Today TNPSC Current Affairs July 24 2019

We Shine Daily News

ஜுலை 24

தமிழ்

Download Tamil PDF –  Click Here

Download English PDF –  Click Here

 

 

தேசிய நிகழ்வுகள்

 

  • மெய்நிகர் நாணயங்கள் மீதான அமைச்சகங்களுக்கிடையே குழுவானது “மெய்நிகர் நாணயத்தின் தடை & அதிகாரப்பூர்வ டிஜிட்டல் நாணய ஒழுங்குமுறை மசோதா, 2019” என்பதுடன் சேர்த்து தனது அறிக்கையையும் சமர்ப்பித்துள்ளது.
    • இது இந்தியாவின் மெய்நிகர் நாணயங்கள் தொடர்பான நடவடிக்கைகளில் ஈடுபடுவோர் மீது அபராதம் விதிக்கவும் அவற்றை அதிகாரப் பூர்வமாகத் தடை செய்யவும் பரிந்துரைத்துள்ளது. ஆனால் இது “ அதிகாரப்பூர்வ டிஜிட்டல் நாணயத்தை வெளியிடுவதை” அரசாங்கம் பரிசீலிக்க வேண்டும் என்று கூறியுள்ளது.

 

 

 

  • இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் பாதுகாப்புக் கண்காட்சியின் 11வது பதிப்பானது 2020 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதத்தில் முதன்முறையாக உத்திரப் பிரதேசத்தின் தலைநகரான லக்னோவில் நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது.
    • இந்த நிகழ்வின் கருத்துரு, “இந்தியா – வளர்ந்து வரும் பாதுகாப்பு உற்பத்தி மையம்” என்பதாக இருக்கும். இது பாதுகாப்புத் துறையில் உள்ள டிஜிட்டல் உருமாற்றத்தின் மீது கவனத்தைச் செலுத்துகின்றது.

 

 

 

  • இந்தியாவின் லேசான புல்லட் ப்ரூஃப் ஜாக்கெட்” என்று அழைக்கப்படும் பாபா கவாச் புதுதில்லியில் நடைபெற்ற சர்வதேச போலீஸ் எக்ஸ்போ 2019 இல் அறிமுகப்படுத்தப்பட்டது.
    • புல்லட் ப்ரூஃப் ஜாக்கெட்டை ஆர்தனன்ஸ் தொழிற்சாலைகள் வாரியம் (OFB) மற்றும் உலோகக் கலவைகள் உற்பத்தியாளர் மிஸ்ரா தாது நிகம் (Mishra Dhatu Nigam – MIDHANI) ஆகியோர் உருவாக்கியுள்ளனர், இது ஹைதராபாத்தை தலைமையிடமாகக் கொண்டுள்ளது.

 

 

சர்வதேச நிகழ்வுகள்

 

  • பிரிட்டிஷ் அரசியல்வாதியும், கன்சர்வேடிவ் கட்சியின் தலைவருமான போரிஸ் டி பிஃபெல் ஜான்சன்,பிரிட்டனின் பிரதமரானார்.
    • 2019 அக்டோபரின் இறுதிக்குள் பிரிட்டனை ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியேற்றுவதாக உறுதியளித்துள்ளார். ப்ரெக்ஸிட்டிலிருந்து வெளியேற தனது பிரெக்ஸிட் ஒப்பந்தத்தை பாராளுமன்றத்தில் அங்கீகாரத்தை பெறத் தவறியதால் தெரசா மே பதவி விலகினார்.

 

 

 

விளையாட்டு நிகழ்வுகள்

 

சர்வதேச கால்பந்து சம்மேளனம் 20 வயதுக்குட்பட்ட பெண்கள்  FIFA உலகக் கோப்பை 2020 (10 வது பதிப்பு)- ஐ 10 ஆண்டுகளுக்குப் பிறகு நைஜீரியா நடத்தவுள்ளது.

