Today TNPSC Current Affairs July 26 2019

We Shine Daily News

ஜுலை 26

தமிழ்

Download Tamil PDF –  Click Here

Download English PDF –  Click Here

 

 

தேசிய நிகழ்வுகள்

 

 • மத்தியப் பிரதேச சட்டமன்றம் மத்தியப் பிரதேச பொதுச் சேவை (பட்டியல் சாதியினர், பட்டியல் பழங்குடியினர் மற்றும் பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான இட ஒதுக்கீடு) திருத்தம் மசோதா 2019 ஐ அரசு வேலைகளில் இடஒதுக்கீடு மற்றும் பிற பிற்படுத்தப்பட்டோருக்கான கல்வி (OBC) இட ஒதுக்கீடு தற்போதைய 14மூ இலிருந்து 27மூ ஆக உயர்த்தியது. இந்த மசோதா இப்போது கவர்னர் மற்றும் ஜனாதிபதியிடம் ஒப்புதலுக்காக செல்லும் என்பது குறிப்பிடத்தக்கது.

 

 

 • பாலியல் குற்றச்சாட்டுகளில் இருந்து குழந்தைகளைப் பாதுகாத்தல் (Protection of children from Sexual Offences – POCSO) (திருத்தம்) மசோதா, 2019 ஐ மாநிலங்களவை நிறைவேற்றியது, இது பாலியல் வன்கொடுமை வழக்குகளில் குற்றவாளிகளுக்கு மரண தண்டனை மற்றும் குழந்தைகளுக்கு எதிரான பிற குற்றங்களுக்கு கடுமையான தண்டனைகளை வழங்குகிறது.
  • திருத்த மசோதாவின் படி, 16 வயதிற்குட்பட்ட குழந்தை மீது ஊடுருவக்கூடிய பாலியல் வன்கொடுமைகளைச் செய்பவர்களுக்கு 20 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்படும், இது ஆயுள் தண்டனையும் அபராதமும் விதிக்கப்படலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

 

 

 • ஜல் சக்தி அமைச்சர் கஜேந்திர சிங் ஷேகாவத், மாநிலங்கள் இடையேயான நதி நீர் தகராறு (திருத்தம்) மசோதா 2019 ஐ அறிமுகப்படுத்தினார். இது 1956 ஆம் ஆண்டுக்கு மாநிலங்கள் இடையேயான நதி நீர் தகராறு சட்டத்தை திருத்துவதற்கு முயல்கிறது.

 

 

 

 • புது தில்லியில் இருந்து கத்ரா (ஜம்மு-காஷ்மீர்) பாதையில் இந்தியாவின் வேகமான இரண்டாவது வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் (ரயில் 18 என்றும் அழைக்கப்படுகிறது) சோதனை ஓட்டம் இந்திய ரயில்வேயின் வடக்கு ரயில்வே மண்டலத்தால் வெற்றிகரமாக நடத்தப்பட்டது.

 

 

 

விளையாட்டு நிகழ்வுகள்

 

 • சமீபத்திய சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ICC) டெஸ்ட் பேட்ஸ்மேனின் தரவரிசையில், இந்திய கேப்டன் விராட் கோலி 922 புள்ளிகளுடன் தனது முதலிடத்தை தக்க வைத்துக் கொண்டார். நியூசிலாந்தின் கேன் வில்லியம்சன் (913) இரண்டாவது இடத்திலும், இந்தியாவின் சேடேஷ்வர் புஜாரா (881) தரவரிசையில் மூன்றாவது இடத்தில் இருக்கிறார்.

 

 

 

 • இந்த மாதத்தின் 29 ஆம் தேதியன்று நடைபெறும் மோகுன் பாகன் மன்றத்தின் வருடாந்திர தினக் கொண்டாட்டத்தின் போது ஒலிம்பிக்கில் இருமுறை தங்கம் வென்றவரான கேசவ் தத் மற்றும் இந்தியாவின் முன்னாள் கால்பந்து அணி தலைவரான பிரசூன் பானர்ஜி ஆகியோருக்கு “மோகுன் பாகன் ரத்னா” விருது வழங்கப்படவிருக்கின்றது.
  • மோகுன் பாகன் தடகள மன்றம் என்பது இந்தியாவின் மேற்கு வங்கத்தில் உள்ள ஒரு தொழில்சார் கால்பந்துக் கூட்டமைப்பு மன்றமாகும்.
  • 1884 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15 அன்று பூபேந்திரநாத் போஸ் என்பவரால் உருவாக்கப்பட்ட இது இந்தியாவில் தற்பொழுதுள்ள மிகப் பழமையான கால்பந்து கூட்டமைப்பு மன்றமாகும்.

