்கு உதவும் ஜிஐசாட் – 1 செயற்கைக் கோளை மார்ச் 5ஆம் தேதி விண்ணிற்கு ஏவப்படவுள்ளது.
    • இது 170 அடி உயரமுடைய ஜி.எஸ்.எல்.வி.எப். – 10 ராக்கெட் மூலம் ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் அமைந்திருக்கும் இந்திய விண்வெளி ஆய்வு மையத்தில் இருக்கும் ஏவு தளத்தில் இருந்து செலுத்தப்படவுள்ளது.
    • செய்தித் துளிகள் :
      • இது வரை ஏவப்பட்ட 13 GSLV ராக்கெட்டுகளில் இதுதான் மிகவும் உயரமானது என்பது குறிப்பிடத்தக்கது.

 

 

திருக்குறள்

 

குறள் : 126

குறள் பால் : அறத்துப்பால்

குறள் இயல் : இல்லறவியல்

குறள் அதிகாரம் : அடக்கம் உடைமை

ஒருமையுள் ஆமைபோல் ஐந்தடக்கல் ஆற்றின்

எழுமையும் ஏமாப் புடைத்து

விளக்கம் : உறுப்புகளை ஓர் ஓட்டுக்குள் அடக்கிக் கொள்ளும் ஆமையைப் போல ஐம்பொறிகளையும் அடக்கியாளும் உறுதி, காலமெல்லாம் வாழ்க்கைக்குக் காவல் அரணாக அமையும்     

 

ENGLISH CURRENT AFFAIRS

 

NATIONAL NEWS

  • The Budget session of the 7th Arunachal Pradesh Legislative Assembly began. The Arunachal Pradesh Assembly went paperless on with the implementation of e-Vidhan, a project under the Digital India programme.
    • With the implementation of the e-Vidhan project, MLAs can access every information regarding the Assembly, see the list of business and read questions and other documents.
    • Related Keys
      • Arunachal Pradesh Capital: Itanagar
      • Arunachal Pradesh Chief minister: Pema Khandu

 

 

  • In a major win, India has managed to bag a $40 Million defence export deal. Under this contract, India is required to supply four Swathi weapons-locating radars. The radars provide fast, automatic, and accurate location of enemy weapons like mortars, shells, and rockets in its 50-km range.
    • It can also simultaneously handle multiple projectiles fired from different weapons at different locations.

 

 

  • The first batch of 30 Judicial Officers from Supreme Court of Nepal have started their 7 day training on ‘Case Management and Court Management’ at the National Law University, Jodhpur in Rajasthan from March 2nd.
    • Second batch of 30 Judicial Officers from Nepal’s Supreme court will undergo training from March 23 to 29, 2020. This is a tailor-made course specially designed at the request of Government of Nepal.
    • Related Keys
      • Nepal President: Bidhya Devi Bhandar
      • Nepal Capital : Kathmandu
      • Nepal Currency: Nepalese rupee

 

 

APPOINTMENTS

  • Pekka Lundmark has been announced as the new Chief Executive Officer & President of Nokia. Pekka Lundmark will succeed Rajeev Suri who will serve as the President & CEO of Nokia till August 31, 2020.
    • Pekka Lundmark is presently serving as the President and CEO of an energy company “Fortum” which is based in Espoo, Finland.
    • Related Keys
      • Nokia Founded: 12 May 1865
      • Nokia Headquarters: Espoo, Finland

 

 

IMPORTANT DAYS

  • World Wildlife Day is celebrated annually across the world on 03 March. The aim of World Wildlife Day is to acknowledge the importance of wildlife species in maintaining the ecological balance on earth.
    • The theme for World Wildlife Day 2020 will be “Sustaining All Life on Earth”

 

 

WORDS OF THE DAY

  • Whim – A sudden desire or change of mind
    • Similar Words – impulse , urge ,notion
    • Antonyms – actuality, certainty

 

  • Wobble – Move unsteadily from side to side
    • Similar Words – dodder, shift, toddle,
    • Antonyms – dive , plunge