 

 

நியமனங்கள்

 

  • மத்தியப் பிரதேசம், உத்திரப் பிரதேசம், மேற்கு வங்காளம், பீகார், நாகலாந்து மற்றும் திரிபுரா ஆகிய 6 மாநிலங்களுக்கு புதிய ஆளுநர்களை குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் நியமித்துள்ளார்.
  • புதிய ஆளுநர்களின் பெயர்கள் பின்வருமாறு

 

வ.எண்

மாநிலங்கள்

புதிய ஆளுநர்கள்

1.

மத்தியப்பிரதேசம்

லால் ஜி தாண்டன்

 

2.

உத்திரப்பிரதேசம்

ஆனந்தி பென் படேல்

3.

பீகார்

பாகு சவுகான்

4.

மேற்கு வங்காளம்

ஜெகதீப் தங்கர்

5.

திரிபுரா

ரமேஷ் பைஸ்

6.

நாகலாந்து

RN  ரவி

 

 

 முக்கிய தினம்

 

  • ஒவ்வொரு ஆண்டும் ஜீலை 23 அன்று இந்தியாவில் தேசிய ஒளிபரப்பு தினம் அனுசரிக்கப்படுகின்றது.
    • 1927 ஆம் ஆண்டு ஜீலை 23 அன்று நாட்டின் முதலாவது வானொலி ஒளிபரப்பு இந்திய ஒளிபரப்பு நிறுவனம் என்ற ஒரு தனியார் நிறுவனத்தினால் மும்பையிலிருந்து ஒளிபரப்பப்பட்டது.
    • 1936 ஆம் ஆண்டு ஜீன் 08 அன்று இந்திய அரசு ஒளிபரப்புச் சேவையானது அனைத்து இந்திய வானொலியாக (All India Radio – AIR ) மாறியது.
    • AIR- ன் குறிக்கோள் “பகுஜன் ஹிட்டாயா பகுஜன் சுக்காயா” என்பதாகும்.

 

 

ENGLISH CURRENT AFFAIRS

 

NATIONAL NEWS

  • Indigenously produced lightweight bullet proof jacket Bhabha Kavach was launched at International Police Expo 2019 held at Pragati Maidan, New Delhi
    • The jacket which is a major breakthrough for Paramilitary Forces and Indian armed forces got nod from Union Ministry of Home Affairs (MHA)

 

 

  • In a setback for cryptocurrency enthusiasts and start ups, India seems all set to ban private cryptocurrencies after an inter-ministerial committee (IMC) suggested outlawing private cryptocurrencies, like Bitcoin, apart from declaring any activities related to virtual currencies as a criminal act.

 

 

 

  • The 11th biennial edition of DefExpo India- 2020 is scheduled to be held for the first time in Uttar Pradesh capital Lucknow. It offers an excellent opportunity for the Indian defence industry to showcase its capabilities and promote its export potential.
    • Main theme of the DefExpo India- 2020 will be ‘India: The Emerging Defence Manufacturing Hub’ and focus will be on ‘Digital Transformation of Defence’.

 

 

INTERNATIONAL NEWS

  • Boris Johnson, the public face of the Brexit campaign, won the contest to succeed Theresa May as British prime minister, taking over a country in crisis and a government on the brink of breaking apart.

 

 

SPORTS

  • FIFA reported that Nigeria Will be Hosting the 2020 Under-20 Women’s World Cup. It is the first African country to be awarded the hosting rights for the tournament by FIFA.

 

 

APPOINTMENTS

The Indian president Ram Nath kovind have recently appointed the six new Governors of the states Madhya pradesh, Uttar Pradesh, Nagaland , Tripura , West Bengal and Bihar.

S.No State Name New Governors
1 Madhya Pradesh Lal Ji Tandon
2 Uttar Pradesh Anandi Ben Patel
3 Bihar Phagu Chauhan
4 West Bengal Jagdeep Dhankhar
5 Tripura Ramesh Bais
6 Nagaland RN Ravi

 

 

IMPORTANT DAYS

  • National Broadcasting Day is observed every year on 23 July. On this day in 1927, the first-ever radio broadcast in the country went on the air from the Bombay Station under a private company, the Indian Broadcasting Company.
    • Since 1927, radio has been an important part of people’s life in India.