Today TNPSC Current Affairs January 30 2020

We Shine Daily News

ஜனவரி  30

தமிழ்

Download Tamil PDF – Click Here

Download English PDF – Click Here

 

தமிழக நிகழ்வுகள்

 

  • ஒரே நாடு ஒரே குடும்ப அட்டை திட்டம் தமிழகத்தில் முதல்கட்டமாக திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களில் பரீட்சார்த்த அடிப்படையில் பிப்ரவரி 1-ல் அமல்படுத்தப்படுகிறது என்று உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை ஆணையர் சஜ்ஜன் சிங் ஆர்.சவாண் தெரிவித்தார்.
    • செய்தி துளிகள்
      • இத்திட்டத்தைச் செயல்படுத்த அனைத்து நியாயவிலைக் கடைப் பணியாளர்களுக்கும் பயிற்சி அளிக்கப்படவுள்ளது. அனைத்து நியாயவிலைக் கடைகளுக்கும் கூடுதலாக 5 சதவீத பொருள்கள் ஒதுக்கப்படவுள்ளன. ஒவ்வொரு நியாய விலைக் கடையிலும் எவ்வளவு நுகர்வு செய்யப்படுகிறது என்பது குறித்து சம்பந்தப்பட்ட அலுவலர்கள் மூலம் நாள்தோறும் கண்காணிக்கப்படும். அதன்படி, தேவையான பொருள்கள் அனுப்பி வைக்கப்படும்.

 

 

தேசிய நிகழ்வுகள்

 

  • வடகிழக்கு மாநிலத்தில் கிளர்ச்சிக்கு எதிராக போராடி உயிரை தியாகம் செய்த 357 பணியாளர்களுக்காக அசாம் ரைபிள்ஸ் போர் நினைவுச்சின்னத்தை கட்டியுள்ளது.
    • இந்த நினைவுச்சின்னம் மாநிலத்தில் முதன்மையானது. இது அசாமில் உள்ள மோகோக்சுங்கில் கட்டப்பட்டுள்ளது.
    • போர் நினைவு மைய வட்ட வடிவத்தில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
    • செய்தி துளிகள்
      • இராணுவம், அஸ்ஸாம் ரைபிள்ஸ் மற்றும் விமானப்படை ஆகிய மூன்று படைகளையும் குறிக்கும் மூன்று ஒருங்கிணைந்த பதிவுகள் இதில் உள்ளன.
      • அஸ்ஸாம் ரைபிள்ஸ் என்பது இந்தியாவின் மிகப் பழமையான துணை ராணுவப் படையாகும். இது “கச்சார் லெவி” (“Cachar Levy”) என்று அழைக்கப்பட்டது.

 

 

  • கருக்கலைப்பு செய்வதற்கான காலவரம்பை தற்போதுள்ள 20 வாரங்களிலிருந்து 24 வாரங்களாக உயர்த்துவதற்கான சட்டத் திருத்த மசோதா 2020-க்கு பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டது.
    • இந்த மசோதா வருகிற நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரில் தாக்கல் செய்யப்படும் என மத்திய செய்தி ஒலிபரப்புத் துறை அமைச்சர் பிரகாஷ் ஜாவடேகர் தெரிவித்தார்.
    • செய்தி துளிகள்
      • தற்போதுள்ள 1971-ஆம் ஆண்டின் மருத்துவ ரீதியிலான கருக்கலைப்புச் சட்டத்தில் சில புதிய பிரிவுகள் சேர்க்கப்பட்டுள்ளன. ஏற்கனவே இருந்த சட்டத்தில், 20 வாரமுள்ள கருவைக் கலைக்க இரண்டு மருத்துவர்களின் கருத்து தேவை என்று இருந்தது. புதிய மசோதாவில் 20 வாரங்கள் உள்ள கருவைக் கலைப்பதற்கு ஒரு மருத்துவரின் கருத்தும், 20-24 வாரம் வரையுள்ள கருவைக் கலைப்பதற்கு இரண்டு மருத்துவர்கள் கருத்துகளும் தேவை என்கிற பிரிவுகள் சேர்க்கப்பட்டுள்ளன.

 

 

  • இயற்கை எரிவாயுவை சரக்கு-சேவை வரி (ஜிஎஸ்டி) வரம்புக்குள் கொண்டுவர பெட்ரோலியத் துறை அமைச்சகம் ஆதரவு தெரிவித்துள்ளது.
    • கச்சா எண்ணெய், இயற்கை எரிவாயு, பெட்ரோல், டீசல், விமான எரிபொருள் (ஏடிஎஃப்) ஆகியவற்றுக்கு வரி விதிப்பதன் மூலம் மாநில அரசுகளுக்கு அதிக அளவிலான வருவாய் கிடைத்து வருவதால், அவை ஜிஎஸ்டி வரம்புக்குள் கொண்டுவரப்படவில்லை.
    • இந்நிலையில், வாகனங்கள், சமையலறைகள், தொழிலகங்கள் உள்ளிட்டவற்றில் இயற்கை எரிவாயுவின் பயன்பாட்டை அதிகரிக்கும் நோக்கில் பெட்ரோலியத் துறை அமைச்சகம் சார்பில் கையேடு வெளியிடப்பட்டது.
    • செய்தி துளிகள்
      • அதில் இயற்கை எரிவாயுவுக்கு மாநிலங்கள் 3 முதல் 20 சதவீதம் வரை மதிப்பு கூட்டு வரியை (வாட்) விதித்து வருகின்றன. இத்துடன் கலால் வரியும் விதிக்கப்பட்டு வருகிறது.
      • இயற்கை எரிவாயுவானது ஜிஎஸ்டி வரம்புக்குள் கொண்டு வரப்பட்டால், அதற்கு நாடு முழுவதும் ஒரே மாதிரியான வரி விதிக்கப்படும்.
      • இதன் மூலம் இயற்கை எரிவாயு உற்பத்தி செய்வதற்கு இந்தியாவில் பல்வேறு நிறுவனங்கள் முதலீடுகள் செய்ய வாய்ப்புள்ளது.
      • GST என்பது சரக்கு மற்றும் சேவை வரியைக் குறிக்கிறது. இது அரசியலமைப்பு (122 திருத்தம்) மசோதா 2014 என்றும் அழைக்கப்படுகிறது.