 

 

அறிவியல் மற்றும் தொழில்நுட்பம்

 

 • மனிதர்களில் காலிஸ்டினின் பாதிப்பைக் குறைக்கும் ஒரு முயற்சியாக சுகாதார மற்றும் குடும்பநல அமைச்சகமானது காலிஸ்டினின் உற்பத்தி, விற்பனை மற்றும் விநியோகத்தையும், உணவுக்காக வளர்க்கப்படும் விலங்குகள், கோழி, நீர் வாழ் உயிரிகள் மற்றும் விலங்கு தீவனங்களுக்கான அதன் உற்பத்தியையும் தடைசெய்துள்ளது. 1940 ஆம் ஆண்டின் மருந்துகள் மற்றும் அழகுசாதன பொருட்கள் சட்டத்தின் பிரிவு 26A இன் கீழ் இந்தத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
  • ஓர் அமைச்சக அதிகாரியின் கூற்றுப்படி, இந்த நுண்ணுயிர் எதிர்ப்பியானது மருந்து – எதிர்ப்பு நுண்ணுயிரியால் (drug – resistant bacteria) ஏற்படும் தொற்றுநோய்களால் பாதிக்கப்பட்ட நோயாளிக்கு சிகிச்சையளிப்பதற்கு இறுதிமருந்தாக பயன்படுத்தப்படுகிறது. ஆனால், இம்மருந்து கோழிப்பண்ணைத் தொழிலில், நோய்த்தடுப்பு நோக்கத்திற்காக வளர்ச்சி ஊக்கிகளாக மிகத்தவறாக பயன்படுத்தப்படுகிறது.

 

 

முக்கிய தினங்கள்

 

 • பாகிஸ்தானுக்கு எதிரான இந்தியாவின் வலிமையான வெற்றியை நினைவுகூறும் வகையில், ஒவ்வோர் ஆண்டும் ஜுலை 26 அன்று, கார்கில் வெற்றி நாள் கொண்டாடப்படுகிறது. ‘ஆபரேஷன் விஜய்’யின் வெற்றியைத் தொடர்ந்து இந்த நாள் உருவாக்கப்பட்டது.
  • நடப்பாண்டில், கார்கில் போர் வெற்றியின் இருபதாவது ஆண்டு நிறைவை, ஜுலை 25-27 வரை திராஸ் மற்றும் புது தில்லியில் பெருமையுடனும், மரியாதையுடனும் உத்வேகத்தடனும் இந்தியா கொண்டாடவுள்ளது. நடப்பாண்டில், “Remember, Rejoice and Renew – நினைவுகூர், மகிழ் மற்றும் புதுப்பி” என்னும் கருப் பொருளுடன் இந்த நாள் கொண்டாடப்படவுள்ளது.

 

 

 • மத்திய நேரடி வரி வாரியம் (Central Board od Direct Taxes – CBDT) மற்றும் அனைத்து கள அலுவலகங்களும் 159 வது ஆய்கர் திவாஸை (Aaykar Diwas வருமான வரி நாள்) 24 ஜுலை கொண்டாடின. மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் புதுடில்லியில் முக்கிய விழா நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் மாநில நிதியமைச்சர் அனுராக் சிங் தாக்கூர் மற்றும் அமைச்சகத்தின் மற்ற மூத்த அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.

 

 

ENGLISH CURRENT AFFAIRS

 

NATIONAL NEWS

 • Madhya Pradesh Assembly unanimously passed an amendment bill raising reservation in government jobs and education for Other Backward Classes (OBC) to 27 per cent from the present 14 per cent.
  • The Bill is now going to the Governor and President for assent.

 

 

 • A Bill that proposes to set up an Inter-State River Water Disputes Tribunal to resolve water disputes in a time-bound manner was introduced in the Lok Sabha on Thursday.
  • The Inter-State River Water Disputes (Amendment) Bill, 2019, was introduced by Jal Shakti Minister Gajendra Singh Shekhawat.

 

 

 • On July 24, 2019, Rajya Sabha passed theProtection of Children from Sexual Offences (POCSO) (Amendment) Bill, 2019 which provides for death penalty to the culprits in the cases of sexual assault and stringent punishments for other crimes against children
  • It provides for the levy of fines and imprisonment up to 5 years to curb child pornography.

 

 

 

 • On July 23, 2019, The trial run of India’s fastest second Vande Bharat Express on New Delhi to Katra route was successfully conducted by Indian Railways’ Northern Railway zone.
  • Vande Bharat:The train designed and manufactured by Integral Coach Factory (ICF), Chennai, run at a speed of 160 km per hour & it reduces travel time between Delhi-Katra from 12 hours to 8 hours.

 

 

 • On July 24 , the annual Income Tax Day is celebrated, This will be followed from this year.  To compensate for the losses held by the British during the 1st war of independence,   Income tax was introduced for the first time in India on July 24, 1860, by James Wilson

 

 

 • The Health Ministry has banned the manufacture, sale and distribution of antibiotic, Colistin and its formulations for food producing animals, poultry, aqua farming and animal feed supplements in a bid to preserve the drug’s efficacy in humans.

 

 

SPORTS

 • India skipper Virat Kohli has retained his number one position in the latest ICC Test batsmen’s rankings. Kohli, who last featured in India’s 2-1 Test series win over Australia, is sitting on 922 points.
  • New Zealand’s Kane Williamson (913) is second and Cheteshwar Pujara (881) third in the rankings released

 

 

AWARDS

 • Two-time Olympic gold medal winning Hockey Player Keshav Dutt and former India Football Captain Prasun Banerjee are selected for Mohun Bagan Ratna Award 2019.
 • Awards will be given away on annual celebration of Mohun Bagan Day (29 July).

 

 

IMPORTANT DAYS

 • On 26 July, 2019, India is celebrating the 20th anniversary of the victory of the Indian Armed Forces in Operation Vijay against the infiltrating Pakistani troops.
 • ‘Kargil Vijay Diwas’ is celebrated with heavy enthusiasm and vigor by military personnel at Dras-Kargil sector and the national capital New Delhi at Amar Jawan Jyoti, India Gate.

 

 

 


FaceBook Updates

WeShine on YouTube