 

 

சர்வதேச நிகழ்வுகள்

 

  • உலக நிலையான உச்சி மாநாடு என்பது எரிசக்தி மற்றும் வள நிறுவனம் (The Energy and Resources Institute (TERI)) ஏற்பாடு செய்யும் ஆண்டு நிகழ்வாகும்.
    • இது 2001 ஆம் ஆண்டு முதல் ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. இந்த நிகழ்வு ஒரு முக்கிய சர்வதேச நிகழ்வாக வளர்ந்து வரும் நடவடிக்கைகளை மையமாகக் கொண்டுள்ளது.
    • இந்த நிகழ்வு ஜனவரி 29, 2020 முதல் ஜனவரி 31, 2020 வரை நடைபெற உள்ளது. இந்த ஆண்டு புதுடில்லியில் நிகழ்வு நடைபெறுகிறது.
    • செய்தி துளிகள்:

நிகழ்வின் கருப்பொருள்: 

  • Theme: ‘Towards 2030: Making the Decade Count’
  • 2015 இல் பாரிஸ் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட பிறகு, உச்சிமாநாடு மனிதகுலத்தின் எதிர்காலம் தொடர்பான பிரச்சினைகளுக்கு நீண்டகால தீர்வுகளை வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

 

 

நியமனங்கள்

 

  • புதிய வெளியுறவுத் துறைச் செயலாளராக ஹர்ஷ்வர்தன் ஷிரிங்லா, பொறுப்பேற்றுக்கொண்டார். வெளியுறவுத் துறைச் செயலாளராக இருந்த விஜய் கேசவ்கோகலே ஓய்வு பெற்றதைத் தொடர்ந்து ஷிரிங்லா அந்த பொறுப்புக்கு நியமிக்கப்பட்டார்.
    • வெளியுறவுத் துறை அமைச்சர் – சுப்பிரமணியம் ஜெயசங்கர்

 

 

திருக்குறள்

 

குறள்: 93

குறள் பால்: அறத்துப்பால்

குறள் இயல்: இல்லறவியல்

குறள் அதிகாரம்: இனியவை கூறல்

முகத்தான் அமர்ந்து இனிதுநோக்கி அகத்தானாம்

இன்சொ லினதே அறம்

விளக்கம்: அறம் என்று சொல்லப்படுவது, முகம் மலர்ந்து பார்த்து, உள்ளத்தில் எழும் அன்பு உணர்ச்சியினால் இனிய சொல்லைச் சொல்லுவதேயாகும்.

 

ENGLISH CURRENT AFFAIRS

 

NATIONAL NEWS

  • Oxford University Press (OUP) named ‘Samvidhaan’ (Constitution) the Oxford Hindi Word of 2019. OUP said that it received widespread attention in the year which was witness to the spirit of the Indian Constitution being embraced across segments of the society.
    • The Oxford Hindi Word of the Year is a word or expression that has attracted a great deal of attention of the year.
    • Related Keys
      • Oxford University Press Headquarters: Oxford, United Kingdom
      • Oxford University Press Founded: 1586.

 

 

  • The World Sustainable Summit is an annual event organized by The Energy and Resources Institute (TERI) is to be held between January 29, 2020 and January 31, 2020 at New Delhi. The theme of the event is Theme: ‘Towards 2030: Making the Decade Count’.
    • Related Keys
      • It is being organized since 2001.
      • The concept of Sustainable Development has its roots in sustainable forest management during 17th and 18th century.

 

 

  • The recently inducted Indian Coast Guard Ship Annie Besant has reached its base harbour at Chennai. It was received with pomp and splendour by the staff and their family members of the Coast Guard Chennai office.
    • The ship Annie Besant is the third Fast Patrol Vessel of the ‘Priyadarshini’ class.
    • Related Keys
      • Chennai port ( Harbor) Opened: 1881; 139 years ago 
      • Chennai port ( Harbor) is the second largest container port of India.

 

 

  • According to the United National Development Programme (UNDP), Telangana has emerged the best performing states in terms of achieving Sustainable Development Goals (SDG). It is to be noted that in December 2019, India released SDG India Index.
    • India was the first country to release SDG index. The index was launched by NITI Aayog.
    • Related Keys
      • United National Development Programme Founded: 22 November 1965, United States
      • United National Development Programme Headquarters: New York, New York, United States

 

 

APPOINTMENTS

  • Qatar appointed a new Prime Minister replacing Sheikh Abdullah bin Nasser bin Khalifa Al Thani.
    • Quoting an Emiri order, the State News Agency reported that Sheikh Khalid bin Khalifa bin Abdelaziz Al Thani has been named as the new Prime Minister.
    • Related Keys
      • Qatar Capital: Doha
      • Qatar Currency: Qatari riyal

 

 

WORDS OF THE DAY

  • Vacillate – waver between different opinions or actions.
    • Similar Words – dither , oscillate
    • Antonyms – stable , resolute

 

  • Valor – great courage in the face of danger
    • Similar Words – bravery , courage
    • Antonyms – cowardice